"நிதானமே பிரதானம்..."-சிறுகதை

ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்ட ஒரு இளைஞன், பசியார்வத்தில் மரத்தின் மேல் சரசரவென்று ஏறிவிட்டான்...

 அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்...

 மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன...

 அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது, அவனது பாரம் தாங்காமல் கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டான்...

 தொங்கியபடி குனிந்து பார்த்தால்...

 தரை வெகு கீழே இருந்தது...

 பயத்தில் கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து, கை வழுக்க ஆரம்பித்தது...

 அப்போது அந்தப் பக்கம் வந்த ஒரு முதியவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். குசும்புடன், அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல்லடி பட்டவுடன் அவனுக்கு ஆத்திரம் வந்தது.

"பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு?" என்று கோபத்துடன் கேட்டான்.

 பெரியவர் பதில் பேசாமல், நக்கலாக சிரித்தபடி மேலும் மற்றொரு கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.

 இளைஞன் மேலும் கோபமுற்றான்.


பெருமுயற்சி எடுத்து, மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

 பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்...

 இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான்.

 அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்?

 உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

 பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார்.

இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்...

உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து, நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்...

 உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.

 அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போக... இளைஞன் சிந்திக்க ஆரம்பித்தான்...!

 இளைஞனின் பதட்டமும், பயமும் அவனை முட்டாளாக்கி விட்டது...!

 பெரியவரின் நிதானமும்...

 சமயோசித புத்தியும் தான்...

 இளைஞனின் கோபம் என்கிற விஷத்தையே அவனை காப்பாற்றும் மருந்தாக மாற்றியது...

 ஆகவே, "நிதானமே பிரதானம்..."
 'நிதானமான மனநிலையில் தான் அறிவுத்திறன் நன்றாக இருக்கும்...' என்பதை புரிந்து கொண்டுடால் இந்த நாள் மட்டுமல்ல... எந்த நாளும் இனிய நாள் தான்...

திறமையை மேன்படுத்த உதவும் ' சுயமதிப்பீடு ' - சிறுகதை
ஒருவருக்கு தன்னைப் பற்றிய தெளிவு இருந்தாலே அவர் வெற்றி பெறுவது உறுதி

ஒவ்வொருவரும் தனித்துவம் பெற்றவர்கள். பிறர் நம்மை எப்போதும் கவனிக்க வேண்டும் என்றே மனம் விரும்புகின்றது. நம் செயல்கள் நல்லவை, கெட்டவை என்பதைவிட மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே நாம் செயல்படுகின்றோம். தனித்துவத்தை நிறுவ முயற்சிக்கிறோம்.

ஆனால் மற்றவரை ஈர்ப்பது மட்டும் தனித்துவமல்ல. நம்மை நாமே கவனிப்பதும் திறமையை மேன்படுத்துவதும் சுயமதிப்பீட்டால்  மட்டுமே முடியும் ..

சுயமதிப்பீடு பற்றிய சிறுகதை உங்களுக்காக இதோ :

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று

ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!!
அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த
கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு
கொண்டிருந்தார்..!!
.
பையன்: "மேடம் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும்
வேலையை எனக்கு கொடுக்க முடியுமா.."?
.
பெண்மணி: (எதிர் பக்கத்தில் பேசுபவர்)
"எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து
வருகிறார்.."!!
.
பையன்: "மேடம் அவருக்கு கொடுக்கும்
சம்பளத்தில் பாதி சம்பளம்
கொடுத்தால் போதும். நான் உங்கள்
தோட்டத்தை பராமரித்து தருகிறேன்.."!!
.
பெண்மணி: "இல்லை இப்பொழுது
பராமரிப்பவரின், பராமரிப்பில் தோட்டம்
நன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில்
மிகவும் திருப்தி அடைகிறேன்."!!
.
பையன்: (இன்னும் பணிவோடு) மேடம் நான்
உங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட
தருவேன்..!!
அதற்காக தனியாக எனக்கு சம்பளம் தர
வேண்டாம்.."!!
.
பெண்மணி: "வேண்டாம்..! நன்றி".!!
.
அந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன்
ரிசிவரை வைத்து விட்டு திரும்பினான்.!!
.
.அந்த கடை முதலாளி அவனிடம்.,
"எனக்கு உன்னுடைய அணுகுமுறையும்'
தோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர்
கொள்ளும் விதமும் பிடித்து இருக்கிறது..
நான் உனக்கு வேலை தருகிறேன் வருவாயா.."?
என்றார்.!
.
பையன்: "நன்றி..! எனக்கு வேலை வேண்டாம்"..!!
.
கடை முதலாளி: "இவ்வளவு நேரம் வேலைக்காக
மன்றாடிக் கொண்டிருந்தாயே.."?
.
பையன்: "இல்லை சார் நான் நன்றாக வேலை
செய்கிறேனா என்று தெரிந்து
கொள்ளத்தான் இப்படி
செய்தேன்..!!
எதிர் முனையில் பேசியவரின் தோட்டத்தை பராமரிக்கும்
தோட்டக்காரன் வேறு யாரும் இல்லை,
அது நான் தான்.!!!
.
இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!!
.
நான் அப்படி செய்வேன்.. இப்படி
செய்வேன்.. என்று கூறுவது
தற்பெருமை..!!
நம் திறமையை அடுத்தவர் புகழ் பாட வேண்டும்
அதுவே திறமை..!!


What is Google Apps?
Google Apps is a cloud-based productivity suite that helps teams communicate, collaborate and get things done from anywhere and on any device. It's simple to set up, use and manage, so your business can focus on what really matters.

Millions of organisations around the world count on Google Apps for professional email, file storage, video meetings, online calendars, document editing and more.
Watch a video or find out more here.

These are some highlights:

Business email for your domain
Looking professional matters, and that means communicating as you@yourcompany.com. Gmail’s simple, powerful features help you build your brand while getting more done.
Access from any location or device
Check emails, share files, edit documents, hold video meetings and more, whether you’re at work, at home or in transit. You can pick up where you left off from a computer, tablet or phone.
Enterprise-level management tools
Robust admin settings give you total command over users, devices, security and more. Your data always belongs to you, and it goes with you, if you switch solutions.
Start free trial

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.