ட்விட்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

twitter

அமெரிக்காவை சேர்ந்த இந்த டுவிட்டருக்கு மக்கள் செல்வாக்கு பெருமளவு குறைந்து வருகிறதாம். இது குறித்து அந்நிறுவனத்தின் 2013ம் ஆண்டுக்கான கடைசி காலாண்டு நிதி அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்தை போல, டுவிட்டரின் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன. எனவே, டுவிட்டர் வலைதளத்தை தற்போதைய நிலையை விட இன்னும் மேம்படுத்தினால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து மீள முடியும் என வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஆதரவு குறைவதால், டுவிட்டர் வலைதளத்துக்கு சுமார் ரூ.3,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் ரூ.500 கோடியாக இருந்த நஷ்டம், ஓராண்டு காலத்துக்கு ரூ.4100 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாட்டை ஆராயும் போரஸ்டர் நிறுவனத்தின் வல்லுநர் எலியாட் கூறுகையில், ‘டுவிட்டரில் அதிகநேரம் நீடிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், டுவிட்டரின் வர்த்தகம் நஷ்டத்தில் போகிறது. மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை டுவிட் செய்வதன் மூலம்தான் அந்நிறுவனத்துக்கு வருமானமே கிடைக்கிறது. ஆனால், டுவிட்டரை பார்வையிடுபவர்கள் ஒரு சில நிமிடங்களில் வெளியேறுவதால், விளம்பர நிறுவனங்கள் டுவிட்டரை ஒதுக்குகின்றன. 

மேலும், டுவிட்டர் பதிவுகளால் பல விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுகிறது. ஒருவர் தனது சர்ச்சையான பதிவு காரணமாக சமூகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார். இதனால் மற்றவர்கள் டுவிட்டரில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கிறார்கள். இதுவும் டுவிட்டரின் நஷ்டத்துக்கு ஒரு காரணம்’ என கூறியுள்ளார்.

சமூக இணையதளத்தில் தவிர்க்க முடியாத பெயர் ட்விட்டர்.140 எழுத்து அல்லது குறியீடுகளுக்குள் கருத்தைச் சொல்லும் வசதியைக் கொண்டிருக்கும் இந்தச் சமூக இணையதளம், இன்றைய தலைமுறையின் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
twiter
twiter

ஆனால், ட்விட்டரின் ஆரம்பகால நிறுவனர்களில் 14 பேர் அந்நிறுவனத்தில் தற்போது இல்லை. பலரின் கூட்டுமுயற்சியில் உருவான டுவிட்டரின் உருவாக்கத்தில் பல துரோகங்கள் புதைந்திருக்கின்றன என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

ட்விட்டர் தளம் உருவான விதம் பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் நிக் பில்டன் “கருப்பெற்ற டுவிட்டர்: பணம், அதிகாரம், நட்பு, துரோகத்தின் கதை” என்ற பெயரில் புத்தமொன்றை எழுதியுள்ளார்.

ட்விட்டரின் உருவாக்கத்திற்குச் சிலர் உரிமை கொண்டாடிய போதும், ஆரம்பகால நிறுவனர்களுள் ஒருவரான ஜேக் டோர்சே, சான்பிரான்ஸிஸ்கோவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தான்தான் டுவிட்டருக்கான ஆலோசனையைத் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், நிக் பில்டனின் கருத்து வேறு விதமாக உள்ளது. டோர்சே டுவிட்டர் நிறுவனர் குழுக்களில் முக்கிய உறுப்பினர் என்ற போதும், இது கூட்டுமுயற்சிதான் எனத் தெரிவித்துள்ளார்.

டோர்சே பின்னாளில் நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

டோர்சே இதுகுறித்து சிபிஎஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், நானும் நண்பர்களும் அடுத்து என்ன செய்யலாம், யார் யார் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விவாதிப்போம். அப்படித்தான் ட்விட்டர் உருவானது எனத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் உருவாவதற்கு முன் டுவிட்டரின் ஆரம்பகால நிறுவனர்களும் ஊழியர்களும் ஓடேயோ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இணையம் சார்ந்த நிறுவனமான ஓடேயோ தேடு கருவியாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு இவான் வில்லியம்ஸ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர்தான் ட்விட்டரை உருவாக்கினர். ஓடேயோ மூடப்படும் சூழல் உருவானது. ஓடோயோவை 2006 ஆம் ஆண்டு மீட்டெடுத்த வில்லியம்ஸுக்கு டுவிட்டரின் பங்குகளை விற்பனை செய்தது யார் என்பது இதுவரை வெளிச்சத்துக்கு வராத உண்மை.

ட்விட்டர் இவ்வளவு உச்சத்தைத் தொடும் என ஆரம்பகால நிறுவனர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ட்விட்டரின் ஆரம்பகால ஊழியர்களில் தற்போது கிறிஸ்டல் டெய்லர் என்பவர் மட்டுமே தற்போதும் பணியாற்றி வருகிறார்.

ட்விட்டரின் உருவாக்கத்திற்குப் பின் ஏராளமான துரோகங்கள் புதைந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.

நன்றி:தி இந்து


தமிழில் இணையத்தில் எழுத....

http://tamil.yahoo.com/type-in-tamil/ அனைத்து வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களும் வணிக நோக்கத்தினாலாவது தமிழை ஆதரிக்கின்றன. ஆனால் தமிழன் மட்டும் தமிழில் இணையத்தில் எழுத முடியாத / விரும்பாத நிலையில் இருக்கிறான்.
இதை மற்ற வேண்டியது நம் கடமை...

http://transliteration.yahoo.com/tamil/
http://tamil.yahoo.com/

Google

தமிழில் இணையத்தில் எழுத....



Google Input Tools for Windows




அனைவர்க்கும் பகிருங்கள்...இணையத்தில்   நாம் தமிழால் இணைவோம்...


ட்விட்டர்  shortcut keys....    
         




பேஸ்புக் ஷார்ட் கட் கீகள்.....





YOU TUBE shortcut keys....  





௧.ஒரு வீடியோவில் பாகங்கள் தாவுவதக்கு

நீங்கள் உங்கள் விசைப்பலகையில் எண்களை அழுத்தி வீடியோ பகுதியாக தவிர்க்க முடியும்:

1 எண் பொத்தானை அழுத்தி  10%, அல்லது 9 எண் கொண்டு, 90% உள்ள வீடியோக்களை தவிர்க்கவும்.

நீங்கள் வீடியோவில் பாதியிலிருந்து  50%  தொடங்க வேண்டும் என்றால் 5ஐ அழுத்தவும்.



௨.கருவி விருப்பங்கள் தேர்ந்தெடுக்க தாவல்

நீங்கள் சுட்டி கொண்டு செல்லவும் விரும்பவில்லை என்றால் Tab விசை பயனுள்ளதாக இருக்கும்


௩.பொதுவான YOU TUBE shortcuts


ShortcutActions
SpacePlay / Pause
Go back 5 Seconds
Go forward 5 Seconds
Increase Volume
Decrease Volume
FFullscreen
EscExit Fullscreen


சமூக வலைத்தளங்களில் மற்றுமொரு மாபெரும் சக்தியாக திகழும் ட்விட்டர் இணையத்தளம் புதிய சேவையொன்றை தொடங்கியுள்ளது. அதாவது, நீங்கள் ட்விட்டெரின் நீண்டநாள் பயனாளராக இருந்தால் உங்களுடைய பழைய ட்வீட்டுகளையும் எளிதில் எளிதில் தரவிறக்கம் செய்யலாம்.
ஏதாவது முக்கியமான ட்வீட்டுகள் இருந்தால் அவற்றை தரவிறக்கம் செய்ய இந்த டூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டவுன்லோட் செய்த ட்வீட்டுகளை மாதம்வாரியாகப் பிரித்துப்பார்க்க முடியும்.
தரவிறக்கம் செய்யப்படும் தகவல்கள் ஸ்ப்ரெட்சீட் என்ற மாதிரியில் சேமிக்கப்படும்.

இதை எப்படிப்பெருவது?

படி 1: பயனாளர்கள் ட்விட்டர் கணக்கின் உள்நுழையவேண்டும்.
படி 2: பின்னர் செட்டிங்க்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அமைப்பு முறைக்குச் செல்லவேண்டும்.
படி 3: அந்த பக்கத்தின் கீழே, ட்விட்டர் அர்சிவ்க்கான தேர்வு ஒன்று இருக்கும் அதன் மூலம் வேண்டுகோள் விடுக்கவேண்டும்.
படி 4: உங்களுக்கு ட்விட்டர் தளத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெறும். இதில் தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதைப்பின்பற்றினால் பல ட்வீட்டுகள் எல்லாம் அப்படியே தரவிறக்கம் செய்யப்படும். அனால் இந்த அமைப்பு வசதிகள் தற்சமயத்தில் ஆங்கிலம் முதல் மொழியாகக்கொண்ட கணக்குகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.


Office ல் Facebook,Twitter blocked ??? இனி இல்லை கவலை

பெரும்பாலும் அலுவகத்தில் பணியாற்றும் நம்ம நண்பர்கள் அலுத்துக்குற ஒரு விஷயம் facbook, twitter போன்றவை block செய்யப்பட்டு இருப்பதுதான். வேற அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களிடம்  உங்க அலுவலத்தில் இதெல்லாம் block செய்து இருக்காங்களா என்று கேட்பார்கள். இல்லை  என்றால் எவ்ளோ கோவம் இல்லையா பாஸ். இனி வேண்டாம் கவலை, கோவம்.
      

ஒரே வார்த்தை ஓகோனு வாழ்க்கை எல்லாம் சொல்லுவாங்க. இங்க நான் சொல்லப்போறது ஒரே ஒரு எழுத்து ஓகோன்னு social networks. ஆமாம் ஒரே ஒரு எழுத்துதான் இதை உங்களுக்கு செய்யப் போகுது. இது சிலருக்கு முன்னரே தெரிஞ்சு இருக்கலாம். 

அது                  "s"

நீங்கள் Facebook , Twitter போன்றவை செல்லும் போது  URL பகுதியில் http://www.facebook.com என்று கொடுத்தால், அந்த தளம் block செய்யப்பட்டு இருந்தால்  இப்படி தோன்றும். 


இப்போது அதில் URL பகுதியில் http://www.facebook.com க்கு பதிலாக https://www.facebook.com  என்று கொடுங்கள். இப்போது ஓபன் ஆகும். அதாவது ஒரு S மட்டும் சேர்க்கவும்.  
இப்போது ஓபன் ஆகும்


இப்போ google plus வேற வந்து இருக்கு. இது நிறைய பேருக்கு பயன்படும்னு நினைக்கிறேன். அப்புறம் நம்ம நண்பர்கள் யாரேனும் system admin ஆக வேலை செய்தால் இதையும் block செய்து விடாதீர்கள்.

இதையும் முன்னரே block செய்து இருந்தால் ????????    Very sorry.......... 

பிரபலமான சமூக இணையத்தளங்களில் வரிசையில் காணப்படும் டுவிட்டருக்கு உலகெங்கிலும் 140 மில்லியனிற்கும் அதிகமான பயனர்கள் காணப்படுகின்றனர்.


தற்போது இத்தளமானது பாதுகாப்பு தேவைகள் கருதி தனது தளத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கடவுச்சொற்களை மாற்றியமைக்குமாறு பிரத்தியேக மின்னஞ்சல் அனுப்பும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.
எனினும் இதற்கான உண்மையான காரணத்தை வெளியிடாத டுவிட்டர் தளமானது தனது மின்னஞ்சல் செய்தில் ”ஏனையவர்களின் பாவனையிலிருந்து தங்களின் கணக்கினை பாதுகாப்பதற்காகவே கடவுச்சொல்லை மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது” என தெரிவித்துள்ளது.
இதேவேளை டுவிட்டர் மீதான ஸ்பார்மர்களின் செயற்பாடுகளை அவதானித்த பின்னரே அத்தளமானது கடவுச்சொற்களை மாற்றக் கோருகின்றது என்ற ஊகம் TechCrunch என்ற இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.


வர்த்தகத்தினை சிறப்பான முறையில் மேம்படுத்த சமூக வலைத்தளமான ட்விட்டர் எந்த வழிகளில் எல்லாம் உதவுகின்றது என்பதை பார்க்கலாம்.
How to improve your Business on Twitter: Best Practices
தொழில் சம்மந்தமான விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. உதாரணத்திற்கு பிராண்டு, ப்ராடெக்டு போன்றவற்றை ட்விட்டர் பக்கத்தில் சரிவர விளம்பரப்படுத்துவது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.
இதை விளம்பரப்படுத்துதல் என்பதோடு, ட்விட்டர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்று கூறலாம். தகவல்களை பெற வலைத்தளங்களில் தேட வேண்டியிருந்தது. ஆனால் எந்த நிறுவனமாக இருப்பினும் இப்போதெல்லாம் அதற்கு நிச்சயம் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள் இருக்கவே இருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தினை பார்த்தால், சமீபமாக வெளியான முழு அப்டேஷனை பற்றிய தகவல்களையும் எளிதாக பெற முடியும்.
இதனால் நமது வர்த்தகத்தை பற்றிய தகவல்களை, ட்விட்டர் நண்பர்களுடன் பரிமாறி கொள்ளலாம். இதனால் புதிய ப்ராடெக்டு மற்றும் தொழில் நுட்ப வசதிகள் பற்றிய தகவல்களை ட்விட்டரில் வெளியிடுவது, வர்த்தகத்தினை மேம்படுத்த ஒரு சிறப்பான வழியாக இருக்கும்.
இப்படி பகிர்ந்து கொண்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிப்பதும் மிக முக்கியம். அதாவது ரீட்வீட் செய்ய வேண்டும். இந்த ரீட்வீட் மூலம் நமது கருத்துக்களை தெரிவிப்பது, நண்பர்களுக்கு ஓர் உற்சாகத்தையும் அளிப்பதாக இருக்கும். இதெல்லாம் ட்விட்டரில் வர்த்தகத்தினை மேம்படுத்த ஓர் சிறந்த வழியாக இருக்கும்.


உலகளவில் இருக்கும் நாட்டு நடப்பு விஷயங்களை தெரிந்து கொள்ளவதற்கு ட்விட்டர் போன்ற சமூக வலைதத்ளங்கள் மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இதில் நிறைய விஷயங்கள் பெற வேண்டும் என்றால் அதற்கு அதிகமான ‘ஃபாலோவர்கள்’ இருக்க வேண்டும். இதனால் நிறைய ஃபாலோவர்களை பெற வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
How to Get More Followers on Twitter
இமெயில் மற்றும் ப்ளாக் போன்றவற்றின் முகவரிகள் இருந்தால், அதை ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வது நல்லது. இதனால் நமது ப்ளாகிற்கும் நிறைய நண்பர்கள் வருகை தருவார்கள். இது போன்ற பகிர்தல்களாலும் அதிக ஃபாலோவர்களை பெறலாம்.
நமது மாநிலத்தில் மட்டும் அல்லாமல், மற்ற மாநிலம் மற்றும் நாடுகளில் இருக்கும் ட்விட்டர் நண்பர்களை அலசி ஆராய வேண்டும். அவர்களின் ‘பையோ’ தகவல்களை பார்த்து நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
நமது துறைக்கு ஏற்ற வகையில் நிறைய நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளும் இருக்கும். இப்படி நமது தேவை அறிந்து ட்விட்டர் நண்பர்களை தேர்வு செய்வது சிறந்தது.
உதாரணத்திற்கு அரசியல் பற்றி விஷயங்களில் ஆதி முதல் அந்தம் வரை தகவல்களை அப்டேட் செய்து கொள்ள விரும்பினால், அதற்கு தகந்த வகையில் ட்விட்டர் நண்பர்களை தேர்வு செய்து ‘ஃபாலோ’ கொடுப்பது மிக அவசியமான ஒன்றாகும்.
நமது ட்விட்டர் பக்கத்திலும் சில முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் ப்ரொஃபைல் பக்கத்தை நிரப்புவதில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. இந்த ப்ரொஃபைலில் ‘பையோ’ என்ற இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் இரண்டு வரியில் அழகான ஒரு வாசகத்தை சொல்ல வேண்டும். ஆனால் அந்த வாசகம் நமது சிறந்த குணாதிசியத்தை காட்டுவதாகவும், அதே சமயம் நமது துறையை குறிப்பதாகவும் இருக்க வேண்டும். இப்படி பையோவை சிறப்பாக கொடுப்பதினால், ட்விட்டர் நண்பர்களை எளிதாக கவர்ந்துவிட முடியும்.
பிறகு வலைத்தளங்களில் கிடைக்கும் முக்கிய தகவல்களை தினமும் பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதனால் ட்விட்டர் நண்பர்களின் பார்வையில் நீங்கள் ஒரு தனி இடத்தை பிடிக்க முடியும். அதோடு ட்விட்டரில் பிரபலங்களை ஃபாலோ செய்வதும் ஒரு வகையில் அதிக ட்விட்டர் நண்பர்களை பெற உதவும்.


சமூக வலைத்தளமான ட்விட்டர் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது. பிரபலங்களும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் அடுத்து அடுத்து இணைந்து வருகின்றனர்.

பெரிய பிரபலங்களுடன் பேசுவது என்பது அசாத்தியமான விஷயமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த ட்விட்டர் வலைத்தளத்தில் எல்லாமே இப்போது சாத்தியமாகிவிட்டது என்றும் கூறலாம். எத்தகைய பிரபலங்களுடனும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தின் கருத்துக்கள் மூலம் தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும்.
சினிமா, விளையாட்டு, அரசியல் என்று ஒட்டு மொத்த பிரபலங்களுடனும் இந்த ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் எளிதாக கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும். அந்த வகையில் ட்விட்டரில் இணைந்திருக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியல் இங்கேஇன்டியன் செலப்ஸ்ஆன் ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் பாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது. அமிதாப் பச்சன், ப்ரியங்கா சோப்பரா, ஷாருக்கான், அமீர்கான், சச்சின் டென்டுல்கர் என்று ஆரம்பித்து, ட்விட்டரில் இருக்கும் பிரபலங்களின் விவரங்கள் நீண்டு கொண்டே போகிறது. ட்விட்டரில் இணைந்திருக்கும் பிரபலங்களின் பட்டியல் விவரங்களும் இங்கே சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது


ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் அனைவரின் மனதிலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. இதற்கிடையில் இப்போது ட்வீட்பாட் அப்ளிக்கேஷன் மேக் ஸ்டோரில் வலம் வருகிறது.

ட்விட்டரில் அதிகம் தகவல்களை பரிமாறி கொண்டிருக்கும் ட்விட்டர் உறுப்பினர்களுக்கு இந்த ட்வீட்பாட் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். இதில் பல புதிய வசதிகளை பெறலாம்.
இந்த ட்வீட்பாட் ஐபோன், ஐபேட் மற்றும் மேக் ஆகியவற்றில் சுலபமாக பயன்படுத்த முடியும். இதில் சிறப்பாக ரெட்டினா கிராஃபிக்ஸ் சப்போர்ட் வசதியினையும் பயன்படுத்தி கொள்ள முடியும். எளிதாக நோட்டிஃபிக்கேஷன் வசதிகளையும் பெற்று மகிழலாம்.
இதனால் எந்த ஒரு ட்வீட்டையும் தவறவிடமால், உடனுக்குடன் படித்து தெரிந்து கொள்ளலாம். முதலில் இந்த ட்வீட்பாட் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பெறுவதற்கான அப்ளிக்கேஷன்கள் வழங்கப்பட்டது. இப்போது மேக் ஸ்டோரிலும் எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
அதிலும் இந்த ட்வீட்பாட் அப்ளிக்கேஷன் அதிகார பூர்வமாக மேக் ஸ்டோரில் வழங்கப்படுகிறது. இந்த ட்வீட்பாட் அப்ளிக்கேஷனை $19.99 விலை மதிப்பில் எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்.


ட்விட்டரில் இருந்து ஃபேஸ்புக்கில் நுழைய சில வசதிகள் உள்ளன. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மக்கள் மத்தியல் சமூக வலைத்தளங்களுக்கு, நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி கொண்டே தான் போகிறது.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைத்தளங்கள் இளைஞர்கள் பார்வையில் வெகுவாக இடம் பெற்றுள்ளது. இதனால் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
இன்னும் சில பேர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டிலுமே அதிக ஈடுபாட்டுடன் கருத்துகளை பரிமாறி கொள்கின்றனர். இதனால் ட்விட்டரில் இருந்தபடியே ஃபேஸ்புக் பக்கத்திற்குள் செல்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
ட்விட்டர் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ப்ரொஃப்பைலுக்குள் செல்ல வேண்டும்.



இதில் போஸ்ட் யுவர் ட்வீட்ஸ் டூ ஃபேஸ்புக் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


இதன் மூலம் எளிதாக ட்விட்டரில் இருந்தபடியே, ஃபேஸ்புக்கில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது பக்கத்தினை தமிழில் வடிவமைத்து வழங்க இருக்கிறது.
ட்விட்டர் பக்கத்தில் ஹோம், கனக்டு, ஃபாலோவர் என்ற அனைத்து வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் பார்த்து வருகிறோம். இனி தமிழ் மொழியிலேயே ட்விட்டர் பக்கத்தினை பார்க்கலாம். ஐரிஷ், தமிழ், கன்னடா, பெங்காலி என்று தொடங்கி இப்படி மொத்தம் 16 மொழிகளில் மொழிபெயர்ப்பு மையத்தினை (ட்ரேன்ஸிலேஷன் சென்டரை) வழங்க உள்ளது ட்விட்டர்.
உதாரணதிற்கு கூகுள் பக்கத்தில் தமிழ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் தமிழ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் அந்த பக்கம் முழுவதும் தமிழ் மொழியில் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கலாம். இப்படி ட்விட்டரும் தனது பக்கத்தினை 16 மொழிகளில் வடிவமைக்க இருக்கிறது.
இதில் புதுமையான விஷயமும் ஒன்றும் இருக்கிறது. இப்படி தமிழ் மொழியில் ட்விட்டர் பக்கத்தினை வடிவமைக்கும் வாய்ப்பினை ட்விட்டர் உறுப்பினர்களுக்கே வழங்குகிறது சமூக வலைத்தளமான ட்விட்டர். அதாவது ட்ரான்ஸிலேட்.ட்விட்டர்.காம் என்ற வலைத்தளத்தில் நுழைந்தால் உங்களுக்கான வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கும்.
இனி ட்விட்டரிலும் தமிழ் கொடி!


அந்த வார்த்தைக்கு சரியான மொழிபெயர்ப்பை டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதே வார்த்தைக்கு ஆயிரக்கணக்கான ட்விட்டர்வாசிகள் தாங்கள் மொழிபெயர்த்த வார்த்தையை ட்பை செய்து சமர்ப்பித்திருப்பார்கள். இப்படி வந்து சேர்ந்த ஒட்டு மொத்த வார்த்தைகளிலும், வாக்கிளிக்கும் (வோட்)முறையின் மூலம் சிறந்த வார்த்தைகள் தேர்வு செய்யப்படும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் ட்விட்டர் முகவரியில் நுழைந்து (லாகின் செய்து) எல்லோரும் எளிதாக வார்த்தைகளை சமர்ப்பிக்கலாம்.
வலைத்தளங்களில் இது போல் மொழியை மையப்படுத்தி ஒரு வசதி வழங்கப்படுகிறதென்றால், அதில் தமிழ் மொழி சிறந்த இடத்தை பிடிக்கிறது. 16 மொழிகளில் ட்விட்டர் பக்கத்தில் வடிவமைக்கப்படுவதாக கூறப்படும் பட்டியலில் கூட தமிழ் இரண்டாவது இடத்தில் காட்டப்படுகிறதென்றால் இது பெருமையான விஷயம் தான்

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.