தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1

தெரியாத மொபைல் நம்பரில் இருந்து போன்கால்கள் வந்தால் கண்டு பிடிக்க எளிய வழிமுறைகள்!

ஹலோ…சாரி ராங் நம்பர்!

தெரியாத மொபைல் எண்களில் இருந்து அடுத்தடுத்து போன்கால்கள் வருவது வாடிக்கையான ஒன்றாகிவி்ட்டது.இதற்கு அதிகபட்சம் நாம் செய்வது ‘சாரி, ராங் நம்பர்’ என்று சொல்வதாகத் தான் இருக்கிறது. அப்படியும் அடிக்கடி போன்கள் வந்தால் அந்த நம்பரில் இருந்து வரும் போது கட் செய்வது. இதையும் மீறி அதிக தடவை தெரியாத மொபைல் நம்பரில் இருந்து போன்கால்கள் வந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஆனால் மொபைல் நம்பர்களை ட்ரேஸ் செய்ய ஒரு எளிய வழி உள்ளது.
மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்ய நிறைய வலைத்தளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு மொபைல் டிரெக்ட்ரி இன்டியா என்ற வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும். இதில் ட்ரேஸ் மொபைல் நம்பர், ட்ரேஸ் ஐபி அட்ரஸ், ட்ரேஸ் வெகிக்கல் நம்பர், ட்ரேஸ் லேண்டுலைன் நம்பர் என்று பல வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.


ஹலோ…சாரி ராங் நம்பர்!



இதில் ட்ரேஸ் மொபைல் நம்பர் என்ற வசதியை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு விண்டோ திறக்கப்படும். அந்த விண்டோவில் டைப் மொபைல் நம்பர் என்ற கேட்கப்படும். இதில் எந்த மொபைல் நம்பரில் இருந்து போன்கால் வருகிறதோ அந்த மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும். பிறகு சமர்ப்பிக்க (சப்மிட்) வேண்டும்.
ஹலோ…சாரி ராங் நம்பர்!
இப்படி செய்தால் நாம் டைப் செய்த மொபைல் எண் எந்த தொலை தொடர்பு சேவை கொண்டது, ஜிஎஸ்எம் அல்லது சிடிஎம்ஏ மற்றும் எந்த இடம் என்பது போன்ற தகவல்களை எளிதாக பெறலாம்.
ஹலோ…சாரி ராங் நம்பர்!
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை படித்த பின் இதை நீங்களும் செயல்படுத்தி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


பிராடுபேண்டு சேவையின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள். பிஎஸ்என்எல் பிராடுபேண்டு சேவையின் வேகத்தினை அதிகரிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

பிராடுபேண்டு வேகத்தினை அதிகப்படுத்த சில டிப்ஸ்!

டிஎன்எஸ் சர்வர்:
வேகமாக இயங்கும் டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தி கொள்வது நல்லது. பிஎஸ்என்எல் நிறுவனம் நிறைய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. ஆனாலும் அனால் ஒரே டிஎன்எஸ் சர்வரை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதனால் இரவு போன்ற நேரத்தில் அதகமானோர் ஒரே டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தும் போது, இதன் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தி பார்ப்பது நல்லது.
208.67.222.222
208.67.220.220
ஏடுப்ளாக் ப்ளஸ் ஏடுஆன்:
பிராடுபேண்டின் வேகத்தினை அதிகரிக்க ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏட்-ஆனை பயன்படுத்தலாம். பொதுவாக வெப் பேஜில் நிறைய விளம்பரங்கள் இருப்பதனாலும், இன்டர்நெட்டின் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. மேலே கூறப்பட்டுள்ள ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏட்ஆனை பயன்படுத்துவதால், இது போன்ற தேவையில்லாத விளம்பங்களினால் பிராடுபேண்டு சேவையின் வேகம் குறைவதை தவிர்க்கலாம். இந்த ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏடுஆனை ஃபையர்ஃபாக்ஸ் வெப் பிரவுசரில் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.
ஃபாஸ்டர்ஃபாக்ஸ் ஏடுஆன்:
பிரவுசரில் ஒவ்வொரு பக்கத்தினை திறக்கும் போதும், லோடாவதற்கு நிறைய நேரத்தினை எடுத்து கொள்கிறது. இப்படி லோடாக எடுத்த கொள்ளும் நேரத்தினை குறைக்க ஃபாஸ்டர்ஃபாக்ஸ் என்ற ஃபையர்ஃபாக்ஸ் ஏடுஆனை பயன்படுத்தலாம். வலைத்தளத்தினை திறக்க லோடாகும் நேரம் இந்த புதிய ஃபாஸ்டர்ஃபாக்ஸ் மூலம் குறைக்கப்படும்.
கேச்சி ஸ்பேஸ்:
தேவையில்லாத ஃபைல்களை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். டூல்ஸ்—> இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் —> பிரவுஸிங் ஜிஸ்டரி —> செட்டிங்ஸ் —> டிஸ்க் ஸ்பேஸ் ஆகிய இந்த வழிமுறைகளை பயன்படுத்தி டிஸ்க் ஸ்பேஸில் 50 என்று செட் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஸ்பேஸின் அளவை 50தாக குறைத்து செட் செய்து கொண்டால், 50 என்ற அளவு வந்தவுடன் ஆட்டோமெட்டக்காக தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். இதனாலும் இன்டர்நெட்டின் வேகத்தினை அதிகப்படுத்தலாம். இப்படி இன்டர்நெட்டின் வேகத்தினை அதிகப்படுத்துவதால் ஃபேஸ்புக்போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக வேகத்துடன் கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும்.



Android Mobile பாதுகாப்பானதா?


 ஆன்ட்ராய்ட் பற்றிய சிறு அறிமுகத்தை ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? என்ற பதிவில் பார்த்தோம். ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பல்வேறு பிரமிக்கும் வசதிகள் இருந்தாலும் அதிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை பற்றி இங்கு பார்ப்போம்.


Background Applications:


நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களை விட்டு வெளியேறினாலும் அவற்றில் சில பின்புலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இது Background Applications ஆகும். இதனால் உங்கள் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும். மேலும் உங்கள் மொபைலில் கட்டண இணைய வசதி இருந்தால் இந்த அப்ளிகேசன்கள் இணையத்தை தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் பணமும் தீர்ந்துவிடும்.

பின்புல அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?


Android Mobile பாதுகாப்பானதா?


ஆன்ட்ராய்ட் மொபைலில் Settings => Applications => Running Services என்ற பகுதிக்கு சென்றால் பின்புலத்தில் செயல்படும் அனைத்து அப்ளிகேசன்களின் பட்டியலை காட்டும். அதில் தேவையில்லாத அப்ளிகேசன்களை க்ளிக் செய்து,Stop என்பதை க்ளிக் செய்யவும். 



இயங்குதளம் தொடர்பான சில அப்ளிகேசன்களும் இருக்கும். அதனை நீக்கிவிட வேண்டாம்.


பின்புல அப்ளிகேசன்கள்களை செயல்படாமல் வைப்பது எப்படி?


Android Mobile பாதுகாப்பானதா?


ஆன்ட்ராய்ட் மொபைலில் Settings => Accounts & Sync என்ற பகுதிக்கு சென்றுBackground data traffic என்ற இடத்தில் டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள். இதனால் எந்த அப்ளிகேசனும் பின்புலத்தில் செயல்படாது. ஆனால் நீங்கள் உலவியில் இணையத்தை பயன்படுத்தலாம்.



Google Play (முன்பு Android Market) போன்ற சிலவற்றை பயன்படுத்த இந்த தேர்வினை டிக் செய்திருக்க வேண்டும்.



மொபைல்  இணைய இணைப்பை நிறுத்தி வைக்க:


Android Mobile பாதுகாப்பானதா?

மொபைல் இணைய இணைப்பை பயன்படுத்தாமல் Wi-fi மூலம் மட்டும் இணையத்தை பயன்படுத்துமாறு வைக்கலாம். 

Settings => Wireless & Networks => Mobile Networks என்ற பகுதிக்கு சென்றுData enabled என்பதில் டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள்
.

ஜிமெயிலில் தமிழ்மொழியில் டைப் செய்ய எளிய வழி!

தகவல்களை அனுப்ப நிறைய வசதிகள் வந்தாலும், வேலை நிமித்தமாக இ-மெயில் அனுப்பும் வழக்கம் இன்னும் மாறவில்லை. ஜிமெயிலில் தமிழில் டைப் செய்யவும் வசதிகள் உள்ளது. இதன் வழி முறையையும் கொஞ்சம் பார்க்கலாம்.

ஜிமெயிலில் தமிழ்மொழியில் டைப் செய்ய எளிய வழி!


ஜிமெயில் பக்கத்தில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு செட்டிங்ஸ் பக்கம் திறக்கப்படும். இதில் எனேபில்டு ட்ரேன்ஸ்லிட்டிரேஷன் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனை செலக்ட் செய்து வைக்க வேண்டும்.
அதன் பிறகு கீழே மொழிகளுக்கு தனியாக ஒரு பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பாக்ஸில் தமிழ் மொழியை செலக்ட் செய்து வைத்துவிட வேண்டும். பின்னர் ஸ்குரோல் செய்து கீழே பார்த்தால் சேவ் சேன்ஜஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்ய வேண்டும்.
அவ்வளவு தான் இனி மீண்டும் ஜமெயிலில், மெயில் டைப் செய்யும் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதில் டைப் செய்ய தொடங்கினால் தமிழில் எழுத்துக்கள் அச்சிடப்படுவதை காணலாம். ஜமெயிலில் டைப் செய்ய, இது மிக எளிய வசதியாக இருக்கும்.


(Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.

China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??

நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று

அந்த தளத்திற்கு செல்ல Click Here


உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும்.


இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான்.


பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.

இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும்  உபயோகிக்க‌ முடியும்..

சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங்குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.


பூமியை பொறுத்தவரை எப்போதும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.
எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ‘ஷிமிஷூ கார்ப்பரேசன்’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.


சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் ‘சோலார் பேனல்’ தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதற்கு ‘ஜனா ரிங்’ என பெயரிட்டுள்ளனர்.
இதன் மூலம் 13 ஆயிரம் டெராவாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035–ம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.
சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின்கலன்கள் அமைக்கும் பணியில் ‘ரோபோ’க்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலையங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

நன்றி:மாலைமலர்

தற்போது உலகின் மொபைல் சந்தையை தன் வசம் வைத்துள்ள ஆண்ட்ராய்டு தனது அடுத்த வெர்ஷனான கிட்கேட் 4.4 யை கூகுள் நெக்ஸஸ் 5 மொபைலில் வெளியிட்டுவிட்டது கூகுள். ஆண்ட்ராய்டின் முந்தைய வெர்ஷன்களில் இல்லாத பல வசதிகள் இந்த வெர்ஷனில் உள்ளது. 

மேலும் இந்த கிட்கேட் 4.4 ஆனது விரைவில் சாம்ங்கின் S4 லும் HTC One Google Play Edition மொபைலிலும் வெளிவரும் என கூகுள் அறிவித்திருக்கிறது. சரி அப்படி என்ன மற்ற ஆண்ட்ராய்டு வெர்சன்களில் இல்லாத தனித்துவம் இதில் இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க...

அசத்தும் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 ன் ஆப்ஷன்கள்..!

வேகம் 
இந்த கிட்கேட் வெர்ஷனை 512MB க்கு ரேம் இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டுமே இயக்க முடியும் இதன் வேகமும் மிக மிக அதிகம்
.

ஆப்ஸ்
இதில் அதிகப்படியான ஆப்ஸ்களை பயன்படுத்தும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளது இதன் மூலம் நாம் மல்டி அப்ளிகேஷன்களை ஒரே சமயத்தில் ரன் செய்யலாம்

மெசேஜ் ஆப்ஸ்
இதில் உங்களது மெயில் மற்றும் குறுந்தகவல் அனுப்ப உதவும் ஆப்ஸ்கள் இந்த ஓ.எஸ் உடனே வருகின்றன

ஸ்மார்ட் காலர் ஐ.டி
இதன் மூலம் உங்களுக்கு அன்நோன் நம்பரில் இருந்து கால் வந்தால் கூகுள் மேப்பின் உதவியால் அந்த நம்பர் எந்த டவரிலிருந்து கால் செய்தது என்று கண்டு பிடித்து விடலாம்

Immersive Mode
இதன் மூலம் படத்தின் உள்ளது படி எந்த ஒரு அப்ளிகேஷன் அல்லது இ புக்ஸ் எதாவது நீங்கள் படிக்கும் போது புல் ஸ்கிரான் மோட்க்கு கொண்டு வரலாம்

Cloud Storage 
இதில் கூகுள் உங்களுக்கு ஆன்லைன் நினைவகத்தை வழங்குகிறது இதன் மூலம் உங்களது தனிப்பட்ட அல்லது மிகவும் முக்கியமான தகவல்களை மொபைலில் சேமிக்காமல் ஆன்லைனில் பாதுகாப்பாக சேமிக்கலாம்.

பிரிண்டிங் ஆப்ஷன்ஸ்
இது உங்களது முக்கியமான சில மெசஜ்கள் அல்லது இ மெயில்களை புளூடூத் அல்லது Wi-Fi வழியாக பிரிண்ட் செய்ய உதவுகிறது

பவர் சென்சார்
இந்த பவர் சென்சார் மூலம் நமது பேட்டரியை நாம் சேமிக்கலாம்...

சிஸ்டம் கேப்ஷன்ஸ்
இந்த ஆப்ஷன் உங்களது மொபைலை எந்த டிகிரியிலும் திருப்பி வைத்து பயன்படுத்த நமக்கு பயன்படுகின்றது

லாக் ஸ்கிரின்
இந்த லாக் ஸ்கிரின் ஆப்ஷனில் நாம் ஏதாவது படங்களை மொபைலின் கோட் வேடாக வைத்து கொள்ளலாம் மொபைலை திறக்க நாம் அந்த படங்களின் சில பகுதிகளை சரியாக தொட்டால் தான் திறக்கும்.

Read more at: gizbot.com



 360 டிகிரியில் திருப்பக்கூடிய கமெரா உள்ள புதிய ஸ்மார்ட் கைப்பேசி  அறிமுகம் ..


Oppo நிறுவனமானது சில புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி Oppo N1 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.



 360 டிகிரியில் திருப்பக்கூடிய கமெரா உள்ள புதிய ஸ்மார்ட் கைப்பேசி  அறிமுகம் ..


இதில் உள்ள விசேட அம்சமாக 13 மெகாபிக்சல்களைக் கொண்ட ஒரே ஒரு கமெரா காணப்படுவதுடன் அதனை 360 டிகிரியில் திருப்பக்கூடியதாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த கமெராவினையே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவாகவும் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.

இது தவிர 1.7GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 600 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகிவற்றினை இக்கைப்பேசி உள்ளடக்கியுள்ளது.

மேலும் கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படைகாகக் கொண்டுள்ளதுடன் 5.9 அங்குல தொடுதிரை மற்றும் 16GB அல்லது 32GB சேமிப்பு வசதியும் தரப்பட்டுள்ளது.


 360 டிகிரியில் திருப்பக்கூடிய கமெரா உள்ள புதிய ஸ்மார்ட் கைப்பேசி  அறிமுகம் ..


 360 டிகிரியில் திருப்பக்கூடிய கமெரா உள்ள புதிய ஸ்மார்ட் கைப்பேசி  அறிமுகம் ..


 360 டிகிரியில் திருப்பக்கூடிய கமெரா உள்ள புதிய ஸ்மார்ட் கைப்பேசி  அறிமுகம் ..



 360 டிகிரியில் திருப்பக்கூடிய கமெரா உள்ள புதிய ஸ்மார்ட் கைப்பேசி  அறிமுகம் ..

ஸ்மார்ட் கைப்பேசி பற்றி..

நன்றி










லேசர் கதிரினை பயன்படுத்தி தானாக  குறி வைக்கும் துப்பாக்கி ...

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக துப்பாக்கிகளிலும் பல்வேறு புதிய உத்திகள் உட்புகுத்தப்பட்டு வருகின்றன.

லேசர் கதிரினை பயன்படுத்தி தானாக  குறி வைக்கும் துப்பாக்கி ...

லேசர் கதிரினை பயன்படுத்தி தானாக  குறி வைக்கும் துப்பாக்கி ...

இவற்றின் அடிப்படையில் இலக்குகளை தாமாகவே குறி வைத்து தாக்கக்கூடிய துப்பாக்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த TrackingPoint Solutions எனும் நிறுவனத்தினால் இந்த துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. 

இத்துப்பாக்கியானது நீண்ட தூர சுடு திறனைக் கொண்டிருப்பதுடன், லேசர் கதிரினை பயன்படுத்தி குறிவைக்கும் ஆற்றலையும் கொண்டடுள்ளது.





கணினித் தொழில்நுட்பம் கொண்ட கண்ணாடியை அணிந்து அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவர்.



கணினி மென்பொருள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் கூகுள் நிறுவனத்தின் ஒரு தயாரிப்புதான் கணினித் தொழில்நுட்பம் இணைந்த கண்ணாடியாகும். இதனை அணிந்துகொண்டால் ஒருவர் செய்யும் செயலினைத் துல்லியமாக வெளியிலிருந்து கவனிக்க முடியும். மருத்துவத்துறையில் முக்கியமான அறுவை சிகிச்சைகள் நடைபெறும்போது அறைக்கு வெளியே மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பின்மூலம் அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியும். 



கணினித் தொழில்நுட்பம் கொண்ட கண்ணாடியை அணிந்து அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவர்.


சென்னையில் முதன்முறையாக இத்தகைய கண்ணாடியை அணிந்துகொண்டு லைப்லைன் மருத்துவமனை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார் நேற்று இரண்டு அறுவைசிகிச்சைகள் செய்துள்ளார். 45 வயதுடைய ஒருவருக்கு மேல் இரைப்பை குடல் லேப்ராஸ்கோப்பியையும், 42 வயதுடைய பெண்ணிற்கு குடலிறக்க அறுவை சிகிச்சையினையும் அவர் நேற்று செய்தார். இந்த சிகிச்சைகள் அவருடைய மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

காரோட்டும்போது பின்புறக் கண்ணாடி வழியே பார்ப்பது போலவே தான் உணர்ந்ததாக இவர் கூறுகின்றார். அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டே தன்னால் மாணவர்களிடமும் இந்த சிகிச்சை குறித்துப் பேச முடிந்தது என்றும் இவர் தெரிவித்தார். கூகுள் கண்ணாடி சாதாரணக் கண்ணாடியைப் போலவே அணியக்கூடிய விதத்தில் உள்ளது. இதன் தொழில்நுட்பம் குரல் கட்டளைகள் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வீடியோவாக உபயோகிப்பவரின் திரையில் காட்சிகள் வெளிவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை துறையில் இந்த முறை ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கும் என்று கருதும் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை அறைக்குள் நடைபெறும் விஷயங்கள் குறித்து வெளியில் இருப்போர் அறிந்து கொள்ளுவதற்கு இது ஒரு நல்ல செயல்பாடாகும் என்று குறிப்பிட்டனர். இந்தக் கண்ணாடி இன்னும் விற்பனை சந்தைக்கு வெளிவரவில்லை என்றபோதும், இந்த வருட ஆரம்பத்தில் கூகுள் நிறுவனம் 2 ஆயிரம் கண்ணாடிகளை பரிசோதனை முயற்சியாக பொதுமக்களின் புழக்கத்தில் விட்டுள்ளது.

அடுத்து தங்களது நிறுவனம் வெளியிட உள்ள ஸ்மார்ட்போனில் 64 பிட் பிராசசரை பயன்படுத்த சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 64 பிட் பிராசசருடன் கூடிய ஐபோன் 5S யை 
வெளியிட்ட சில நாட்களுக்குள் சாம்சங் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது.
ஸ்மார்ட்போனில் 64 பிட் பிராசசரை பயன்படுத்த சாம்சங் நிறுவனம் முடி

சாம்சங் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஷின் ஜாங் க்யுன் (Shin Jong Kyun) கொரியா டைம்ஸ் இதழிற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக 64 பிட் பிராசசர் கொண்ட ஸ்மார்ட் போன்களை வெளியிட அவசரம் காட்ட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். 64 பிட் பிராசசருக்கு மாறுவதற்கு முன்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தரம் உயர்த்துதல் அவசியம் என்றும் கூறப்படுகிறது.

CompactFlash நிறுவனமானது கடந்த வருடம் CFast 2.0 மெமரி கார்ட் தொடர்பான அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடிய மெமரி கார்ட் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது ...

இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த மெமரிக் கார்ட் ஆனது உலகின் வேகம் கூடிய தரவுப்பரிமாற்றம் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இதன் அடிப்படையில் இதிலுள்ள தரவுகள் 450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடியதாகவும், 350 MB/s எனும் வேகத்தில் பதிவேற்றம் செய்யக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

256 GB சேமிப்பு கொள்ளவு உடைய CFast 2.0 மெமரி கார்ட்டின் விலையானது 1,809 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடிய மெமரி கார்ட் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது ...


ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம்....
வருங்காலப் போக்குவரத்தின் நவீன மாதிரி

பயண நேரம் மிச்சமாகும் ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம். கேட்பதற்கு ஆச்சர்யமாகத் தோன்றும் இந்த யோசனை வருங்காலத்தில் உண்மையாகப் போகிறது. ஈ பி எஃப் எல் (EPFL) என்ற ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் க்ளிப் ஏர் (CLIP AIR), இதன்படி, ரயில்பாதையில் சென்று கொண்டிருக்கும் ரயில் பெட்டிகளை பறந்து செல்லும் விமானம், தூக்கிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும். 



ஒரு நேரத்தில் 3 பெட்டிகளை இந்த விமானத்தால் கொண்டு செல்ல முடியும். பயணிகள், சரக்குகள், கச்சா எண்ணெய் போன்றவற்றை இந்த விமானங்கள் எடுத்துச் செல்லும். இந்த விமான மாதிரியின் மூலம் ரயில், தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முறை சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விமானங்களுக்காக இப்போது ஏர்போர்ட் (Airport) இருப்பதைப் போன்று வருங்காலத்தில் ஸ்கை ஸ்டேஷன்ஸ் (Skystations) என்பவை அமைக்கப்படும். 

அங்கு ரயில்களில் ஏறினால் செல்ல வேண்டிய இடத்துக்கு விமானங்களே வந்து ரயில்பெட்டிகளைத் தூக்கிச் சென்று இறக்கிவிடும். ரயில் பெட்டிகள் தூக்கப்படும்போதும், இறக்கிவிடப்படும்போதும் மட்டும் பயணிகள் தங்களது இருக்கைகளில் அமர வேண்டும். மற்ற நேரங்களில் ரயில் பெட்டிகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். தற்போதுள்ள ரயில்பெட்டிகளைப் போல் இல்லாமல், சக்கரங்கள் இல்லாத பெட்டிகளாக இவை இருக்கும். க்ளிப் ஏர் (CLIP AIR) போன்றே, பிரிட்டனின் க்லாஸ்கோ (Glasgow) பல்கலைக்கழக மாணவர்களும் இதுபோன்ற ரயிலைத் தூக்கிச் செல்லும் விமான மாதிரியை உருவாக்கியுள்ளனர். 


இது க்ளிப் ஏர் (CLIP AIR)-ஐ விட கூடுதல் பெட்டிகளைத் தூக்கிச் செல்லும் வசதியுடன் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பறக்கும் ரயில்கள் நடைமுறைக்கு வந்தால், விமான நிலையத்துக்கு காரில் செல்வது, விமான நிலையத்தில் காத்திருப்பது போன்ற பயண நேரங்கள் மிச்சமாவதுடன், செல்ல வேண்டிய இடத்துக்கும் நேரடியாகச் சென்று சேர முடியும். 

source

விரைவில் வர இருகும்   HTCஇன்  Harmony விண்டோஸ் ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள்


கைப்பேசி உற்பத்தியில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் HTC நிறுவனமானது Harmony எனும் Windows Phone 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்நிலையில் இக்கைப்பேசி தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் வர இருகும்   HTCஇன்  Harmony விண்டோஸ் ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள்


இதன்படி 4.7 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution HD Super LCD 3 தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது பிரதான நினைவகமாக 2GB RAM இனைக் கொண்டுள்ளது.

இது தவிர சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவும் தரப்பட்டுள்ளது.

இக்கைப்பேசி தொடர்பான ஏனைய தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் வர இருகும்   HTCஇன்  Harmony விண்டோஸ் ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள்




ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும், மொழிகளை விளங்கிக்கொள்ள சிரமப்படுபவர்களுக்கும் உதவக்கூடிய வகையில் நவீன சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


                        
SIGMO எனப்படும் இச்சாதனமானது 25ற்கும் மேற்பட்ட மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது.

சிறிய அளவான SIGMO ஆனது மிகவும் விரைவான மொழிபெயர்ப்பு வசதியை தருவதுடன், இணைய இணைப்பு அற்ற(Offline) முறையில் செயற்படுகின்றது.

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு சுவையான தகவல் ..
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு சுவையான தகவல் ..
இதில் காணப்படும் முதலாவது பொத்தானை அழுத்தி ஒரு வசனத்தை பேசியவுடன் அதற்குரிய மொழிபெயர்ப்புடன் உச்சரிப்பினையும் தருகின்றது.

இரண்டாவது பொத்தானை அழுத்தினால் வெளிநாட்டு மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு, உச்சரிப்பை தரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.




ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு சுவையான தகவல் ..\

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு சுவையான தகவல் ..


மொபைல் சாதனங்களின் கையெழுத்துக்களை பயன்படுத்தக்கூடிய மென்பொருள்(software) அறிமுகம் ..

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக எந்தவொரு மனித செயற்பாட்டையும் இலகுவாக்கும் பொருட்டு பல்வேறு கணினி மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது மொபைல் சாதனங்களின் மூலம் கையெழுத்துக்களை பயன்படுத்தக்கூடிய வகையில் SignEasy எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொபைல் சாதனங்களின் கையெழுத்துக்களை பயன்படுத்தக்கூடிய மென்பொருள்(software) அறிமுகம் ..


அப்பிளின் iOS மற்றும் கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளின் மூலம் இலகுவான முறையில் கையெழுத்துக்களை போடக்கூடியதாகவும் அவற்றினை தேவைக்கு ஏற்றால் போல் அசைத்து பயன்படுத்தக்கூடியவாறும் காணப்படுகின்றது.

தரவிறக்கச் சுட்டி

iOS:
மொபைல் சாதனங்களின் கையெழுத்துக்களை பயன்படுத்தக்கூடிய மென்பொருள்(software) அறிமுகம் ..

Android
மொபைல் சாதனங்களின் கையெழுத்துக்களை பயன்படுத்தக்கூடிய மென்பொருள்(software) அறிமுகம் ..


உலகளாவிய ரீதியில் மக்களின் நம்பிக்கையை வென்ற இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது பெரிய OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. 






Ultra High Definition தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது 77 அங்குல அளவுடையதாக காணப்படுகின்றது.  இத்தொலைக்காட்சியின் விலையானது இதுவரை வெளியிடப்படாத நிலையில், முன்னர் அறிமுகப்பத்திய வளைந்த மேற்பரப்பினைக் கொண்ட 55 அங்கு அளவுடைய தொலைக்காட்சியின் விலையை 15,000 டொலர்கள் என LG நிறுவனம் நிர்ணயித்திருந்தது. 




 இந்நிலையில் இப்புதிய தொலைக்காட்சியின் விலையானது 15,000 டாலர்களை விடவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


IBMஇன்,புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்

IBM's 3 in 1 Solar Invention can give Electricity / Water / Air-Conditioning - 3 இன் 1 சோலார் கண்டுபிடிப்பு மின்சாரம், குடிதண்ணீர், குளிர் காற்று - செலவு மிக குறைவு | High Concentration PhotoVoltaic Thermal(HCPVT) | IBM reveals 'super solar panel' plants| IBM New solar technology invention | ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம்-IBM புதிய 3 in 1 சோலார் தொழில்நுட்பம்
IBM's 3 in1 Solar Invention can give Electricity / Water / Air-Conditioning - 3 இன் 1 சோலார் கண்டுபிடிப்பு / ஒரே நேரத்தில் அதிக மின்சாரம், தூய குடிதண்ணீர், மற்றும் குளிர்ந்த காற்று கிடைக்கும் வசதி - செலவும் மிக மிக குறைவு | High Concentration PhotoVoltaic Thermal (HCPVT) | power generation by IBM | IBM New technology | IBM new invention | IBM solar invention

IBM's 3 in 1 Solar Invention can give Electricity / Water / Air-Conditioning | prototype High Concentration PhotoVoltaic Thermal (HCPVT) system

IBM's
3 in 1 Solar Invention can give Electricity / Water / Air-Conditioning -
3 இன் 1 சோலார் கண்டுபிடிப்பு / ஒரே நேரத்தில் அதிக மின்சாரம், தூய குடிதண்ணீர், மற்றும் குளிர்ந்த காற்று கிடைக்கும் வசதி - செலவும் மிக மிக குறைவு - Content suitable for ALL - Info Tech Category - VIDEO Available




English Version Scroll Down


உலகத்தில் பல சோலார் கண்டுபிடிப்பு வந்தாலும் அது மிக ஸ்லோவாக தான் நடை
முறை படுத்தும் காரணம் அதன் விலை. சோலார் எனர்ஜியை மின்சாரமாக
மாற்றுவதற்க்கு கண்ணாடி, சிலிக்கான் போன்ற
பல மினிரல்கள் சேர்த்து தான் ஃபொட்டோ வால்ட்டிக் என்னும் சோலார்
கன்வெர்ஷன் செய்து மின்சாரம் பெறப்படுகிறது. இப்போது ஐபிஎம் ஒரு புது வகை
சோலார் டெக்னாலஜியை கன்டுபிடித்துள்ளது. இதற்க்கு பெயர் High Concentration
PhotoVoltaic Thermal (HCPVT) இதன் மூலம் ஒரு சென்டிமீட்டர் சிப்பில் 2000
மடங்கு சூரிய சக்தி கிடைக்கும் அளவுக்கு மிகவும் எளிதான சில மெட்டல்கள்
மூலம் அமைத்துள்ளனர். 




இதில் 30% சூரிய சக்தியை மின்சாரக மாற்றியும் மீதி
உள்ள சூடில் உப்பு தண்ணீரை சேலினேட் முறையில் நல்ல தண்ணீராக மாற்றியும்
மிச்சம் உள்ள எனர்ஜியில் குளிர்ந்த காற்று கிடைக்குமாறு 3 இன் 1 ஆக
அமைத்திருக்கிறார்கள். அதாவது பொதுவாக இப்போது உள்ள ஒரு முழு சோலார்
ஃபோட்டோவால்டிக் பிளேட் மூலம் 300 வாட்ஸ் கிடைக்கும் ஆனால் இங்கு 1 சென்டி
மீட்டரில் 200 முதல் 250 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். ஒரு இரண்டடிக்கு
இரண்டடி இருந்தால் முழு வீட்டுக்கு 8 மணி நேர சூரிய சக்தியில் 24 மணி
நேரமும் கிடைக்கும் என்றால் பெரிய கண்டுபிடிப்பு தான். அதாவது ஒரு ஊருக்கே
ஒரு டிஷ் போது. இவர்கள் சஹாரா பாலைவனத்தில் 2% சதவிகித இடம் கொடுத்தால்
உலகத்தின் மொத்த மின்சார தேவையும் எந்த ஒரு எனர்ஜி இல்லாமல் 100%
கிடைக்குமாம்.
இதை அமைக்க வெறும் 12,500 ரூபாய் தான் ஒரு ஸ்கொயர்
மீட்டருக்கு ஆகும் செலவு அது போக 1000 யூனிட் கரென்ட்டுக்கு வெறும் 5 ரூபாய்
தான் செலவு. கூடவே தண்ணீர் பஞ்சம் மற்றும் இயற்கை ஏசி வேறு கிடைக்கும்
மக்களே. 








VIDEO LINK - you tube


It would take only two percent of the Sahara Desert’s land area to
supply the world’s electricity needs. Unfortunately, current solar
technologies on the market today are too expensive and slow to produce,
require rare Earth minerals and lack the efficiency to make such massive
installations practical.
To address this scientists aren't thinking
bigger, in fact they are thinking much smaller -- at the nanoscale. IBM,
will develop an affordable photovoltaic system capable of
concentrating, on average, the power of 2,000 suns, onto hundreds of 1x1
cm chips. The prototype High Concentration PhotoVoltaic Thermal (HCPVT)
system uses a large parabolic dish, made from a multitude of mirror
facets, which is attached to a tracking system that determines the best
angle based on the position of the sun.

Once aligned, the sun’s
rays reflect off the mirror onto several microchannel-liquid cooled
receivers with triple junction photovoltaic chips -- each 1x1 centimeter
chip can convert 200-250 watts, on average, over a typical eight hour
day in a sunny region.
IBM reveals super solar panel based on plants+chip with cooling pipes
One of the chips at the heart of the system, showing the angled mirrors and cooling pipes
Such system can be profitably applied in sunny
regions where sustainable energy, drinkable water and cool air are in
short supply in the HCPVT system, instead of heating a building, the 90
degree Celsius water will be used to heat salty water that then passes
through a porous membrane distillation system where it is vaporized and
desalinated to generate 30-40 liters of drinkable water per square meter
of receiver area per day. A large multi-tracker system could thereby
provide enough water for a town. With such a high concentration and a
radically low cost design, scientists believe they can achieve a cost
per aperture area below $250 (Rs 12,500) per square meter. 1000 units
electricity can be produced for Rs 5/.


Source



பிரபல முன்னணி நிறுவனமான சாம்சங் கைக்கடிகாரத்திலேயே ஸ்மார்ட் போன்களின் வசதியை பெறும் கேலக்ஸி கியர் (Galaxy Gear) என்ற கைக்கடிக்காரத்தை ஜெர்மனியில் அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங்கின் “கேலக்ஸி கியர்” என்ற ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அறிமுகம்

சாம்சங்கின் “கேலக்ஸி கியர்” என்ற ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அறிமுகம்

பெர்லின் நகரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், செல்போன்கள் உலகில் ஸ்மார்ட் போன்கள் ஏற்படுத்திய புரட்சி போல புதிய புரட்சியை ஏற்படுத்துமென சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கைக்கடிகாரத்தை பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மட்டுமின்றி எஸ்.எம்.எஸ் , பாடல்களை கேட்பது உள்ளிட்ட செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.