Today லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 சாய்னா நேவால்

சாய்னா நேவால்

 ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

 இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

 மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.சாய்னா நேவால்.

 ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

 இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

 மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.

 தேசிய தடுப்பூசி தினம்

தேசிய தடுப்பூசி தினம்

  • போலியோவை நாட்டிலிருந்தே விரட்டவேண்டும் என்பதற்காக மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கைகால்களை நிரந்தரமாக செயலிழக்கச் செய்கின்றன. போலியோ நுண்கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.
  • அதற்காக 1995ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டுமுறை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும் வழங்கப்பட்டதன் மூலம் 2014ஆம் ஆண்டு போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது.


 பை தினம்

பை தினம்
 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி பை தினமாக கொண்டாடப்படுகிறது. 

இது பை என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும்.

அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் ℼயைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் ℼ தினத்தைக் கொண்டாடியது முதல் இவ்வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

 குஸ்டவ் கிர்க்காஃப்

குஸ்டவ் கிர்க்காஃப்


  • மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை வெளியிட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 1824ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் பிறந்தார்.
  • கல்லூரியில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ்பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21வது வயதில் வெளியிட்டார்.
  • ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து 1854ஆம் ஆண்டு சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தார். மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
  • இவர் 1859ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். மேலும் 1862ஆம் ஆண்டு 'கரும்பொருள் கதிர்வீச்சு' பற்றிய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார்.
  • ராபர்ட் புன்செனுடன் இணைந்து சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக 'ரூம்ஃபோர்டு' பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றார்.
  • தன் வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 63வது வயதில் (1887) மறைந்தார்.

வி. சாந்தா

வி. சாந்தா

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா.

இவர் தனது குருவாக டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை போற்றுகிறார். 12 படுக்கைகளுடன் மட்டுமே இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.

இவர் புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, ஒளவையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

 உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். 

19 ஜனவரி 2021 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

  மார்செல்லோ மால்பிகி 

மார்செல்லோ மால்பிகி


மார்செல்லோ மால்பிகி 10 மார்ச் 1628 ல்  இத்தாலியில் பிறந்தார்.

அரிஸ்டாடிலின் தத்துவம் பயின்று பின் மருத்துவரானார்.

அறிவியல் ஆய்வில்  ஈடுபடுத்திக் கொண்ட அவர் கற்பித்தலில் அதிக நாட்டம் உடையவராக காணப்பட்டார்.

1669 ஆம் ஆண்டு  பட்டுப்பூச்சியில் தான் செய்த ஆய்வுகளை வெளியிட்டார்.

பூச்சிகளுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் கிடையாது என்றும், இவைகள் உடலின் பக்கவாட்டுத்துளைகள் மூலமாக வாயுமண்டல காற்றை உள்ளிழுத்து, நுண்குழல்கள் வழியாக சுவாசிக்கின்றன என்று விளக்கினார். 

நுரையீரல் செல்களை அறுவை செய்து பார்த்து மெல்லிய சுவர் கொண்ட தந்துகிகள் இருப்பதை கண்டறிந்தார்.

29 நவம்பர் 1694 ல் இயற்கை எழுதினார்.


யூரி ககாரின் மாஸ்கோ



யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934-ல் பிறந்தார்.

இவர் விண்வெளிக்கு பயணித்த முதல் விண்வெளி வீரர்.

விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார்.

1955-ல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School)-ல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார்.

பின்பு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957-ல் திருமணம் புரிந்தார். 

1960-ல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில்  20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி.

விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில், நெடுஆரம் 203 மைல், குறுஆரம் 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.

இவர்  27-03-1968 ல்  மரணம் அடைந்தார்.


 சர்வதேச மகளிர் தினம் 

சர்வதேச மகளிர் தினம்

  •  சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
  •  பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

 என்றி டிரேப்பர் 

என்றி டிரேப்பர்


என்றி டிரேப்பர் (Henry Draper) (மார்ச் 7, 1837 – நவம்பர் 20, 1882), ஒரு அமெரிக்க மருத்துவரும், தொழில்சாரா வானியலாளரும் ஆவார். 

என்றி டிரேப்பரின் தந்தை, யோன் வில்லியம் டிரேப்பர் ஒரு பெயர்பெற்ற மருத்துவரும் வேதியியலாளரும் தாவரவியலாளரும் நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார்.

1839ல் முதன் முதலாக நிலவைத் தொலைநோக்கி ஒன்றினூடாக ஒளிப்படம் எடுத்தவரும் இவரே.

என்றி டிரேப்பர், 1857ல், தனது 20 ஆவது வயதில் மருத்துவத்துக்கான நியூயார்க் பல்கலைக்கழகப் பள்ளியில் மருத்துவத்துக்கான பட்டம்பெற்று வெளியேறினார். முதலில், பெல்லெவு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்தார். பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மருத்துவத்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 

1867ல் இவர் பணக்காரரான மேரி அன்னா பாமர் என்பவரை மணம் செய்துகொண்டார். டிரேப்பர் வானொளிப்படங்களைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக விளங்கினார். 

1872ல், உறிஞ்சர் கோடுகளைக் காட்டிய விண்மீன் நிறமாலை ஒளிப்படம் ஒன்றை எடுத்தார். இத்துறையில், யோசெப் புரோன்டோபர், லூயிசு மொரிசு ருதர்போர்ட், ஆஞ்செலோ செக்கி என்போர் இவருக்கு முன்னோடிகளாக இருந்தனர். 

ஆய்வில் ஈடுபடுவதற்காக 1873ல், நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் தனது பதவியைத் துறந்தார்.

1882ல் அமெரிக்கச் சட்டமன்றப் பதக்கம் ஒன்றையும் பெற்றார். தேசிய அறிவியல்களுக்கான அக்கடமி, அசுட்ரோமினிசே கெசேசாஃப்ட்டு (Astronomische Gesellschaft) ஆகியவற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இரட்டை நுரையீரல் உறையழற்சி நோயினால் நவம்பர் 20, 1882 ல்  காலமானார்.

 ரூ.10,000 இலவசம் இதை மட்டும் செய்தால் போதும்..!

Amazon quiz

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக திகழ்பவை அமேசான்.

அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் அமேசான் டெய்லி ஆப் குவிஸ் (Daily App Quiz) போட்டி நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச பரிசுகள் வழங்கி வருகிறது.

அமேசான் தளத்தில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 அமேசான் பே பேலன்ஸ் பரிசாக வழங்கப்படுகிறது.

தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும்.இதில் ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது. குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார்.



                   விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்



  • வலண்டீனா விளாடிமீரொவுனா தெரெசுக்கோவா மார்ச் 6, 1937 அன்று பிறந்தவர்.
  • அவர் ஓய்வு பெற்ற ரஷ்ய விண்வெளி வீரர், பொறியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
  • விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார்.
  • இவர் வத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.
  • 1961ஆம் ஆண்டு சோவியத்தொன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.
  • சோவியத்தொன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’, வேறு பல விருதுகள் எனக் குவிந்தன. இந்த வெற்றிகளைனைத்தையும் பொதுவுடைமைக் கட்சிக்கு அருப்பணித்தார் வலண்டீனா.


 ஆக்சோலோட்ஸ் மீன்

ஆக்சோலோட்ஸ் மீன்


  • ஆக்சோலோட்கள் அதன் உடலில் உள்ள கைகால்களை இழந்தால் மிண்டும்  வளர்க்க முடியும்.
  • ஆக்சோலோட்ல் ஒரே கால்களை 5 முறை வரை மீண்டும் வளர்க்க முடியும்.
  • ஆக்சோலோட்களுக்கு புற்றுநோயை எதிர்க்கும் திறன் பாலூட்டிகளை விட 1,000 மடங்கு அதிகம்.
  • ஆக்சோலோட்ல் மெக்சிகோவில் மட்டுமே காணப்படுகிறது.தெற்கு மெக்ஸிகோ நகரத்தில் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பழங்கால வலையமைப்பான சோச்சிமில்கோ அதற்கான இயற்கை வாழ்விடமாகும். 
  • ஆக்சோலோட்ல் ஆண் மற்றும் பெண் மீன்களால் கடலில் நடக்க முடியும்,

இந்திய ஆராய்ச்சியாளருக்கு அடித்த ஜாக்பாட்

இந்திய ஆராய்ச்சியாளருக்கு அடித்த ஜாக்பாட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக தனித்துவமான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம் கொண்டுவரும் சாதனங்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்தபடி அனைத்து அம்சங்களும் இருக்கும்.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு ஐம்பதாயிரம் அமெரிக்க டாலரை சன்மானமாக வழங்கியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 36,36,875 ரூபாய்க்கு அந்த தொகை நிகராகும்.

Bug Bounty Program எனும் திட்டத்தின் கீழ் இந்த சன்மானத் தொகையை வழங்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். அதாவது வாடிக்கையாளர்களின் மைக்ரோசாப்ட் கணக்குகளை எளிதில் ஹைஜெக் (hijack) செய்யப்படலாம் என்ற பாதிப்பை சந்தேகத்தின் அடிப்படையில் கண்டறிந்ததற்காக இந்த சன்மானம் லட்சுமண் முத்தையா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எந்தவொரு மைக்ரோசாப்ட் கணக்கையும் அனுமதியின்றி அதன் விவரங்களை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கலாம் என்ற பிழையை முத்தையா கண்டறிந்தார் என்று கூறப்படுகிறது. எனவே இது பயனர்களின் தகவல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதை மைக்ரோசாப் நிறுவனத்திற்கு தெரிவித்ததன் மூலம் முத்தையா இந்த சன்மானத்தை பெற்றுள்ளார்.


  தினம் ஒரு பொன்மொழி! (வாழ்க்கை)

தினம் ஒரு பொன்மொழி! (வாழ்க்கை)


சகித்துக்கொண்டு வாழ்வதல்ல

வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...

இழப்புக்கள் வலியை தரும் உன் வாழ்க்கையை மாற்றாது

இழந்ததை மறந்து விடு

உன் எல்லை மனதுக்கு தெரியும் கவலை எதற்கு

புத்தகங்களை திறந்து வைப்பவன் மேதை ஆகிவிட முடியாது

நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி  திறமையை வளர்த்து கொள்.

இன்றைய பொழுது உன்னுடையது

வெற்றியை தேடி ஓடாதே அது உன் கண்ணை மறைத்து விடும்

எவ்வித முயற்சியின்றி வெற்றி கிடைப்பதில்லை.

முயற்சிகள் முதலில் தோல்வியை தரும் நம்பிக்கையை இழக்காதே

சந்தர்ப்பம் தேடிவரும்பொதெல்லாம்  பயன்படுத்தி கொள்ளுகள்.

கனவில் தான் கனவுகள் தேடி வரும்.

நினைவில்  பிரச்சனைகள்  தான் தேடி வரும்.

அதனால் இன்றைய பயனத்தை தீ பொறியாய் மாற்ற பார்.

நாளைய அது தீயாய்  மாரிவிடும்.
















 ஈரான் தேசிய மரம் நடுதினம்

ஈரான் தேசிய மரம் நடுதினம்


ஈரான் தேசிய மரம் நடுதினம் மார்ச் 5 ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது.

பெரிய நகரங்களில் காற்றை மேம்படுத்துவதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதனால் ஆண்டுதோறும் ஈரானின் உயர் அதிகாரிகள் ஈரானின் சுற்றுச்சூழலுக்கு மரங்களின் முக்கியத்துவம் குறித்து மக்கள் கவனத்தை ஈர்க்க தேசிய மரம் நடும் நாள் கொண்டாடப்படுகிறது.

 நிலவுக்கு செல்ல டிக்கெட்  இலவசம்

நிலவுக்கு செல்ல டிக்கெட்  இலவசம்

ஜப்பானிய தொழிலதிபர் ஒருவர் இலவச டிக்கெட் மூலம் நிலவுக்கு செல்லும் வாய்ப்பை அறிவித்துள்ளார்.

நிலவிற்கு செல்லும் 'டியர் மூன்" என்ற திட்டத்தில் வேலை செய்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேக் எக்ஸ்நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சூப்பர் திட்டத்தை தொடங்கியது.

நிலவிற்கு செல்லும் 'டியர் மூன்" என்ற திட்டத்தில் வேலை செய்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேக் எக்ஸ்நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சூப்பர் திட்டத்தை தொடங்கியது. அதாவது மக்களை நிலவுக்கு அழைத்து செல்ல ஸ்டார்ஷிப் என்ற விண்கலத்தை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. 

பின்பு இந்தஸ்டார்ஷிப் விண்கலத்தில் பயணம் செய்ய உலகம் முழுவதிலுமிருந்து 8 பேரை தேர்ந்தெடுக்க இருப்பதாக ஜப்பானிய தொழிலதிபர் மொய்சவா அறிவித்துள்ளார். 

அதுவும் அடுத்த 6 மாதங்களுக்குள்ளா?- பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி! குறிப்பாக இதுபற்றி எலான் மஸ்க் அவர்கள் கூறியது என்னவென்றால், நிலவில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது போல பொது மக்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.

 அதனால் என்னுடன் 8 பேரை அழைத்து செல்ல விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் விண்வெளிக்கு பயணிக்க விருப்பம் உள்ளவர்களும், விண்வெளிக்கு செல்பவர்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் இருப்பவர்களுக்கு இந்த இலவச டிக்கெட்டுகளை தரவுள்ளேன் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.

 தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

  • இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


 இலவச சமையல் எரிவாயு இணைப்பு

இலவச சமையல் எரிவாயு இணைப்பு


Free Cooking Gas: இலவச சமையல் எரிவாயு இணைப்பை பெற ஒரு அறிய வாய்ப்பு..!

அடுத்த இரண்டு ஆண்டுகளில், இன்னும் ஒரு கோடி ஏழை மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை (Free LPG Connections) அரசாங்கம் வழங்கும் என்று பெட்ரோலிய செயலாளர் தருண் கபூர் (Tarun Kapoor) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தற்போதைய காலங்களில், நகரத்திலும் கிராமத்திலும் சமைக்க எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இலவச எல்பிஜி எரிவாயு (LPG Gas Connections) இணைப்புகளை வழங்க மத்திய அரசின் (Central Government) திட்டம் உள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ், BPL குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு பெண்ணும் எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். இதற்காக, KYC படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள எல்பிஜி மையத்தில் சமர்ப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது, ​​நீங்கள் 14.2 கிலோ அல்லது ஐந்து கிலோ ஒரு சிலிண்டர் (LPG Cylinder) வேண்டுமா என்று சொல்ல வேண்டும். உஜ்வாலா திட்டத்தின் படிவத்தை நீங்கள் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த BPL கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு, வங்கி அறிக்கை போன்ற ஆவணங்கள் அவசியம்.

           பிறந்த குழந்தைக்கு  ஆதார் அடையாள அட்டை

பிறந்த குழந்தைக்கு  ஆதார் அடையாள அட்டை

குழந்தை பிறந்த முதல் நாளே ஆதார் எடுக்கும் வசதியை UIDAI அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை ட்விட்டர் பதிவில் ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைக்கு ஆதார் எடுக்கும் வழிமுறையை மருத்துவமனைகளே மேற்கொள்கின்றன. ஆதார் எடுப்பதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் தேவை. குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை, மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும்.

பிறந்த ஒரு நாள் முதல் 5 வயது வரை குழந்தைக்கு கைரேகைப் பதிவு எடுக்க முடியாது. 5 வயது தாண்டிய பின்னர் குழந்தையின் கைரேகையை அப்டேட் செய்துகொள்ளலாம். குழந்தைக்கு ஆதார் எடுப்பதற்கு முதலில் ஆதார் இணையப் பக்கத்தில் சென்று அப்பாயிண்ட்மெண்ட் பெற வேண்டும். அதற்கு https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற ஆதார் இணையப் பக்கத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... குடும்ப பென்சன் இனி ஈசியா கிடைக்கும்!

அந்த விண்ணப்பத்தில் குழந்தையின் பெயர், தந்தை அல்லது தாயின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர் ஆதார் எடுப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடும். தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நாளில் ஆதார் மையத்துக்குச் சென்று ஆதார் எடுக்கலாம்.

தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் அவசியம். குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது முதல் இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை ஆதார் இல்லாமல் எதுவும் இல்லை.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.