108 விநாயகர்போற்றி VINAYAHAR CHADURTHI SPECIAL


#VINAYAHAR_CHADURTHI_SPECIAL

#விநாயகர்போற்றி 108

ஓம் விநாயகனே போற்றி

ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி

ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி

ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி

ஓம் ஆனை முகத்தோனே போற்றி

ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி

ஓம் ஆதி மூலமே போற்றி

ஓம் ஆனந்த உருவே போற்றி

ஓம் இமவான் சந்ததியே போற்றி

ஓம் இடரைக் களைவோனே போற்றி

ஓம் ஈசன் மகனே போற்றி

ஓம் ஈகை உருவே போற்றி

ஓம் உண்மை வடிவே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஊறும் களிப்பே போற்றி

ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி

ஓம் எளியவனே போற்றி

ஓம் எந்தையே போற்றி

ஓம் எங்குமிருப்பவனே போற்றி

ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி

ஓம் ஏழை பங்காளனே போற்றி

ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி

ஓம் ஐயனே போற்றி

ஓம் ஐங்கரனே போற்றி

ஓம் ஒப்பிலாதவனே போற்றி

ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி

ஓம் ஒளிமய உருவே போற்றி

ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி

ஓம் கணேசனே போற்றி

ஓம் கணநாயகனே போற்றி

ஓம் கண்ணிற்படுபவனே போற்றி

ஓம் கலியுக நாதனே போற்றி

ஓம் கற்பகத்தருவே போற்றி

ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி

ஓம் கிருபாநிதியே போற்றி

ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி

ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி

ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் குணநிதியே போற்றி

ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி

ஓம் கூவிட வருவோய் போற்றி

ஓம் கூத்தன் மகனே போற்றி

ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி

ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி

ஓம் கோனே போற்றி

ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி

ஓம் சடுதியில் வருபவனே போற்றி

ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

ஓம் சங்கடஹரனே போற்றி

ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி

ஓம் சிறிய கண்ணோனே போற்றி

ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி

ஓம் சுருதிப் பொருளே போற்றி

ஓம் சுந்தரவடிவே போற்றி

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

ஓம் ஞான முதல்வனே போற்றி

ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி

ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி

ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி

ஓம் துயர் துடைப்பவனே போற்றி

ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி

ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் தொந்தி விநாயகனே போற்றி

ஓம் தொழுவோ நாயகனே போற்றி

ஓம் தோணியே போற்றி

ஓம் தோன்றலே போற்றி

ஓம் நம்பியே போற்றி

ஓம் நாதனே போற்றி

ஓம் நீறணிந்தவனே போற்றி

ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி

ஓம் பழத்தை வென்றவனே போற்றி

ஓம் பாரதம் எழுதியவனே போற்றி

ஓம் பரம்பொருளே போற்றி

ஓம் பரிபூரணனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி

ஓம் பிரம்மசாரியே போற்றி

ஓம் பிள்ளையாரே போற்றி

ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி

ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி

ஓம் புதுமை வடிவே போற்றி

ஓம் புண்ணியனே போற்றி

ஓம் பெரியவனே போற்றி

ஓம் பெரிய உடலோனே போற்றி

ஓம் பேரருளாளனே போற்றி

ஓம் பேதம் அறுப்போனே போற்றி

ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி

ஓம் மகிமையளிப்பவனே போற்றி

ஓம் மகாகணபதியே போற்றி

ஓம் மகேசுவரனே போற்றி

ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி

ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி

ஓம் முறக்காதோனே போற்றி

ஓம் முழுமுதற்கடவுளே போற்றி

ஓம் முக்கணன் மகனே போற்றி

ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி

ஓம் மூத்தோனே போற்றி

ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி

ஓம் வல்லப கணபதியே போற்றி

ஓம் வரம்தரு நாயகனே போற்றி

ஓம் விக்னேஸ்வரனே போற்றி

ஓம் வியாஸன் சேவகனே போற்றி

ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி

ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

இந்த இனிய பொன் நாளில் விநாயகர் உங்களுக்கும் உங்கள் குடும்பதினருக்கும்
எல்லா அருளையும் புரியட்டும் ...

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.

25 வருஷத்துக்கு முன்னாடி  கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது...

ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம நம்மள மாத்திக்கணும்...!

1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு?

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்புளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள்.

மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது. கமிஷனோட...! இல்லீங்களா..?

'Ubar'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க?

ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ?

 உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  IPC Sectionஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ?

  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..!

 அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?

ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.

'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!

ஆட்டோமோட்டிவ் தொழில்நு100% நம்புகிற ஒரு விஷயத்தை சொல்றேன் கேட்டுக்கோங்க...!

2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...

ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும்.

பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும்.

கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது.

சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம்.

 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும்.

உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்.


2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.


 எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..?

உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா.

ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...!

அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.
2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.


ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...

2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது.

உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும்.

அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.

அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..

புதுசா தொழில்கள் வரும்..ஆனா வேலையில்லா திண்டாட்டம் கூடிகிட்டே போகும்.  மொத்தத்துல, சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும் அப்பு...! புரிஞ்சு நடத்துக்குங்க..சொல்லிட்டேன்...!

 எங்கே செல்கிறோம் தமிழா ??   நாம் எங்கே செல்கிறோம் ??எங்கே செல்கிறோம்  ?? 

நாம் எங்கே செல்கிறோம் ??

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே?

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க ஆலங்குச்சி எங்கே?

எலந்தை பழம் எங்கே?
சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடை பழக்கிய நடை வண்டி எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர் கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண் புழு எங்கே?

வெட்டு மண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள் எங்கே?

தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே?

குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால் கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே?

பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே?

தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே?

மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே?

மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?

இடுப்பை சுற்றி கட்டிய பணப் பை எங்கே?

இடுப்பில் சொருகிய சுருக்கு பை எங்கே?

தாவணி அணிந்த இளசுகள் எங்கே?

சுத்தமான கிணற்று நீரும் எங்கே?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?

எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே?

சிந்திக்க நமக்கு நேரம் தான் எங்கே?

எங்கே? 

எங்கே?? 

எங்கே???

இத்தனையும் தொலைத்து விட்டு நாம் செல்கின்ற அவசர பயணம் தான் எங்கே?!?!?!

வாழ்க்கை துளிகள் -  தினம் ஒரு தகவல்
வாழ்க்கை துளிகள் -  தினம் ஒரு தகவல் 
தவறைச் சுட்டிகாட்டினால் சில சமயம் உறவுகளுக்கு
மன கஷ்டத்தை உண்டாக்கும் ஆனால்,தன் தவறை உணர்ந்த
பின் மீண்டும் நம்மைத் தேடி வரும்.

உழைத்து வாழ்பவர்களை
உலகம் மிகப்பெரிய இடத்தில்
உயர்த்தி காண்பிக்கும் தன்னம்பிக்கையும்,துணிவும்
வெற்றிப்பாதை அமைத்துக்கொடுக்கும்

நீ நல்லவன் என்பதால் உன்னை
யாரும் ஏமாற்ற மாட்டார்கள் என எதிர்பார்ப்பது,
நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாது என நம்புவதற்கு சமம்.

 நம்பிக்கை தரும் வரிகள் !!!
 நம்பிக்கை தரும் வரிகள் !!!
ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!

ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!

கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!

கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!

இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!

கனவு நிறைவேறும்வரை முயற்சியை கலைத்து விடாதே ஏனெனில்..
முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!
வெற்றிப்பாதை!!

உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!

அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!

இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!

துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!

ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!

தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!

செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!

பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!

மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!

புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!

தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!

தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.