ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம்.
மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம்.
இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன.
இதன் பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது.
சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது.
இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த முறையை தற்போது நியூசிலாந்து நாட்டு விவசாயிகளும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

நன்றி:newsonews01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க 

word +filetype:pdf

எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls  

உதாரணம் : Seven Wonders+filetype:pdf   


02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண

map : <city name>

உதாரணம் : map :chennai 


03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய

time: <Country name>

உதாரணம் : time:china 


04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய

weather :<city name>

உதாரணம் : weather : mumbai 


05. விமானத்தின் விவரம் அறிய

Airline Name <Flight Number>

உதாரணம் : Air India 605

அக்காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அழகாக இளமையோடு இருப்பதற்கு காரணம், அவர்களது உடல் மற்றும் சரும பராமரிப்புக்கள் தான்.
அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான்.
அத்தகைய குறிப்புக்கள் நமது வீட்டில் உள்ள பாட்டிகள் சொன்னால் பலர், பிடிக்காமல் செய்வார்கள். ஏனெனில் தற்போது தான் நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் விற்கிறதே, பின் எதற்கு இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டுமென்பதால் தான்.
ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்திய பின், அனைவரும் சிறந்தது என்று நினைப்பது பாட்டி சொன்ன அழகு பராமரிப்புக்களே.
ஏனெனில் இந்த உலகில் சொன்னதை கேட்டுக் கொண்டு நடப்பவர்கள் குறைவே. அத்தகையவர்கள் பட்டு தான் திருந்துவார்கள் என்று சொல்வது, இதில் உறுதியாவிட்டது.
மேலும் தற்போது பலரும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து பாட்டிகள் சொல்லும் குறிப்புக்களையே பின்பற்ற விரும்புகின்றனர்.
ஆனால் சில வீடுகளில் பாட்டிகள் இல்லாததால், அத்தகையவர்களுக்கு அழகைப் பராமரிப்பதற்கு பாட்டிசொன்ன அழகுக் குறிப்புகளை பார்ப்போம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும் என்று பாட்டிகள் சொல்வார்கள்.
எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.


முகத்தை கழுவுதல்
முகத்தை தினமும் மூன்று முதல் நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.
ஆவிப் பிடித்தல்
ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும் அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்து தான், அழகைப் பராமரித்து வந்தார்கள்.
எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம்.
பழங்கள்
கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக பழங்களை வைத்து மாஸ்க் போட்டால் அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.
அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.
முடி மசாஜ்
தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.
தயிர்
கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால் கூந்தல் நன்கு பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.
சூப்பர் மாய்ஸ்சுரைசர்
சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால் சருமம் மென்மையாக ஈரப்பதத்துடன் சுருக்கமின்றி இருக்கும்.
எலுமிச்சை
பாட்டிகள் சொல்வதில் தவறாமல் கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானவை எலுமிச்சையை தலைக்கு பயன்படுத்துவது தான்.
ஏனெனில் எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் தலையானது சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.
நெய்
உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல் சிறிது நெய்யை தடவி வந்தால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
கடுகு எண்ணெய்
கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக தினமும் காலையில் எழுந்ததும் கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கைகள் மென்மையாக முடியின்றி இருக்கும். இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.

இப்போது தகவல்தளம் அன்ராய்டு மற்றும் toolbarஇல் உங்களுக்காக......


இப்போது தகவல்தளம் அன்ராய்டு மற்றும் toolbarஇல் உங்களுக்காக......

தகவல்தளம் அன்ராய்டு APP DOWNLOAD செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்

இப்போது தகவல்தளம் அன்ராய்டு மற்றும் toolbarஇல் உங்களுக்காக......இப்போது தகவல்தளம் அன்ராய்டு மற்றும் toolbarஇல் உங்களுக்காக......

தகவல்தளம் TOOLBARஐ DOWNLOAD  செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்
இப்போது தகவல்தளம் அன்ராய்டு மற்றும் toolbarஇல் உங்களுக்காக......

ட்விட்டர்  shortcut keys....    
         
பேஸ்புக் ஷார்ட் கட் கீகள்.....

YOU TUBE shortcut keys....  

௧.ஒரு வீடியோவில் பாகங்கள் தாவுவதக்கு

நீங்கள் உங்கள் விசைப்பலகையில் எண்களை அழுத்தி வீடியோ பகுதியாக தவிர்க்க முடியும்:

1 எண் பொத்தானை அழுத்தி  10%, அல்லது 9 எண் கொண்டு, 90% உள்ள வீடியோக்களை தவிர்க்கவும்.

நீங்கள் வீடியோவில் பாதியிலிருந்து  50%  தொடங்க வேண்டும் என்றால் 5ஐ அழுத்தவும்.௨.கருவி விருப்பங்கள் தேர்ந்தெடுக்க தாவல்

நீங்கள் சுட்டி கொண்டு செல்லவும் விரும்பவில்லை என்றால் Tab விசை பயனுள்ளதாக இருக்கும்


௩.பொதுவான YOU TUBE shortcuts


ShortcutActions
SpacePlay / Pause
Go back 5 Seconds
Go forward 5 Seconds
Increase Volume
Decrease Volume
FFullscreen
EscExit Fullscreen

வளைந்த திரை கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த போன் அடுத்த மாதம் வெளியாகும் என்று அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் திரை, பிளாஸ்டிக்கால் ஆனதாக இருக்கும் என்றும் சாம்சங் கூறியுள்ளது.

சியோல் நகரில் நடந்த கேலக்ஸி நோட் - 3 ஃபேப்லெட் வெளியிடும் நிகழ்வில் இந்தத் தகவலை சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஏற்கெனவே, வளைந்த திரை கொண்ட தொலைக்காட்சிகளை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பிளாக்பெர்ரி நிறுவனம் சுமார் 30,000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட இருக்கிறது.நிறுவனத்தில் அதிகப் பங்குகளை வைத்திருக்கும் ஃபேர்பேக்ஸ் (Fairfax) என்ற நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. இதற்கு பிளாக்பெர்ரி நிறுவனம் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களால், பிளாக்பெர்ரி போன்களின் விற்பனை சரிந்ததையடுத்து, கடந்த நிதியாண்டில், அந்த நிறுவனத்துக்கு 6,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, நிறுவனத்தை விற்கும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.


நன்றி:புதிய தலைமுறைசுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.

பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது

01


START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்

02


இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்
H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.

03


பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.

பொதுவாக உடலில் பல இடங்களில் வலி வந்தால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும். ஆனால் பல்வலி உண்டாக காரணம் சொத்தை மற்றும் ஈறுநோயை உண்டாக்கும் கிருமிகள்தான். 


இவை பற்களில் உள்ள நரம்புகளை அழுத்துவதால்தான் வலி வருகிறது. இதற்கு காரணமான கிருமிகளை அகற்றி, பல்லை அடைத்தல் அல்லது வேர் சிகிச்சை செய்தால்தான் வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். 

சில நேரங்களில் உடனடியாக மருத்துவரிடம் செல்ல முடியாத போது, நீங்கள் காய்ச்சல் தலைவலிக்கு சாப்பிடும் மாத்திரையை சாப்பிடலாம். இவற்றை மருத்துவரின் கண்காணிப்பின்றி அடிக்கடி சாப்பிடக் கூடாது. வீட்டில் கிராம்பு இருந்தால் அதை வலி ஏற்படும் இடத்தில் வைக்கலாம்.

 ஒரு சில மணி நேரங்களில் வலி குறையும். வாய்ப்புண்ணால் ஏற்படும் வலி வேறுவகையானது. இதற்கு மருந்து தேவை இல்லை. வீட்டில் உள்ள நெய் அல்லது வெண்ணெய் தடவலாம். 

வாய்ப்புண் ஒருவாரத்திற்கு மேல் சரியாகவில்லையென்றால் அல்லது வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் காட்ட வேண்டும். ஈறுகளில் வீக்கம் இருந்தால் கிருமி நாசினி கலந்த "மவுத்வாஷ்' உபயோகிக்கலாம். கூட ஈறுகளை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். ஒரு சில நாட்களுக்கு இதை செய்தால் ஈறுகளில் வீக்கமும், வலியும் குறையும். இப்பிரச்னைகள் அனைத்துக்கும் அதற்கான உரிய சிகிச்சை செய்யாதவரை வலி முழுமையாக நிற்காது. இவற்றை முதலுதவி போல செய்து விட்டு, பின் உரிய நேரத்தில் மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

நன்றி:தினமலர்


இந்தியர் வரைந்த ஓவியம், அமெரிக்காவில் 2.54 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

கடந்த 18ம் திகதி மார்ட்டின் அண்டு கான்டெம்பொரரி சவுத் ஆசியன் ஆர்ட் நிறுவனம், நியூயார்க்கில் ஏற்பாடு செய்த கண்காட்சியில் நடைபெற்ற ஏலத்தில் இந்திய ஓவியரான பூபென் காகர் வரைந்த 'அமெரிக்க கணக்கெடுப்பு அதிகாரி' என்ற ஓவியம் 4 லட்சம் டொலருக்கு விற்பனையானது.

ஆறு பேர், இந்த ஓவியத்தை வாங்க போட்டியிட்டதில் ஏறக்குறைய இரு மடங்கு விலைக்கு விற்பனையானது.

இந்த ஏலத்தில் இடம் பெற்ற மற்றொரு இந்தியரான பிரான்சிஸ் நியூட்டன் ஷுஜா வரைந்த ஓவியம், 1.30 கோடிக்கு விற்பனையானது.

இந்த கண்காட்சி மற்றும் ஏல விற்பனையில் அமைப்பாளர்களுக்கு 20 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.

நன்றி:newsonews 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது அன்ரோயிட்(Android)முதற்தர இணைய சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனத்தினால் ஏனைய இயங்குதள நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டதே அன்ரோயிட் இயங்குதளம் ஆகும்.

இவ் இயங்குதளம் 2008ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வருடம் தனது 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.

தற்போது ஸ்மார்ட் அதிகளாவான கைப்பேசிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த இயங்குதளம் சம்சுங் தயாரிப்புக்களின் 64 சதவீதமான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இதுவரை 48 பில்லியன் வரையான அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்கள் தரவிறக்கம் செய்து நிறுவப்பட்டுள்ளதுடன், 1 பில்லியன் வரையான அன்ரோயிட் சாதனங்கள் தற்போது செயற்பாட்டிலுள்ளன.


 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது அன்ரோயிட்(Android)

 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது அன்ரோயிட்(Android)

 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது அன்ரோயிட்(Android)

நன்றி:lankasritechnology

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.