1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

சிவ சிவ




'யாரையும் எதற்காகவும் குறை கூறாதீர்கள்.பிறருக்கு  தீர்ப்பளிக்கும்  அதிகாரத்தை கடவுள் யாருக்கும் வழங்கவில்லை. விரும்பிய முறையில் வாழ்வு நடத்தும் உரிமை  அனைவருக்கும் இருக்கிறது'-சிவானந்தர்.
இனிய காலை வணக்கம்.



வேலைக்கு போய் திரும்பி வந்த  தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் ..

 நம்ம வீட்டு  பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?

 அதைப் போய்  ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?
 நம்ம வீட்டு  பீரோல இருக்குற நகை,  பணம் எல்லாம்  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?

ஷ்ஷு....  அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...

உங்க ATM கார்டை  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?  என்ன கேள்வி இது..?

நீ சொல்றதெல்லாம்  ரொம்ப முக்கியமான பொருள்.  அதையெல்லாம்  ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...  "

அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? " 

 இம்முறை  அம்மாவிடமிருந்து பதில் இல்லை.  கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!




ஒரு வேலைக்கு  ஆள்காரன் போனால் அத்துவானம், தன் மகன் போனால் மத்திமம், தானே செல்வது உத்தமம்.எப்பணியாக இருந்தாலும் தானே சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும், அப்பொழுது மட்டுமே பணிகள் நல்லமுறையில் நடைபெறும்.
இனிய காலை வணக்கம்



ஓர் முதியவர் தனது பேரனிடம்.:

பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

பேரன்: அது எப்படி தாத்தா?

முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்

மது அருந்த பணம் வேண்டும்

சிகரெட் புகைக்க பணம் வேண்டும்

கூடாத இசை கேட்க பணம் வேண்டும்

பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,

ஆனால் மகனே!

அன்பு காட்ட பணம்
தேவையில்லை

கடவுளை வணங்க பணம்
தேவையில்லை

சேவை செய்ய பணம் தேவையில்லை

விரதம் இருக்க பணம் தேவையில்லை

பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை

பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை

நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை

*இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவும் தேவையில்லை*
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?

முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

இந்த பகிர்வும்  இலவசம். இதனை ஏனையோருடமும் பகிரவும்
இலவசமாக..🙏🙏



'தடுமாற்றம்,சினம்,கவலை,பேராசை நான்கும் வாழ்க்கைக்கு நன்மை தரும் வழிகளை அடைத்து விடுகின்றன'-வேதாத்திரி மகரிஷி. அன்பான காலை வணக்கங்களும் வாழ்த்துக்களும்.



*✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*

*✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்*.

*✏ தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை

.*
*அவன் அதை உணரும்போது*, *அவள் உயிரோடு இருப்பதில்லை.*

*✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.*
*
*✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.*

*✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.*

*✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!*

*✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.*

*✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'*

*✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்*

*✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்*

*✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!*

*✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக்* *கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித்* *தந்த அந்த (தொட்டில்)* *வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.*
 *நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு*

*✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?*

*✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.*

*✏ ஆயிரம் கைகள் என்* *கண்ணீரைத் துடைத்துப்*
*போனாலும், ஆறாத* *துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.*

*✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.*

*✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!*

*✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!*

*✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை*
*என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை*.

*✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.*

*✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை*.

*✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!*

*✏ 'அம்மா...!*' *அன்று நம்* *தொப்புள்கொடியை* *அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின்* *தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு* *விழா ரிப்பன்!*    

படித்துவிட்டு பகிருங்கள்!



'சரியான  திட்டமிடுதல்   பணியை எளிதாக்கும்.உள்ளத்தில்  உறுதியும்,காலத்தின்  அருமையும் அறிந்தவன் எந்த பணியையும்  நிறைவேற்றும் வலிமை படைத்தவனாக இருப்பான்'-சாணக்கியர்.இனிய காலை வணக்கம்






௧.முதலில் :http://frch.in/fcharge. என்ற இணையதிக்கு செல்லுங்கள்


௨.அதில் FreeCharge - Mobile Recharge என்ற அப்ப்ளிக்கேஸனை பதிவிறக்கம் (Download) செய்யுங்கள்


௩.பதிவிறக்கம் செய்த பிறகு google mail idயுள் login செய்யுங்கள்


௪.அதன் பின் மேல் உள்ள mobile no என்ற இடத்தில் Recharge செய்ய வேண்டிய நம்பரை டைப் செய்யுங்கள் பின் அந்த mobile no operatorறை தேர்ந்தெடுங்கள் அதன் பின் Recharge amount கொடுங்க (rs 10)





௬.அதன் பின் மேலே உள்ள படத்தில் உள்ள promo code டை click செய்யுங்கள் ..




௭. பின் enter your code என்ற இடத்தில       RH9VDAQ codeஐ கொடுத்து apply கொடுங்க ..



௮.இப்பொது அந்த code ஏற்றுக்கொள்ளப்பட்டும் அதன் பின் continue கொடுத்து உங்கள் debit card கொண்டு 10rs க்கு recharge செய்யுங்கள் ..




௯.recharge ஆன அடுத்த நொடி உங்களுக்கு 50RS கிரெடிட் ஆகும் ..




அதை MY wallet சென்று உறுதி செய்யுங்கள் ...

Get Rs. 50 cashback on your first transaction by transacting with Freecharge. Use my promocode RH9VDAQ . Download now - http://frch.in/RnEW

இதை உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்..



'அறிவை, முதலீடாக வைத்தால், அரண்மணையை கூட  வாங்கலாம்; ஆசையை முதலீடாக வைத்தால், துன்பத்தை  தான்  வாங்க முடியும் '-விவேகானந்தர். அன்பான காலை வணக்கங்களும் வாழ்த்துக்களும்.



1. ஜெயிக்குற வரைக்கும் விடாதே.
2. ஒருபோதும் விட்டு கொடுக்காதே - கருணையை.
3. தயங்காதே உரிமையை கேட்க.
4. சொல்வதை விட செய்து காட்டு.
5. தேவைல்லாத தயக்கத்தை குழி தோண்டி புதைத்துவிடு.
6. நன்றி மறக்காதே நன்றாக இருப்பாய்.

இனிய காலை வணக்கம்!



*இறப்பு*
எல்லோருக்கும் வந்தே தீரும்
ஆனால் யாரும்
*~_இறக்க விரும்புவதில்லை_~*

*உணவு*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும்
*~_பயிர் செய்ய விரும்புவதில்லை_~*

*தண்ணீர்*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும் அதை
*~_சேமிக்க விரும்புவதில்லை_~*

*பால்*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும் *~_பசுவை வளர்க்க விரும்புவதில்லை_~*

*நிழல்*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும் *~_மரம் வளர்க்க விரும்புவதில்லை_~*

*மருமகள்*
எல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும் *~_மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை_~*

*நல்ல செய்தி*
படித்து ஆஹா வென,
புகழ்பவர் அதை *~_மக்களிடம் கொண்டு செல்ல விரும்புவதே இல்லை_~*

*_நீங்கள் எப்படி?_*

வாழ்வில் சிலநேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம்.. அவற்றை நம்பிக்கையுடன் சந்தியுங்கள்.. மனம் தளராதீர்கள்.. அவைதான் நாளை நாம் பெறப்போகும் வெற்றியின் படிக்கட்டுகள்..!! காலை வணக்கம்..!!



காரும், பங்களாவும்,ஏசியும்தான் முன்னேற்ற வாழ்க்கை என்று மிகச்சிறு வயதிலிருந்தே வேப்பிலையடிக்கப்பட்டு வருகிறது! இன்னமும்.....வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள் வருகின்றதோ அதே அளவு ஏமாற்றங்களும் வரும்....... 🌿இனிய ஞாயிறு வணக்கம்🦋.


கவலைகள் வந்து கொண்டுதான்
இருக்கும். அதனை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும்,உன்னிடம்தான் உள்ளது. நிரந்தரமாக்கினால்
நீ நோயாளி, தற்காலிகமாக ஆக்கினால் நீ புத்திசாலி ....



எப்பொழுதெல்லாம் மற்றவருடன் உங்களுக்கு முரண்பாடு ஏற்படுகிறதோ, அப்பொழுது உறவு சிதைவதற்கும் மற்றும் ஆழமாவதற்கும் இடையேயான வித்தியாசத்தை ஏற்படுத்துவது உங்கள் அணுகுமுறையே.  - வில்லியம் ஜேம்ஸ்

💐 இனிய காலை வணக்கம் 💐

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.