உங்களது கணனியில் ஏதாவதொரு மாற்றத்தை செய்த பின்னர், கணனி திரை தானாகவே Refresh(Automatic Screen Refresh) ஆகும் படி செய்து கொள்ளலாம்.
உங்களது கணனி திரை Automatic Screen Refresh ஆகும்படி செய்வதற்கு



இதற்கு முதலில் Start Menu-வில் சென்று RUN என்பதில் regedit என்று கொடுக்க வேண்டும்.

தற்போது உங்களுக்கு Registry Editor என்ற விண்டோ ஓபன் ஆகியிருக்கும்.

இதில் கீழே உள்ளது போன்று Update வரை செல்லவும்.

HKEY_LOCAL_MACHINESystemCurrentControlSetControlUpdateMode


சென்ற பின் வலது பக்கத்தில் உள்ள DWORD என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள Data Value என்பதில் 1 இற்கும் 5 இற்கும் இடையில் விரும்பிய இலக்கத்தை கொடுத்து கணனியை ஒருமுறை Restart செய்யவும்.


இனிமேல் கணனியில் ஏதேனும் மாற்றம் செய்தால் தன்னிச்சையாகவே கணனி திரையானது Refresh ஆகும்.


குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமான சமூவலைத்தளமான பேஸ்புக், போலியான பெயர்களில் தொடங்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கணக்குகளை நீக்குவதில் தீவிரமாக உள்ளது.
இப்போலியான கணக்குகளை பயன்படுத்தி சமூசச் சீரழிவு, அரசியல்வாதிகளை பழிவாங்குதல், தனிப்பட்ட நபர்களை பழிவாங்குதல் போன்ற செயல்கள் அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும்.
அத்துடன் குறைந்தளவான Like இனை கொண்டிருக்கும் பேஸ்புக் பக்கங்களும் நீக்கப்படவுள்ளது.
எனினும் பேஸ்புக் தளத்தில் கணக்கு ஒன்றினை உருவாக்கிக் கொள்ள முடிவதனால், நீக்கப்பட்ட கணக்குகளின் பெயரில் புதிய கணக்குகள் உருவாக்கப்படலாம்.

இணையத்தின் வழியே உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் நண்பர்களை வீடியோ இணைப்பில் பார்த்து பேச Skype பயன்படுகிறது.
Skype-யை இதுவரை தனியே ஒரு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளோம்.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள Skype-ன் சோதனை பதிப்பில், பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் கணக்கிற்கான பயனர் பெயர், கடவுச்சொல்லை பயன்படுத்தலாம்.
புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு
மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் நிறுவன பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தின் விளைவே இந்த புதிய வசதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதிகள் Skype சோதனை பதிப்பான 5.11ல் தரப்படுகிறது. இந்த பதிப்பில் மேலும் ஆறு மொழிகளை, Skype இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கவாஸாகி-பஜாஜ் கூட்டணியில் இந்தியாவில் நிஞ்சா 300ஆர் பைக்கை அறிமுகம் படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு நிஞ்சா வரிசையில் 300ஆர் மற்றும் 400 ஆர் என்ற இரு புதிய மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதில் 299சிசி எஞ்சின் கொண்ட 300ஆர் பைக் 39 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்தநிலையில், இந்தியாவில் 300ஆர் நிஞ்சா ஸ்போர்ட்ஸ் பைக்கை கவாஸாகி-பஜாஜ் கூட்டணி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதவிர, விரைவில் சாலை சோதனை ஓட்டங்களையும் துவங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய பைக் இந்திய சாலைகளில் தடம் பதித்துவிடும் என்று நம்பப்படுகிறது. இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டால் 250சிசி நிஞ்சா மற்றும் 650சிசி நிஞ்சா பைக்குகளுக்கு இடையிலான இடைவெளி சற்று குறையும்.




இலங்கையில் நடந்துவரும் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்-8 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது.டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஹபீஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 6-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவும், எதிர்க்கட்சி சார்பில் மிட் ரோம்னியும் இருக்கிறார்கள். இதுவரையில் நடைபெற்ற முந்தைய கருத்து கணிப்புகளில் ஒபாமாவுக்கு கூடுதல் ஆதரவு இருந்தது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 40 நாட்களே இருக்கின்றன. 

இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று இணையதளம் மூலம் புதிய கருத்து கணிப்பை நடத்தி அதன் முடிவை நேற்று வெளியிட்டது. மொத்தம் 1,194 பேர் கலந்து கொண்டு ஓட்டளித்தனர். அதில் ஒபாமாவுக்கு 49 சதவீதம் ஓட்டுகளும், மிட் ரோம்னிக்கு 42 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்குமுகமாக உள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைகிறது. இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செப்ரோனிக்ஸ் என்று பெயரில் செயல்பட்டு வரும் டாப் நோட்ச் இன்போட்ரோனிக்ஸ் நிறுவனம் ஒரு புதிய பினோம் மல்டி மீடியா ஹெட்போனை களமிறக்க இருக்கிறது. இந்த ஹெட்போனின் முக்கிய விசேஷம் என்னவென்றால் இந்த ஹெட்போனோடு சேர்த்து ஒரு டிஜிட்டல் வால்யூம் கண்ட்ரோலும் வழங்கப்படுகிறது.


இந்த மல்டி மீடியா ஹெட்போன் வீடியோ கேம் விளையாட்டுப் பிரியர்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன் சூப்பாரன ஒலியை வழங்கும். இதன் இயர் கப்பில் பஞ்சு உள்ளதால் காதில் இதை அணிவதற்கு சுகமாக இருக்கும்.
இந்த ஹெட்போன் 1.8 மீட்டர் நீளமான கேபுளுடன் வருகிறது. அதோடு இந்த ஹெட்போனை ரிமோட் மூலம் இயக்க முடியும். மேலும் இதன் மைக்கையும் மிக எளிதாகப் பயன்படுத்த முடியும். வீடியோ கேம் விளையாடும் போது இந்த ஹெட்போனை அணிந்து கொண்டால் விளையாட்டுக் கேற்ப அதிரடியான இசையை வழங்கும்.
அனைத்து தரப்பினரையும் இந்த போன் கவரக்கூடிய வகையில் உள்ளது. இந்த போன் ரூ.749க்கு விற்கப்படுகிறது.

உலகின் பிரபல்யமானதும், முன்னணியில் திகழ்வதுமான பேஸ்புக் சமூகவலைத்தளமானது ஒன்லைன் மூலமாக கோப்புக்களை பகிரும் சேவையை வழங்கும் Drop Box தளத்துடன் கைகோர்க்கின்றது.
இதன் மூலம் பேஸ்புக் பயனர்கள் தமது குழுக்கழுக்கிடையில் இலகுவாகவும், விரைவாகவும் Document கோப்புக்கள், வீடியோ, ஆடியோ போன்ற கோப்புக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
இது தவிர பகிரப்படும் கோப்புக்கள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வசதியும் DropBox தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு பேஸ்புக் தளத்தில் மட்டுமல்லாது Drop Box தளத்திலும் கணக்கினை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.




பல்வேறு பட்ட இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தினால் Google Street என்னும் புதிய வசதி அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.


அதாவது, உலகளாவிய தரைத் தோற்ற அம்சங்களை இணையத்தளத்தினூடாக பார்வையிடக்கூடிய சேவையினை தற்போது கடல்கள், சமுத்திரங்கள் போன்ற நீர்நிலைகளுக்கும் விஸ்தரித்துள்ளது.


இச்சேவையினை கூகுளுடன் இணைந்து விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளும் The Catlin Seaview Survey நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன.


இதன் மூலம் கடலடி உயிரினங்களையும், ஏனைய அம்சங்களையும் இலகுவாக பார்வையிட முடிவதுடன், பாறைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களுக்கும், ஏனைய மாணவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்காக நீரின் அடியில் பயன்படுத்தக்கூடியவாறு விசேடமாகத் தயாரிக்கப்பட்டுள்ள கமெராக்கள் பயன்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!






1.அடோப் (ADOBE):

இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

2. ஆப்பிள் (APPLE):ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது.

ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும்.

ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார்.
ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.


3. கூகுள் (GOOGLE):

சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர்.

இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது.

அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது.

இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர்.

அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.


4.ஹாட் மெயில் (HOTMAIL):

இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார்.

அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார்.

ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.


இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம்.

HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது.

முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.


5. இன்டெல் (INTEL):
இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர்.

ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர்.

பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

6. மைக்ரோசாப்ட் (MICROSOFT):பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது.

முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம்.


அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது.

அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.


7. யாஹூ (YAHOO
):

தொடக்கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது.

ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார்.

இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும்.

யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும் டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

நோக்கியா ஆஷா போன்கள் வரிசையில் மேலும் இரண்வு போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த போன்களுக்கு ஆஷா 308 மற்றும் ஆஷா 309 ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.


இந்த இரண்டு போன்களும் பல தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் கீறல் விழாத வசதியுடன் 3 இன்ச் அளவில் கப்பாசிட்டிவ் டிஸ்ப்ளேகளைக் கொண்டுள்ளன. 2எம்பி கேமராக்களையும் கொண்டிருக்கின்றன. 

அதோடு இந்த போன்கள் நோக்கியா எக்ஸ்ப்ரஸ் ப்ரவுசர் கொண்டிருப்பதால் இந்த போன்களில் இணைய தளங்களில் புகுந்து விளையாட முடியும். மேலும் இந்த போன்கள் ஏராளமான அப்ளிகேசன்களுடன் வருகின்றன. குறிப்பாக சமூக வளைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் மெசஞ்சர் போன்ற அப்ளிகேசன்களை இந்த போன்களில் பார்க்கலாம். அதோடு நோக்கியாவின் மேப்ஸ் 2.0வும் இந்த போன்களில் உள்ளன.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக இந்த போன்களில் டெட்ரிஸ், பிபா 2012 மற்றும் நீட் பார் ஸ்பீட் உள்பட 40 இஎ கேம்களையும் நோக்கியா வழங்குகிறது. மேலும் நோக்கியா ஸ்டோரிலிருந்து 22 கேம்களையும் இந்த போன்களில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த இரண்டு போன்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஆஷா 308ல் டூவல் சிம் வசதி உண்டு. ஆனால் ஆஷா 309ல் இந்த வசதி இல்லை. இந்த போன்கள் 99 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,292க்கு விற்கப்படும் என்று தெரிகிறது.




சென்னை: புதிய பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டு, வரும், 1ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது. தற்போது, சாதாரண முறை பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், 1,000 ரூபாயும், தத்கால் முறை விண்ணப்பதாரர்கள், 2,500 ரூபாயும், விண்ணப்பக் கட்டணமாக செலுத்துகின்றனர். 2002 முதல், அமலில் உள்ள இக்கட்டணங்கள் முறையே, 500, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, வரும் அக்., 1ம் தேதி முதல், சாதாரண முறை பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், 1,500 ரூபாய்; தத்கால் முறை விண்ணப்பதாரர்கள், 3,500 ரூபாய், விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம், பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி, தனியாரிடம் தரப்பட்டு, ஓராண்டு முடிந்துள்ள நிலையில் உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


கல்விக்கென்றே பிரத்தியேகமான டெட்-எட் என்ற வீடியோ சேனலை யூடியூபில் அறிமுகம் செய்து இருக்கிறது டெட் நிறுவனம். இந்த சேனலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்லட்களிலும் பார்க்க புதிய அப்ளிக்கேஷனையும் உருவாக்கி உள்ளது டெட் நிறுவனம். இதனால் கல்வியை பற்றி பயனுள்ள சில தகவல்களை இந்த வீடியோ சேனலில் பெற முடியும்.


இப்படி கல்வியை மையப்படுத்தி பல நிறுவனங்கள் புதிய புதிய தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து கொண்டு இருக்கிறது. புதிய வழி முறைகளை ஏற்படுத்த சிறந்த யுக்திகளை கையாண்டு வருவதாகவும், இது போன்ற வித்தியாசமான தொழில் நுட்ப முன்னேற்றங்களினால் மக்களுக்கு சில முக்கிய பயன்பாடுகளை கொடுக்க முடியும் என்றும் டெட் நிறுவனத்தின் எக்ஸிக்கியூட்டிவ் புரொடியூஸரான ஜுன் கொஹென் தெரிவித்துள்ளார்.
டெட் நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த அப்ளிக்கேஷனில் ஆஃப்லைன் பிரவுசிங், வியூவிங் போன்ற சவுகரியங்களையும் பெற முடியும். வாக்கிங், ஜாகிங் என்று வெளியில் செல்லும் போது டெட் வீடியோவினை பார்க்க முடியாது. இந்த குறையை தீர்க்க ஆடியோ ஸ்ட்ரீமிங் சவுகரியமும் கொடுக்கப்பட்டுள்ளது. வெளியில் சென்று கொண்டு இருக்கும் போதும் இதன் ஆடியோ ஸ்ட்ரீமிங் வசதியின் மூலம் இதன் பயனுள்ள தகவல்களை கேட்டு மிகிழலாம்.


 நிறுத்த கோரியுள்ளது இந்திய தொலை தொடர்பு துறை.
ரோமிங் தொலைதொடர்முன்நிலை வகித்து வரும் பாரதி ஏர்டெல், வோடாபோன மற்றும் ஐடியா செலுலார் ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் உரிமம் பெறாத இடங்களில் 3ஜி சேவை வழங்குவதைபு உடன்படிக்கைகளின் மூலம், தொலை தொடர்பு நிறுவனங்கள் தாங்கள் உரிமம் பெறாத பகுதிகளில் 3ஜி குரல் பதிவு சேவை வழங்குவதை நிறுத்தும்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது.



உரிமம் பெற்ற பகுதிகளில் மட்டுமே 3ஜி சேவையை வழங்க வேணடும். அதிலும் உரிமம் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே 3ஜி சேவையை வழங்கும் அதிகாரமும் உள்ளது. ஆனால் உரிமம் இல்லாத பகுதிகளில் 3ஜி சேவை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
உரிமம் பெறாத பகுதிகளில் 3ஜி சேவை அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி முன்னமே ஆலோசனை அறிவிப்புகளை வழங்கியுள்ளதாகவும் தொலை தொடர்பு செயலாளர் ஆர். சந்திரசேகர் சிஐஐ மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.
மொபைபோன் நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகள், 3ஜி ரோமிங் உடன்படிக்கையின்படி வருகிற டிசம்பர் 23ம் தேதி அமல்படுத்துவதாகவும் இந்திய தொலை தொடர்பு துறை தெரிவித்திருக்கிறது.


அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஐபோன் 5 தற்போது மேலும் 22 நாடுகளில் தனது விற்பனையைத் தொடங்கி இருக்கிறது. இந்த ஐபோன் 5 விற்பனைக்கு வந்த ஒரு வாரத்தில் 5 மில்லியன் விற்று சாதனை படைத்தது.



தற்போது இந்த ஐபோன் 5, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக்கோஸ்லோவாக்கியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, ஹங்கேரி, ஐயர்லாந்து, இத்தாலி, லிச்டென்ஸ்டெய்ன், லித்துவேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கல், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
அதுபோல் அமெரிக்க சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் கிரிக்கெட், சிஸ்பையர், ப்ளூக்ராஸ் செல்லுலர், செல்காம், ஜிசிஐ, கோல்டன் ஸ்டேட் செல்லுலர், நெக்ஸ் டேக் வயர்லெஸ், பயனீர் வயர்லஸ், அப்பலசியன் வயர்லஸ் மற்றும் பிற நிறுவனங்களும் ஐபோனன் 5வை விற்பனை செய்ய தொடங்குகின்றன.
இதுவரை ஐபோன் 5விற்காக ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் விண்ணப்பத்தவர்கள் இந்த போனைப் பெற 3 முதல் 4 வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இனி இவ்வாறு காத்திருக்க தேவையில்லை.


தங்க கலவைகள் பூசப்பட்டு உருவாக்கப்பட்ட ஐபோன்-5ஸ்மார்ட்போனை தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் பார்க்கலாம்.



கோல்டு & கோ நிறுவனம் தங்க கலவைகளின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. சாதாரண ஐபோன்-5க்கும், தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் தங்கம் மட்டும் தான். எப்படியாவது ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆப்பிளின் ஐபோன்-5வை வாங்கலாம்.
ஐபோன்-5 ஸ்மார்ட்போனிலேயே ஆடம்பரத்தினை விரும்புபவர்கள் இந்த கோல்டு & கோ நிறுவனத்தின் தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் மேல் கவனத்தை திருப்பலாம். இந்த தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனில்
பயன்படுத்தப்பட்டிருக்கும் கலவை 24 கேரட் சுத்த தங்கம் என்று கூறப்படுகிறது.



இந்த கோல்டு ஐபோன்-5 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் முதலில் ரெட்பாண்டுபை வலைத்தளத்தின் மூலம் வெளி வந்தது. இந்த தகவலின்படி ஐபோன்-5 ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட 2 லட்சத்தி 50 ஆயிரம் விலை கொண்டதாக இருக்கும். ரோஸ் கோல்டு ஸ்மார்ட்போனின் விலை 2 லட்சத்தி 70 ஆயிரம் விலை கொண்டதாக இருக்கும்


ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் இந்தியாவில் 500 சதவீதம் வளர்ந்திருப்பதாக சமீபத்தில் கூகுள் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஒரு சில தீவிர ஆன்ட்ராய்டு ரசிகர்கள் கூகுள் வெளியிடவிருக்கும் அடுத்த புதிய ஆன்ட்ராய்டு வெர்சனுக்கு இந்திய பெயரான கஜூ கட்லி என்ற பெயரை சூட்ட வேண்டு்ம் என்று கூகுளுக்கு பரிந்துரைக்கின்றனர்.


இதற்காக ஒரு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி இருக்கின்றனர். மேலும் இந்த  இயக்கத்திற்கு இதுவரை 2075 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதுவரை கூகுள் ஆங்கில எழுத்துக்களின் வரிசையைப் பின்பற்றி ஆன்ட்ராய்டு இயங்கு தளங்களை வெளியிட்டது.
சி-கப்கேக், டி-டுனட், இ-எக்லெயர், ஜி-ஜிஞ்சர்ப்ரீடு, எச்-ஹனிகோம்ப், ஐ-ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் மற்றும் ஜே-ஜெல்லிபீன் என்று வரிசையாக கூகுள் வெளியிட்டது. எனவே கூகுள் தனது அடுத்த ஆன்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு கே என்ற எழுத்தில் தான் பெயர் சூட்டும் என்று இந்திய ரசிகர்கள் யூகம் செய்திருக்கின்றனர். அதனால் கே எழுத்தில் தொடங்கும் இந்திய பெயரான கஜூ கட்லி என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றனர்.
கஜூ கட்லி என்றால் இனிப்பு அல்லது இனிமை என்று பெயர். எனவே கூகுளின் அடுத்த ஆன்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு இந்த பெயர் மிக பொருத்தமாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். கூகுள் இந்திய ரசிகர்களின் பரிந்துரையை ஏற்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


கடந்த வாரம் ஆப்பிள் தனது ஐஒஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு வரைபடத்தை களமிறக்கி இருந்தது. ஆனால் அந்த வரைபடத்தில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததால் ஆப்பிளின் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.


தனது வாடிக்கையாளர்களின் உணர்வுகளைக் கண்டறிந்த ஆப்பிளின் தலைமை இயக்குனர் டிம் குக் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். மேலும் புதிய வரைபடத்தில் உள்ள குழப்பங்களுக்காக வருந்துவதாகவும் அவர் அறிக்கை கொடத்திருக்கிறார்.
மன்னிப்பு கேட்பது என்பது ஆப்பிளைப் பொறுத்தவரை அது எப்போதாவதுதான் நடக்கும். ஆனால் இந்த புதிய வரைபடத்தில் தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவை துல்லியமாக இல்லாததால், மற்ற நிறுவனங்கள் ஆப்பிளை விமர்சனம் செய்தன.
ஆகவே தனது வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்து விடக்கூடாது என்பதற்காக ஆப்பிள் முன்னெச்சரிக்கையாக இந்த மன்னிப்பை தனது ரசிகர்களிடம் கோரியிருக்கிறது. ரசிகர்கள் மன்னிப்பார்கள் என்று நம்புவோம்.





பன்றிகளிடம் இருந்து தனது முட்டைகளை காப்பாற்றும் பறவைகள் என்பது மாறி, இப்போது பறவைகளை பழி வாங்க துடிக்கும் பன்றி குட்டிகளாக உருவெடுத்திருக்கிறது இந்த ‘பேடு பிக்கீஸ்’.
பன்றி குட்டிகள் நடப்பதையும், ஓடுவதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறப்பதை பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த பேடு பிக்கீஸ் பறக்க தயாராக இருக்கிறது. இப்படி பறந்து பழி வாங்க துடிக்கும் இந்த பன்றி குட்டிகள் அதற்கு தேவையான அனைத்து சாதனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது. ஆனால் இதை ஓட்டுவதற்கு உங்களின் உதவி
தேவை என்று காத்திருக்கிறது ரோவியோ நிறுவனத்தின் பேடு பிக்கீஸ். விளையாடுபவர்கள் திசை காட்டிய பக்கம் ஓட இந்த பன்றிகுட்டிகள் தயராக இருக்கிறது. தய்வானின் தலைநகரான தய்பேவில் இந்த புதிய பேடு பிக்கீஸ் விளையாட்டிற்கு, ரோவியோ ஆசியாவின் துணை தலைவர் தொடக்க விழாவினை துவங்கிவைத்தார்.இந்த விளையாட்டினை ஆன்ட்ராய்டு ஸ்போரில் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். 


புதிதாக கிஃப்ட் என்ற ஐகானை அறிமுகம் செய்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக். இந்த வசதியின் மூலம் நண்பர்களுக்கு எளிதாக, விரும்பும் அன்பளிப்பை வழங்க முடியும்.

ஃபேஸ்புக்கில் ‘கிஃப்ட்’!

அமெரிக்காவில் ஃபேஸ்புக்கின் கிஃப்ட் என்ற இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. வரும் மாதத்தில் இந்த கிஃப்ட் வசதி, ஃபேஸ்புக் உறுப்பினர்களின் அதிக வரவேற்பினை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக்கின் ஃப்ரென்ட்ஸ் பக்கத்தில் இந்த கிஃப்ட் என்ற ஐகான் வசதியினை பெறலாம்.

ஃபேஸ்புக்கில் ‘கிஃப்ட்’!



விருப்பங்களை தெரிவிக்கும் இந்த சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இருக்கும் ‘லைக்’ எந்த அளவு மக்கள் மத்தியில் இடம் பிடித்ததோ அந்த அளவு, இந்த புதிய கிஃப்ட் என்ற வசதியும் இடம் பிடிக்கும் என்று கூறலாம். அதிலும் தேவையை புரிந்து வழங்கப்படும் இந்த கிஃப்ட் பயனுள்ள ஒரு வசதியாக இருக்கும் என்றும் கூறலாம். நெருங்கிய
நண்பரின் பிறந்த நாள் என்றால் அதற்கு விரும்பிய அன்பளிப்பை அந்த கிஃப்ட் ஐகான் மூலம் எளிதாக அனுப்பலாம்.


இந்தியாவில் உள்ள தனது லேன்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு அருமையான திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த திட்டத்திற்கு அன்லிமிட்டட் ஆன் நெட் காலிங் டியூரிங் நைட் ஹவர்ஸ் ப்ளான் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.


இதன் மூலம் இந்தியாவில் உள்ள லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை வாங்க விரும்பினால் தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் மாத வாடகைக் கட்டண திட்டத்தோடு இந்த புதிய திட்டத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தைப் பெறுவதன் மூலம் பிஎஸ்என்எல்லின் லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் இரவு முழுவதும் இலவசமாக தங்கள் லேன்ட்லைன் போனில் பேச முடியும். இந்த புதிய திட்டத்தைப் பெற அவர்கள் மாதம் எக்ஸ்ட்ராவாக ரூ.59 மட்டும் செலுத்தினால் போதும்.
மேலும் இந்த திட்டம் இரவும் 10 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே பொருந்தும். மேலும் இந்த திட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.


 
இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.

இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.

இந்தத்தளமானது கூகிள், யாஹூ, ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப், அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.

இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.

மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும்.
அத்தளம் http://www.soovle.com/
 


track_your_email

இந்த நீட்சி மூலம் ஜிமெயிலில் அனுப்பப்படும் ஈமெயில்களை Track செய்யலாம். நீங்கள் அனுப்பிய ஈமெயிலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் ஈமெயிலுக்கு வந்து விடும். இனி  " மச்சி நான் உன் மெயிலை பார்க்கவே இல்லடா" யாரும் உங்க கிட்ட சொல்ல முடியாது. நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.


உபயோகப்படுத்துவது எப்படி?

  • இதனை உபயோகிப்பது மிகவும் சுலபம். முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து இந்த நீட்சியை உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இன்ஸ்டால் செய்து இருந்தால் மறுபடியும் இணைக்க தேவையில்லை.)
  • இந்த நீட்சி தற்பொழுது குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற உலவியை உபயோகித்தால் இந்த வசதியை பெற முடியாது. 
  • இந்த நீட்சியை இன்ஸ்டால் செய்த உடன் ஜிமெயிலை ஓபன் செய்து Compose பட்டனை க்ளிக் செய்யுங்கள். 
  • அங்கு Send Later என்ற பட்டனுடன் Track என்ற ஒரு புதிய பட்டனும் வந்திருக்கும். 
  • ஈமெயில் அனுப்புவதற்கு முன் அந்த Track பட்டனை டிக் செய்து அனுப்பி விட்டால் அந்த ஈமெயிலை ஓபன் செய்தவுடன் அந்த விவரங்கள் உங்கள் மெயிலுக்கு வந்து விடும்.
மேலும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.




போட்டோஷாப் பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. பட்டி தொட்டி எங்கும் adobe நிறுவன பிளாஷ் பிளேயர், ரீடர், மற்றும் போட்டோஷாப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் Photoshop அதிகளவு திரை கட்டளைகளை கொண்டது. ஒவ்வொரு தேவைக்கும் கிளிக் செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். செய்யும் வேலையை இலகுபடுத்த shortcuts உதவுகின்றன. 
உங்களில் தேவையை இலகுவாக இங்கே ஒரே பார்வையில் அனைத்து shortcutகளையும்  காட்சிப்படுத்தி உள்ளேன். நினைவில் வைக்க முடியாவிட்டால் right click செய்து save செய்து கொள்ளுங்கள். சிறிது நாட்கள் இதனுடன் பழகும் போது தானாகவே மனப்பாடம் ஆகி விடும்.

போட்டோஷாப் பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. பட்டி தொட்டி எங்கும் adobe நிறுவன பிளாஷ் பிளேயர், ரீடர், மற்றும் போட்டோஷாப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் Photoshop அதிகளவு திரை கட்டளைகளை கொண்டது. ஒவ்வொரு தேவைக்கும் கிளிக் செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். செய்யும் வேலையை இலகுபடுத்த shortcuts உதவுகின்றன.  உங்களில் தேவையை இலகுவாக இங்கே ஒரே பார்வையில் அனைத்து shortcutகளையும்  காட்சிப்படுத்தி உள்ளேன். நினைவில் வைக்க முடியாவிட்டால் right click செய்து save செய்து கொள்ளுங்கள். சிறிது நாட்கள் இதனுடன் பழகும் போது தானாகவே மனப்பாடம் ஆகி விடும்.

அனைவரும் போட்டோசோப் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் அநேகமானோருக்கு தெரிந்தது அடிப்படை விடயங்கள் தான். அதில் ஆழமாக செல்வதென்றால் நிச்சயம் அதை படித்து இருக்க வேண்டும். ஆனாலும் படிக்காத மக்களுக்காக- புகைப்பட பிரியர்களுக்காக பல plugins கட்டணத்துக்கும் சில இலவசமாகவும் கிடைக்கின்றன. இப்பதிவின் ஊடாக உங்களுக்கு அவசியமான பல இலவச plugin பற்றியும் சில முக்கியமான கட்டண plugins பற்றிய தகவல்களுடன் இலவசமாக தரவிறக்கும் இணைப்பையும் இணைத்து உள்ளேன். நீங்களும் விரும்பியதை தரவிறக்கி மகிழுங்கள்.


Photoshop plugins இலவசமாக...



இதற்கு உங்களின் அடிப்படை தேவையாக நிச்சயம் cs தொகுப்பு போட்டோஷாப் நிச்சயம் கணனியில் இருக்க வேண்டும். அது இல்லாத கணணிகள் அரிது என்பதால் நான் அதை தரவிறக்குவது தொடர்பாக இங்கு எதுவும் சொல்லவில்லை.



அடுத்து இதை எப்படி பயன்படுத்துவது? அனைத்துக்கும் பொதுவாக தரவிறக்கும் போது சிறப்பு அறிவுரைகள், வழிக்காட்டல்கள் கிடைக்கும்.



பொதுவான முறை இது தான். நீங்கள் நிறுவிய பின்னர் நிறுவிய இடத்திற்கு செல்லுங்கள். அங்கு plug-in என்ற folder உருவாக்கி இருக்கும். உதாரணமாக C:\Program Files\ Portraiture( Plugin name)\Plugin . இந்த போல்டரை பிரதி  எடுத்து C:\Program Files\Adobe\Adobe Photoshop CS?\Plug-ins\ க்கு சென்று பிரதி இடுங்கள். அதன் பின்னர் நீங்கள் போட்டோஷாப்பை திறந்து அங்கு சென்று பில்டர் (Filter) மெனுவில் நீங்கள் நிறுவிய plugin னை பயன்படுத்த தொடங்கலாம்.



இப்பதிவு plugin நிறுவுவதோ அல்லது அதை பயன்படுத்தும் முறை பற்றியோ விளக்கம் தருவதல்ல. இது உங்களுக்கு Pluginகளை அறிமுகப்படுத்தி தரவிறக்க வழி செய்யும் பதிவாகும்.

01. Exposure 4


  • Photoshop plugins இலவசமாக...
  • Publisher Home: Alien Skin
  • Price: $249 (உங்களுக்கு இலவசம்)
  • Best for: Photographers
  • Free Download: Media Fire - 3MB Click here
  • இதன் மூலம் உயர்தர சினிமா படங்களின் தனிமையை ஏற்படுத்த முடிகிறது. கலர் எபக்ட் சிறப்பாக உள்ளது.


02. Portraiture

Photoshop plugins இலவசமாக...

  • Publisher: Imagenomic
  • Price: $199.95
  • Best for: Photographers
  • Free Download: Click Here (10MB)

படத்தை பார்க்கவே விளங்கி இருக்கும். முகத்தில் உள்ள வடுக்களை தடயமே இல்லாமல் மறைக்க இதை விட சிறந்த வழி இருக்காது.

03. Perfect Effects 3 FREE

Photoshop plugins இலவசமாக...   Photoshop plugins இலவசமாக...

மேலே உள்ள படங்ககளை பாருங்கள். HDR எனும் High Dynamic Range முறைக்காக சிறப்பாக உருவாக்கம் பெற்ற Plugin இது.







  • Publisher: onOne Software
  • Price: Free
  • Best for: Photographers & Designers
  • Download & Home Page: Click


  • 04. Wire Worm




    • Publisher: MV’s Plugins
    • Price: Free
    • Best for: Photographers
    • Download & Home Page: Click

    இது படங்களில் உள்ள கோடுகளை நீக்க அதிகம் பயன்படும். அதாவது மின்கம்பங்கள், கடத்திகள் என பலவாறு. ஆனாலும் இதை விட மனிதர்களை கூட மிக மிக இலகுவாக இதன் உதவியுடன் நீக்க முடியும்.


    05.Noiseware

    Photoshop plugins இலவசமாக...

    • Publisher: Imagenomic
    • Price: $79.95 (உங்களுக்கு இலவசம்)
    • Best for: Photographer
    • Download: Click here - MediaFire- 3MB
    Photoshop plugins இலவசமாக...




    இதையும் நீங்கள் பார்த்தவுடன் புரிந்து இருப்பீர்கள். பொதுவாக கையடக்க தொலைபேசி கேமராகளில் எடுத்த படங்களே இவ்வாறு Noise உடன் தோன்றும். அவ்வாறான படங்களுக்கு இது அட்டகாசமான தீர்வு.



    இவற்றை நிறுவுதலில் அல்லது பயன்படுத்துவதில் சிக்கல் தோன்றினால் தயங்காமல் கருத்துபகுதியில் எழுதுங்கள்.

    இதை விட இன்னும் இருக்கிறது நண்பர்களே. இன்னுமொரு பதிவில் பார்ப்போம். நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் கால்பந்து விளையாட்டு ஏனோ அமெரிக்காவில் மட்டும் அவ்வளவு பிரபலமாகவில்லை. ஆனால் அமெரிக்காவிலும் கால்பந்து விளையாட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். அந்த ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இஎ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிபா சாசர் 13 என்ற வீடியோ கேமை வட அமெரிக்காவில் இந்த வாரம் களமிறக்க இருக்கிறது.


    இதுவரை 1 மில்லியன் கேம்கள் உலக அளவில் ப்ரீ ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றும் 4.6 மில்லியன் ரசிகர்கள் பிஎஸ்3, எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் கணினிகளில் இந்த மாதிரி பிபா சாசர் 13 கேம்களை விளையாடி இருப்பதாகவும் இஎ தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த எண்ணிக்கை 42 சதவீதம் இந்த வருடத்தில் மட்டும் அதிகரித்திருப்பதாகவும் இஎ தெரிவித்திருக்கிறது.
    அமெரிக்காவில் மட்டும் 194,000 ரசிகர்கள் இந்த பிபா சாசர் 13 மாதிரி கேம்களை விளையாடி பார்த்திருக்கின்றனர். எந்த பிபா சாசர் 13 கேமை பிஎஸ்3, எக்ஸ்பாக்ஸ் 360, ப்ளேஸ்டேசன் விடா போர்ட்டபுள், நிண்டின்டோ வி, கணினி, பிஎஸ்2, நிண்டின்டோ 3டிஎஸ் மற்றும் பிஎஸ்பி போன்ற வீடியோ கேம் சாதனங்களில் விளையாடலாம். மேலும் ஐபோன் மற்றும் ஐபேடிலும் இந்த கேமை விளையாட முடியும்


    ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும், உலகின் சரித்திர நாயகர்களின் பிறந்த நாளையும், தனது கூகுள் டூடில் பக்கத்தின் மூலம் கொண்டாடி வருகிறது கூகுள் நிறுவனம். இப்படி டூடில் பக்கத்தின் மூலம் மக்களுக்கு சில தகவல்களையும் வழங்கி வரும் கூகுள், தனது பிறந்த நாளையும் இதில் தெரிவித்து இருக்கிறது.


    அனிமேஷன் மூலம் ஒவ்வொரு டூடில் பக்கத்தின் வடிவமைப்பையும் உருவாக்கி வரும் கூகுள், தனது பிறந்த நாளிற்கும் ஒரு அனிமேஷனை செய்துள்ளது. இந்த டூடிலின் வழியாக, சாக்லெட் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியாக அனைவருக்கும் தெரிவிக்கிறது கூகுள்.


    எந்த ஒரு தகவலை தேடுவதாக இருப்பினும், அதற்கு சிறந்த பாலமாக இருக்கும் கூகுளின் இந்த பிறந்த நாள் அனைவரையும் மகிழ்விப்பதாகவே இருக்கிறது. இத்தனை ஆண்டு காலமாக தனது சேவையினை வழங்கி வரும் கூகுளுக்கு நாமும் சொல்லலாம் பிறந்த நாள் வாழ்த்து.

    பக்கக்காட்சிகள்

    Blogger இயக்குவது.