வழிகாட்ம் தேவதை !! மனதில் உறுதி வேண்டும்..! சிறுகதை...!!
ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது..
அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..

அதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும்..

அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்..

அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்..
தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது..

”நான் உன்பின்னால் வருவேன்..

நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்..

வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்…

நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..

நடந்து கொண்டே இருக்கவேண்டும்..

எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது.”.எனகிறது..

முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது..
தீடிரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை ..
என்னாயிற்று..என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறிவிட்டான்.. கற்சிலையாகிவிடுகிறான்.

அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்..

கிட்டத்ட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.
.தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது.
ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்..அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்..

மூன்றாமவன் அடுத்து வருகிறான்.

இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்..பின்னால் அலறல் சத்தம்..சிரிப்பொலி..இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்..

நீதி: பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது

நன்றி:
Jeeva Sindhu

விநாயகரின் உருவம் பொறித்த வெளிநாட்டு தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்

இந்து மதம் பெரிதும் பரவியிருக்காத வெளிநாடுகளில் விநாயகரின் உருவம் பொறித்த தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியமான செய்திதான்...

விநாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இருந்துள்ளது. இப்போதும் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இந்துமத கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். நேபாளம், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகள் வெளியிட்ட தபால் தலையில் விநாயகர் உருவம் உள்ளது. இதில் லாவோஸ் என்பது, பர்மா, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடாகும். சில நாடுகளின் ரூபாய் நோட்டுக்களிலும் விநாயகர் இடம்பிடித்துள்ளார்.

விநாயகரின் உருவம் பொறித்த வெளிநாட்டு தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்



இது எப்படி சாத்தியம் என்று வரலாற்றை புரட்டிப்பார்க்கும் போதுதான் நமக்கு நம் தமிழ் மன்னர்களின் வீரவரலாறு தெரிகிறது.அந்த வரலற்ட்ரை பார்த்தபோது ராஜராஜசோழன், ராஜேந்திர சோழ மன்னர்களின் படையெடுப்புகளும், பிற்காலத்தில் வணிகத் தொடர்புகளுமே தெற்காசிய நாடுகளில் இந்து கலாச்சாரம் பரவக் காரணம்”

தாய்லாந்து நாட்டின் 10 பாட் நாணயத்தில் விநாயகர் உருவம் உள்ளது. அதேபோல, இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளிலும் விநாயகர் படம் உள்ளது. சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாகும்.

அங்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். இருப்பினும், அந்நாட்டில் இந்துக்கள் அதிகம் வாழ்கிற பாலி தீவில், செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கருதப்படுகிறார். எனவே, இந்தோனேசிய அரசு விநாயகர் உருவம் பதித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

வாபஸ் பெறப்பட்ட விநாயகர் நோட்டு!

இந்தோனேசியா உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்க்கும் மக்கள் அதிகம் கொண்டநாடு என்பதால், அங்கு விநாயகர் உருவத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பின்னாட்களில் அரசே அவற்றை திரும்பப் பெற்றுவிட்டது. எனவே, விநாயகர் படம் பொறித்த இந்தோனேசிய ரூபாய் நோட்டு அரிய பொக்கிஷமாகி விட்டது.


லாவோஸ் நாட்டில் விநாயகருக்கு மட்டுமின்றி சரஸ்வதி, பிரம்மா, நாககன்னிக்கும் தபால்தலை வெளியிடப் பட்டுள்ளது.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை அறிந்து கொள் இதப்படியுங்க..

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி?


சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …

பால் பவுடர் பிரச்சனை, சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ), சரி நம்ம எப்படி சீன, தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்.

பார்கோடு(barcode) என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons —

இந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்...

பிறர்க்கு உதவுங்கள்..குட்டி கதை

காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது .

ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி,
அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக்
கிள்ளியது. நாலாவது நாள்...

பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.
அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவ லகத் தில்
யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை.

பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால்
இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர்.

யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை.

(சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)

அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார். நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை.

இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.

அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும் ,
சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி, தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.

காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது.

 அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்க கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும்கண்டு பிடித்துவிட்டார்கள்.
புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்
கள்!

நீதி:- உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,செல்வமோ கிடையாது. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு ‪‎உதவியாக‬ இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!..

புதினாவில் இத்தனை குணங்களா?

மருத்துவ குணம் வாய்ந்த புதினா, 

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்களின் பால பாடம். நமது முன்னோர் தங்களுக்கு வரும் பிணிகளை உணவில் மாற்றங்களை செய்வதன் மூலமே போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்கள் உணவில் அடிக்கடி இடம் பெறும் ஒரு தாவரம் புதினா. மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சை பசேலென்ற இலைகளுடன் காணப்படும் புதினா அபாரமான மணமும், ருசியும் கொண்டது. புதினா ஒரு புதிரான தாவரமும் கூட.

புதினாவில் வயல் புதினா, கார்ன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பெப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றனவாம். இதில் ஏ.பி.சி வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, புரதம் என்று பல சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்று நோயை தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

ஐந்து ரூபாய்க்கு கைநிறைய கிடைக்கும் புதினாவின் மருத்துவ சக்தி அபாரமானது. புதினாவை உணவில் அனைத்து கீரைகள் மற்றும் காய்கறிகளுடனும் சேர்த்து பயன்படுத்தலாம். பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா, வயிற்று வலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச் சிக்கல், உப்புசம், வயிற்றுப் போக்கு உள்பட பல வயிற்றுக் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்குவதுடன், காய்ச்சல், நீர்க்கடுப்பு அகலும். செரிமானம் ஆவதில் பிரச்சினை இருந்தால் புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கி விடும்.

ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினாச் சாறு அளித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகி குழந்தைகள் வீரிட்டு அழுவது நிற்கும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மென்தால் என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினாவில் இருந்து பற்பசையுடன், காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு தீ வைத்து, நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல் இருக்கும் பாகங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். மூட்டு வலிக்கு இந்த முறை சிறந்த பயனளிக்கும். புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஊளைச் சதை குறைந்து ‘சிலிம்’ ஆகலாம். புதினா பற்றிய ஆராய்ச்சிகள் இன்றும் உலக அளவில் நடந்த வண்ணம் உள்ளன. இதன்மூலம் புதினாவை பற்றிய பல புதிர்களை அவிழ்க்க வாய்ப்பு உள்ளது.

மிரட்ட வரும் குட்டிப் பேய் கதை!! பயம்.. எப்பொழுது வரும்..?

ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.

இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.

இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.
அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.

மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.

அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.
அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா....“ என்று சொன்னது.

அதற்கு அம்மா பேய்.... “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.

இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை. “எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.

உம்ம்ம்... ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.

இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்... “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாளி இவன் தான்“ என்றது.

அதற்கு அம்மா பேய்... “அவன் தைரியசாளி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார்“ என்றது.
குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது. அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான்.

குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... “அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்..?“ என்று கேட்டது.

இதற்கு அம்மா பேய், “மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.

அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்“ என்றதாம்.
(உண்மை தானா...?)

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற உதவும் இணையதளங்கள்

மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது.

படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன.

பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.

www.escholarship.tn.gov.in

www.tnea.in

www.tndce.in

www.scholarshipsinindia.com

www.education.nic.in

www.scholarship-positions.com

www.studyabroadfunding.org

www.scholarships.com

www.scholarshipnet.info

www.eastchance.com

www.financialaidtips.org

இந்த இணையதளங்களில், கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி ,

நம் முன்னோர் கட்டிய உருமாலைக்குப் பின் ஒளிந்திருக்கும் ரகசியம்.!!

நம் மரபுகளை நன்கு உணர்ந்து பின்பற்றி வரும் பலர் இருந்தாலும், மேற்குநாட்டு கலாச்சாரம் மற்றும் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட 'சிலர்' நம் நாட்டு மரபுகளையும் கலாச்சாரத்தையும் பிற்போக்கு என்று எண்ணிகொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்றான நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பான உருமாலை கட்டை பற்றி பார்ப்போம். கறுப்பு நிறம் என்பது சூரியனின் வெப்ப கதிரியக்கங்களை முழுமையாக இழுத்துக்கொள்ள கூடியது. அதனால் சீக்கிரமே தலை சூடாவது அனைவரும் அறிந்ததே.

நமது மூளை தலைக்குள் ஒரு திரவத்தின் உள்ளே மிதந்து கொண்டிருக்கிறது. அந்த திரவம் சூடேறினால் தலைவலி முதல் மூளை கோளாறு வரை அனைத்து வகை பாதிப்புக்களும் வெப்ப அயர்ச்சியால் மூளை சாவும் கூட ஏற்பட வாய்ப்புண்டு. அந்த திரவ படிமம் தலையின் முன்பாகம் (நெற்றி) துவங்கி பின்னால் வரை படர்ந்து உள்ளது.

உருமாலை கட்டு என்பது வெள்ளை பருத்தி நூலால் நெய்யப்பட்ட துண்டை கொண்டுதான் கட்டப்படும். உருமாலை கட்டு சரியாக அந்த திரவம் உள்ள பகுதிகளை முழுமையாக மூடிவிடும்.

அதுவுமன்றி வெள்ளை நிறம் என்பதால் தலையில் விழும் அனைத்து சூரிய வெப்ப கதிரையும் திருப்பி அனுப்பி விடும் ( வெள்ளை நிறம் வெப்ப ஒளிக்கற்றைகளை 100% Reflect பண்ணும் இயல்புடையது ).

அதுவுமன்றி ஈர்க்கப்படும் சிறு அளவு வெப்பமும் தலைக்குள் செல்லாதவாறு பல அடுக்கு பருத்தி துண்டு பார்த்துக்கொள்ளும். தலைக்கு காற்றோட்டம் நன்றாக கிடைக்கும் பருத்தியின் இயற்கையான குளிர்ச்சி, ஈரத்தை / வியர்வையை உறியும் தன்மை போன்றவற்றால் கிடைக்கும் சுகம் அதை கட்டுவோருக்கே தெரியும்

நம் முன்னோர்கள்.நமது தலையை சூரியனின் வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காகவே கண்டுபிடித்ததுதான் இந்த உருமாலை கட்டு இன்று கடைகளில் கிடைக்கும் தொப்பிகள் நம்மை அடிமையாக வைத்திருந்த வெள்ளைக்காரன் அறிமுக படுத்தியதுதான்

தொப்பிகள் தலையை கவ்வி நிற்கும் காற்றோட்டம் கிடையாது குளிர்சியற்ற தன்மை மற்றும் அதை அணிவதால் தலையில் ஏற்படும் வியர்வை போன்றவற்றை விட நமது உருமாலை எவ்வளவோ மேல். மேலும் தொப்பிகள் பெரும்பாலும் வெள்ளை நிறம் அல்லாது பிற வர்ணங்களிலேயே வருகிறது.

நமது நாடு வெப்ப பிரதேசம் கொண்டது பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிவது நமது உடல்நலனுக்கு மிகவும் ஏற்றது

தொப்பிகள் பருத்தியால் அதிகமாக நெய்யப்படுவதில்லை ( கதர் குல்லாய் இதற்கு விதி விலக்கு ) உருமாலை கட்டும்போது கிடைக்கும் பெருமித உணர்வுக்கென்றே கட்டலாம்

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!


இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தை நம் மக்களுடன் பகிர்ந்துகொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.

பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.
அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்ச்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேயக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா? வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!


பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of” என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!!
பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.