தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1

தெரியாத மொபைல் நம்பரில் இருந்து போன்கால்கள் வந்தால் கண்டு பிடிக்க எளிய வழிமுறைகள்!

ஹலோ…சாரி ராங் நம்பர்!

தெரியாத மொபைல் எண்களில் இருந்து அடுத்தடுத்து போன்கால்கள் வருவது வாடிக்கையான ஒன்றாகிவி்ட்டது.இதற்கு அதிகபட்சம் நாம் செய்வது ‘சாரி, ராங் நம்பர்’ என்று சொல்வதாகத் தான் இருக்கிறது. அப்படியும் அடிக்கடி போன்கள் வந்தால் அந்த நம்பரில் இருந்து வரும் போது கட் செய்வது. இதையும் மீறி அதிக தடவை தெரியாத மொபைல் நம்பரில் இருந்து போன்கால்கள் வந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஆனால் மொபைல் நம்பர்களை ட்ரேஸ் செய்ய ஒரு எளிய வழி உள்ளது.
மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்ய நிறைய வலைத்தளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு மொபைல் டிரெக்ட்ரி இன்டியா என்ற வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும். இதில் ட்ரேஸ் மொபைல் நம்பர், ட்ரேஸ் ஐபி அட்ரஸ், ட்ரேஸ் வெகிக்கல் நம்பர், ட்ரேஸ் லேண்டுலைன் நம்பர் என்று பல வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.


ஹலோ…சாரி ராங் நம்பர்!



இதில் ட்ரேஸ் மொபைல் நம்பர் என்ற வசதியை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு விண்டோ திறக்கப்படும். அந்த விண்டோவில் டைப் மொபைல் நம்பர் என்ற கேட்கப்படும். இதில் எந்த மொபைல் நம்பரில் இருந்து போன்கால் வருகிறதோ அந்த மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும். பிறகு சமர்ப்பிக்க (சப்மிட்) வேண்டும்.
ஹலோ…சாரி ராங் நம்பர்!
இப்படி செய்தால் நாம் டைப் செய்த மொபைல் எண் எந்த தொலை தொடர்பு சேவை கொண்டது, ஜிஎஸ்எம் அல்லது சிடிஎம்ஏ மற்றும் எந்த இடம் என்பது போன்ற தகவல்களை எளிதாக பெறலாம்.
ஹலோ…சாரி ராங் நம்பர்!
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை படித்த பின் இதை நீங்களும் செயல்படுத்தி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன்.

''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.
1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:

முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.

ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.
இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டும்தான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது. முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம்''

உங்களது கணனி பற்றிய முழுமையான தகவல்களை System Information Viewer என்ற மென்பொருளின் துணையுடன் அறிந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் உங்கள் கணனி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது.
System Information Viewer: கணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு
Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது.
இந்த மென்பொருளை தரவிறக்கி Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணனி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும்.
பல Tab-களில் ஒவ்வொரு பகுதி பற்றியும் விரிவாக காணலாம்.
System Information Viewer: கணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு


Word Document தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது.

இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை Alt Key அழுத்தியவாறே தந்தால், அவை உருவாக்கப்பட்டு Textடுடன் அமைக்கப்பட்டு விடும்.

† கத்தி போன்ற இந்த அடையாளம் பெற Alt + 0134.
‡ இதனையே இரட்டையாகப் பெற Alt + 0135.
™ Trade Markஅடையாளம் ஏற்படுத்த Alt +0153.
£ Pounds அடையாளம் பெற Alt + 0163.
¥ Japan Currency Yen அடையாளம் பெற Alt +0165.
© Cpoyright அடையாளம் கிடைக்க Alt + 0169.
® Register Trade Mark அடையாளம் உண்டாக்க Alt +0174.
° Degree என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற Alt +0176.
± Plus or Minus என்பதனைக் காட்ட Alt +0177.
· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த Alt+0183.
¼ கால் என்பதைக் குறிக்க Alt + 0188.
½ அரை என்பதைக் குறிக்க Alt + 0189.
¾ முக்கால் என்பதனைக் குறிக்க Alt + 0190.

நமது கணினியில் எந்தெந்த செட்டிங்க்ஸ் எங்கு இருக்கிறது என்று தேடுவது சற்று சிரமமான காரியம் தான்.எடுத்துகாட்டாக ப்ரௌசெர் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும்,பாஸ்வோர்ட் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும் ஆடியோ தொடர்பான செட்டிங் ஒரு இடத்திலும் இருக்கும்.இப்படி இல்லாமல் நமது கணினியில் இருக்கும் அனைத்து செட்டிங்க்சும்  ஒரு Complete packageஜாக ஒரே இடத்தில் ஒரு போல்டேருக்குள்(Folder) இருந்தால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் தானே??

தகவல்தளம் இன் வாசகர்களுக்காக சின்னதாக ஒரு "Utility program" எழுதி அதனை சாத்தியப்படுத்தியுள்ளோம் .  அதுவும் மிக எளிதாக இதனை உங்கள் கணினியில் நிறுவ முடியும்.



உங்கள் டெஸ்க்டாப்பில் போல்டெர்(Folder) ஒன்று தயாரித்து கொள்ளுங்கள்.

                                        Desktop --Right click ----New----Folder


பிறகு அந்த போல்டெரை ரைட் கிளிக் செய்து Rename செய்து கீழே தரப்பட்டுள்ள பெயரை அதற்கு தந்து விடுங்கள்.


                1தகவல்.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}



           கீழே உள்ள உள்ள படம் போல உங்களது டெஸ்க்டாப்பில் வந்து விடும் 


Computer இன் அனைத்து Settings உம் ஒரே இடத்தில்...!!


 உள்ளே உங்களுக்கு தேவையான அனைத்து செட்டிங் சும் ஒரே இடத்தில நீங்கள் பார்க்கலாம்.

Computer இன் அனைத்து Settings உம் ஒரே இடத்தில்...!!

Windows 7, Windows 8 32bit and 64bitயில்  இது வேலை செய்கிறது .windows vista 64bit யில் நான் பரிசோதித்து பார்க்கவில்லை.


இதற்கு மைக்ரோசாப்ட் Windows Master Control Panel shortcut என்று பெயர் தந்துள்ளனர். இதற்குGodmode என்று இதனை பயன்படுத்திய பயனாளர்கள் பெயர் வைத்துள்ளனர்.பயன்படுத்தி பாருங்கள்...

 Facebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...???


இன்று என்ன தான் படித்தாலும் வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயமாக உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையாலும், கல்வி வளர்ச்சியாலும் சிறந்த வேலையை பெற மிகப்பெரிய போராட்டமே நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான என்ஜினியர்களும், மருத்துவர்களும் உருவாகிக்கொண்டு உள்ளனர். குறிப்பாக கம்யூட்டர் என்ஜீனியர்கள் அதிக அளவில் உருவாகி கொண்டு உள்ளனர். பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக் தளத்தை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். அந்த தளத்தில் நூற்றுகணக்கான வேலை காலி இடங்கள் உள்ளது. தகுதி வாய்ந்த திறமை ,அனுபவம் மிக்க பணியாளர்களை தேடி கொண்டுள்ளது பேஸ்புக் தளம் அந்த தளத்தில் எப்படி பதிவு செய்வது என பார்ப்போம்.


பேஸ்புக் தளம் இதற்க்காக ஒரு தனி பக்கத்தை உருவாக்கி உள்ளது.
முதலில் இந்த https://www.facebook.com/careers இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 Facebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...???
 Facebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...???

இதில் பேஸ்புக் நிறுவனத்தில் தேவைப்படும் பல்வேறு நாடுகளுக்கும் தேவையான அனைத்து காலி பணியிடங்கள் காட்டும். இவற்றை நாடுகளின் படி அறிய மேலே நான் குறிப்பிட்டு காட்டியுள்ள by location என்பதில் டிக் செய்தால் நாடுகளின் வரிசைப்படி பணியிடங்களை பார்த்து கொள்ளலாம்.
உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.


நீங்கள் ஒரு பிரிவை கிளிக் செய்தவுடன் இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்ற லிங்க் இருக்கும் அதில் உங்கள் தகுதிக்கு ஏற்றதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்களுக்கு அந்த வேலைக்கான தகுதிகள் காட்டப்படும் அதை முழுவதும் படித்து நீங்கள் அந்த பணியிடத்திற்கு தகுதியை பெற்று இருந்தால் அதில் உள்ள Apply for this Position என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்

 Facebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...???

இதில் உங்களின் விவரங்களை கொடுத்து கீழே உள்ள Choose File என்பதை அழுத்தி உங்களுடைய Resume அப்லோட் செய்து கொள்ளுங்கள். முடிவில் கீழே உள்ள Submit Application என்ற பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவு தான் உங்களுடைய விண்ணப்பம் பேஸ்புக் நிர்வாகத்தினருக்கு சென்று விட்டது. நீங்கள் அனுப்பிய தகவல்கள் தகுதி வாய்ந்ததாக இருந்தால் உங்களை தொடர்பு கொள்வார்கள்.

வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்!!!ஜாதி மொழி இனம் மதம் நிறம் எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் தகுதி ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து தகுதியான நபர்களுக்கு வேலை வழங்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுக்களும்.


https://www.facebook.com/careers 


மொழிகளின் தோற்றம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு எழுத தெரியாது. ஏனென்றால் அப்பொழுது எழுத்துக்களோ, மொழிகளோ உருவாகவில்லை.
தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த செய்கைகளை பயன்படுத்தினார்கள். பின்னர் படங்களை காட்டினர். உந்தாரனமாக ஒரு புலியை பற்றிய தகவலை தெரிவிக்க, புலியின் உருவத்தை காட்டினர்.

          ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலும், மேசப்போடோமியாவிலும் வாழ்ந்து வந்த மக்கள் இப்படிதான் செய்து வந்தனர். அவர்கள் வரைந்த இந்த உருவங்களுக்கு " பட எழுத்துக்கள் " என்று பெயர்.  எகிப்தில் உள்ள பிரமீடுகளிலும் பட எழுத்துக்களை இன்றும் காணலாம். காலப்போக்கில் பட எழுத்துக்களில் இருந்து "குறி எழுத்துக்கள்" பிறந்தன. மரம் என்ற சொல்லைக் குறிப்பதற்கு மரம் போல படத்தை வரையாமல், ஏதேனும் குறி ஒன்றை எழுதும் வழக்கம் வந்தது. பேச்சில் வரும் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஆயிரக்கணகான குறிகள் எழுதப்பட்டன. பழங்காலத்தில் வாழ்ந்த பாபிலோனியர்களும், ஆசாரியரும் எழுதிய குறி எழுத்துக்கள், உளி வெட்டுக்கள்போல காணப்பட்டன.

    சீன மொழிகள் எழுத்துக்கள் குறிஎலுத்துக்கலாகும் அம்மொழியில் 5000 திற்கும் மேற்பட்ட குறி எழுத்துக்கள் உள்ளன. குறி எழுத்துக்களை கற்பதும், எழுதுவதும் எளிதல்ல. மேல்நாட்டில் முதன் முதலாக எழுத்துக்களை எழுத கற்றுக் கொண்டவர்கள் பெணீசியர்கள். இவர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் வாழ்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து கிரேகர்கள்  எழுத்துக்களை கற்றுக்கொண்டார்கள். கிரேகர்கள் அந்த எழுத்துக்களை ரோமானியர்களுக்கு கற்றுத்தந்தனர். 

இந்திய மொழிகள் 
மொழிகளின் தோற்றம்

     இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எழுத்துக்கள் யாவும் இரு மொழி குடும்பங்களில் அடங்கும். ஒன்று ஆரிய மொழி குடும்பம், இதன் ஆதி மொழி சமஸ்கிரதம். மற்றொன்று திராவிட மொழி குடும்பம். இதன் ஆதி மொழி தமிழ்.

      தமிழுக்கும், சமஸ்கிரததிர்க்கும் தனிதனி எழுத்துக்கள் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  "வட்டெலுதுக்கள்" என்ற தமிழ் எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன. இந்த எழுத்துக்கள் வட்ட வடிவத்தில் இருக்கும்.
சமஸ்கிரதம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழில்களில் கூட்டெலுதுக்கள் உண்டு. இவை இரண்டு மூன்று எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கும். ஆனால் தமிழில் கூட்டெலுதுக்கள் கிடையாது. தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன, இந்த எழுத்துக்கள் சொல்லில் எவ்வாறு சேருகின்றன என்பதற்கு, "தொல்காப்பியம்" என்னும் பழம்தமிழ் இலக்கணத்தில் விதிகள் உண்டு.

காகிதம் 


       பழங்கால மக்கள் கருங்கற்கள் மீதும் சுவர்களின் மீதும் எழுத்துக்களை செதுக்கினர். பிறகு பதபடுத்தபட்ட தோலின் மீதும், மரப்பட்டைகளின் மீதும், பானை ஓடுகளின் மீதும், பனை ஓலைகளிலும் எழுதும் வழக்கம் வந்தது. இந்தியாவில் மக்கள் எப்போது எழுத்துக்கள் கட்டரு கொண்டனர் என்று திட்டவட்டமாக கூறமுடியாது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்துசமவெளி மக்கள் களிமண் பலகைகளில் எழுதி வந்தனர். 

    தமிழ் மிக பழமையான மொழிகளில் ஒன்று. அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறந்த இலக்கியங்கள் தோன்றியுள்ளன. எனவே தமிழ் மக்கள் அதற்க்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். பழங்காலத்தில் தமிழ் நூல்கள், பனை ஓலையில் எழுதப்பட்டன. எழுதும் ஓலையை தேர்ந்தெடுத்து, அதை ஒழுங்காக வாரிக் கட்டுவதே ஒரு கலையாக இருந்தது.

மொழிகளின் தோற்றம்

     மன்னர்கள் கட்டிய அணைகள், சுட்ருசுவர்கள் மீதும் செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. அயல் மொழியின் கருத்துக்களும், சொற்களும் தமிழில் கலந்தன. இதனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையில் பல மாறுபாடுகள் ஏற்பட்டன. அச்சு எந்திரங்கள் வந்த பிறகு தமிழ் மொழியின் வடிவங்கள் மாறாமல் இருந்து வருகிறது.

         தமிழ், ஆங்கிலம் உட்பட பெரும்பாலான மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. உருது எழுத்துக்களையும், அரேபிய எழுத்துக்களையும் வலமிருந்து இடமாக எழுதுகிறார்கள். சீனர்கள் மேலிருந்து கீழாக எழுதுகின்றனர்.

ஒரு Sec ல் Computer ஐ Shutdown செய்ய...
பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.

இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் .


நீங்கள் Windows Xp பயன்படுத்துபவராயின் உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும்).


இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள்.


ஒரு சில வினாடியில் கணினி அணைந்து விடும்

2


google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

தேடியந்திரங்களில் யாரும் தொட முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது கூகுள் இணையதளம் ஆகும். மொபைல்களில் இன்டர்நெட் வசதி வந்த பிறகு கிராமங்களில் கணினியை உபயோகிக்காதவர்கள் கூட மொபைல் மூலம் கூகுளின் வசதியை அறிந்துள்ளனர். இவ்வளவு பேரையும் கவர்ந்திழுக்க காரணம் அதிலுள்ள வசதிகள்.


அதுமட்டுமில்லாமல் தேய்ந்து போன ரெக்கார்டை திரும்ப திரும்ப தேய்க்காமல் வாசகர்கள் பயன்பெறும் வகையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய வசதிகளை புகுத்தி வருவதே கூகுளின் சிறப்பு. அந்த வகையில் தற்பொழுது சில புதிய வசதிகளை கூகுள் தேடியந்திரந்தில் அறிமுக படுத்தி உள்ளனர். அவைகளை கீழே பார்ப்போம்.

1)Scientific Calculator :
கூகுள் தேடியந்திரத்தை வெறும் தேடு பொறியாக மட்டுமின்றி வேறு பல காரணங்களுக்கும் உபயோகிக்கலாம். அதில் முக்கியாமனது கால்குலேட்டர் வசதி. 1+1 என்னன்னு கேட்டால் உடனே சொல்லிடுவோம் 44646*545456 என்னெவென்று கேட்டால் உடனே நாம் தேடுவது கால்குலேட்டரை தான்.  மற்றும் ஏதேனும் மிகவும் கடினமான scientific கணிதங்களை போட Scientific Calculator இருந்தால் தான் போட முடியும்.  இனி இதற்க்காக எங்கும் அலைய வேண்டியதில்லை கூகுளில் Scientific Calculator வசதியை அறிமுக படுத்தி உள்ளனர்.


கூகுளை திறந்து சர்ச் பாரில் சாதரணமாக  1+1 டைப் செய்தால் அதற்க்கான விடை கீழே இருப்பதை போன்று scientific Calculator-ல் வந்திருப்பதை காணலாம்.

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்
இதில் எவ்வளவு கடினமான கணிதங்களுக்கும் எளிதாக விடையை தெரிந்து கொள்ளலாம். மற்றும் இதில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதியும் இருப்பதால் 2+2 என சொன்னாலே அதற்க்கான விடையை அறிந்து கொள்ளலாம். 

இந்த கால்குலேட்டரின் உதவியுடன் போட்ட சில சிக்கலான கணிதங்களை கீழே காணுங்கள்.

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

2) Unit Converter:
கால்குலேட்டர் வசதியோடு மற்றொரு பயனுள்ள வசதியையும் அளித்துள்ளது.   அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்டிற்கு மாற்ற உதவும் வசதியை கொடுத்ள்ளனர்.

அதாவது 1 டிகிரி செல்சியஸ் என்பது எத்தனை பாரன்ஹீட் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 10km என்பது எத்தனை மைல் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 1452 டன் என்பது எத்தனை கிலோ என தெரிய வேண்டுமா? அனைத்தையும் சுலபமாக கூகுள் தேடியந்திரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

இது போன்று அனைத்து அலகுகளையும் உங்களுக்கு தேவையானத்தில் மாற்றி கொள்ளலாம். 

இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். ஆகவே உங்களுக்கு மாணவர்களிடத்தில் இந்த வசதியை அறிமுக படுத்துங்கள். 




தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)


நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது. மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா? இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

தகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது. அத்தீர்ப்பின் சாராம்சம்: அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.

இத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா? ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம்? அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும்? குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்? என்ற விவரங்களை அறியலாம்.

இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது. தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.

அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.

ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.

இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.

அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.

ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005) 
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)







தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)




தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)




RTI

தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.