தன்னம்பிக்கை கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு சேல்ஸ்

ஒரு சேல்ஸ்


நம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,

கொஞ்சம் பெரிய தூண்டில்,

அதைவிடப் பெரிய தூண்டில்,

ஃபிஷிங் ராட்,

ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.

பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"


1

 வாழ்கையில் முன்னேற முடியவில்லை

வாழ்கையில் முன்னேற முடியவில்லை


அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார்.காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது. 

பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன.ஆனால்          டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.

இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.

இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.ஆனால் ஆச்சர்யம்!

பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம்.அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,பொறுமை இழக்கவில்லை.

ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்

இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.

இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.

"எப்படி இவ்வளவு பொறுமையாய்,

யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"

அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,

"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.

வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்

குப்பைகளையெல்லாம் என் மனதில்

சேர்த்துக்கொள்ளவில்லை.

அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு

பதில் சொல்லிக்கொண்டிருந்தால்

நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய

வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.

நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும்,கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல.

 வாழ்க்கை மாற்றும் செயல்கள் 

வாழ்க்கை மாற்றும் செயல்கள்

பிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்காரர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். சிறுது தூரம் நடந்து சென்று தீடீரென மீண்டும் அந்த பிச்சைக்காரனை நோக்கி நடந்து வந்தார்.

நீதான் பை நிறைய பென்சில்கள் வைத்து கொண்டிருக்கிறாயே, நான் ஏன் உனக்கு சும்மா பணம் கொடுக்க வேண்டும், அதனால் 10-ரூபாய்க்கு சமமான பென்சில்களை எனக்கு கொடு என்று கேட்டார். அதனை கேட்டு முகம் சுழித்த பிச்சைக்காரன், பார்ப்பதற்கு பெரிய பணக்காரன் போல் இருந்து கொண்டு பிச்சை போட்ட பணத்தை திரும்ப கேட்க்கிறீர்களே என்றான். நான் ஒன்றும் பணத்தை கேட்கவில்லையே, பணத்திற்கு பதிலாக நீ வைத்திருக்கும் பென்சில்களை கொடு என்று தானே கேட்டேன் என்றார்.

சிறுது நேரம் பேசி பார்த்த பிச்சைக்காரன் முனகிக்கொண்டே தான் வைத்திருந்த பென்சில்களை அந்த பணக்காரரிடம் கொடுத்தான். பென்சில்களை வாங்கிக்கொண்ட பணக்காரரும் பையில் வைத்து புகைவண்டியில் ஏறி புறப்பட்டார்.

பிச்சைக்காரனும் வழக்கம் போல் யாசகம் கேட்க ஆரம்பித்தான்.

சில மாதங்களுக்கு பிறகு பெரிய வியாபாரிகளுக்கான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பணக்காரர், தான் சண்டை போட்டு பென்சில் வாங்கிச்சென்ற பிச்சைக்காரன் கோட் சூட் போட்டு விருந்தில் பல பெரிய வியாபாரிகளுடன் பேசிக்கொண்டிருந்ததை கண்டு ஆச்சர்யமடைந்தார்.

அவன் அருகில் சென்ற பணக்காரர் என்னப்பா… என்னை அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டார் ….

உடனே அந்த பிச்சைக்காரன், ஐயா உங்களை மறக்க முடியுமா? நான் வெகு நாட்களாக உங்களை தான் நான் நன்றி சொல்ல தேடிக்கொண்டிருதேன். என் வாழ்க்கையை மாற்றியது நீங்கள் தான், நான் இப்போது இந்த சமுதாயத்தில் மதிக்கப்படும் ஒருவனாக இருப்பதும் உங்களால் தான் என்றான்.

தலை சுற்றிப்போன பணக்காரர் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அழுக்கு துணியுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாய், இப்போது என்னை விட பெரிய பணக்காரர்களெல்லாம் உன்னிடம் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருக்கிறது, தயவு செய்து என்ன நடந்தது என்று சொல்லிவிடு என்று கேட்டார்.

அன்று என்னிடமிருந்து நீங்கள் வாங்கி சென்ற பென்சில்கள், என் மகளுக்காக நான் வாங்கி வைத்திருந்தது. இரவு நான் பிச்சை எடுத்து முடித்து, வீடு திரும்புவதற்குள் கடைகளெல்லாம் மூடிவிடும். அதனால் காலையில் வரும்போதே வாங்கி வந்து பையில் வைத்திருந்தேன். அதை தான் நீங்கள் வாங்கி சென்றீர்கள். நீங்கள் சென்றவுடன் உங்களை திட்டிக்கொண்டே வழக்கம் போல பிச்சை எடுக்க ஆரம்பித்தேன்.

இரவு வரை பிச்சை எடுத்துவிட்டு, வீடு திரும்பிய நான் நடந்தவற்றை என் மனைவியிடம் கூறி அந்த 10-ரூபாயை அவளிடம் கொடுத்து நாளை காலை நீயே கடைக்கு சென்று பென்சில் வாங்கி மகளிடம் கொடுத்துவிடு என்றேன். நான் சொன்னதைக்கேட்டு கண்ணீர் வடித்த என் மனைவி, இந்த 10- ரூபாய் தான் என் வாழ்நாளில் நான் மரியாதையுடன் சம்பாதித்த ஒரே பணம். தினமும் பிச்சை எடுத்த காசில் சாப்பிடுவதற்கே அசிங்கமாக இருக்கும், இன்று தான் என் வாழ்நாளில் என் கணவன் உழைத்து சம்பாதித்த பணத்தில் சாப்பிட போகிறேன் என்று கூறி மீண்டும் அழுதாள்.

எங்கிருந்தோ வந்த அந்த மனிதர் நீ வாழ ஒரு வழியை காண்பித்துவிட்டார், நாளை முதல் நீ பிச்சை எடுக்க கூடாது. இந்த 10-ரூபாய்க்கு மீண்டும் பென்சில் வாங்கிக்கொண்டு போய் ரயில் நிலையத்தில் விற்றுவிட்டு வா என்றாள்.

மறுநாள் சுத்தமாக குளித்துவிட்டு 10-ரூபாய்க்கு பென்சில் வாங்கிக்கொண்டு வந்து ரயில் நிலையத்தில் விற்க தொடங்கினேன். அன்று மாலைக்குள் 30- ரூபாய் லாபம் சம்பாதித்தேன். என்னுள் இருந்த வியாபாரியை உணர்ந்தேன். என் வாழ்க்கையில் இவ்வளவு நாட்களை பிச்சை எடுத்து வீணடித்துவிட்டேனே என்று மனம்நொந்துகொண்டேன். அன்று முதல் இரவு,பகல்,மழை, வெயில் எதுவும் பார்க்காமல் தினமும் தன்னம்பிக்கையுடன் வியாபாரம் செய்தேன். இன்று உங்கள் முன் இப்படி நிற்கிறேன் என்றான். உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமை பட்டிருக்கிறேன் என்றான்.

திகைத்து போன அந்த பணக்காரர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்…..

நம் வாழ்க்கையிலும் பல நேரங்களில் இதுபோல தான் நம் திறமையை வெளிகொண்டு வரவே இன்னொருவர் தேவைப்படுகிறார்….


தன்னம்பிக்கை கதைகள்



விதியை மதியால் வெல் ..!

விதியை மதியால் வெல் ..!


ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். 

இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். 

அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார்.

 அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார். 

நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றியும் அமைக்கலாம்.


 சிறுவன் சொல்ல, நிங்கள் என்ன  நினைக்கிறார்கள்

சிறுவன் சொல்ல, நிங்கள் என்ன  நினைக்கிறார்கள்

தன்னம்பிக்கை ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். 

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன  நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். 

சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.

கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை  ..?

கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை  ..?

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

வெற்றிக்கான 10 விதிகள்

வெற்றிக்கான 10 விதிகள்


  • நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான  மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.
  • நீங்கள் செய்வதை விரும்புங்கள்.
  • நீங்கள் இளைஞராக இருக்கும்போதே துணிந்து செயல்படகூடிய சரியான தருணமாகும்.
  • நீங்கள் செய்வதை விட்டுவிடாதீர்கள்.
  • ஒவ்வொரு விழித்திருக்கும் மணி நேரமும் கடுமையாக உழையுங்கள்.
  • உங்கள் முக்கிய பணியின் மீது கவனம் செலுத்துங்கள்.
  • தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். நீங்கள் தோல்வியடைய விருப்பமில்லையென்றால், புதுமையாக  எதையும் படைக்க இயலாது.
  • உங்களுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • இந்த உலகத்தில் உள்ளதை தாண்டி யோசியுங்கள்.
  • வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள்.





தன்னம்பிக்கை கதைகள்



 உன்னுடன் இருப்பது யார்

உன்னுடன் இருப்பது யார்

*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

 டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், 

“சார் பின்னாடி போய் உட்காருங்க. 

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, 

விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். 

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!! 

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

 *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

 *சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

 *இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*, 

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

 *உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!* 

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*. 

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

 *உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!* 

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?* 

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா.*

வாழ்க்கையை ஒரு  ஓட்டப்பந்தயம்..!

வாழ்க்கையை ஒரு  ஓட்டப்பந்தயம்..!

மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கடந்த ஒருமாதமாகத் தீவிரமாகப் பயிற்சி செய்த மணி ஓடுவதற்குத் தயாராகக் களத்தில் நின்றான். இந்தமுறை எப்படியாவது பரிசை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் நிறைந்திருந்தது.

விசில் ஊதப்பட்ட சத்தம் கேட்டவுடன் ஓடத் தொடங்கினான். அவனது கால்கள் குதிரையின் கால்களைப் போலப் பறந்தன. எல்லோரையும் மீறி ஓடி, முதல் இடத்தைப் பிடித்தான்.

பரிசு வாங்கிய கையோடு வீட்டுக்கு வந்தான். வயலில் உழுதுவிட்டு வந்திருந்த அப்பாவிடம் தனது பரிசைக் கொடுத்தான். மிகுந்த மகிழ்ச்சியோடு, “”உனது விடாமுயற்சிக்கும் தொடர் பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி…” என்று பாராட்டினார்.

சில மாதங்கள் சென்றன. பொங்கல் தினத்தன்று மணியின் ஊரில் ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது.

ஊரார் முன்னிலையில் ஓடத் தொடங்கினான். ஆனால் பழைய வேகமில்லை! கால்களில் ஏதோ வலி தெரிந்தது. பரிசு பெறப் போராட வேண்டியிருந்தது. இறுதியாக மூன்றாம் பரிசுதான் கிடைத்தது. தன்னால் முதல் பரிசைப் பெற முடியவில்லையே என்ற வருத்தத்தோடு அப்பாவிடம் தனது நிலை பற்றிக் கூறினான்.

அதற்கு அப்பா, “”இந்த ஏர் கலப்பையைப் பார்த்தாயா, இதை ஒருவாரம் முழுவதும் நான் பயன்படுத்தவில்லை. அதற்குள் துருப்பிடித்து விட்டது. இதுபோலத்தான் உன்னிடம் திறமையும் ஆற்றலும் இருந்தது. ஆனால் தொடர்ந்த பயற்சி இல்லை” என்றார்.

வெற்றி பெற உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் தோல்விதான் கிட்டும்” என்பது மணிக்கு நன்றாகவே புரிந்தது. 

அச்சம் தவிர் ..

பயம்

 சிறுவன் ஒருவன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது மரத்தில் கண்ணை பறிக்கும் வகையில் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதனால் அவன் அதனை பறிக்க அந்த மரத்தின் மீது ஏறி கிளையில் நகர்ந்து சென்றான். ஆனால் அந்த கிளையோ அவனது பாரம் தாங்காமல் முறிய இருந்தது. 

அதனால் அவன் மற்றொரு கிளைக்கு நகர்ந்தான். பின் அவன் பயந்து கொண்டே கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்" என்று அழைத்துக் கொண்டே இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு துறவி, அவனைப் பார்த்து, அவனுக்கு உதவ முன் வந்தார்.

 அதனால் அவர் அவன் மீது சிறிய கல்லை விட்டு எறிந்தார். அவனோ கல்லை எறிந்ததும் அவர் மீது கடும் சினங்கொண்டு, முயற்சி செய்து கீழே இறங்கி வந்தான். பின் அந்த துறவியைக் கண்டு கோபத்துடன் சரமாரியாகத் திட்டினான்.

 பிறகு அவரிடம் "நான் உங்களிடம் உதவி தானே கேட்டேன், ஏன் அப்படி செய்தீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அந்த துறவி "நான் உனக்கு உதவி தான் செய்தேன்" என்று சொன்னார். 

அவனோ திருதிருவென முழித்தான். பின்னர் அந்த துறவி அவனிடம் விளக்கினார். "நான் உன்னை பார்த்த போது உன் பயத்தில் உன் மூளை வேலை செய்யவில்லை. ஆகவே நான் உன் மூளைக்கு வேலை கொடுப்பதற்கு, கல்லை எறிந்தேன். 

நான் எறிந்ததும், நீ யோசிக்க ஆரம்பித்து, கீழே இறங்கிவிட்டாய். உன் பயத்தை போக்கவே நான் அவ்வாறு செய்தேன்" என்று கூறி சென்று விட்டார்.


                                    வாழ்க்கையை மாற்ற உதவும் 5 வழிகள்


1. கோபம் 

 உங்கள் வாழ்க்கையில், கோபத்தால் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள், நீங்கள் கொள்ளும் கோபமே உங்களை மறைமுகமாக தண்டிக்கும். ஆகையால், வாழ்வில் கோபம் கொள்ளாமல் கூலாக வாழ முயலுங்கள்!

2.உணருங்கள்

உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்; உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!

3.எண்ணங்கள்

உங்கள் எண்ணங்கள் உயர்வாக இருந்தால், நீங்கள் வாழ்வில் உயரத்தை அடைவதோடு, நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்வு கிடைக்கும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - என்ற கோட்பாட்டை கடைபிடிக்க முயலுங்கள்.

4.வழி 

மற்றவர்கள் பின்பற்றிய வழியை பின்பற்றி சென்று வெற்றி காண்பது சாதாரணம்; உங்களுக்கென நீங்களே ஒரு தனிப்பாதை அமைத்து, அதை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவதே அசாதாரணம். சாதாரண விஷயத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், அசாதாரண விஷயத்தை உங்களால் மட்டுமே செய்ய முடியும் என்று எண்ணி செயல்படுங்கள்!

5.பயம் 

 வாழ்வில் பயம் எனும் உணர்வே கொள்ளாமல், நாளையை பற்றிய, எதிர்காலம் குறித்த பயங்களை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையை அதன் போக்கில், அந்தந்த நிமிடங்களில் வாழ்ந்து பாருங்கள், வாழ்வின் அழகான மாற்றத்தை உங்களாலேயே உணர முடியும்.


நம்   வாழ்க்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும்..!

ஆனால்  ஒரே  நாளில் எல்லாம் மாறாது ..!




கடுமையான முயற்சி 

கடுமையான முயற்சி

 போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

வாழ்க்கை பயனம்

வாழ்க்கை பயனம்

 நாம் வாழும் காலம் குறைவு. அதற்குள் அந்த வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும்.. அதுவும் நமக்குப் பிடிச்ச மாதிரி.. .மனது விரும்புவதற்கேற்ப அதை வாழ வேண்டும். மற்றவர்களுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ முடியாது.. உங்களுக்காக வாழுங்கள்.. என்று சொல்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.. உண்மைதானே! உன் வாழ்க்கை உன் கையில் என்பது போல கிடைத்த வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழ வேண்டும். உங்களுக்குப் பிடித்தவருடன் உங்களுக்குப் பிடித்தது போல் வாழும் போது அதன் சுகமே தனி தான். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன் வரை ஒரு நாள் உங்களுக்குப் பிடித்தாற்போல வாழ்ந்து பாருங்களேன். அப்பொழுது தான் நம் மனம் நிறைந்திருக்கும்.

எத்தனையோ வழிகள் உண்டு நமக்குப் பிடித்தது போல் வாழ்வதற்கு ஆனால் நாம் தான் அதைக் கண்டுபிடிக்காமல் ஏதேனும் ஒன்றை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியி்ல்லாமல் இருக்கும் மனிதனிடம் இருக்கும் நிம்மதி கூட ஏனோ மாடமாளிகைகளில் வாழும் மக்களுக்கு ஏனோ இருப்பதில்லை. இரவுபகலாகப் பொருள் ஈட்டுவதற்காக ஓடும் நீங்கள் உங்களுக்காக மாதத்தில் ஓர் நாள் செலவிடலாமே. கிடைத்தற்கரிய உங்கள் மழலைச் செல்வங்களின் அன்பிலும் பெற்றோர்களின் அன்பிலும் நனையலாமே. உங்களுக்குப் பிடித்த உடை அணிந்து பிடித்த உணவு உண்டு பிடித்த இடத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருக்கலாமே.


                                             மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!
                                                  

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.        உடைந்தால் என்ன? வேறு வாங்கிவிட்டால் போச்சு.

4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால் என்ன? அடுத்த பஸ் இருக்கு, இல்லையா?

5.        பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

6.     சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.      அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான்.அதையெல்லாம்
கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பொழுதுதான் உனக்கு நிம்மதி.

8.        இதெல்லாம் சிறிய விஷயம். இற்காகவா கவலைப்படுகிறது...

9.        கஷ்டம் தான் … ஆனால் முடியும்.

10.      நஷ்டம் தான் … ஆனால் மீண்டு வந்துவிடலாம்.

11.      இதில் விட்டால் மற்றொன்றில் எடுத்துவிட மாட்டேனா?

12.      விழுந்தால் என்ன? எழுந்திருக்க மாட்டேனா?

13.      விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

14.      உட்கார்ந்து கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப்  பார்.

15.      இவன் இல்லை என்றால் வேறு ஒருவன் இல்லையா?

16.      இந்த வழி இல்லை என்றால் வேற வழி இல்லியா?

17.      இப்பவும் முடியவில்லையா? சரி. மீண்டும் ஒரு முயற்ச்சி...

18.      இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசித்தால் வழி தெரியுமே.

19.      முடியுமா என்று நினைக்காதே.
முடியணும் என்று நினை.

20.      கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.

21.      அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

22.      விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதற்க்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.      திரும்பத் திரும்ப அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

24.      சும்மா யோசித்துக்கொண்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டென்று
வேலையை ஆரம்பி.

25.      ஆஹா, இவனும் அயோக்கியன் தானா?
சரி, சரி. இனிமேல் எல்லோரிடமும்  நான்கு மடங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்.

26.      உலகத்தில் யார் அடிபடாதவன்? யார் ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.      ஊரில் ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.      கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.      எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.      அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி
இல்லையா?

31.      அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே
போதும்.

32.      நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்தைக் கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,

    *வீழ்வது கேவலமல்ல*, *வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்*....

முயற்சியுடன் எழுந்திடுங்கள்!  உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள்.

         கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…!


அனைவரின் மனதிலும்...

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝🏻😄

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝🏻😄

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐

 சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🏻🌷

 அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰

என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐

இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰
கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍🏻

எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,

மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰

அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.

‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🏻🤔🌷

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,

அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐

ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝🏻

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🏻🌷

இதை நினைக்கிறபோது,

நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏🏻😄👍🏻🙏🏻

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌🏻👍🏻நம்முடைய வாழ்க்கையின் தரத்தையும்
, மதிப்பையும் 🤔👌🏻🌷
உயர்த்துகிற அம்சங்கள்.

                                 வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய விஷயங்கள்


ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.

அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.

“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார்.

மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.

“இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றாள்.

கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

“இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டாள் மனைவி.

கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.

பையை மேலும் குலுக்கினார்.

கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.

“இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?
என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.

“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.

வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்.

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.

ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.

நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்...

நல்லதையே செய்வோம்... நல்லோராய் வாழ்வோம்...!!!

ஒரு குட்டி கதை



ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகின்றேன். யார் வெற்றிடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும், உரம், தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.ஆனால் ராமுவின் தொட்டிட்யில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாததங்கள்  ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று புலம்பினான்.ஆனாலும் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்துவிட்டது எல்லாரும் தொட்டிகளை காட்டுவதற்க்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் நான் காலி தொட்டி எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் வருந்த வேண்டியதில்லை.நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ராமுவும் காலி தொட்டியை எடுத்து சென்றான். எல்லா தொட்டியையும் பார்த்தன் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்ததனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பை ஏத்துக்கொள்ள போகிரீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வையிட்டார்.ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

ராமு தன்னை வேலையை விட்டு நிறுத்தத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவரியாக சொன்னான்.

முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுக்கொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பி போனானன்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் {Boiled seeds}. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்க்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும்,நேர்மையும்,தர்மத்தை பாதுகாக்கும்.நேர்மை ஒரு போதும் வீண் போகாது/ நேர்மையை விதையுங்கள்/ பதவியும் பணமும் தேடி வரும்.

     எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்...!



கடவுள் வந்தார்...!

"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் 7 மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் :

“எனக்கு கணக்கிலடங்கா காசும்,
பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்:

“நான்  உலகில் சிறந்தோங்கி
பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் :

“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்
மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி:

“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!
உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி..

இன்னும் 2 பேரும்
தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

7 மனிதன் கேட்டான்:

 “உலகத்தில்
ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும்
மன நிறைவோடும் வாழ முடியுமோ,
அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

6 பேரும்
அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ *மனநிம்மதி, மன நிறைவு*…

 நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?

 விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த 6 பேரிடமும் :

 “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!

நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,

 7 வது மனிதனைப் பார்த்து :

"நீ இரு..!
நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..

சிறிது  நேரம் கழித்து வருகிறேன்..”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது,

அந்த 6  பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!

கடவுள் அந்த 7 வது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்;

என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..!
துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ
அது கையில் கிடைத்த பின்னும்,

 இன்னும் எதுவுமே கிடைக்காத

அந்த
7 வது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!

நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!

 தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..!
அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே,
அந்த இடத்திலேயே,

அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

7 வது மனிதன்,

கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!

கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே
அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம்
*7 வது* மனிதனா..?

இல்லை
*
*எதுவும் இல்லை* என்கிற மனிதனா..?
முடிவு எடுங்கள்..



இனிமையான எண்ணங்களுடன்

ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்
 இந்த கதையை.


நான்கு 🕯🕯🕯🕯மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
 இருந்தன. மெலிதாய் காற்று வீசிக்கொண்டு
 இருந்தது..!!

காற்றை கண்டதும்...

 'அமைதி‘ என்ற முதல் 🕯மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்து
 விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

‘அன்பு ‘ என்ற அடுத்த 🕯மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாது’ என்று அணைந்துவிட்டது.

 'அறிவு‘ என்ற மூன்றாவது 🕯மெழுகுவர்த்தியும்
 காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.

நான்காவது 🕯மெழுகுவர்த்தி மட்டும் காற்று
 வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.

அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று 🕯🕯🕯மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே'
என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது 🕯மெழுகுவர்த்தி
 சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற 🕯🕯🕯மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.

சிறுவன் உடனே..

நான்காவது 🕯மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..

 'நம்பிக்கை' என்றது அந்த 🕯மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
 இழக்கக் கூடாது...!!

💐தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.

பாடம்14 | கானல் நீரான பணம்...!

👦🏻 அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

👤என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.

🔥கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.

👉🏻அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

👉🏻 அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.

 👉🏻 நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

👉🏻 மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

😇குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான்.

🗣 அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, *ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்*.

👉🏻 *அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே!*

👉🏻_*உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.*_

🙌🏻கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!😋

🚫தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும். 💪🏻

😎_*ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!*_😏

😊_*உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!*_🙃

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.