Law லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 தொழிற்சாலைகள் சட்டம் 



தொழிற்சாலைகள் சட்டம் 1948.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் இந்த சட்டம் (தொழிற்சாலைகள் சட்டம் 1948) 

 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு கொண்டுவந்த மிக முக்கியமான சட்டங்களுள் இதுவும் ஒன்று. தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் சூழ்நிலை , அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம், அவர்களுக்கு அளிக்கபபடவேண்டிய விடுமுறைகள் ,மிகைநேரப்பணி , குழந்தைகள்., பெண்கள் மற்றூம் ஆண்களைப் பணியில் அமர்த்துவது, அவர்களின் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் போன்ற விஷயங்கள் பற்றி இந்த சட்டம் விரிவாக எடுத்து உரைக்கிறது.

  இந்திய தொழிலாளர் சட்டம்

இந்திய தொழிலாளர் சட்டம்

தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காத்து அவர்களின் உழைப்பு சுரண்டப் படுவதைத் தடுத்து அவர்களுடைய உரிமைகளை காப்பதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளது.

  • இந்தியத் தொழில் பழகுனர் சட்டம் - 1961 (Apprentices Act-1961)
  • இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் - 1952 (Employees Provident Funds Act-1952)
  • இந்தியத் தொழிலாளர் காப்புறுதிச் சட்டம் (Employees State Insurance Act-ESI Act)
  • இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் -1948 (Factories Act-1948)
  • இந்திய போனஸ் பட்டுவாடா சட்டம் -1965 (Payment of Bonus Act-1965)
  • இந்திய பணிக்கொடை சட்டம் – 1972(Payment of Gratuity Act 1972)
  • இந்தியத் தொழில் தகராறுகள் சட்டம் -1947(Industrial Disputes Act 1947)
  • இந்தியத் தொழிற்சாலைகள் (நிலை ஆணைகள்) சட்டம் -(Industrial Employment ( Standing Orders) Act
  • இந்திய குறைந்த பட்ச ஊதிய சட்டம் (Minimum Wages Act)
  • இந்தியத் தொழிற்சங்கங்கள் சட்டம் (Trade Unions Act)
  • இந்தியத் தொழிலார்கள் ஈட்டுறுதிச் சட்டம் (Workmen's Compensation Act -1923)
  • தொழிற்சாலைகள் சட்டம் 1948...!
  • தொழிலாளர்கள் , தொழிற்சாலைகளில் பணிபுரியும் சூழ்நிலையை முறைப்படுத்துவதற்காக இந்திய அரசால் இயற்றப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களுள் தொழிற்சாலைகள் சட்டம் 1948 (Factories Act 1948) மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


சட்டம் பிரிவு 323  

சட்டம் பிரிவு 323


 தன்னிச்சையாகக் காயப்படுத்தும் செயலை யார் புரிந்தாலும் ஓர் ஆண்டு வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய்கள் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் (334 - ஆவது பிரிவின்படி இந்த செயல் புரியப்பட்டிருந்தால் இந்தப்பிரிவு பொருந்தாது).

அமைதிக்கு பங்கம் விளைவித்தல்

அமைதிக்கு பங்கம் விளைவித்தல்


 ஐபிசி பிரிவு 159

அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் சண்டை பிடிப்பதும் வசை பாடுவதும் குற்றமாகும்.

 சச்சரவு : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், ஒரு பொது இடத்தில் புரியும் சண்டையால் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும்போது, அவர்கள் 'ஒரு சச்சரவைப் புரிந்ததாகக்' கூறப்படுவார்கள்.

                         வெளி நாடுகளில் செய்யப்பட்ட குற்றங்கள்

வெளி நாடுகளில் செய்யப்பட்ட குற்றங்கள்


  ஐபிசி பிரிவு 3:

  • வெளி நாடுகளில் செய்யப்பட்ட குற்றங்கள்,இந்தியாவில் இயற்றப்பட்ட எந்த சட்டத்தின் கீழாவது இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற ஒரு குற்றத்துக்காக ஒருவரை குற்றம் சாட்டி விசாரிக்க வேண்டுமென்றால், அவரையும் இந்த சட்டத் தொகுப்பின்படியேதான் விசாரணை நடத்த வேண்டும்.
  •  குற்றம் இந்தியாவுக்கு வெளியே செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவுக்குள் செய்யப்பட்டிருந்தால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அப்படியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  ஐபிசி பிரிவு 304 

இந்திய தண்டனைச் சட்டம்  ஐபிசி பிரிவு 304

கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்தவனுக்கு, அவன் அந்த குற்றத்தை, மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன்னுடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவுடன் அந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தால், ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக் காவலைத் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும். மரணம் உண்டாக வேண்டும் என்ற கருத்து இல்லாமல் அல்லது மரணத்தை விளைவிக்கத் தக்க உடல் காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தின்றி அவன் செய்த காரியத்தால் மரணம் விளைந்திருந்தால் அவனுக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

 சட்டம் பிரிவு 506 

சட்டம் பிரிவு 506

குற்றம் கருதி மிரட்டல்- என்ற குற்றத்தைப் புரிவருக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அத்தகைய மிரட்டல், உயிர் போக்கும் குற்றம் புரியப்படும் அல்லது கொடுங்காயம் உண்டாக்கப்படும் அல்லது தீயிட்டுச் சொத்து அழிக்கப்படும் அல்லது மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை பெறத்தக்க குற்றம் புரியப்படும் என்று மிரட்டுவதற்காக இருப்பின், அந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்தியச் சட்டம்

இந்தியச் சட்டம்

இந்தியச் சட்டம்  இந்தியாவின் நீதிமுறைமையை செயல்படுத்துகின்ற ஒன்றாகும். இது ஆங்கிலேய பொதுச் சட்டத்தைச் சார்ந்தே இங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர் வெகுகாலமாக இங்கு ஆட்சிபுரிந்தமையால் அதன் நீதிமுறைமையை இந்தியர்களும் சார்ந்துள்ளனர். இதனோடு ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சட்டத் தாக்கங்களும் இந்திய நீதி முறைமையில் இடம் பெற்றிருக்கின்றது.

இந்திய அரசு, இந்திய மாநில அரசுகள், அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியின் அரசுகள் இயற்றும் சட்டங்களும், இந்தியக் குடியரசுத் தலைவர் அல்லது இந்திய ஆளுநர்கள் அல்லது துணை ஆளுநர்கள் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்களும், அல்லது இவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.

இந்தியாவில் சட்டங்கள் உரிமையியல் சட்டம்,குற்றவியல் சட்டம் என்று இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்

1.இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்

2.குற்றவியல் சட்டம்

3.ஒப்பந்தச் சட்டம்

4.தொழிலாளர்ச் சட்டம்

பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் 2014

2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின், "பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் (The Apprentices (Amendment) Bill, 2014)" பயிற்சியாளர்களின் வேலை நேரத்தையும் விடுமுறை நாட்களையும் தீர்மானிக்கும் உரிமையை முதலாளிகளுக்கு வழங்கியது.[1]தொழில் தொடங்குவோருக்கும் நடத்துவோருக்கும் ஊக்கத்தை ஏற்படுத்துவதற்காக திருத்தியமைக்கப்பட்ட இச்சட்டம் தொழிலாளர்களுக்கு எதிரானதாக அமைந்துள்ளதாக பொதுவுடைமைக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழகத்தின் சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்) கட்சியின் டி.கே.ரங்கராஜன், தொழிலாளர் அமைச்சரவையில் இருந்து வந்துள்ள மாற்றமாக இதனைக் கூறுவதை விட முதலாளிகள் கூட்டமைப்பிடம் இருந்து வந்துள்ள சட்டமாக இதனைக் கண்டித்துக் குறிப்பிட்டார்

இச்சட்டம் நவம்பர் 2014 இல் ராஜ்ய சபாவால் நிறைவேற்றப்பட்டது.

1.பொல்லாங்கு குற்றவியல் சட்டம் (டோர்ட் லா)

2.குடும்பச் சட்டம்

3.இந்துச் சட்டம்

4.இசுலாமியச் சட்டம்

5.கிருத்துவச் சட்டம்

6.பொதுச் சட்டம்

7.தேசியச் சட்டம்

8.அமலாக்கச் சட்டம்

சட்டம் அறிவோம்

பிரிவு 420 - மோசடி சட்டம் அறிவோம்..!

 ஒருவரை ஏமாற்றி அதன்மூலம் நேர்மையின்றி அவரைத் தூண்டி, ஒரு சொத்தைப் பிறருக்கு கொடுக்கும்படி செய்தாலும் அல்லது ஒரு மதிப்புள்ள காப்பீட்டை உருவாக்கும்படி அல்லது மாற்றும்படி அல்லது அளிக்கும்படி செய்தாலும் அல்லது மதிப்புள்ள காப்பீடாகக் கையெழுத்திடப்பட்டு முத்திரை இட்டுப் பயன்படுத்துவதற்கும் பொருளை அவ்வாறு உருவாக்க மாற்ற அல்லது அளிக்கத்தக்க செயல் புரியும்படி செய்தாலும் அத்தகைய வஞ்சனை புரிந்தவருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.


  சட்டம் பிரிவு 498A

சட்டம் பிரிவு 498A என்ன  சொல்கிறது..!

ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். விளக்கம்: இந்தப்பிரிவில் வரும் கொடுமைப்படுத்துதல் என்ற சொல் தரக்கூடிய பொருள் யாதெனில்; 1. ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டக்கூடிய அல்லது அவளுடைய உயிருக்கு, உடலுக்கு அல்லது சுகத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலைக் குறிக்கும் (அது உடலுக்கு அல்லது உள்ளத்துக்கு கேடுபயக்கக் கூடியதாகக் கூட இருக்கலாம்) 2. சட்ட விரோதமாக ஒரு சொத்தை அல்லது மதிப்புள்ள காப்பீட்டை அந்தப் பெண் மூலம் அல்லது அவளுடைய உறவினரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெற வேண்டும் என்பதற்காக அல்லது அப்படி அவளால் அல்லது அவளுடைய உறவினரால் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அந்தப் பெண்ணுக்குப் பொறுக்க முடியாத சங்கடங்களை உண்டாக்குவதைக் குறிக்கும்.


பொய் சாட்சி  தண்டனைச் சட்டம் ...!

நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் எவ்வளவு திறமையாக வாதாடினாலும் அவர்களது வழக்கை உண்மை என்று நிரூபிக்க சாட்சிகளும் (Witnesses), சாட்சியங்களும் (Exihibits) அவசியம் தேவை. வழக்கில் தீர்ப்பு சொல்லும் போதும், ஆவணங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்கவும் சாட்சிகளின் முக்கியத்துவம் தேவை. "சாட்சிகள் தான் நீதிமன்றத்திற்கு கண்களும், காதும் ஆகும்.

நீதிமன்றங்களில் பொய் சாட்சி சொல்வது பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 191 லிருந்து 229 வரை தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி பொய் சாட்சி சொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பிரிவு - 195 : பொய் சாட்சி என்றால் என்ன?

சட்ட விதிமுறைகளுக்கோ அல்லது உண்மைமையே பேசுவதாக தான் எடுத்துக் கொண்ட பிரமாணத்திற்கோ கட்டுப்பட்ட ஒருவர், எந்தவொரு பொருள் பற்றியாவது அறிவிப்பு கொடுக்க வேண்டியிருக்கும் போது, தான் சொல்வது உண்மைக்கு புறம்பானது என்பதோ அல்லது அது பொய் என்பதோ தெரிந்தும், அவ்வாறு அவர் சொல்வது பொய் சாட்சி ஆகும்.

அப்படி அவர் பொய் சாட்சி சொல்வது வாய் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வேறு விதத்திலோ இருக்கலாம்.

தெரிந்ததை "தெரியாது " என்று கூறுவதும், தெரியாததை "தெரியும் " என்று கூறுவதும் பொய் சாட்சி தான்.

உதாரணமாக :

1. சிவன் என்பவர் சங்கருக்கு ரூ. 1000/- கொடுக்க வேண்டும். முருகனுக்கு அந்த விபரம் ஏதும் தெரியாது. இருந்தாலும் முருகன் நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் எடுத்துவிட்டு, சிவன் பணம் கொடுக்க வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றால் அது பொய் சாட்சி ஆகும்.

2. நீதிமன்றத்தில் உண்மை பேசுவதாக பிரமாணம் எடுத்துக்கொண்ட முருகன் என்பவர், ஒரு ஆவணத்தில் உள்ள கையெழுத்து சிவனுடையது அல்ல என்று தெரிந்தும், அது சிவனுடையது என்று கூறினால் அது பொய் சாட்சி ஆகும்.

பிரிவு - 192 : புனையப்படும் பொய் சாட்சி :

நீதிமன்றத்தில் சாட்சியமாக தாக்கல் செய்யப்படக்கூடிய பதிவேடு அல்லது ஆவணத்தில் உண்மைக்கு மாறான செய்தியை பதிவு செய்து வைப்பதும், ஒரு பொய்யான சந்தர்ப்பத்தை உண்மையாக தோன்றும்படி உருவாக்குவதும் குற்றமாகும். அந்த பொய்யான தகவலால் ஒரு பொது ஊழியரோ அல்லது நீதிமன்றமோ உண்மைக்கு மாறான ஒரு கருத்தினை கொள்ள நேரிடும். எனவே தான் இக்குற்றம் புனையப்பட்ட சாட்சியினை உருவாக்குவதாக குறிப்பிடுகிறது.

உதாரணமாக :

1. நிரபராதியான ஒருவர் மீது திருட்டு குற்றம் சாட்டும் எண்ணத்துடன் அவரது பை அல்லது பெட்டியில், அவருக்கு தெரியாமலே பிறருடைய நகைகளை வைப்பவர், பொய் சாட்சியினை உருவாக்கியவராவார்.

2. நீதிமன்றத்தில் சாட்சியமாக காட்டப்படக்கூடிய ஒரு நிறுவனம் அல்லது கடையின் பதிவேடு அல்லது நோட்டு புத்தகத்தில் பொய்யான தவறை பதிவு செய்தல்

பிரிவு - 193 : பொய் சாட்சிக்கு தண்டனை :

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் எந்த நிலையிலாவது ஒருவர் வேண்டுமென்றே பொய் சாட்சி சொன்னாலும், நீதிமன்ற நடவடிக்கையின் எந்த நிலையிலாவது பயன்படுத்தும் வண்ணம் பொய் சாட்சி தயாரித்தாலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு.

பிரிவு 194 - : மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் சாட்சி சொன்னால் :

தான் சொல்லும் சாட்சியினால் ஒருவரை அதிகபட்ச தண்டனையான மரண தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் சாட்சி சொன்னாலோ அல்லது பொய் சாட்சி தயாரித்தாலோ அந்த நபருக்கு ஆயுள்தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனை, அபராதமும் விதிக்கப்படும்.

பிரிவு - 195 : ஆயுள்தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் சாட்சி சொன்னால் :

தாம் கொடுக்கும் சாட்சியத்தின் மூலம் ஒருவருக்கு ஆயுள்தண்டனை அல்லது 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிந்தே ஒருவர் பொய் சாட்சி சொன்னால் அல்லது பொய் சாட்சியை உருவாக்கினால், அவர் எந்த மாதிரியான குற்றத்திற்கு சாட்சியம் அளித்தாரோ, அந்த குற்றத்திற்கு உரிய தண்டனை, பொய் சாட்சி கூறியவருக்கு விதிக்கப்படும்.


ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன்.

''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.
1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:

முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.

ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.
இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டும்தான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது. முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம்''



தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)


நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது. மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா? இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

தகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது. அத்தீர்ப்பின் சாராம்சம்: அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.

இத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா? ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம்? அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும்? குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்? என்ற விவரங்களை அறியலாம்.

இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது. தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.

அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.

ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.

இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.

அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.

ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005) 
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)







தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)




தகவல் அறியும் உரிமை சட்டம் 2005(Right to Information Act - 2005)




RTI

தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

2
 மோட்டர் வாகனச் சட்டங்கள் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்...

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக:

1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine

2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine

3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine

4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine

5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine

6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine

7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court

8. மன நிலை,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine

9.போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine

10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine

11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .

12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine

13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine

14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine

15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine

16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine

17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine....


மேலும் இந்த சட்டங்கள் விரைவில் திருத்தும் கொண்டுவர இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் ...

நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்.....!


நாம் நினைத்தாள் லஞ்ச உலழல்களை நம் நாட்டைவிட்டு துரத்தலாம் மேலும் ஊழல் லழல் வாதிகளுக்கும் லஞ்சபெறேலிகளுக்கும் தக்க தண்டனை பெற்று தரலாம்

நாம் நினைத்தாள் லஞ்ச உலழல்களை நம் நாட்டைவிட்டு துரத்தலாம் மேலும் ஊழல் லழல் வாதிகளுக்கும் லஞ்சபெறேலிகளுக்கும் தக்க தண்டனை பெற்று தரலாம் 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை (விஜிலென்ஸ் & கரெப்சன்) தொடர்புகொள்ள..

தொலை தொடர்பு எண்கள் :-

Director/ADGP S.K.Dogra, IPS 044 - 24612561

ADGP Addl.Director 044-24617154

IGP SIC- JD A.M.S. Gunaseelan,IPS 044 - 24616900

IGP SIC- JD G. Venkataraman, IPS 044 - 24616900

DIG R. Samuthirapandi, IPS 044 - 24616900

SIC-I 044 - 24610550

SP CNI/Central A.T. Duraikumar 044 - 24954171

SP MDU/Southern Maheswari, IPS 044 - 24959597

SP CBE/Western 0422-2238646

CONTROL 044 - 24615989/49/24954142

FAX 044 - 24617510

ஊழல் வாதிகளை நாட்டை விட்டு விரட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை  பயன்படுத்துவோம் 

ஒரு கையால் தட்டினால் ஓசை வராது அதே போல் ஒரு சிலர் மட்டும் இவற்றை செய்தால்நாம்  ஊழல் லழல் வாதிகளுக்கும் லஞ்சபெறேலிகளுக்கும் தக்க தண்டனை பெற்றுத்தர முடியாது ..


ஒன்று கூடுவோம் நாட்டை காக்க ...


நம் நாட்டை காப்பாற்ற நாமே களமிறங்குவோம் ..

ஜெய் ஹிந்த்!! வாழ்க பாரதம்!! ஒழிக்க ஊழல் லஞ்சம்  

நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?


பிறந்த குழந்தை முதல்,  முதியவர் வரை நுகர்வோர் என்ற தகுதி பெறாதவர் எவரும் இல்லை. எனவே, நுகர்வோரான நாம் நமது உரிமைகளை அறிந்திருப்பதும் , அந்த உரிமைகள் மீறப்படும்போது என்ன செய்வது என்ற தெளிவைப் பெற்றிருப்பது அவசியம்.

ஒவ்வொரு நாடும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தி கொண்டிருக்கின்றன.

நுகர்வோர் பிரச்சினைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் விரைவாக, அதிக செலவில்லாமல் தீர்வும், நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்கிறது.

சரியான வரையறையின்படி, நுகர்வோர் என்பவர் யார்? அதை முதலில் நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.  


நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

நுகர்வோர் என்பவர் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ அதற்குரிய முழுத்தொகையைக் கொடுத்துப் பெறுபவர், அதற்குரிய விலையில் ஒரு பகுதியை செலுத்தி, மற்றொரு பகுதியை பின்னர் தருவதாகக் கூறிப் பெறுபவர், பணம் தருவதாகச் சொல்லியோ அல்லது தவணை முறையில் செலுத்தியோ பெறுபவர் எவரும் நுகர்வோர் ஆவார். மேலும் பொருளையோ அல்லது சேவையையோ தான் பணம் கொடுத்து வாங்காமல், அதை மேற்கூறிய முறையில் வாங்கியவரின் முறையான அனுமதியோடு பயன்படுத்தும் நபரும் நுகர்வோர் ஆவார்.

சுருங்கச் சொன்னால், பொருள், சேவை இரண்டுக்கும் பணம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அதை அனுபவிக்க வேண்டும்.

 உற்பத்தியாளர் மற்றும் விற்பனை நோக்கத்துடன் கொள் முதல் செய்யும் வியாபாரிகள், சேவை அளிப்போர் நுகர்வோர் ஆகமாட்டார்கள். ஆனால் சுயவேலைவாய்ப்புக்காக, தமது அன்றாட வாழ்க்கை நடத்துவதற்காக பொருட்களை வாங்கும் நபர்கள் நுகர்வோர் ஆவார்கள். உதாரணத்துக்கு ஒரு பெண் தனது சுயதொழிலுக்காக தையல் எந்திரம் வாங்குவது.

சரி, நுகர்வோரின் உரிமைகள் என்னென்ன?

* உயிருக்கும், உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை சந்தைப்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.

* நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரநிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

* பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை.

* நுகர்வோரின் குறைகளைக் கேட்பதற்கும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை.

* நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை.

* நுகர்வோருக்கான விழிப்புணர்வைப் பெறும் உரிமை.

* நுகர்வோர், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.


RTI

தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

மக்கள் தங்கள் வரி சேமிப்பு முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

Income tax

வரிச் சுமையை சட்டப்பூர்வமான வழிகளில் குறைத்த பின், முறையான வரியை செலுத்துவது, ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதனால், வரிவிதிப்பு வளையத்திற்குள் உள்ள அனைவருக்கும் வரிக்கான திட்டமிடுதல் இன்றியமையாத ஒன்றாகும். மேலும், வரியைக் குறைப்பதோடல்லாமல், சிறந்த வரவையும் கொடுக்கவல்ல திட்டத்தை சரியாகத் தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியமானதாகும். அவ்வாறு வரியைக் குறைக்க பயன்படக்கூடிய சிறப்பான வருமான வரிச் சட்டப் பிரிவுகள் சிலவற்றை பின் வருமாறு பார்க்கலாம்.

 வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவு: 

இப்பிரிவில் ரூ. 1 லட்சம் உச்சவரம்பாகக் கூறப்பட்டுள்ளது. இது ஒரே குடையின் கீழ் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி மற்றும் அரசு உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் ஆகியவை, இப்பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கக் கூடியவை ஆகும். இப்பிரிவு, வரியை சேமிக்க உதவும் பல முறைகளில் முதலீட்டாளர்கள் மிக விரும்பும் ஒரு முறையாக விளங்குகிறது. ஒருவர் 30 சதவீத வரிவிதிப்பு வளையத்திற்குள் இருந்து ரூ. 1 லட்சத்தை 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்தால் அவர் எளிதாக ரூ. 30,000 வரியை சேமிக்க முடியும். 

வருமான வரி
வருமான வரி 


இந்த சட்டப் பிரிவு கீழ்கண்ட முறைகளுள் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யும்போது செயல்படக்கூடியதாகும்.
 • ஆயுள் காப்பீட்டில் முதலீடு
 • பிபிஎஃப் (பொது வருங்கால வைப்பு நிதி)
 • என்எஸ்சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்)
 • திருப்பிச் செலுத்தும் கடன் தவணைத் தொகையை அசலில் அனுசரித்தல் 

1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் 80 டி பிரிவு:

மெடிக்ளைம் திட்டத்தில் ஒருவர், சுமார் 15,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய் வரை வரிக்குறைப்பு பெறலாம். இது 80சி பிரிவில் பெறப்பட்ட வரிக்குறைப்பு போக, 80டி பிரிவில் பெறக்கூடிய வரிக்குறைப்பாக தனிப்பட்டு விளங்குகிறது. 1961ம் ஆண்டு வருட வருமான வரிச் சட்டப் பிரிவு 24: வீட்டுக் கடனுக்கான வட்டியான உச்சவரம்பு ரூ. 150000த்தை செலுத்தினால் அதற்கேற்றவாறு உங்கள் வருமானத்திலிருந்து வரி விலக்கு பெறலாம்.

 80சிசிஎஃப் பிரிவு: 

 80 சி-பிரிவின் கீழ் பெறும் வரிக்குறைப்போடு, கூடுதலாக ரூ. 20,000 வரை அவரது வரிவிதிப்பிற்குட்ட வருமானத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளான உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களில் ஒருவர்,முதலீடு செய்வாரேயானால்,  வரி குறைப்பு செய்யலாம். எனினும், இத்திட்டங்களில் கட்டாயக் காலவரையறைகள் உண்டு என்பதை முதலீடு செய்யும் முன் நினைவில் கொள்ள வேண்டும். 

80இ பிரிவு: 

இவ்வருமான வரிச் சட்டப்பிரிவின் கீழ் வரிவிதிப்புக்குரியவரின் கணவன்/மனைவி அல்லது பிள்ளைகளின் உயர் கல்விக்காகப் பெறப்பட்ட கல்விக் கடனுக்கான வட்டித் தொகையை அவரின் வரிவிதிப்பிற்குட்பட்ட வருமானத்திலிருந்து குறைப்பதற்கு வழிவகை செய்யலாம். 

வருமானப் பகிர்ந்தளிப்பு முறை:

வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்களிடையே பகிர்ந்தளிப்பது, புத்திசாலித்தனமானதொரு வரிச்சுமை தவிர்க்கும் முறையாகும். இம்முறை, ஒருவரை குறைந்த வருமான வளையத்திற்குள்ளே இருக்கும்படி செய்யும். வருமானத்தை, ஆண்களுக்கு 16,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 19,000 ரூபாயாகவும், மூத்த குடிமக்களுக்கு 24,000 ரூபாயாகவும் பகிர்ந்தளிப்பதன் மூலம், ஒருவர் மொத்தமாக அவரது வருமானத்தை ரூபாய் 49,000 வரை வரியின்றி அனுசரிக்க முடியும். ஆனால் இம்முறையை செயல்படுத்த வேண்டுமெனில் அனைத்து உறுப்பினர்களின் வருமானத்தையும் வரிவிதிப்பிற்கு உட்படுத்துவது அவசியம.

 அன்பளிப்பு வரிக்கான திட்டமிடல்: 

வருமான வரி சேமிப்பு
வருமான வரி சேமிப்பு


நெருங்கிய உறவினர்களிடம் இருந்து பெறப்படும் அன்பளிப்புகளுக்கு வரி கிடையாது. அதனால் இச்சட்டத்தை பயன்படுத்தி ஒருவர் தன் வரியைக் குறைக்கலாம். இச்சட்டத்தின் நெளிவு சுளிவுகளை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் வருமான வரித்துறையின் நுண்ணாய்வு மற்றும் அபராத விதிப்பைத் தவிர்க்கலாம். முடிவாக: வரி சேமிப்பு மட்டுமே ஒருவரின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. 

முதலில், தன் முழு நிதி நிலைத் திட்டமிடலை நன்றாக அலசி ஆராய்ந்த பின்னர், ஒரு பொருத்தமான சேமிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வரி விலக்கு பெறுவதற்காக செய்யப்படும் முதலீடானது சரியான கால அளவிலும், சரியான நிகர லாபத்தை அளிக்கக்கூடிய வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் நீங்கள் சிறப்பான வரி விலக்கை பெற இயலும். 

உங்கள் வரிக்கான திட்டமிடுதலின்போது, ஒரேயொரு சொத்து வகையின் கீழ் அனைத்தையும் வைக்காமல் உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வேறு வகையான ஆக்கப்பொருள்களைக் கொண்டிருக்கும்படி பார்த்துக் கொண்டால், முதலீட்டுத் திட்டங்கள் பலவற்றில் பொதிந்துள்ள பல்வேறு வகையான அபாயங்களைத் தவிர்க்கலாம்.
நன்றி:goodsreturn

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.