பாராளுமன்ற வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கு உங்களுக்க தேர்தல் ஆணையம் இனியதலத்தில் பட்டியலிட்டு உள்ளது.. உங்கள் தொகுதி வேட்பாளரின் தெர்தல் செலவு வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு பதிவு வரை வேட்பாளரின் செலவு கணக்கை பார்க்க

பாராளுமன்ற  வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கு உங்களுக்க தேர்தல் ஆணையம் இனியதலத்தில் பட்டியலிட்டு உள்ளது..

உங்கள் தொகுதி வேட்பாளரின் தெர்தல் செலவு வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு பதிவு வரை


நாம் நினைத்தாள் லஞ்ச உலழல்களை நம் நாட்டைவிட்டு துரத்தலாம் மேலும் ஊழல் லழல் வாதிகளுக்கும் லஞ்சபெறேலிகளுக்கும் தக்க தண்டனை பெற்று தரலாம்

நாம் நினைத்தாள் லஞ்ச உலழல்களை நம் நாட்டைவிட்டு துரத்தலாம் மேலும் ஊழல் லழல் வாதிகளுக்கும் லஞ்சபெறேலிகளுக்கும் தக்க தண்டனை பெற்று தரலாம் 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை (விஜிலென்ஸ் & கரெப்சன்) தொடர்புகொள்ள..

தொலை தொடர்பு எண்கள் :-

Director/ADGP S.K.Dogra, IPS 044 - 24612561

ADGP Addl.Director 044-24617154

IGP SIC- JD A.M.S. Gunaseelan,IPS 044 - 24616900

IGP SIC- JD G. Venkataraman, IPS 044 - 24616900

DIG R. Samuthirapandi, IPS 044 - 24616900

SIC-I 044 - 24610550

SP CNI/Central A.T. Duraikumar 044 - 24954171

SP MDU/Southern Maheswari, IPS 044 - 24959597

SP CBE/Western 0422-2238646

CONTROL 044 - 24615989/49/24954142

FAX 044 - 24617510

ஊழல் வாதிகளை நாட்டை விட்டு விரட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை  பயன்படுத்துவோம் 

ஒரு கையால் தட்டினால் ஓசை வராது அதே போல் ஒரு சிலர் மட்டும் இவற்றை செய்தால்நாம்  ஊழல் லழல் வாதிகளுக்கும் லஞ்சபெறேலிகளுக்கும் தக்க தண்டனை பெற்றுத்தர முடியாது ..


ஒன்று கூடுவோம் நாட்டை காக்க ...


நம் நாட்டை காப்பாற்ற நாமே களமிறங்குவோம் ..

ஜெய் ஹிந்த்!! வாழ்க பாரதம்!! ஒழிக்க ஊழல் லஞ்சம்  


google alert

இந்த சேவையின் மூலம் உங்களுக்கு தேவையான தேடுதல் தகவல்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி விடும்.

நீங்கள் உங்களுக்கு தேவையான தேடு வார்த்தையை(Search query) இங்கே பதிவு செய்து விட்டால் போதும் எப்போதெல்லாம் உங்கள் தேடு வார்த்தை பற்றிய செய்தி கூகிளுக்கு தெரிகின்றதோ அதை அப்படியே சேகரித்து உங்கள் இமெயிலுக்கு அனுப்பிவிடும்.

 மேலும் நீங்கள் வீடியோ, புத்தகம், செய்தி, பிளாக் போன்ற வகைகள் படி செய்தி தரும்படி கூகுளை கேட்கலாம்.

முயற்சி செய்து பாருங்கள்..லிங்க்:
http://www.google.com/alerts


நினைவகம் (மெமரி) பற்றி சிறு தகவல் 1 yotta byte-(YB)=???

மெமரி அளவுகள்  பிட் முதல் யோட்டா வரை
 • 1 பைட்(1 byte ) = 8 பிட்ஸ்(bits( 0 & 1's)
 • ஒரு கிலோ பைட் ( 1 KiloByte)= 1,024 பைட்ஸ்(1024 bytes)
 • ஒரு மெகா பைட் (1 megabyte)=1,024 கிலோ பைட்ஸ்(1024 KB)
 • ஒரு கிகா பைட் (1 gigabyte)=1,024 மெகா பைட்ஸ்( 1024 MB)
 • ஒரு டெரா பைட் (1 terabyte)= 1, 024 கிகா பைட்ஸ்(1024 GB)
 • ஒரு பெட்டா பைட் (1 petta byte) = 1,024 டெரா பைட்ஸ்(1024 TB)
 • ஒரு எக்ஸா பைட் (1 exa byte)=1,024 பெட்டா பைட்ஸ் (1024 PB)
 • ஒரு ஸெட்டா பைட் (1 zetta byte)=1,024 எக்ஸா பைட் ஸ்(1024 EB)
 • ஒரு யோட்டா பைட் (1 yotta byte(YB)) = 1,024 ஸெட்டா பைட்ஸ்( 1024 ZB)
மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்

கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்க

2
teeth

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.

நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம்

செய்வது மிகவும் எளிது.

பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate) (KMNO4)

பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.

teeth


(துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும்.


பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.


வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.


பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.


இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் ..

விஞ்ஞானிகள்

1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2) தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.
அல்பேர்ட் ஐன்ஸ்டீன்

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக
கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.

2
பணம் பத்து செய்யும் என்பது பழமொழி
பணம் பத்து செய்யும் என்பது பழமொழி 


அந்த பணத்தை அச்சடிப்பதற் கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரி யாது.

அதுபற்றிய  விபரங்களை இன்று இந்த பதிவில்  அறிந்து கொள்வோம்.

ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியு மா?

5 rupee


47 பைசா

பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

10 rupee


96 பைசா

இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

20 rupee


1 ரூபாய் 46 பைசா

ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகு்செலவு எவ்வளவு தெரியுமா ?

50 rupee


1 ரூபாய் 81 பைசா

நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

100 rupee


1 ரூபாய் 79 பைசா

500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

500 rupee


3 ரூபாய் 58 பைசா

ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

1000 rupee


4 ரூபாய் 6 பைசா

ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் 

100 ரூபாய் தாளை அச்சிடுவதற்கு ஆகும் செலவிடை 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம்.

எந்த ஒரு பணத்தாளும் சேதமடைந்தாலும் அதன் மதிப்பை இழக்காது.

இடைத்தரகர்கள் வேண்டுமானால் பழைய கிழிந்த பணத்தாள்களை வாங்கிக்கொண்டு பாதி மதிப்பிலான பணத்தை கொடுப்பார்கள்.

ஆனால் உண்மையாகவே அதன் மதிப்பு மாறாமல் இருக்கும்.அவர்கள் மொத்தமாக வங்கிக்கு கொண்டு சென்று அதை நல்ல நோட்டுக்களாகமாற்றிவிடுவார்கள்.

ரூபாய் நோட்டுக்கள் கிழி வதையும்,சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது Reserve Bank of India.

கூடுதல் தகவல் என்னவெனில் 

ஒரு நாட்டில் எந்தளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும்உள்ளது. அந்தக் கட்டுப்பாட்டு மட்டும் இல்லையென்றால் ஒவ்வொரு நாடும் தன் விருப்பத்திற்கு அதிகமான பணத்தை அச்சடித்துவிடும்.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் பணம்,நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது.அதன்படியே பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள்அச்சடிக்கப்படுகின்றன .

நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும்
நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.


உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனைதூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரிஇல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.

அக்கவுண்ட் உருவாக்க அனுமதிக்கிறோம். இங்கு தான், வினையே உள்ளது. நிபந்தனைகளின் ஒரு பிரிவில், Microsoft 'may access or disclose information about you, including the content of your communications.' எனத் தரப்பட்டுள்ளது.  மைக்ரோ சாப்ட் உங்களைப் பற்றிய தகவல்களை அணுகி, அவற்றை வெளிப்படுத்தலாம் என்று தெளிவாக அந்த நிபந்தனை உள்ளது.
தகவல் 


விண்டோஸ் 8 குறித்த வர்த்தக ரகசியம் ஒன்றை, அதன் ஊழியர் ஒருவர் வெளியிட்டதை அறிந்த மைக்@ரா Œாப்ட், அது குறித்த தீவிர விசாரணையில் இறங்கியது.

அந்த விசாரணையின் பொது  ஹாட் மெயில் தளத்தில் இருந்த மின் அஞ்சல்களைப் படித்து, அதன் மூலம் குற்றவாளியைப் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தது

அப்போதுதான் தெரிய வந்துள்ளது !! ஹாட்மெயில் தளத்தில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி அமைக்கும்போது, அதற்கான அந்நிறுவனத்தின் விதிமுறைகளை முழுமையாகப் படிப்பதில்லை.

சிறிய எழுத்துக் களில் மிக நீளமாக இருப்பதனைப் பொறுமையுடன் படிக்க இயலாமல், அதன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக Accept என்ற பட்டனில் கிளிக் செய்து,

அக்கவுண்ட் உருவாக்க அனுமதிக்கிறோம். இங்கு தான், வினையே உள்ளது. நிபந்தனைகளின் ஒரு பிரிவில், Microsoft 'may access or disclose information about you, including the content of your communications.' எனத் தரப்பட்டுள்ளது.

மைக்ரோ சாப்ட் உங்களைப் பற்றிய தகவல்களை அணுகி, அவற்றை வெளிப்படுத்தலாம் என்று தெளிவாக அந்த நிபந்தனை உள்ளது.

இதனை தொடர்ந்து , கூகுள் மற்றும் யாஹூ மின் அஞ்சல் தளங்களின் சேவைகளுக்கான நிபந்தனைகளைப் பார்த்த போது, அவையும் இது போன்ற நிபந்தனைகளையும் ஒப்பந்த விதிகளையும் விதித்துள்ளன என்பது தெளிவாகிறது.

நம்மைப் பற்றிய தகவல்கள் (டேட்டா) அவர்களின் சர்வர்களிலேயே பதிவாவதால், அவற்றை அணுகுவதற்கோ, கைப்பற்றுவதற்கோ, இந்த நிறுவனங்களுக்கு நீதி மன்ற ஆணைகளும் அனுமதியும் தேவை இல்லை.

உங்கள் இரகசிய தகவல்களை ஹாட் மெயில்,ஜிமெயில் மற்றும் யாஹூ mailலில் இருந்து நீக்கிவிடுங்கள்.இல்லை எனில் உங்கள் தகவல்களை அவர்கள் கைபட்ற முடியும் ..

1
அரசன்

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''


'' அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''


''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''


'' பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''


''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்;அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!


இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்;காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.


மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள்,தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை,அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!


நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி,குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.


இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.


ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.


மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?


பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.


ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.


இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

தமிழ் எண்கள்  

௦  – 0, 
௧- 1, 
௨- 2,
௩- 3, 
௪- 4, 
௫- 5, 
௬- 6, 
௭- 7, 
௮- 8, 
௯- 9

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.


 மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

இந்த செய்தியே தெரியாத நண்பர்களுக்கு பகிரவும்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.