இன்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 சாய்னா நேவால்

சாய்னா நேவால்

 ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

 இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

 மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.சாய்னா நேவால்.

 ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

 இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

 மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.

 தேசிய தடுப்பூசி தினம்

தேசிய தடுப்பூசி தினம்

  • போலியோவை நாட்டிலிருந்தே விரட்டவேண்டும் என்பதற்காக மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கைகால்களை நிரந்தரமாக செயலிழக்கச் செய்கின்றன. போலியோ நுண்கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.
  • அதற்காக 1995ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டுமுறை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும் வழங்கப்பட்டதன் மூலம் 2014ஆம் ஆண்டு போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது.


 பை தினம்

பை தினம்
 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி பை தினமாக கொண்டாடப்படுகிறது. 

இது பை என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும்.

அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் ℼயைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் ℼ தினத்தைக் கொண்டாடியது முதல் இவ்வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

 குஸ்டவ் கிர்க்காஃப்

குஸ்டவ் கிர்க்காஃப்


  • மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை வெளியிட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 1824ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் பிறந்தார்.
  • கல்லூரியில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ்பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21வது வயதில் வெளியிட்டார்.
  • ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து 1854ஆம் ஆண்டு சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தார். மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
  • இவர் 1859ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். மேலும் 1862ஆம் ஆண்டு 'கரும்பொருள் கதிர்வீச்சு' பற்றிய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார்.
  • ராபர்ட் புன்செனுடன் இணைந்து சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக 'ரூம்ஃபோர்டு' பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றார்.
  • தன் வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 63வது வயதில் (1887) மறைந்தார்.

வி. சாந்தா

வி. சாந்தா

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா.

இவர் தனது குருவாக டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை போற்றுகிறார். 12 படுக்கைகளுடன் மட்டுமே இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.

இவர் புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, ஒளவையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

 உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். 

19 ஜனவரி 2021 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

யூரி ககாரின் மாஸ்கோ



யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934-ல் பிறந்தார்.

இவர் விண்வெளிக்கு பயணித்த முதல் விண்வெளி வீரர்.

விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார்.

1955-ல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School)-ல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார்.

பின்பு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957-ல் திருமணம் புரிந்தார். 

1960-ல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில்  20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி.

விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில், நெடுஆரம் 203 மைல், குறுஆரம் 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.

இவர்  27-03-1968 ல்  மரணம் அடைந்தார்.


 என்றி டிரேப்பர் 

என்றி டிரேப்பர்


என்றி டிரேப்பர் (Henry Draper) (மார்ச் 7, 1837 – நவம்பர் 20, 1882), ஒரு அமெரிக்க மருத்துவரும், தொழில்சாரா வானியலாளரும் ஆவார். 

என்றி டிரேப்பரின் தந்தை, யோன் வில்லியம் டிரேப்பர் ஒரு பெயர்பெற்ற மருத்துவரும் வேதியியலாளரும் தாவரவியலாளரும் நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார்.

1839ல் முதன் முதலாக நிலவைத் தொலைநோக்கி ஒன்றினூடாக ஒளிப்படம் எடுத்தவரும் இவரே.

என்றி டிரேப்பர், 1857ல், தனது 20 ஆவது வயதில் மருத்துவத்துக்கான நியூயார்க் பல்கலைக்கழகப் பள்ளியில் மருத்துவத்துக்கான பட்டம்பெற்று வெளியேறினார். முதலில், பெல்லெவு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்தார். பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மருத்துவத்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 

1867ல் இவர் பணக்காரரான மேரி அன்னா பாமர் என்பவரை மணம் செய்துகொண்டார். டிரேப்பர் வானொளிப்படங்களைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக விளங்கினார். 

1872ல், உறிஞ்சர் கோடுகளைக் காட்டிய விண்மீன் நிறமாலை ஒளிப்படம் ஒன்றை எடுத்தார். இத்துறையில், யோசெப் புரோன்டோபர், லூயிசு மொரிசு ருதர்போர்ட், ஆஞ்செலோ செக்கி என்போர் இவருக்கு முன்னோடிகளாக இருந்தனர். 

ஆய்வில் ஈடுபடுவதற்காக 1873ல், நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் தனது பதவியைத் துறந்தார்.

1882ல் அமெரிக்கச் சட்டமன்றப் பதக்கம் ஒன்றையும் பெற்றார். தேசிய அறிவியல்களுக்கான அக்கடமி, அசுட்ரோமினிசே கெசேசாஃப்ட்டு (Astronomische Gesellschaft) ஆகியவற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இரட்டை நுரையீரல் உறையழற்சி நோயினால் நவம்பர் 20, 1882 ல்  காலமானார்.

 ஜியோ போஸ்ட்பெய்ட் பில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி? 

ஜியோ போஸ்ட்பெய்ட் பில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ தனது சந்தாதாரர்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதன் மூலம் தொலைத் தொடர்பு சந்தையைப் பெரியளவில் மாற்றியுள்ளது. 

ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பில்கள் புதிய விதிமுறையாகிவிட்டதால், ஜியோ அதன் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு பல்வேறு ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி தங்கள் கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்கிறது. ஜியோ போஸ்ட்பெய்ட் ஆன்லைன் கட்டணம் ஜியோ போஸ்ட்பெய்ட் ஆன்லைன் கட்டண முறைகள் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், இந்த பதிவை முழுமையாகப் படித்து ஜியோ போஸ்ட்பெய்ட் தொடர்பான ஆன்லைன் கட்டண முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். 

வலைத்தளத்தின் மூலம் ஜியோ போஸ்ட்பெய்ட் கட்டணத்தைச் செலுத்துதல் என்பது மிகவும் எளிதான மற்றும் தொந்தரவில்லாத அனுபவமாகும். ஜியோவின் குயிக் பே அம்சம் ஜியோ போஸ்ட்பெய்ட் மொபைல் பில்களை செலுத்த நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பிலிருந்து ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம்.

 அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் போஸ்ட்பெய்ட் பில்களை செலுத்த, Quick pay விருப்பத்தை கிளிக் செய்து, கட்டணத்தைச் செலுத்தி முடிக்கலாம். 

யுபிஐ பயன்பாடுகள் மூலம் கட்டணம் செலுத்தலாம் ஜியோ பயனர்கள் அந்தத் தொகை அந்தந்த போஸ்ட்பெய்ட் கணக்கில் வரவு வைக்கப்படுவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் அதை ரீசார்ஜ் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது. 

யுபிஐ பயன்பாடுகள் மூலம் உங்கள் ஜியோ போஸ்ட்பெய்ட் எண்ணை உள்ளிடவும். பில் தொகையை உள்ளிடவும் பிறகு கட்டணப் பிரிவுக்கு மாறி, உங்கள் போஸ்ட்பெய்ட் மொபைல் எண்ணை உள்ளிட்டு, சேவை வழங்குநராக ஜியோவைத் தேர்ந்தெடுக்கவும். 

டெல்கோ உருவாக்கிய பில் தொகையை உள்ளிடவும். பில் செலுத்த proceed பொத்தானைக் கிளிக் செய்க. இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் விருப்பமான கட்டண முறையைப் பயன்படுத்தி உங்கள் கட்டணத்தை முடிக்கவும்.

 உங்கள் ஜியோ போஸ்ட்பெய்ட் எண் கட்டணத்தைச் செலுத்த Google Pay, PhonePe, Paytm மற்றும் பிற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம். ரீசார்ஜ் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்? ஜியோ போஸ்ட்பெய்ட் பில் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்?

 உங்கள் ஜியோ போஸ்ட்பெய்ட் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த, உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள யுபிஐ கணக்கு உங்களிடம் இருக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் பில் செலுத்துவதற்குச் செயலில் இணைய இணைப்பு கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

 BSNL யின் ரூ. 299,விலையில் புதிய சலுகை அறிமுகம்

BSNL யின் ரூ. 299,விலையில் புதிய சலுகை அறிமுகம்



பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 299, ரூ. 399 மற்றும் ரூ. 555 விலைகளில் புதிய டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது. மூன்று புதிய சலுகைகளும் 10MBPS வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன.

டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகைகள் பிஎஸ்என்எல் பாரத் பைபர் சலுகைகளை விட குறைந்த வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றில் முறையே 100 ஜிபி, 200 ஜிபி மற்றும் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இந்த அளவை கடந்ததும், டேட்டா வேகம் மேலும் குறையும்.

பிஎஸ்என்எல் ரூ. 299 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 10MBPS வேகத்தில் வழங்கப்படுகிறது. 100 ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2MBPS ஆக குறைக்கப்படுகிறது. இந்த சலுகை ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 

ரூ. 299 மற்றும் ரூ. 399 சலுகைகளுக்கு ரூ. 500 பாதுகாப்பு முன்பணம் செலுத்த வேண்டும். ரூ. 299 மற்றும் ரூ. 555 டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகைகளை புதிய மற்றும் தற்போதைய வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.

ரூ. 399 சலுகையில் 200 ஜிபி டேட்டா 10MBPS வேகத்தில் வழங்கப்படுகிறது. இதிலும் முந்தைய சலுகையை போன்று நிர்ணயிக்கப்பட்ட 200 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2MBPS ஆக குறைக்கப்படும். ரூ. 555 டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகையில் 500 ஜிபி டேட்டா 10MBPS வேகத்தில் வழங்கப்படுகிறது. இதிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் வேகம் 2MBPS ஆக குறைக்கப்படுகிறது.



 ஏ.என்.சிவராமன்

பத்திரிக்கை உலக ஜாம்பவான் யார்


  •  பத்திரிக்கை உலக ஜாம்பவான் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான ஏ.என்.சிவராமன் 1904ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சினில் பிறந்தார்.
  • தினமணி நாளிதழில் 43 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அரும்பெரும் சாதனையாளர்.
  •  இவர் கல்லூரியில் படித்தப்போது ஒத்துழையாமை இயக்கத்துக்காக காந்திஜி அழைத்தார். எனவே படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  •  காந்திஜியின் 'ஹரிஜன்' இதழின் தமிழ் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.
  •  கணக்கன், ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி, குமாஸ்தா, அரைகுறை வேதியன், அரைகுறை பாமரன் ஆகிய புனைப்பெயர்களில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதினார்.
  •  பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் பெறும் வாய்ப்பு தேடிவந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை ஏற்றார்.
  •  தமிழ் பத்திரிக்கை உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவரும், 'ஏஎன்எஸ்' என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான ஏ.என்.சிவராமன் தனது பிறந்தநாளன்றே 97வது வயதில் (2001) மறைந்தார்.


அலெசான்றோ வோல்ட்டா

அலெசான்றோ வோல்ட்டா

  • மின்துறை என்ற ஒரு துறை உண்டாவதற்கு வழிகாட்டியாக இருந்த அலெசான்றோ வோல்ட்டா 1745ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
  • 1775ஆம் ஆண்டு மின் ஏற்பை உருவாக்கும் எலெக்ட்ரோஃபோரஸ் (electrophorus) என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். 1776ஆம் ஆண்டு மீத்தேனை கண்டுபிடித்தார். 1800ஆம் ஆண்டுகளில் முதல் மின்கலத்தை உருவாக்கினார்.
  • வோல்ட் என்னும் மின்னழுத்த அலகானது இவருடைய பங்களிப்பை பெருமை செய்யவும், நினைவுக்கூறவுமே வைக்கப்பட்டது. இதனாலேயே மின்னழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி (Voltmeter) என்று அழைக்கின்றோம்.
  •  முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவரான அலெசான்றோ வோல்ட்டா 82வது வயதில் (1827) மறைந்தார்.

 ரெனே லென்னக்

ரெனே லென்னக்

  •  இதய துடிப்பை கண்டறிய புதிய வழிமுறையை கண்டுபிடித்த ரெனே லென்னக் 1781ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
  •  பல தடைகளுக்கு பிறகு மருத்துவம் பயின்று கல்லீரல் நோய்கள், ரத்தத்தில் காணப்படும் நுண்ணுயிரிகளை குறித்து கட்டுரைகள் வெளியிட்டார். 1804ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார்.
  •  இவர் 1808ஆம் காலக்கட்டத்தில் நோயியல், உடற்கூறியல் குறித்து பல கட்டுரைகள் எழுதினார். மேலும் காசநோய், புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
  •  இவர் கண்டுபிடித்த நோய்களின் பெயர்கள், சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
  •  அந்த நாட்களில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர். இவர் மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்து 'ஸ்டெதஸ்கோப்' கருவியை கண்டுபிடித்தார்.
  •  சமூகத்திற்காக பல நன்மைகளை செய்த லென்னக் தனது 45வது வயதில் (1826) மறைந்தார்.

 தாதாசாஹேப் பால்கே

தாதாசாஹேப் பால்கே

  •  இந்தியத் திரையுலகின் தந்தை, தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவரின் இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.
  •  பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர், இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் இவரே மேற்கொண்டார்.
  •  1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டார். இதன்மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.
  •  தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.
  •  வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 73வது வயதில் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் தாதாசாஹேப் பால்கே விருதினை இந்திய அரசு, 1969ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.

மேலும்

1.நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - தாமஸ் ஆல்வா எடிசன்

2.உலக குடை தினம்

3.மூலக்கூறு உயிரியலின் தந்தை - ஜாக்குவஸ் லூசியன் மோனாட்

4.மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை

5.திமீத்ரி மெண்டெலீவ்

6.தானாக நகரும் கற்கள்

7.2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் ஆற்றல் - ஜி.ஹெச்.ஹார்டி

8.சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர்..!

9.ரப்பர் டயரை கண்டுபிடித்தவர் யார் ..?

10.சார்லஸ் ஹென்றி டர்னர்

11.தாதாசாஹேப் பால்கே


 கலீலியோ கலிலி



  •  அறிவியலில் புரட்சியை ஏற்படுத்திய கலீலியோ கலிலி 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
  •  இவர் தூர உள்ள பொருட்களை கிட்டவாக பார்க்கும் பொருளை கண்டறிய ஒரு சாதனத்தை உருவாக்க வேண்டுமென ஆராய்ச்சி மேற்கொண்டார். விடாமுயற்சிக்கு பிறகு 3 மடங்கு உருப்பெருக்கவல்ல ஒரு சாதனத்தை கண்டுபிடித்தார். அதை தொடர்ந்து 10 மடங்கு உருப்பெருக்கும் தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தார்.
  •  இவர் தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வௌ;வேறு முகங்கள் மற்றும் வியாழனை நான்கு பெரிய நிலாக்கள் (இவரது புகழைச் சொல்லும் வகையில் கலீலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) சுற்றி வருவதாகவும் கண்டறிந்தார்.
  •  மேலும் கலீலியோ மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைக்காட்டி உட்பட பல்வேறு கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.
  •  கலீலியோவின் சூரியமையக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக 1632ஆம் ஆண்டு கலீலியோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்.
  •  பிறகு தனது இருவகை முதன்மை உலக கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள் என்ற புத்தகத்தில் இவருடைய சூரியமைய கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார்.
  •  கலீலியோ வீட்டுச்சிறையில் இருந்தபோது தான், தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றும், இறுதிப் படைப்புமான இரண்டு புதிய அறிவியல்கள் என்ற நூலை எழுதினார். அதில் இயங்கியல், பொருட்களின் வலிமை போன்ற துறைகளைப் பற்றிய ஆய்வுகளை தொகுத்து அளித்தார்.
  •  'நோக்கு வானியலின் தந்தை', 'நவீன இயற்பியலின் தந்தை', 'நவீன அறிவியலின் தந்தை' என்று பலவாறாக பெருமையுடன் அழைக்கப்படும் இவர் தனது 77வது வயதில் (1642) மறைந்தார்.


1.நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - தாமஸ் ஆல்வா எடிசன்

2.உலக குடை தினம்

3.மூலக்கூறு உயிரியலின் தந்தை - ஜாக்குவஸ் லூசியன் மோனாட்

4.மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை

5.திமீத்ரி மெண்டெலீவ்

6.தானாக நகரும் கற்கள்

7.2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் ஆற்றல் - ஜி.ஹெச்.ஹார்டி

8.சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர்..!

9.ரப்பர் டயரை கண்டுபிடித்தவர் யார் ..?

10.சார்லஸ் ஹென்றி டர்னர்

 சார்லஸ் ராபர்ட் டார்வின்

சார்லஸ் ராபர்ட் டார்வின்

 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உலகுக்கு தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.

 அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.

 இவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு இவருடைய கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்து வந்தது.

 தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். இந்த ஆராய்ச்சி 1831ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது.

 அதில் பலவகையான ஊர்வன, பறப்பன, நடப்பன என அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் மற்றும் தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் ஏராளமாகச் சேகரித்தார்.

 தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உருவானது. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி On the Origin of Species என்ற புத்தகத்தை எழுதினார்.

 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய டார்வின் 1882ஆம் ஆண்டு தனது 73வது வயதில் மறைந்தார்.

உலக குடை தினம்

உலக குடை தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  •  குடை, நம்மை சூரியனின் கதிர்வீச்சு மற்றும் மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக பயன்படுகிறது.
  •  இந்த நாளில் உலகின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பான குடையை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது.
  •  இத்தினத்தில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய, கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்

 ஜி.ஹெச்.ஹார்டி


உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநரும், கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்தவருமான ஜி.ஹெச்.ஹார்டி (G.H.Hardy) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7)

* இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் (1877) பிறந்தார். தந்தை பள்ளியில் கலை ஆசிரியர் மற்றும் நிதி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். தாயும் ஆசிரியர். 2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார்.

* இவரது கணிதத் திறனுக்காக வின்செஸ் டர் கல்லூரியில் படிக்க உதவித் தொகை கிடைத்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார். பின்னர், அக்கல்லூரியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றினார். ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.

* இந்திய கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜனிடம் இருந்து 1913-ல் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதைக் கண்டதுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவரை அரிய பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்து வந்தார். அவருக்கு ஆசான், வழிகாட்டியாகவும் விளங்கினார்.

* அவரை கேம்பிரிட்ஜ் வரவழைத்தார். இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு கணித உலகின் மகத்தான கட்டுரைகளாகப் புகழப்படும் 5 கட்டுரைகளை எழுதினர். அதில் ‘ஹார்டி - ராமானுஜன் அசிம்டாடிக்’ சூத்திரம் மிகவும் பிரசித்தம்.

* ‘கணிதத் துறையில் எனது மிகப் பெரிய பங்களிப்பு ராமானுஜனைக் கண்டெடுத்ததுதான்’ என பெருமிதத்துடன் கூறுவார். தன்னடக்கம் மிக்கவர். உலகக் கணிதமேதைகளை வரிசைப்படுத்தச் சொன்ன போது, ராமானுஜனுக்கு 100 மதிப்பெண் வழங்கியவர், தனக்கு 25 மதிப்பெண் மட்டுமே போட்டுக்கொண்டார். இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து ‘தி இந்தியன் கிளார்க்’ என்ற நாவல் 2007-ல் வெளிவந்தது.

* எட்மண்ட் லாண்டவ், ஜார்ஜ் போல்யா, இ.எம்.ரைட் உட்பட பல கணித மேதைகளுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். கணிதப் பகுப்பாய்வு, எண்கணிதக் கோட்பாட்டு பகுப்பாய்வு, எண் கோட்பாடு, முழு எண் பகிர்வுகள் உள்ளிட்ட ஏராளமான கணிதக் கோட்பாடுகளை மேம்படுத்தினார்.

*ராணுவம், போர், தாக்குதல் ஆகியவற்றுக்கு கணிதத்தை பயன் படுத்துவதை கடுமையாக எதிர்த்தார். ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே கணிதம் பயன்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கணிதம் தவிர இவர் ஆர்வம் கொண்டிருந்த ஒரே விஷயம் கிரிக்கெட்!

* இவர் எழுதிய ‘எ மேதமேடிசியன்ஸ் அபாலஜி’ என்ற கட்டுரை, சாமானியர்களுக்கும் கணிதத்தை புரியவைக்கிற அரிய படைப்பு. ஒரு கணித மேதையின் ஆழ்மனம் எவ்வாறு செயல்படுகிறது, கணிதத்தால் வரும் ஆனந்தம் ஆகியவை பற்றிய இவரது அரிய சிந்தனைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

* கணிதத் துறையில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகவும், லண்டன் மேதமேடிகல் சொசைட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராயல் மெடல், சில்வெஸ்டர் மெடல், காப்ளே மெடல் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான ஜி.ஹெச்.ஹார்டி 70-வது வயதில் (1947) மறைந்தார்.

மோதிலால் நேரு

மோதிலால் நேரு

  •  நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார்.
  •  ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார்.
  •  இவர் 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினை போதுதான் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
  •  இரண்டு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார். எளிமையால் கவரப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால் நேரு தனது 69வது வயதில் 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி மறைந்தார். 

 ஜான் பாய்ட் டன்லப்

ஜான் பாய்ட் டன்லப்


  • வாகன டயர் கண்டுபிடிப்பாளரான ஜான் பாய்ட் டன்லப் 1840ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவர் ஒரு கால்நடை மருத்துவர் ஆவார்.
  •  குதிரைகள் கரடு முரடான சாலைகளில், கெட்டியான ரப்பரால் தயாரிக்கப்பட்ட கழுத்துப் பட்டையுடன் மிகவும் கனமான சுமைகளை கஷ்டப்பட்டு இழுத்து வருவதைப் பார்த்தார். அவற்றின் கஷ்டத்தை குறைக்க காற்று அடைக்கப்பட்ட குஷன்களை அதற்கு பதிலாக பயன்படுத்த முடியுமா என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.
  •  அதே சமயத்தில் 1887ஆம் ஆண்டு அவருடைய மகன் தன் சைக்கிளை கற்கள் நிறைந்த சாலையில் கஷ்டம் இல்லாமல் ஓட்டுவதற்கு வழி கேட்டான். இவரும் மகனுக்கு உதவ முடியுமா என்று சோதனையில் இறங்கிவிட்டார்.
  •  தோட்டத்தில் இருந்த பழைய குழாயை வெட்டி ட்யூப் தயாரித்து அதில் காற்றை நிரப்பி சைக்கிளின் பின்பக்கச் சக்கரத்தோடு இணைத்தார். சைக்கிள் ஓட்டுவதற்கு எளிதாக இருந்தது.
  •  அதை மேம்படுத்தி 1888ஆம் ஆண்டு பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். ஏற்கனவே 1845ஆம் ஆண்டிலேயே ராபர்ட் தாம்சன் இதைக் கண்டுபிடித்திருந்தார். பிரபலமாகாததால் அது தெரியாமல் போய்விட்டது.
  •  ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த வில்லியம் ஹியூம் என்ற தொழிலதிபர் இவருடன் சேர்ந்து டன்லப் என்ற டயர் நிறுவனத்தை உருவாக்கினார்கள்.
  •  பல தொழிற்சாலைகள் உருவாவதற்கு காரணமாக இருந்து சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் பாய்ட் டன்லப் 1921ஆம் ஆண்டு தனது 81வது வயதில் மறைந்தார்.


 உலக புற்றுநோய் தினம்

உலக புற்றுநோய் தினம்


  • இன்று பிப்ரவரி 4 2020, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.
  • ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிக மோசமாக ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. 2012-ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர்.
  • புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்த செல்கள் பிரிந்து பரவி ஏனைய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுசெல்கள் ரத்தத்தின் வழியாக பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும். எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
  • செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபுகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ள பணியில் ஈடுபடுதல், எச்.ஐ.வி நோய் தொற்று போன்ற காரணங்களாலும், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கும் இந்நோய் வரலாம்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.