அவினாசி அத்திக்கடவு திட்டம்



 அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்  

ஒரு வரலாறு .... ஒரு கோரிக்கை .... ஒரு தீர்வு ...

கடந்த 60 ஆண்டு காலமாக அவினாசி பகுதி தமிழகத்திலேயே கடும் வறட்சியின் கொடுமையை அனுபவித்து வரும் பகுதியாகும். இத்திட்டம் பாசன திட்டம் இல்லாமல் நிலத்தின் வழியாக ஏற்கனவே இயற்கையாக வந்து கொண்டிருந்த கால்வாய்கள் மூலம் வறண்டு கிடக்கும் குளம், குட்டைகளுக்கு நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து எங்கள் பகுதின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருக்கிறது. காரமடை, மேட்டுபாளையம், அன்னூர்,  திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துகுளி, நம்பியூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 7 சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த 35 லட்சம் மக்களுக்கு பயன்படும் திட்டமாகும். 

                          1800 அடிக்குக் கீழே சென்றுவிட்ட நிலத்தடி நீர் மட்டம் இத்திட்டத்தினால் வெறும் 50 அடிக்கு வந்துவிடும். மின்செலவு, ஆழ்குழாய் கிணறு அமைக்கும் செலவு, மின் மோட்டார், ஒயர், பைப், ஆட்கள் கூலி என இவை  அணைத்து  செலவுகளும்  விவசாயிக்கும்,  அரசுக்கும்  மீதமாகும்.
1.25 TMC தண்ணீர் மட்டுமே இத்திட்டத்திற்கு தேவைப்படுகிறது. பவானிசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து பல ஆயிரம்  TMC தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அதில், குறிப்பாக 17 முறை குறைந்தபட்சம் 22 TMC முதல்  அதிகபட்சம் 109.23 TMC வரை தண்ணீர் வெளியேறியுள்ளது. இவ்வாறு அணைகள் நிரம்பி உபரி ஆகும் நீரைத்தான் இத்திட்டதிருக்கு கேட்கிறோம்.

    
அவினாசி அத்திக்கடவு திட்டம்


           கடந்த 1957 முதல் 1967 வரை அவினாசி சட்டமன்ற உறுபினராக இருந்த (லேட்) திரு.K.மாரப்பகவுண்டர் அவர்கள், அன்றைய  முதல்வர் மரியாதைக்குரிய திரு.கே.காமராஜர் அவர்களிடம் அவினாசி திட்டத்தை மட்டுமே கோரி வந்தார். இந்த 1963 ஆண்டு பிளான்-யை (காமராஜர்திட்டம்) காமராஜர் டில்லி காங்கிரசுக்கு தலைவராகப் போன காரணத்தால் திரு.பக்தவச்சலம் 1967 வரை காலதாமதப்படுத்தி விட்டார். பின்னர் வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியும் 5 முறை முதல்வராக இருந்த போதும் இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை. காரணம் தி.மு.க, தேர்தலில் நின்ற காலத்தில் இருந்து 1996-ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்கு முன்பு காங்கிராசும் 1980க்கு பிறகு அ.தி.மு.க வும் இத்தொகுதியை கைபற்றி உள்ளது(அவர்களும் நிறைவேற்றவில்லை). 2001 யில்  பஸ் சின்னத்தில் நின்ற இத்திட்டத்தின் வேட்பாளர் 38,000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த வேட்பாளர் தோல்வியை தழுவினாலும் அரசியல் சரித்திரத்தில் ஒரு வேட்பாளரால்........ ஒரு திட்டதால்..... புதிய எழுச்சியால் - ஆண்ட கட்சி டெபொசிட் இழந்தது.தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களும் திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறியுள்ளார்.

                        தென்னை, பனை என எல்லா வகை தாவரங்களும் வறண்டு, நிலத்தடி நீரும் வற்றி கால்நடைகளையும் வளர்க்க வழியில்லாமல் வாழ்வாதாரம் தேடி விவசாயிகள் நாடோடி ஆகின்றனர். வாழ்க்கை முழுவதும் கடன்காரனாக ஆகிவிட்டதால், வாழ்க்கை முடித்து கொள்வதற்கும் தற்கொலைகளுக்கு முயற்சிப்பதை தடுத்தாக வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

                                    அவிநாசிக்கு வடக்கே உள்ள புளியம்பட்டி, நம்பியூருக்கு தெற்கேயும்,அவிநாசிக்கு தெற்கில் உள்ள நொய்யலும், கிழக்கில் உள்ள பெருந்துறை அருகிலும் பாசன வசதியுள்ள பகுதிகளாகும். ஆனால்,, அவினாசி வட்டாரத்தில் 60 ஆண்டுகளாக கடும் வறட்சி, மழையின்மை, பாசன வசதியின்மை என்று இருந்தபோதிலும் 1,300 அடிக்கும் கீழே ஆழ்துளை கிணறு அமைத்து, தற்போதைய கடுமையான மின்வெட்டு நேரத்திலும், மஞ்சள், பருத்தி, வாழை, கரும்பு என எல்லா பயிர்களையும் சாகுபடி செய்து கடும் உழைப்பால் நிலத்தை நல்லபடி வைத்துள்ளனர். ஆனால், விவசாயி கடன்காரன் ஆனான்.

                     முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட கொங்கு மண்டலத்துக்கு வரும் அரசியல் தலைவர்கள் யாரும் இத்திட்டத்தை பற்றி பேசாதவர்களில்லை. குந்தா கழிவு நீர் திட்டம், மேல் பவானித் திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டம், அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் என ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட பொழுதெல்லாம் திட்டத்தின் பெயர்கள் மட்டுமே மாறுகிறது. யாரும் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை.

                                 தற்போது ரூ.1,863 கோடியே திட்ட செலவாகும் என அரசு கூறுகிறது. காவிரி நதி நீர் பங்கீடு விசியத்தை, உச்சநீதிமன்றத்தை அணுகி, மத்திய அரசுதழில் வெளியிட நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நாட்டிய முதல்வர் ஜெயலலிதா நிவாரணம் செய்தது போல, கெயில் நிறுவனம் விவசாயிகளை ஏமாற்ற முற்பட்டபோது நெடுஞ்சாலைகளில் குலை பதிக்க ஆணையிட்டது போல மிகவும் உறுதியாக, அத்திக்கடவு அவினாசி திட்டத்தையும் முதல்வர் அறிவிக்க வேண்டும். எனவே, இத்திட்டத்தை அரசு இதழில் வெளியிட்டு, நிதி ஒதுக்கி அலுவலர்களை நியமித்து மிக வேகமாக, போர்கால அடிப்படையில் பணிகளை துவக்க வேண்டும். இனி கொங்கு மண்டல விவசயிகள் அரசியல்வாதிகளின் வெற்று வாக்குறுதிகளை நம்பமாட்டார்கள். இத்திட்டம் வெறும் அறிக்கை அறிவிப்பாக இல்லாமல் ஆக்கபூர்வமாக நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுக்கவில்லை என்றால், அதிமுக வின் எக்கு கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலம் உருகி, கண்டிப்பாக ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

              திருப்பூர் வடக்கு, பல்லடம், அவினாசி - ஆகிய சட்டமன்ற தொகுதிகள், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் முதல் மூன்று இடங்களை பிடித்ததை யாரும் மறக்க மாட்டார்கள். அதே சமயம் இத்திட்டத்தை காலதாமதபடுத்தினால், அந்த சரித்தரம் காணமல் போய்விடும்.

அத்திக்கடவு -அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமும், அதன் பயனும்

 1. திட்டத்தின் நோக்கம் பாசன திட்டமாக இல்லாமல் குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண்டும் என்பதுதான்.

 2. பவானி ஆற்றில் ஆண்டுக்கு 53 T.M.C தண்ணீர் உபரி நீராக கடலில் சென்று கலக்கிறது. இந்த தண்ணீரை அவினாசி உட்பட 2000க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மொத்தம் 85 பெரிய குளங்களும் 225-க்கு மேற்பட்டகுட்டைகளும் நிரப்ப முடியும். இதற்கு தேவையான நீரின் அளவு 1.2 T.M.C மட்டுமே.

3. இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களை சார்ந்த 1.30 லட்சம் ஏக்கருக்கு  மேற்பட்ட விவசாய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

4. ஆண்டுக்கு ஒருமுறை நிரப்பப்படும் தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராது. 25 லட்சதிருக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தேவையான குடிநீர் தன்நிறைவு பெரும்.

5. தற்போதுள்ள மின் பற்றாகுறைக் காலத்தில் இது ஒரு மின் சேமிப்பு திட்டமாக உள்ளது. சுமார் 35 லட்சதிருக்கு மேற்பட்ட விவசாய பகுதிகளில் நீர் எடுப்பதற்கு பயன்படும் மின் மோட்டார்களின் பயன்பாடு குறையும்.

6. விவசாய விளை நிலங்கள் விலை நிலங்களாக(வீட்டு மனைகளாக) மற்றப்பாடுவது முற்றிலும் தடுக்கப்படும். பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்படும், ஆழ்துளை கிணறுகள் தொண்டபடுவது தடுக்கபடும், இதனால் ஏற்படும் பூகம்பம் போன்ற பேரிடர் தடுக்கப்படும்.

இதுவரை திட்டம் கடந்து வந்த பாதை........ 

1. 1993-ம் வருடம் மக்கள் சக்தி இயக்க நிறுவனர், காலஞ்சென்ற முனவைர் எம். எஸ். உதயமூர்த்தி ஐயா அவர்கள் தலைமையில் 9 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ளபட்டது.

2. 1996-ல் ஈரோடு மாவட்டம் (தற்போது திருப்பூர் மாவட்டம்) குன்னதூரில் திட்டத்தை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்.

3. ஈரோடு மாவட்ட பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் அனைவரும் இணைந்து அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களிடம் மனு கொடுத்தனர்.

4. அவினாசி தொகுதியில் அவினாசி அத்திக்கடவு வேட்பாளராக திரு. மோகன்குமரை அவர்களை நிறுத்தி திட்டதிருக்கு அதரவாக 38,000 வாக்குகளை பெற்று அரசின் கவனத்தை திருப்பினர்.

 5. 2003 - யில் கொங்கு பேரவை சார்வாக குமார. இரவிக்குமார் தலைமையில் உண்ணாவிரதம்.

திரு. மரப்பகவுண்டர்,  திரு.அம்பளவான செட்டியார், திரு.ராஜ்குமார் மன்றாடியர், திரு.போன்னுகுட்டி, நடிகர். திரு.சரத்குமார், கிசான். வேலுசாமி, திரு.ராஜாசேனாதிபதி, கொமுகா நாகராஜ், அசநல்லிபாளையம் சுப்பிரமணி மேலும் அன்னூர் மற்றும் குன்னத்தூர் பகுதிகளை சேர்ந்த பலரது பெயர் எனக்கு தெரியவில்லை  இவ்வாறு பெயர்களை சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு பேர் இந்த திட்டத்தை மக்களிடமும், அரசிடமும் கொண்டு சென்றனர்.

        இவ்வாறு கட்சி வேறுபாடு இல்லாமல் விவசாயிகள், பொதுமக்கள், தொழிலார்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் ஒரு அணியில் நின்று கடையடைப்பு, ஆர்பாட்டம், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து அதனால் கைதாகி பொள்ளாச்சி மற்றும் கோவை சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம், சைக்கிள் பேரணி, 1,500 பேர் மொட்டையடித்து போராட்டம், வாகன பேரணி, நடைபயணம், தேர்தலில் போட்டி என அரசின் கவனத்தை ஈர்த்து வெளி மாநிலகளில் உள்ள நீர் ஆதரத்தை நம்பி இல்லாமல், நம்மிடம் உள்ள இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் முலம், மக்கள் வாழ்வில் வசந்தம் வீச அனைவரும் ஓன்று திரண்டு, அரசின் கவனத்தை ஈர்த்து போராடி வருகிறோம்.

இங்ஙனம்
வருங்கால சந்ததிக்கு தண்ணீரையும், வாழ்வாதாரத்தை கேட்கும்.....
தூர்ப்பாக்கியமான நிலையிலுள்ள 
அவினாசி, அன்னூர், குன்னத்தூர், பொதுமக்கள் 




   
அவினாசி அத்திக்கடவு திட்டம் :-

இந்த உயிர் திட்டதிக்கு  நாங்கள் போராடிய போரட்டங்கள் ஏத்தனை ஏத்தனை .... நீங்களே பாருங்கள் கீழே உள்ள படங்களை:  இந்த பல முகங்கள் கொண்ட அரசியல் வாதிகளை என்ன செய்யலாம்.

அவினாசி அத்திக்கடவு திட்டம்




அவினாசி அத்திக்கடவு திட்டம்





அவினாசி அத்திக்கடவு திட்டம்




அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்
அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்


அவினாசி அத்திக்கடவு திட்டம்




அவினாசி அத்திக்கடவு திட்டம்




அவினாசி அத்திக்கடவு திட்டம்

அவினாசி அத்திக்கடவு திட்டம்
அத்திக்கடவு  திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வாகன பேரணி(ஏப். 28- 2013)
அவினாசி அத்திக்கடவு திட்டம்
 உண்ணாவிரத போரட்டம் அவினாசியில் (24/5/13)


அவினாசி அத்திக்கடவு திட்டம்
விழிப்புணர்வுபொதுக்கூட்டம்(26.5.13)

அவினாசி அத்திக்கடவு திட்டம்

(7/7/2013)

அவினாசி அத்திக்கடவு திட்டம்

கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம்
(4-8-2013 -11-8-2013)

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.