ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன்.

''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.
1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:

முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.

ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.
இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டும்தான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது. முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம்''

உங்களது கணனி பற்றிய முழுமையான தகவல்களை System Information Viewer என்ற மென்பொருளின் துணையுடன் அறிந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் உங்கள் கணனி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது.
System Information Viewer: கணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு
Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது.
இந்த மென்பொருளை தரவிறக்கி Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணனி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும்.
பல Tab-களில் ஒவ்வொரு பகுதி பற்றியும் விரிவாக காணலாம்.
System Information Viewer: கணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு

இன்று  22 (௨௨) March :உலக தண்ணீர் தினம் (World Water Day)


உலக தண்ணீர் தினம் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச்(March) 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. 

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.


உலக தண்ணீர் தினம் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.  கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது


உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. 

மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான். உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. உலகை வாழ வைக்கும் அமிர்தமான தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்.தண்ணீர் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது ஏற்கனவே உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாப்பதுதான்.

குப்பைகள், கழிவுகள், ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் அதன் தன்மையை இழந்து மாசடையாமல் பாதுகாக்க வேண்டும்.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, 

நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, 

குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். 

தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம்!!. 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம்!!

நீர்நிலைகளை பாதுகாப்போம்!!

தண்ணீர் வீணாவதை தடுப்போம்’!!

என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

மழை காலங்களில் அணைகள் நிரம்பி பல ஆயிரம் TMC தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இவ்வாறு வீணாகும் தண்ணிரை வரட்சியான பகுதிகளில் கொண்டு சேர்க்கலாம்!!

(எ.க )மழை காலங்களில் பவானிசாகர் அணையுள் இருந்து பல ஆயிரம் TMC தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.
அதில், குறிப்பாக 17 முறை குறைந்தபட்சம் 22 TMC முதல் அதிகபட்சம் 109.23 TMC வரை தண்ணீர் வெளியேறியுள்ளது. இவ்வாறு பவானிசாகர் அணை நிரம்பி வெளியேறும் உபரி நீரை அவிநாசி அத்திக்கடவு திட்டதிக்கு பையன்படுதி தண்ணீரை சேமிக்கலாம்.!!

நிகழ்வுகள் இந்நாளில் மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 1622 - வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 

347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.

1829 - கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.

1873 - புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.

1895 - முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.

1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

1945 - அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது.

1960 - ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.

1965 - இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.

1993 - இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது.

1995 - சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.

1997 - ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.

2004 - ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2006 - பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.

இந்நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 1868 - ரொபேர்ட் மில்லிக்கன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1953)

1931 - பேர்ட்டன் ரிக்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

இந்நாளில் மறைந்த பிரபலங்கள் 

1627 - பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.

1952 - டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதமர் (பி. 1884)

2005 - ஜெமினி கணேசன், தமிழ்த் திரையுலக நடிகர் (பி. 1920)


Word Document தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது.

இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை Alt Key அழுத்தியவாறே தந்தால், அவை உருவாக்கப்பட்டு Textடுடன் அமைக்கப்பட்டு விடும்.

† கத்தி போன்ற இந்த அடையாளம் பெற Alt + 0134.
‡ இதனையே இரட்டையாகப் பெற Alt + 0135.
™ Trade Markஅடையாளம் ஏற்படுத்த Alt +0153.
£ Pounds அடையாளம் பெற Alt + 0163.
¥ Japan Currency Yen அடையாளம் பெற Alt +0165.
© Cpoyright அடையாளம் கிடைக்க Alt + 0169.
® Register Trade Mark அடையாளம் உண்டாக்க Alt +0174.
° Degree என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற Alt +0176.
± Plus or Minus என்பதனைக் காட்ட Alt +0177.
· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த Alt+0183.
¼ கால் என்பதைக் குறிக்க Alt + 0188.
½ அரை என்பதைக் குறிக்க Alt + 0189.
¾ முக்கால் என்பதனைக் குறிக்க Alt + 0190.

2
தமிழ் மொழி பற்றி உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்!!

* இந்தியாவில் தோன்றிய மிகத் தொன்மையான மொழி தமிழ்

* தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.

* தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்.

* தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் தேவநேயப் பாவாணர்.

* தமிழ் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, பிஜிட்தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது.

* இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ்.

* முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ்

* மொழிகள் குறித்தும் மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

* தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.

* தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். அவை 3 அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்களும்,

தமிழரின் வாழ்வியலக்கணமான திருக்குறள் 3 பால்கள், 133 அதிகாரங்கள்,1330 குறள்களையும்,

சிலப்பதிகாரம் 3 காண்டம், 30 காதைகள் 5001 வரிகளையும், மணிமேகலை 30 காதைகள், 4755 வரிகளையும்,

சீவகசிந்தாமணி 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்.

பெரிய புராணம் 2 காண்டங்கள், 13 சருக்கங்கையும், 4286 பாடல்களையும்,

கம்பராமாயணம் 6 காண்டங்கள், 118 படலங்கள், 10589 பாடல்களையும்,

நல்லாப்பிள்ளை பாரதம் 18 பருவங்கள், 11000 பாடல்களையும்.

 கந்தபுராணம் 6 காண்டம், 135 படலங்கள், 10345 பாடல்களையும்,

திருவிளையாடற்புராணம் 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்களையும்.

சீறாப்புராணம் 3 காண்டங்கள், 92 படலங்கள், 5027 பாடல்களையும்,

இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள், 47 படலங்கள்,3776 பாடல்களையும்,

இராவண காவியம் 5 காண்டம், 57 படலங்கள், 3106 விருத்தங்களையும்,

ஏசு காவியம் 5 பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகளையும் கொண்டுள்ளது.

* தமிழில் உள்ள நூல்கள்  எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.

* தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ்.

* சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப் பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.

* தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள்,இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை என்பதே தமிழின் தனிசிறப்பு.

தமிழ் மொழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும் தெரியாததும் !!
* வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பனவாகும்.

* நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

* "தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.

* "தமிழ்" என்பதற்கு இனிமை என்றும் ஒரு பொருளுண்டு. இதனை இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

* "பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:
"போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?'' என்னே தமிழின் சுவை!

"அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும்,

தமிழ் என்ற எழுத்துகள் உருவான விதம்..........

அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?
""தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே.

என்னே தமிழின் இனிமை! - இவ்வாறு தமிழின் சிறப்புகளை அடிக்கிக் கொண்டே பேகலாம்.


மைசூர் அரண்மனையும் அதன் வரலாறும்..
மைசூர் அரண்மனையும்

கர்நாடகாவின் சுற்றுலா நகரமான மைசூருக்கு அழகுசேர்க்கும் மைசூர் அரண்மனை.அரசர் வசிக்கும் இடமான கோட்டைகள் அரண்மனைகளாக அவரது கலா ரசனையை, மக்களின் கலையுள்ளத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது .

மைசூர் அரண்மனை வரலாறு.


மைசூர் அரண்மனையில் உள்ள மன்னர் அமரும் தங்க இருக்கை.
மைசூர் அரண்மனையில் உள்ள மன்னர் அமரும் தங்க இருக்கை.
மைசூர் மாகாணத்தை ஆட்சி நடத்திய உடையார்கள்க காலத்தால் அழிக்க முடியாத பல கட்டிடங்களை வருங்காலத்தினருக்கு கலைப்பொக்கிஷமாக கொடுத்து சென்றுள்ளனர். மாநகரில் மைய பகுதியில் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இருந்தது. கலைநுட்பத்துடன் கட்டியிருந்த அரண்மனை 1897ம் ஆண்டு எதிர்பாராத வகையில் தீப்பிடித்து எரிந்து நாசமாகியது.

அப்போது மன்னராக இருந்த மும்மடி கிருஷ்ணராஜ உடையார் புதிய அரண்மனை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக மரத்தால் செய்து தீயில் கருகிய அரண்மனை பகுதியில் கலைநுட்பத்துடன் அரண்மனை எழுப்ப தீர்மானித்தார். அதற்கான பொறுப்பை சென்னை மாகாணத்தில் கட்டிடக்கலை நிபுணராக இருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி இர்விடம் ஒப்படைத்தார். அவர் இந்திய,ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் அழகிய அரண்மனை அமைக்கும் பணி சுமார் 15 ஆண்டுகளாக நடைபெற்றது. 1912ல் ‘அம்பா விலாஸ் அரண்மனை‘ திறப்பு விழா கண்டது.

நூறாண்டுகண்ட மைசூர் அரண்மனை 245 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 150 அடி உயரத்தில் சாம்பல் நிற சலவைக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிட உள்பகுதி முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன. அரண்மனையை ஒட்டி 44.2 மீட்டர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொன்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது. இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையில் கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம்

அரண்மனையில் இரண்டாவது தளத்தில் மன்னர் குடும்பத்தினர் திருமணம் வைபபவம் நடக்கும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாட்களில் மக்களின் குறை கேட்க தர்பார் மண்டபம் அமைக்கபட்டுள்ளது. இங்கிருந்து சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி தேவியை மன்னர் தரிசனம் செய்யும் வகையில் நேர்கோட்டில் தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை வளாகத்தில் அமைத்துள்ள தூண்கள், கம்பங்கள் அனைத்தும் சிற்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் பலவிதமான படைப்புகள் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் மர வேலை செய்யும் தொழிலாளர்கள் வடிவமைத்துள்ள கதவு, ஜன்னல், அலங்கார கண்ணாடி அலமாரிகளில் கலைநுணுக்கங்கள் தற்போதும் பார்வையாளர்களை கவர்கின்றன.  அரண்மனை வளாகத்தில் ஆங்காங்கே கண்ணாடி சுவர்கள் பொருத்தியுள்ளனர். ஓவியங்களில் உலக பிரசித்தி பெற்றதாக கருதப்படும் தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள் அழகுசேர்க்கின்றன.  ரவிவர்மன், எல்லோரா ஆகியோர் வரைந்த ஓவியங்கள் இன்று வரைந்ததை போல் கண்ணுக்கு விருந்து படைக்கிறது. அரண்மனை வளாகத்தில் உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிசுகளின் வரலாறு அனைத்தும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

97ஆயிரம் ஒளி விளக்குகள்


தண்ணீரில் பிரதிபலிக்கும் மைசூர் அரண்மனையின் அழகிய தோற்றம்
தண்ணீரில் பிரதிபலிக்கும் மைசூர் அரண்மனையின் அழகிய தோற்றம்
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் அரண்மனை அரசுடமையாக்கப்பட்டது. இதை தொடர்ந்து மன்னர் கட்டிய அரண்மனை¬க்கு மெருகூட்டும் வகையில் அரண்மனை கட்டிடத்தை சுற்றி 97 ஆயிரம் விளக்குகள் பதிக்கப்பட்டது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு ஒரு மணி நேரம் விளக்கு போடப்படுகிறது. விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் அரண்மனை கட்டிடம் மின்னுகிறது. இதை காண ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்.

விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் மின்னும் மைசூர் அரண்மனை
விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் மின்னும் மைசூர் அரண்மனை

விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் மின்னும் மைசூர் அரண்மனை
விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் மின்னும் மைசூர் அரண்மனை

அச்சமயத்தில் போலீசாரின் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. தசரா விழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் மின் விளக்கு போடப்படுகிறது.

மைசூர் அரண்மனையில் நடைபெறும் தசரா விழா.
மைசூர் அரண்மனையில் நடைபெறும் தசரா விழா.

அரண்மனையின் பின்னணியில், பேண்ட் வாத்தியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி
அரண்மனையின் பின்னணியில், பேண்ட் வாத்தியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி
மைசூர் அரண்மனைக்குச் செல்ல

மைசூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனைக்கு சுற்றுலா செல்வது மிகவும் எளிது.

பேருந்து மார்கமாக சென்றால், மைசூர் நகரத்தின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 5 அல்லது 10 நிமிடம் நடந்தாலே மைசூர் அரண்மனையை அடைந்து விடலாம். ஆனால் வெளியூர்களில் இருந்து பேருந்து மூலமாகச் செல்லும் பயணிகள், வெளியூர் பேருந்துகளுக்கான பேருந்து நிலையத்தில் இருந்து மற்றொரு உள்ளூர் பேருந்து பிடித்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அரண்மனையை அடையலாம்.

மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து, அரண்மனை சற்று தொலைவில் உள்ளது. எனினும், ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் அரண்மனைக்குச் செல்கின்றன. பேருந்து அல்லது ஆட்டோ மூலமாக ரயில் நிலையத்தில் இருந்து அரண்மனைக்குச் செல்லலாம்.

என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள் கேட்டால்.!!

நான் காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும் அதே கணினியில் வேலை செய்வதை கௌரவமாக நீ நினைப்பது ஏன்?

ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க மறுக்கும் நீ எனக்கு கார் பிடித்து கற்றுக்கொடுக்க துடிப்பது ஏன்?

உழுது வாழ கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு உழைக்காமல் வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ?

ஆசா, பாசம், நேசம், அண்ணன்,தம்பி,அக்கா, தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த நீ என்னை மட்டும் ஒற்றை பிள்ளையாய் பெற்றது ஏன்?

தாத்தா பாட்டின் கை பிடித்து நடக்க கற்றுக்கொண்ட நீ என்னை மட்டும் பெரியோர்களுடன் சேரவிடாமல் தவிர்ப்பது ஏன் ?

மணல் வீடு கட்டி விளையாடிய நீ என்னை மட்டும் பெரியவனாகியதும் மாட மாளிகைதான் கட்ட வேண்டும் என்று கட்டளை இடுவது ஏன்?

கம்மஞ்சசோறும், கேப்பையும் கூழும் குடித்து வளர்ந்த நீ எனக்கு மட்டும் "பெப்சியும், கோக்கையும் கொடுத்து என் ரத்தத்தில் விஷத்தை கலந்தது ஏன்?

மன்டியிட்டு மண்ணில் விளையாடிய நீ மார்பிலில்தான் எங்களை விளையாடவேண்டும் என்று சொல்லி முப்பதே வயதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப துடிப்பது ஏன் ?

அரச, ஆல, வேப்ப, புங்கமரக்காற்றை ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ,
ஏசி காற்றை மட்டுமே நான் சுவாசிக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?

நான் பண்ணையம் பார்ப்பதை ஏளனமாகவும்,பன்னாட்டு கம்பெனியில் அடிமையாக வேலை பார்ப்பதை நீ பெருமையாகவும் நினைப்பது ஏன்?

நீர் நிலம் காற்று அத்தனையும் நீ மாசுபடுத்தி விட்டு இவை அனைத்தயும் காசு கொடுத்து வாங்க துடிப்பது ஏன்?

எங்களுக்கு ஓர் கனவு இருக்கும் ஆனால் அந்த கனவை காவு வாங்கிவிட்டு நீ காசை மட்டுமே சம்பாதித்து குவித்து வைப்பது ஏன் ?

இனியாவது நாம் சிந்திப்போமா?

நம் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்கும் ஒரு நல்ல நண்பனாக இருக்க கற்றுக்கொள்வோம்.அதுவே நாம் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பெரிய சொத்து ஆகும்...

நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை, அதில் நம் பிள்ளைகளுக்கு இயற்கையும் நல்ல பண்புகளையும்  விட்டு போவோம்..!

நமது கணினியில் எந்தெந்த செட்டிங்க்ஸ் எங்கு இருக்கிறது என்று தேடுவது சற்று சிரமமான காரியம் தான்.எடுத்துகாட்டாக ப்ரௌசெர் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும்,பாஸ்வோர்ட் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும் ஆடியோ தொடர்பான செட்டிங் ஒரு இடத்திலும் இருக்கும்.இப்படி இல்லாமல் நமது கணினியில் இருக்கும் அனைத்து செட்டிங்க்சும்  ஒரு Complete packageஜாக ஒரே இடத்தில் ஒரு போல்டேருக்குள்(Folder) இருந்தால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் தானே??

தகவல்தளம் இன் வாசகர்களுக்காக சின்னதாக ஒரு "Utility program" எழுதி அதனை சாத்தியப்படுத்தியுள்ளோம் .  அதுவும் மிக எளிதாக இதனை உங்கள் கணினியில் நிறுவ முடியும்.உங்கள் டெஸ்க்டாப்பில் போல்டெர்(Folder) ஒன்று தயாரித்து கொள்ளுங்கள்.

                                        Desktop --Right click ----New----Folder


பிறகு அந்த போல்டெரை ரைட் கிளிக் செய்து Rename செய்து கீழே தரப்பட்டுள்ள பெயரை அதற்கு தந்து விடுங்கள்.


                1தகவல்.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}           கீழே உள்ள உள்ள படம் போல உங்களது டெஸ்க்டாப்பில் வந்து விடும் 


Computer இன் அனைத்து Settings உம் ஒரே இடத்தில்...!!


 உள்ளே உங்களுக்கு தேவையான அனைத்து செட்டிங் சும் ஒரே இடத்தில நீங்கள் பார்க்கலாம்.

Computer இன் அனைத்து Settings உம் ஒரே இடத்தில்...!!

Windows 7, Windows 8 32bit and 64bitயில்  இது வேலை செய்கிறது .windows vista 64bit யில் நான் பரிசோதித்து பார்க்கவில்லை.


இதற்கு மைக்ரோசாப்ட் Windows Master Control Panel shortcut என்று பெயர் தந்துள்ளனர். இதற்குGodmode என்று இதனை பயன்படுத்திய பயனாளர்கள் பெயர் வைத்துள்ளனர்.பயன்படுத்தி பாருங்கள்...

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன....?


எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும், திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கன்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும்.
*
அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
*
காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவது தான்.
*
உடனடியாக ஹெட் லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.
*
கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்து விடுங்கள்.
*
பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன், முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள்.
*
பதட்டத்தில் கார் வேகமாக செல்லும் போது ஹேண்ட் பிரேக்கை பிடித்து விட வேண்டாம்.
*
அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்து விட வாய்ப்புண்டு.
*
மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 Facebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...???


இன்று என்ன தான் படித்தாலும் வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயமாக உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையாலும், கல்வி வளர்ச்சியாலும் சிறந்த வேலையை பெற மிகப்பெரிய போராட்டமே நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான என்ஜினியர்களும், மருத்துவர்களும் உருவாகிக்கொண்டு உள்ளனர். குறிப்பாக கம்யூட்டர் என்ஜீனியர்கள் அதிக அளவில் உருவாகி கொண்டு உள்ளனர். பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக் தளத்தை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். அந்த தளத்தில் நூற்றுகணக்கான வேலை காலி இடங்கள் உள்ளது. தகுதி வாய்ந்த திறமை ,அனுபவம் மிக்க பணியாளர்களை தேடி கொண்டுள்ளது பேஸ்புக் தளம் அந்த தளத்தில் எப்படி பதிவு செய்வது என பார்ப்போம்.


பேஸ்புக் தளம் இதற்க்காக ஒரு தனி பக்கத்தை உருவாக்கி உள்ளது.
முதலில் இந்த https://www.facebook.com/careers இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 Facebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...???
 Facebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...???

இதில் பேஸ்புக் நிறுவனத்தில் தேவைப்படும் பல்வேறு நாடுகளுக்கும் தேவையான அனைத்து காலி பணியிடங்கள் காட்டும். இவற்றை நாடுகளின் படி அறிய மேலே நான் குறிப்பிட்டு காட்டியுள்ள by location என்பதில் டிக் செய்தால் நாடுகளின் வரிசைப்படி பணியிடங்களை பார்த்து கொள்ளலாம்.
உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.


நீங்கள் ஒரு பிரிவை கிளிக் செய்தவுடன் இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்ற லிங்க் இருக்கும் அதில் உங்கள் தகுதிக்கு ஏற்றதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்களுக்கு அந்த வேலைக்கான தகுதிகள் காட்டப்படும் அதை முழுவதும் படித்து நீங்கள் அந்த பணியிடத்திற்கு தகுதியை பெற்று இருந்தால் அதில் உள்ள Apply for this Position என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்

 Facebook நிறுவனத்தில் வேலை வேண்டுமா...???

இதில் உங்களின் விவரங்களை கொடுத்து கீழே உள்ள Choose File என்பதை அழுத்தி உங்களுடைய Resume அப்லோட் செய்து கொள்ளுங்கள். முடிவில் கீழே உள்ள Submit Application என்ற பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவு தான் உங்களுடைய விண்ணப்பம் பேஸ்புக் நிர்வாகத்தினருக்கு சென்று விட்டது. நீங்கள் அனுப்பிய தகவல்கள் தகுதி வாய்ந்ததாக இருந்தால் உங்களை தொடர்பு கொள்வார்கள்.

வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்!!!ஜாதி மொழி இனம் மதம் நிறம் எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் தகுதி ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து தகுதியான நபர்களுக்கு வேலை வழங்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றியுடன் பாராட்டுக்களும்.


https://www.facebook.com/careers 


மொழிகளின் தோற்றம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு எழுத தெரியாது. ஏனென்றால் அப்பொழுது எழுத்துக்களோ, மொழிகளோ உருவாகவில்லை.
தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த செய்கைகளை பயன்படுத்தினார்கள். பின்னர் படங்களை காட்டினர். உந்தாரனமாக ஒரு புலியை பற்றிய தகவலை தெரிவிக்க, புலியின் உருவத்தை காட்டினர்.

          ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலும், மேசப்போடோமியாவிலும் வாழ்ந்து வந்த மக்கள் இப்படிதான் செய்து வந்தனர். அவர்கள் வரைந்த இந்த உருவங்களுக்கு " பட எழுத்துக்கள் " என்று பெயர்.  எகிப்தில் உள்ள பிரமீடுகளிலும் பட எழுத்துக்களை இன்றும் காணலாம். காலப்போக்கில் பட எழுத்துக்களில் இருந்து "குறி எழுத்துக்கள்" பிறந்தன. மரம் என்ற சொல்லைக் குறிப்பதற்கு மரம் போல படத்தை வரையாமல், ஏதேனும் குறி ஒன்றை எழுதும் வழக்கம் வந்தது. பேச்சில் வரும் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஆயிரக்கணகான குறிகள் எழுதப்பட்டன. பழங்காலத்தில் வாழ்ந்த பாபிலோனியர்களும், ஆசாரியரும் எழுதிய குறி எழுத்துக்கள், உளி வெட்டுக்கள்போல காணப்பட்டன.

    சீன மொழிகள் எழுத்துக்கள் குறிஎலுத்துக்கலாகும் அம்மொழியில் 5000 திற்கும் மேற்பட்ட குறி எழுத்துக்கள் உள்ளன. குறி எழுத்துக்களை கற்பதும், எழுதுவதும் எளிதல்ல. மேல்நாட்டில் முதன் முதலாக எழுத்துக்களை எழுத கற்றுக் கொண்டவர்கள் பெணீசியர்கள். இவர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் வாழ்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து கிரேகர்கள்  எழுத்துக்களை கற்றுக்கொண்டார்கள். கிரேகர்கள் அந்த எழுத்துக்களை ரோமானியர்களுக்கு கற்றுத்தந்தனர். 

இந்திய மொழிகள் 
மொழிகளின் தோற்றம்

     இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எழுத்துக்கள் யாவும் இரு மொழி குடும்பங்களில் அடங்கும். ஒன்று ஆரிய மொழி குடும்பம், இதன் ஆதி மொழி சமஸ்கிரதம். மற்றொன்று திராவிட மொழி குடும்பம். இதன் ஆதி மொழி தமிழ்.

      தமிழுக்கும், சமஸ்கிரததிர்க்கும் தனிதனி எழுத்துக்கள் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  "வட்டெலுதுக்கள்" என்ற தமிழ் எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன. இந்த எழுத்துக்கள் வட்ட வடிவத்தில் இருக்கும்.
சமஸ்கிரதம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழில்களில் கூட்டெலுதுக்கள் உண்டு. இவை இரண்டு மூன்று எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கும். ஆனால் தமிழில் கூட்டெலுதுக்கள் கிடையாது. தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன, இந்த எழுத்துக்கள் சொல்லில் எவ்வாறு சேருகின்றன என்பதற்கு, "தொல்காப்பியம்" என்னும் பழம்தமிழ் இலக்கணத்தில் விதிகள் உண்டு.

காகிதம் 


       பழங்கால மக்கள் கருங்கற்கள் மீதும் சுவர்களின் மீதும் எழுத்துக்களை செதுக்கினர். பிறகு பதபடுத்தபட்ட தோலின் மீதும், மரப்பட்டைகளின் மீதும், பானை ஓடுகளின் மீதும், பனை ஓலைகளிலும் எழுதும் வழக்கம் வந்தது. இந்தியாவில் மக்கள் எப்போது எழுத்துக்கள் கட்டரு கொண்டனர் என்று திட்டவட்டமாக கூறமுடியாது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்துசமவெளி மக்கள் களிமண் பலகைகளில் எழுதி வந்தனர். 

    தமிழ் மிக பழமையான மொழிகளில் ஒன்று. அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறந்த இலக்கியங்கள் தோன்றியுள்ளன. எனவே தமிழ் மக்கள் அதற்க்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். பழங்காலத்தில் தமிழ் நூல்கள், பனை ஓலையில் எழுதப்பட்டன. எழுதும் ஓலையை தேர்ந்தெடுத்து, அதை ஒழுங்காக வாரிக் கட்டுவதே ஒரு கலையாக இருந்தது.

மொழிகளின் தோற்றம்

     மன்னர்கள் கட்டிய அணைகள், சுட்ருசுவர்கள் மீதும் செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. அயல் மொழியின் கருத்துக்களும், சொற்களும் தமிழில் கலந்தன. இதனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையில் பல மாறுபாடுகள் ஏற்பட்டன. அச்சு எந்திரங்கள் வந்த பிறகு தமிழ் மொழியின் வடிவங்கள் மாறாமல் இருந்து வருகிறது.

         தமிழ், ஆங்கிலம் உட்பட பெரும்பாலான மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. உருது எழுத்துக்களையும், அரேபிய எழுத்துக்களையும் வலமிருந்து இடமாக எழுதுகிறார்கள். சீனர்கள் மேலிருந்து கீழாக எழுதுகின்றனர்.

ஒரு Sec ல் Computer ஐ Shutdown செய்ய...
பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.

இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் .


நீங்கள் Windows Xp பயன்படுத்துபவராயின் உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும்).


இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள்.


ஒரு சில வினாடியில் கணினி அணைந்து விடும்

அவிநாசிஅத்திக்கடவு‬ 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கோரிக்கை

கோவை, ஈரோடு திருப்பூர் ஆகிய 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கோரிக்கை அவிநாசி- அத்திக்கடவு திட்டமாகும். 30 லட்சம் மக்களின் வாழ்வாதாரமான இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

விவசாயிகள் நிறைந்த , விவசாயத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பகுதி திருப்புர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதி. பெருமளவு விவசாயிகளை கொண்ட இந்த பகுதியில் நீர் ஆதாரம் இல்லாது மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இங்குள்ள பெருமளவு குளங்கள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் போன்றவற்றிற்கு நிலத்தடி நீரே ஆதாரம். 

அவினாசிக்கு மிகவும் அருகாமையில் உள்ள திருப்பூர் மாநகரத்தின் அசுர வளர்ச்சியால் அங்கு ஆலைகளை நிறுவ இயலாத நிறுவனங்கள் அடுத்த இலக்காக அவிநாசியை தேர்வு செய்கின்றன. இதனால் அவிநாசி பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பெருமளவு நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால் 1000 அடிக்கு மேல் தோண்டினாலும் நீர் கிடைக்காத சூழல் உள்ளது. 

இதுபோலவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் விவசாயத்திற்கும் நீர் இல்லாத சூழல் நிலவி வருகிறது. அவிநாசி- அத்திக்கடவு கூட்டு நடவடிக்கை குழுவினர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி தகவல் கோரியுள்ளனர். நில ஆர்ஜிதம், நிதி ஒதுக்கீடு என பல பிரச்னைகளை காரணம் காட்டி அவிநாசி -அத்திக்கடவு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவிநாசி மட்டுமல்லாமல் மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக இருக்கும் அவிநாசி- அத்திகடவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
‪#‎அவிநாசிஅத்திக்கடவு‬ 

‪#‎Avinashiathikadavu‬THANKS NEWS 7 TAMIL


2


google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

தேடியந்திரங்களில் யாரும் தொட முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது கூகுள் இணையதளம் ஆகும். மொபைல்களில் இன்டர்நெட் வசதி வந்த பிறகு கிராமங்களில் கணினியை உபயோகிக்காதவர்கள் கூட மொபைல் மூலம் கூகுளின் வசதியை அறிந்துள்ளனர். இவ்வளவு பேரையும் கவர்ந்திழுக்க காரணம் அதிலுள்ள வசதிகள்.


அதுமட்டுமில்லாமல் தேய்ந்து போன ரெக்கார்டை திரும்ப திரும்ப தேய்க்காமல் வாசகர்கள் பயன்பெறும் வகையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய வசதிகளை புகுத்தி வருவதே கூகுளின் சிறப்பு. அந்த வகையில் தற்பொழுது சில புதிய வசதிகளை கூகுள் தேடியந்திரந்தில் அறிமுக படுத்தி உள்ளனர். அவைகளை கீழே பார்ப்போம்.

1)Scientific Calculator :
கூகுள் தேடியந்திரத்தை வெறும் தேடு பொறியாக மட்டுமின்றி வேறு பல காரணங்களுக்கும் உபயோகிக்கலாம். அதில் முக்கியாமனது கால்குலேட்டர் வசதி. 1+1 என்னன்னு கேட்டால் உடனே சொல்லிடுவோம் 44646*545456 என்னெவென்று கேட்டால் உடனே நாம் தேடுவது கால்குலேட்டரை தான்.  மற்றும் ஏதேனும் மிகவும் கடினமான scientific கணிதங்களை போட Scientific Calculator இருந்தால் தான் போட முடியும்.  இனி இதற்க்காக எங்கும் அலைய வேண்டியதில்லை கூகுளில் Scientific Calculator வசதியை அறிமுக படுத்தி உள்ளனர்.


கூகுளை திறந்து சர்ச் பாரில் சாதரணமாக  1+1 டைப் செய்தால் அதற்க்கான விடை கீழே இருப்பதை போன்று scientific Calculator-ல் வந்திருப்பதை காணலாம்.

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்
இதில் எவ்வளவு கடினமான கணிதங்களுக்கும் எளிதாக விடையை தெரிந்து கொள்ளலாம். மற்றும் இதில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதியும் இருப்பதால் 2+2 என சொன்னாலே அதற்க்கான விடையை அறிந்து கொள்ளலாம். 

இந்த கால்குலேட்டரின் உதவியுடன் போட்ட சில சிக்கலான கணிதங்களை கீழே காணுங்கள்.

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

2) Unit Converter:
கால்குலேட்டர் வசதியோடு மற்றொரு பயனுள்ள வசதியையும் அளித்துள்ளது.   அலகுகளை ஒன்றிலிருந்து மற்றொன்டிற்கு மாற்ற உதவும் வசதியை கொடுத்ள்ளனர்.

அதாவது 1 டிகிரி செல்சியஸ் என்பது எத்தனை பாரன்ஹீட் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 10km என்பது எத்தனை மைல் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது 1452 டன் என்பது எத்தனை கிலோ என தெரிய வேண்டுமா? அனைத்தையும் சுலபமாக கூகுள் தேடியந்திரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

google ல் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

இது போன்று அனைத்து அலகுகளையும் உங்களுக்கு தேவையானத்தில் மாற்றி கொள்ளலாம். 

இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். ஆகவே உங்களுக்கு மாணவர்களிடத்தில் இந்த வசதியை அறிமுக படுத்துங்கள். 


பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.