தினம்-ஒரு-புது-தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.

25 வருஷத்துக்கு முன்னாடி  கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது...

ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம நம்மள மாத்திக்கணும்...!

1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு?

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்புளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள்.

மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது. கமிஷனோட...! இல்லீங்களா..?

'Ubar'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க?

ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ?

 உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  IPC Sectionஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ?

  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..!

 அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?

ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.

'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!

ஆட்டோமோட்டிவ் தொழில்நு100% நம்புகிற ஒரு விஷயத்தை சொல்றேன் கேட்டுக்கோங்க...!

2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...

ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும்.

பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும்.

கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது.

சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம்.

 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும்.

உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்.


2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.


 எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..?

உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா.

ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...!

அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.
2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.


ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...

2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது.

உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும்.

அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.

அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..

புதுசா தொழில்கள் வரும்..ஆனா வேலையில்லா திண்டாட்டம் கூடிகிட்டே போகும்.  மொத்தத்துல, சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும் அப்பு...! புரிஞ்சு நடத்துக்குங்க..சொல்லிட்டேன்...!


ஒருவர் மீது கோபம் கொள்ள  சூழ்நிலையே காரணம்!

கோபம் வந்தால் வெற்று படகாய் மாறு
நீ படகில் சென்று கொண்டிருக்கிறாய்.
எதிரே மற்றொரு படகில் வந்து மோதும் போது அவர் மேல் கோபப்படுகிறாய்.
ஏனெனில் கோபம் கொள்ள ஒரு நபர் இருக்கிறார்.
அதுவே ஒரு காலியான படகு மோதும் போது
சூழ்நிலையை சரிசெய்கிறாய்.
அதன்மீது கோபப்பட மாட்டாய்.
ஏனெனில் அங்கே கோபம் கொள்ள நபர் யாரும் இல்லை.
வெறுமையே உள்ளது.
நீ வெறுமையாக இருக்கும்போது
உன்மேல் யாராலும் கோபப்பட முடியாது.
அது உன்னையும் தாக்காது.
வெற்றுப்படகாய் மாறிவிடு- ஓஷோ.
இனிய காலை வணக்கம்.

உங்கள் வங்கி (BANK) கணக்கில் உள்ள இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய ATM Transactionஐ வீணடிக்க வேண்டாம் !!

உங்கள் வங்கி (BANK) கணக்கில் உள்ள இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்குகோ அல்லது உங்கள் அருகில் உள்ள ATMக்கோ  செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவகளாக (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய


நீங்கள் கர்நாடக  வங்கி (Karnataka Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.!!!

நீங்கள்  கர்நாடக  வங்கி (Karnataka Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 18004251445  என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவல் (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Bank customers can give a missed call from their registered mobile number to 18004251445 for “Balance enquiry” and 18004251446 for getting mini statement.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

மேலும் விபரங்களுக்கு

மிஸ்டு கால் விட்டு செக் பண்ணிடிங்களா???

அந்த சிரிப்போடு ஷேர் பண்ணிருங்க...

சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய

அளஹபாத் வங்கி
அளஹபாத் வங்கி

ஆந்தர வங்கி
ஆந்தர வங்கி

அசிஸ் வங்கி
அசிஸ் வங்கி

பேங்க் ஆப் இந்திய
பேங்க் ஆப் இந்திய

பரோட வங்கி
பரோட வங்கி

பார்த்திய மகிழ வங்கி
பார்த்திய மகிழ வங்கி

கனரவங்கி
கனரவங்கி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய

தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி

ஐசிஐசிஐ வாங்கி
ஐசிஐசிஐ வாங்கி

ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி

இந்தியன் வங்கி

கர்நாடக  வங்கி
கர்நாடக  வங்கி 

கோடக் மஹிந்திர வங்கி
கோடக் மஹிந்திர வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய

சவுத் இந்தியன் வங்கி
சவுத் இந்தியன் வங்கி

சிண்டிகேட்  வங்கி
சிண்டிகேட்  வங்கி

யூசிஒ வங்கி
யூசிஒ வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்திய
யூனியன் பேங்க் ஆப் இந்திய

விஜயா வங்கி
விஜயா வங்கி 

எஸ் வங்கி
எஸ் வங்கி



நீங்கள் யூசிஒ வங்கி (UCO Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.!!!

நீங்கள்  யூசிஒ வங்கி (UCO Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 092787 92787 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவல் (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Give a Missed Call and Know it All !

One missed call gets you the key scheme featuresof UCO Home, UCO Car Loans & Balance Enquiry* by SMS on your mobile phone

For UCO HomeLoan         – 09210222122

For UCO Car Loan              _09210422122

For Balance Enquiry         _ 092787 92787

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

மேலும் விபரங்களுக்கு

மிஸ்டு கால் விட்டு செக் பண்ணிடிங்களா???

அந்த சிரிப்போடு ஷேர் பண்ணிருங்க...

சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய

அளஹபாத் வங்கி
அளஹபாத் வங்கி

ஆந்தர வங்கி
ஆந்தர வங்கி

அசிஸ் வங்கி
அசிஸ் வங்கி

பேங்க் ஆப் இந்திய
பேங்க் ஆப் இந்திய

பரோட வங்கி
பரோட வங்கி

பார்த்திய மகிழ வங்கி
பார்த்திய மகிழ வங்கி

கனரவங்கி
கனரவங்கி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய

தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி

ஐசிஐசிஐ வாங்கி
ஐசிஐசிஐ வாங்கி

ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி

இந்தியன் வங்கி

கர்நாடக  வங்கி
கர்நாடக  வங்கி 

கோடக் மஹிந்திர வங்கி
கோடக் மஹிந்திர வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய

சவுத் இந்தியன் வங்கி
சவுத் இந்தியன் வங்கி

சிண்டிகேட்  வங்கி
சிண்டிகேட்  வங்கி

யூசிஒ வங்கி
யூசிஒ வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்திய
யூனியன் பேங்க் ஆப் இந்திய

விஜயா வங்கி
விஜயா வங்கி 

எஸ் வங்கி
எஸ் வங்கி


பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.