சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாக உள்ளது. இதில் கோவை மாநகரில் மட்டும் பாதுகாப்புப் பணியில் சுமார் 1,200 போலீஸார் ஈடுபட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் தலா ஒரு ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் போலீஸார்.

வைரலான ட்ரோன் காட்சிகள்
திருப்பூரில் கேரம் விளையாடியவர்களை, போலீஸாரின் ட்ரோன் கேமரா படம் பிடித்ததும், அவர்கள் ஓட ஓட ட்ரோன் துரத்தும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட மலைப்பகுதியில் கும்பலாகக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களைப் போலீஸாரின் ட்ரோன் கேமரா துரத்தி அடித்தது. குமரி மாவட்டத்தில் கடலில் குளித்தவர்களையும், திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களையும், காட்டுக்குள் பதுங்கிய இளஞ்ஜோடிகளையும்கூட ட்ரோன் கேமராக்கள் விட்டுவைக்கவில்லை.




Read More.. முழு ஊரடங்கில் மக்களைக் கண்காணிக்க ஸ்டேஷனுக்கு ஒரு ட்ரோன் கேமரா: கோவையில் சிறப்பு ஏற்பாடு

நாகர்கோவிலில் புற்றுநோய் மையம் அமைக்க கேரள அரசு முன்வந்துள்ளது. அதற்குத் தேவையான கட்டிடம் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 546 புற்று நோயாளிகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் பதிவு செய்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.




Read More.. கேரள அரசு அமைக்கும் புற்றுநோய் துணை மையத்திற்கு நாகர்கோவிலில் இடம்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கோரிக்கை 

பாஜக சார்பில் கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் திருநங்கைகளுக்கு தலா ரூ.1,000 மதிப்பிலான 'மோடி கிட்' வழங்கப்பட்டது.

பாஜக சார்பில் கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம், முத்துமாரியம்மன் கோயில் வீதி, பொன்னுசாமி வீதி, பழைய நெசவாளர் காலனி, புதிய நெசவாளர் காலனி, முருகன் மில் குடியிருப்பு, ராமலிங்கம் காலனி பகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, ரவை, சேமியா, எண்ணெய் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கியுள்ள 'மோடி கிட்' தொகுப்பு மற்றும் 1,000 முகக்கவசங்கள், 500 குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் ஆகியவற்றை பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான ஜெயலட்சுமி, மாநிலப் பொறியாளர் பிரிவு முன்னாள் துணைத் தலைவர் எம்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.




Read More.. கோவையில் பாஜக சார்பில் 800 குடும்பங்களுக்கு மோடி கிட்

விழுப்புரம் நகரில் முன்னறிவிப்பின்றி காய்கறிக் கடைகள் திடீரென மூடப்பட்டதால், சூப்பர் மார்க்கெட்டில் மக்கள் குவிந்தனர்.

விழுப்புரம் நகரில் கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாகவும் விழுப்புரம் எம்.ஜி. சாலையில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு கடந்த ஒரு மாதமாகச் செயல்பட்டு வருகிறது.




Read More.. விழுப்புரம் நகரில் முன்னறிவிப்பின்றி காய்கறிக் கடைகள் மூடல்: சூப்பர் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்; போலீஸார் திணறல்

தமிழகத்தில் 1,100 காலிப் பணியிடங்களால் மருந்தாளுநர்களுக்கு பணிப்பளு அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3,000 மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளன. தலைமை மருந்தாளுநர்கள், மருந்தாளுநர்கள், மருந்துக் கிடங்கு அலுவலர்கள் என மூன்று பிரிவுகளாக பணிபுரிகின்றனர்.




Read More.. 1,100 காலிப்பணியிடங்கள்: பணிப்பளு அதிகரித்தபோதிலும் நிரப்பாமல் இருப்பதால் மருந்தாளுநர்கள் அதிருப்தி

முழு ஊரடங்கின்போது சென்னையில் எவையெல்லாம் செயல்படும், எவையெல்லாம் செயல்படாது என்பது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஏப்.25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:




Read More.. முழு ஊரடங்கு: சென்னை மாநகராட்சியில் எவையெல்லாம் செயல்படும்? எவையெல்லாம் செயல்படாது? - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

https://ift.tt/3bxTudr

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக கரோனா வைரஸ் பரவல் இல்லை என கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




Read More.. Read More.. கன்னியாகுமரியில் தொடர்ந்து 12 நாட்களாக கரோனா பரவல் இல்லை: சுகாதாரத்துறை தகவல்

https://ift.tt/3ePxjRU

நாடு முழுவதும் கல்லூரிகளை செப்டம்பர் மாதத்தில் திறக்க பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

கரோனா நோய்ப் பரவல் இந்தியாவில் தொடங்கியது முதல் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவதைத் தடுக்க அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.




Read More.. Read More.. செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம்: மத்திய அரசுக்கு யூஜிசி பரிந்துரை


https://ift.tt/2yGpeOX

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சளி, இருமலுடன் சாலையில் கிடந்த முதியவரை அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனை பிணவறை அருகே வீசிச் சென்ற நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் முதியவர் ஒருவர், நேற்று மயங்கிக் கிடந்தார். காலில் புண் ஏற்பட்டு சுயநினைவின்றி கிடந்த அவரை அப்பகுதியினர் தூக்கிக் கொண்டு போய் மதுரை அரசு மருத்துவமனை பிணவறை பகுதியில் போட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.

April 25, 2020 at 09:07PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VA73Dy


https://ift.tt/2KA9wre

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் குடிநீர் பற்றாக்குறையால் இலங்கை அகதிகள் தவித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் இலங்கை அகதிகள் 75 குடும்பத்தினர், கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் அருகிலுள்ள நவீன அரிசி ஆலைகளில் பணிபுரிந்து வரும் சூழலில், தற்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்புக் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், குடியிருப்புகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

April 25, 2020 at 09:00PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KAyeId


https://ift.tt/3cJJNJ2

கரோனா தொற்று சூழலை சமாளிக்க ஆடம்பரத் திட்டங்கள் எதையும் நிறுத்திவைக்க முன்வராத மோடி அரசு இப்போது ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியைப் பறித்து உத்தரவிட்டிருக்கிறது. இது அநீதி ஆகும் என திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

April 25, 2020 at 08:58PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2zpctZq


https://ift.tt/356FcxP

தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி அறிவித்த தமிழக முதல்வருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் நகரத்திலுள்ள வாடகை கார் ஓட்டுநர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த செலவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

April 25, 2020 at 08:51PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aIBvjq


https://ift.tt/2S4zIhO

ஊரடங்குக்குப் பிறகு வங்கிக்கணக்கில் பணம் தரும் முறைதான் நடைமுறையில் இருக்கும் எனவும், ரேஷன் கடை தேவையிருக்காது என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உறுதியாக தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏழை மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு அரிசி, பருப்பு விநியோகிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் 30 மாதங்களுக்கு மேலாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. 800 ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. அதனால் புதுச்சேரியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் ஏழை மக்களுக்கான அரிசி கடந்த 12-ம் தேதி முதல் தரப்படுகிறது.

April 25, 2020 at 08:48PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eK3RNn


https://ift.tt/2Vztx7O

கரோனா நோய் தடுக்கும் பணியில் தமிழகம் முன்மாதிரியாக செயல்படுகிறது என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்புக்கான முகக்கவசம், சானிடைசர்களை அமைச்சர் வழங்கினார்.

April 25, 2020 at 08:43PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eRoKWY


via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VCivic


via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cL1XKr


via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VUcH2k


via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2S4meTk

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.