வாங்க சிரிக்கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி


1 ... ஆண்களுக்கு ....
உங்க மனைவியை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரத்துக்கு பூட்டி வையுங்கள்...

கதவைத் திறந்ததும் யார் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுறாங்க, யார் கடிக்குறாங்கனு தெரியும்...

2 ... பெண்களுக்கு...
உங்க கணவனை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரம் பூட்டி வையுங்கள்...

கதவைத் திறந்தால், நாய் சந்தோஷத்தில் ஓடி வரும். ஆனா உங்கள் கணவர், நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பார்.

3 ... வாழ்க்கையின் மிக முக்கியமான ஊக்கம்...
உங்கள் மனைவியின் படத்தை ஸ்க்ரீன் சேவராக வையுங்கள்...
உங்களுக்கு பிரச்சனை வரும் போது அதைப் பார்த்து கூறுங்கள்...
"இதை நான் கையாளும் போது, என்னால் எதையும் கையாள முடியும்"...
மனதுக்கு புது உற்சாகம் கிடைக்கும்...

4 ... மனைவியின் மீது கணவன் கவனம் செலுத்த வேண்டுமென்றால், அவள் சோகமாக இருந்தால் போதும்...
கணவன் மீது மனைவி கவனம் செலுத்த வேண்டுமென்றால், அவன் சந்தோஷமாக இருந்தாலே போதும்...

5 ... எந்த ஒரு மனிதனும் தன்னை ஒரு முறை ஏமாற்றிய இடத்துக்கு மீண்டும் போக மாட்டான்...
ஆனால் இன்னும் பல மனிதர்கள், தங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்கின்றனர்...

6 ... மகன் : அப்பா, நான் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டேன்...
அப்பா : என்ன வேடம்?
மகன் : கணவன் வேடம்...
அப்பா : முட்டாள், வசனங்கள் பேசக்கூடிய வேடத்தை தேர்ந்தெடு...

பின்குறிப்பு : இது நிபுனர்களால் மட்டுமே செய்யக்கூடியது.
சங்க நண்பர்கள் இதை வீட்டில் செய்துபார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்... விபரீதங்களுக்கு
சங்கம் பொறுப்பேற்காது....😅😂


வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் !!நீங்கள் சிரித்து மகிழ சிலநகைச்சுவை துணுக்குகளை வாங்க சிரிக்கலாம் பகுதியுள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 
வாங்க சிரிக்கலாம்:5 நகைச்சுவைப் படங்கள்
என்ன கொடுமை சார் இது?

வாங்க சிரிக்கலாம்:5 நகைச்சுவைப் படங்கள்
நான் ரொம்ப பிஸி.. என்னோட ஆளு கூட சாட் பண்றேன்...!

வாங்க சிரிக்கலாம்:5 நகைச்சுவைப் படங்கள்
ரூம்போட்டு யோசிப்பாங்களோ!!

வாங்க சிரிக்கலாம்:5 நகைச்சுவைப் படங்கள்
So cute

வாங்க சிரிக்கலாம்:5 நகைச்சுவைப் படங்கள்
இதுக்குப் பெயர் தான் Future planing....

comedy
பல்லு எப்படி விழுந்திச்சு ?

அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்ர்!

சொந்த ஊர் எது? 

அந்த அளவுக்கு வசதி இல்லீங்க.... சொந்த வீடுதான் இருக்கு!

காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?

காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.




டார்லிங், ராத்திரி என்ன டிபன்? 

(கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?

 வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!


சிரிக்கலாம்

                                comedy

MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்...

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது....

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது

காமெடி



பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்... அவரிடம் கேட்டான்…

MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்...

MBA : நீங்க உள்ளே வந்த உடனே ,அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது..

அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்...
MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..!

அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்குதான் தம்பி. நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...!


comedy


வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படங்கள் வாங்க சிரிக்கலாம்-5 நகைச்சுவை படங்கள் ...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் !!நீங்கள் சிரித்து மகிழ சிலநகைச்சுவை துணுக்குகளை வாங்க சிரிக்கலாம் பகுதியுள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 

௧.இதுக்கு பெயர் தான் Bluetooth .....

ப்ளுடூத்
ப்ளுடூத் 

௨.வைரஸ் கிளீன்(Cleaning Virus...... )பன்னுராணம் ...

Cleaning Virus......
Cleaning Virus......


௩.இவனுக தொல்லை தாங்கள 

Engineer rokzs.......
Engineer rokzs.......

எத்தனை முறை பார்த்தும் சலிக்காத காமெடி படங்கள் 

New Cool Pad For Laptop.How is it
New Cool Pad For Laptop.How is it


காமெடி

காமெடி





                           

comedy
சிரிக்கலாம்
அவள்: ஏரோப்ளேன்ல 50 செங்கல் இருக்கு; ஒண்ணு கீழே விழுந்தா மிச்சம்?

இவன்: 49

அவள்: ஓகே. யானைய ஃப்ரிட்ஜ் உள்ள எப்டி வெப்பே?

இவன்: பழைய ஜோக்; கதவ திறந்து.

அவள்: அப்ப மானை?

இவன்: யானைய எடுத்துட்டுதான்.

அவள்: காட்டுல சிங்க ராஜா விருந்து வெச்சார். ஒரு மிருகம் மட்டும் போகல, எது?

இவன்: மான். அது ஃப்ரிட்ஜுக்குள்ளதான் இருக்கு.

அவள்: பாட்டி முதலைகள் இருக்கற ஆற்றை எப்டி ஈஸியா கடந்தாள்?

இவன்: முதலைகள்தான் சிங்க ராஜா விருந்துக்கு போய்டுச்சே.

அவள்: ஆனாலும் அவள் ஆற்றை கடக்கைய்ல செத்துப்போனாள். ஏன்?

இவன்: ஏன், தெரியலையே…

அவள்: அந்த செங்கல் அவ தலையில விழுந்துடுத்து.

நீங்க முடியல்லன்னு சொல்றது காதுல விழுது


comedy
சிரிக்கலாம்

1.கோபு-எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..
நண்பன்-தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?
கோபு-இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

2.மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

3.ராமு : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

4.நோயாளி-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்." 
டாக்டர்-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

5.வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.

comedy

சிரிக்கலாம்

1.கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!

2.நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்...

3.நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்

4.நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?

நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

5.ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்

எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

வாங்க சிரிக்கலாம்
வாங்க சிரிக்கலாம் 
1.நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
2.டாக்டர்-"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
நர்ஸ்-"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"


3.பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.
வாங்க சிரிக்கலாம்


4.வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்
5.நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" 
"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்

நகைச்சுவை
நகைச்சுவை

1. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே
2.டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம். 
3.என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள். 
வாங்க சிரிக்கலாம்
வாங்க சிரிக்கலாம் 

4. தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
5.கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க...நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்... 

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.