சாய்னா நேவால்

சாய்னா நேவால்

 ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

 இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

 மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.சாய்னா நேவால்.

 ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

 இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

 மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.

 தொழிற்சாலைகள் சட்டம் தொழிற்சாலைகள் சட்டம் 1948.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் இந்த சட்டம் (தொழிற்சாலைகள் சட்டம் 1948) 

 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு கொண்டுவந்த மிக முக்கியமான சட்டங்களுள் இதுவும் ஒன்று. தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் சூழ்நிலை , அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம், அவர்களுக்கு அளிக்கபபடவேண்டிய விடுமுறைகள் ,மிகைநேரப்பணி , குழந்தைகள்., பெண்கள் மற்றூம் ஆண்களைப் பணியில் அமர்த்துவது, அவர்களின் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் போன்ற விஷயங்கள் பற்றி இந்த சட்டம் விரிவாக எடுத்து உரைக்கிறது.

 Google Incognito mode

Google Incognito mode

மோடை பயன்படுத்தினால், எங்கள் பிரவுசிங் ஹிஸ்டரி யாராலும் கண்காணிக்க முடியாது என்ற தவறான எண்ணத்தில்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்த முறை பயனர்களுக்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்க முடியும்.

உங்கள் பிரவுசிங் எல்லா முகவரியையும் கூகிள் வைத்திருக்கிறது.

மூன்று பயனர்கள் கூகிளை நீதிமன்றத்திற்கு இழுத்தபோது இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது.

Incognito  மோடை பயன்படுத்தும் பயனர்களின் இருப்பிடம் மற்றும் டேட்டா நிறுவனம் கண்காணிப்பதாக கூகிள் மீது குற்றம் சாட்டிய பயனர்கள். கூகிள் பயனர்களின் தனிப்பட்ட டேட்டாவை Incognito முறை மூலம் சேகரித்ததாகவும், அது குறித்து பயனர்களுக்கு கூட அறிவிக்கவில்லை என்றும் கலிபோர்னியா மாவட்ட நீதிபதி லூசி கோ கூறியுள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.

இதனால் கூகிளுக்கு ஐந்து பில்லியன் டாலர்கள் அல்லது சுமார் 36,370 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கூகிள் என்ன சொல்கிறது:

கூகிள் தனது நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது, ​​Incognitoஎன்பது கண்ணுக்கு தெரியாதது என்று அர்த்தமல்ல என்று கூறியது. இந்த மோடை பயன்படுத்தி எந்தவொரு பயனரும் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட்டால், பயனரின் தகவல் வலைத்தளத்தால் கண்காணிக்கப்படும். இது மட்டுமல்லாமல், அந்த வலைத்தளத்திலுள்ள மூன்றாம் தரப்பு சேவைகளும் பயனரின் தகவல்களைப் பெறுகின்றன.


 பேரீச்சம்பழம்

 

பேரீச்சம்பழம்

 • தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். 
 • புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். 
 • கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும்.
 •  தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது.
 •  பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

  அதிபுத்திசாலி மன்னர்

அதிபுத்திசாலி மன்னர்

ஜோக்கி நாட்டை குய் என்ற மன்னர் ஆண்டு வந்தார். எவரையும் மதிக்க மாட்டார். அவருடைய முட்டாள்தனத்துக்கு அளவே கிடையாது. அரசவையில் வேலை செய்பவர்களுக்கு, மன்னர் எந்த நேரத்தில் என்ன சொல்வாரோ என்று பதற்றமாகவே இருக்கும். மக்களின் நிலைமையோ இன்னும் மோசமாக இருந்தது.

அன்று அரசவையில் மன்னர்  மந்திரிகளைப் பார்த்துக் கேட்டார்: “என்னை இந்த நாட்டில் எல்லோரும் மதிக்கின்றனரா?”

உடனே அவையில் கூடியிருந்த அனைவரும் “ஆம் மன்னா!” என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

முக்கிய மந்திரி அப்பிராணியார் முன்னால் வந்து, “மன்னா,உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம்.காலையில் இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உங்கள் படத்தை வணங்கிய பிறகே தங்கள் வேலைகளை ஆரம்பிக்கின்றனர். உங்கள் பெயரைச் சொன்னால், தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள்கூட வணக்கம் சொல்கின்றனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகள்கூடத் தங்கள் பெயரைக் கேட்டால், அவற்றின் மொழியில் வணக்கம் என்று கத்துகின்றன. இவற்றை எல்லாம் கண்காணிக்கவே நாடு முழுக்கப் பல்லாயிரக்கணக்கான படை வீரர்களை நீங்கள் தானே நியமித்துள்ளீர்கள்! இப்போது ஏன் திடீரென்று சந்தேகம், மன்னா?”என்றார்.

உடனே மன்னர், “இல்லை மந்திரியாரே, இல்லை” என்று ஆவேசமாகக் கூறினார்.

என்ன சொல்லப் போகிறாரோ என்று பதறிய அப்பிராணியார், “தாங்கள் சொல்வது புரியவில்லை மன்னா” என்றார்.

“உலகிலேயே தலைசிறந்த மன்னனான என்னை இந்த நாட்டில் வணங்காதவர்களும் இருக்கின்றனர்.”

“தங்களை எதிர்த்துப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். தங்களை வணங்காதவர்கள் நம் நாட்டில் இருக்கவே முடியாது மன்னா” என்றார் அப்பிராணியார். எதிர்த்துப் பேசியதற்கு என்ன தண்டனை தரப் போகிறாரோ என்ற அச்சத்தில் அவருடைய உடல் நடுங்கியது.

“அப்படியா வாருங்கள் என்னோடு” என்று சொன்ன மன்னர், விறுவிறுவென்று அரண்மனைத் தோட்டம் நோக்கிச் சென்றார். வேறு வழியில்லாததால் முக்கிய மந்திரியான அப்பிராணியாரும் மற்ற மந்திரிகளும் அவர் பின்னே சென்றனர்.

மன்னர்  அப்பிராணியாரைப் பார்த்து, “பார்த்தீர்களா மந்திரியாரே, இந்தத் தோட்டத்தில் நான் வந்து நின்று சில நொடிகள் ஆகியும், அந்த மரம் என்னை வணங்கவில்லை, இந்தச் செடி கொடிகள் என்னை வணங்கவில்லை. அதோ மேலே தெரிகிறதே வானம் அது என்னை வணங்கவில்லை, இவ்வளவு ஏன் அதோ தூரத்தில் தெரிகிறதே அந்த மலைகூட என்னை வணங்கவில்லை” என்று கோபப்பட்டார்.

“மன்னா, தாங்கள் எங்களுக்குத்தான் மன்னர். அதனால் நாங்கள் வணங்குகிறோம். இயற்கையைத்தான் மனிதர்கள் வணங்க வேண்டுமே தவிர, இயற்கை மனிதர்களை வணங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தன்னை அறியாமல் பேசிவிட்டார் அப்பிராணியார்.

என்ன நடக்கப் போகிறதோ என்று மற்ற மந்திரிகள் பயந்தனர்.

மன்னர் கோபத்துடன், “யாரிடம் பேசுகிறீர்கள் என்று தங்களுக்கு மறந்துவிட்டதோ?” என்று கேட்டார்.

“மன்னா, அவை எல்லாம் எப்படி வணங்கும்? நீங்களே சொல்லுங்கள்?”

“என் நாட்டில் இருக்கும் அனைத்துக்கும் நான் தான் மன்னன். மனிதர்களோ மரங்களோ என்னை வணங்காவிட்டால் அது ராஜ குற்றம்தான்?”

“மன்னா... ”

”முக்கிய மந்திரி என்பதால் நீங்கள் எதிர்த்துப் பேசியதை நான் குற்றமாகக் கருதவில்லை. என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. உங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம். அதற்குள் என் அருமை பெருமைகளை அவற்றிடம் எடுத்துச் சொல்லி, என்னை வணங்க வைக்க வேண்டியது தங்களுடைய பொறுப்பு. இல்லையேல் உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது” என்று மன்னர் பற்களைக் கடித்தார்.

மன்னர் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியுமா?

அப்பிராணியாருக்கு இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. மனைவியிடம், “மன்னரின் முட்டாள்தனங்களை இனியும் சகிக்க முடியாது. நாம் பக்கத்து நாட்டுக்குச் சென்று பிழைத்துக்கொள்ளலாம்” என்று வருத்தத்துடன் கூறினார்.

காரணத்தை அறிந்துகொண்ட அப்பிராணியாரின் மனைவி, “இது நம் நாடு. நாம் ஏன் இன்னொரு நாட்டுக்குச் செல்ல வேண்டும்? முட்டாள்தனமான மன்னருக்குப் புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு, அப்பிராணியாரின் காதில் தன் திட்டத்தைச் சொன்னார்.

“இது நல்ல யோசனையா என்று தெரியவில்லை. ஆனால், ஏதாவது செய்துதானே ஆக வேண்டும்? இதை மன்னர் ஏற்றுக்கொண்டால் நாம் தப்பிப்போம். இல்லாவிட்டால், என்ன கதி ஆவோம் என்றே தெரியாது” என்று கவலையுடன் கூறினார். அப்பிராணியார்.

“நமக்கு வேறு வழியில்லை. நம் மன்னர் இதுபோன்ற யோசனைகளை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்” என்று தைரியம் கொடுத்தார் அப்பிராணியார் மனைவி.

அடுத்த இரு தினங்களில் அப்பிராணியார் அதைச் செய்து, ஒரு ஒரு பட்டுத் துணியில் சுற்றிக்கொண்டு, அரண்மனைக்குச் சென்றார்.

“என்ன அப்பிராணியாரே, என்னைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியதெல்லாம் மரம் செடி கொடிகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீரா? எந்த அளவில் உள்ளது அந்தப் பணி?” என்றார் மன்னர் 

“மன்னா, நான் நினைத்ததைவிட அவை வெகு விரைவில் உங்களைப் புரிந்துகொண்டுவிட்டன.”

“அப்படியா!”

“ஆமாம் மன்னா, இப்பொழுதே என்னுடன் தோட்டத்துக்கு வாருங்கள், அவை எல்லாம் உங்கள் காலடியில் விழுந்து வணங்கும்.”

இப்படிச் சொன்னவுடன் மன்னருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவையிலிருந்த மற்றவர்களோ பயத்தில் அப்பிராணியாருக்குப் புத்தி பேதலித்துவிட்டது என்றே எண்ணினார்கள்.

தோட்டத்துக்குள் நுழையும் முன் மன்னரை நிறுத்திய அப்பிராணியார், “மன்னா, இதை அணிந்துகொண்டு நுழையுங்கள்” என்று பட்டுத்துணியில் சுற்றி வைத்திருந்த காலணிகளை எடுத்துக் கொடுத்தார்.  அந்தக் காலணிகளின் மேல் புறத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது.

அதை அணிந்துகொண்டு மன்னர் தோட்டத்துக்குள் நுழைந்த உடன் வானம் அவரது காலணியில் இருந்த கண்ணாடியில் தெரிந்தது, அதைச் சுட்டிக் காட்டிய அப்பிராணியார், “மன்னா, அதோ பாருங்கள் வானம். உங்கள் காலடியில் விழுந்து வணக்கம் சொல்கிறது” என்றார்.

மன்னருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மரத்தின் பக்கம் போய் நின்றார். மரத்தின் உருவமும் அவர் காலணிகளின் காண்ணாடியில் பிரதிபலித்தது. இப்படியே செடிகொடிகள் எல்லாம் மன்னர் காலடியில் வணக்கம் தெரிவிக்க, மகிழ்ந்து போனார் மன்னர்.

இதைச் சாதித்த அப்பிராணியாருக்குப் பொன்னும் பொருளும் வழங்கினார்.

1

 தினம் ஒரு பொன்மொழி ( பலம் )

தினம் ஒரு பொன்மொழி ( பலம் )
        

பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.

பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்.


தினம் ஒரு பொன்மொழி!

                       தினம் 2 கடி ஜோக்ஸ்  ( விருந்தினர் )

    தினம் 2 கடி ஜோக்ஸ் ( விருந்தினர் )


1.

பெண்: இலையை மடிக்க வேண்டாம்.

விருந்தினர்: ஏங்க மடிக்க வேண்டான்னு சொல்றீங்க.

பெண்: அடுத்து வர்றவங்க சாப்பிடத் தான்.

விருந்தினர்: ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா ? 

பெண்: இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என்ன ?

விருந்தினர்: 😮😮😮 ..? 


2.

ராமு:ஏன் தரைல ஊக்காரிங்க ..?

விருந்தினர்:  சாப்பாட்டு இலை தாரைல தான் இருக்கு.அதுதான்

ராமு: 😮😮😮 ..? 

         

மேலும்

 தேசிய தடுப்பூசி தினம்

தேசிய தடுப்பூசி தினம்

 • போலியோவை நாட்டிலிருந்தே விரட்டவேண்டும் என்பதற்காக மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 • போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கைகால்களை நிரந்தரமாக செயலிழக்கச் செய்கின்றன. போலியோ நுண்கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.
 • அதற்காக 1995ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டுமுறை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும் வழங்கப்பட்டதன் மூலம் 2014ஆம் ஆண்டு போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது.


 பை தினம்

பை தினம்
 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி பை தினமாக கொண்டாடப்படுகிறது. 

இது பை என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும்.

அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் ℼயைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் ℼ தினத்தைக் கொண்டாடியது முதல் இவ்வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

 கணினி

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள்  கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

காரணம் :

மிகக் குறைந்த Hard Disk Space

நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.

Data Corruption

அதிக சூடாகுதல்

Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.

Hardware Problems

Driver பிரச்சினை

எப்படி சரி செய்வது

1. Reboot :

உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.

2.Hard Disk Space

இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.Hard Disk Space

3.Hard drive corrupted or fragmented

இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும்.

Run ScanDisk – இது Hard Disk – இல் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.

இதை செய்ய – My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Check 

இதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.

அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.

Run Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>>  Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து,  Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs

சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும். 

கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும்,  இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.

Virus பிரச்சினைகள் 

இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்

உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் கணினியை மெதுவாக இயங்க  வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில்  “Device Manager” பகுதிக்கு செல்லவும்.

இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்

இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல் 

மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.


 ஓசனிச்சிட்டுகள் (Hummingbird)

ஓசனிச்சிட்டுகள் (Hummingbird)

இவை மிகச் சிறிய பறவைகள் சிறகடித்துக்கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை.

 கியூபாவில் வாழும் இப்பறவை 5 செ.மீ நீளமே கொண்டுள்ளது

ஓசனிச்சிட்டுப் பறவைகள் வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

இதில் 320 வகையான ஓசனிச்சிட்டு (சுரும்புச்சிட்டு) வகைகள் உள்ளன.

தமிழில் ஓசனிச்சிட்டை முரல்சிட்டு, ஞிமிர்சிட்டு, சுரும்புச்சிட்டு மற்றும் ரீங்கார சிட்டு என்றும் அழைக்கிறார்கள்.

 இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் "உசுஉசு " என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். 

இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது; நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது,  ஓரிடத்திலேயே நின்றும் பறக்கமுடியும்.


 தினம் ஒரு பொன்மொழி ( வெற்றி  )

                                                         தினம் ஒரு பொன்மொழி ( வெற்றி )


எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது.

முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.


தினம் ஒரு பொன்மொழி!

 வில்வம்  மருத்துவ பயன்கள்

வில்வம் மருத்துவ பயன்கள்

நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.

நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது.

கோடை காலம் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும்  இதற்கு வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு  நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். இதற்கு வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும்.

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்தல். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

 பாம்புக்கு ஓர் யோசனை


ஏரிக்கரையோரத்தில் தவளை ஒன்று வசித்து வந்தது. அந்தத் தவளையோடு பாம்பு மிகவும் நட்பாக இருந்தது.

ஒரு நாள் பாம்பு எங்கெல்லாமோ இரைதேடி அலைந்தது. பாம்புக்கு எந்த இரையும் கிடைக்க வில்லை. மிகவும் உடல் சோர்ந்து போய் ஏரிக்கரைப் பக்கம் வந்தது.

அந்தநேரம் ஏரியின் உள்ளேயிருந்து வெளிவந்த தவளை பாம்பைப் பார்த்து “நண்பனே, நீ ஏன் இன்று சோர்வோடு காணப்படுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?” என்று அன்போடு கேட்டது.

தவளையைப் பார்த்த பாம்புக்கு திடீரென்று ஓர் யோசனை தோன்றியது. எனக்கு இப்போது அதிகப் பசியாக இருக்கின்றது.

இந்தத் தவளையைப் பிடித்து என் இரையாக்கிக் கொள்ளலாமே என்று நினைத்த பாம்பு, திடீரென தன் வாயைப் பிளந்து கொண்டு தவளையைப் பிடிக்கத் தாவியது.

அதன் பிடியில் அகப்பட்டுக் கொண்ட தவளை “நண்பனே! இது என்ன விளையாட்டு, என்னை ஏன் பிடித்து விழுங்க நினைக்கின்றாய்?” என்று ஆத்திரத்துடன் கேட்டது.

அதனைக் கேட்ட பாம்பு “தவளை நண்பா! என்னை மன்னித்துவிடு! உன்னைப் பார்க்கையில் எனக்கு இரக்கமே ஏற்படுகிறது. வெகுநேரமாக இரை எதுவும் கிடைக்காமல் நான் பசியோடு வாடிக் கொண்டிருக்கின்றேன்.

அதனால் தான் உன்னைப் பிடித்து உண்ணப்போகிறேன்” என்றது. அதனைக்கேட்ட தவளைக்கு அதிர்ச்சியே ஏற்பட்டது. பாம்பின் நம்பிக்கை துரோகத்தை நினைத்து மனம் வெம்பியது.

இந்த ஆபத்திலிருந்து எப்படியாவது நாம் தப்பிக்க வேண்டுமென சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது. உடனே பாம்பைப் பார்த்து “நண்பா  நீ என்னை மட்டும் சாப்பிட்டால் உன் பசி அடங்கிவிடும் என்று நினைக்கின்றாயா? நிச்சயமாக உனக்குப் பசி அடங்காது.அதனால் ஏரிக்குள் சென்று என் நண்பர்கள் இரண்டு பேரை அழைத்து வருகிறேன். அவர்களையும் சேர்த்து நீ சாப்பிடு” என்று கூறியது . பாம்பு மனம் மகிழ்ந்தது.

“நண்பன் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்! உடனேயே உன் நண்பர்களை அழைத்துவா! எனக்கு இப்போது இன்னும் அதிகமாகப் பசியெடுக்கிறது. நான் கரையிலேயே காத்துக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறியது.

தவளையோ தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஏரிக்குள் குதித்து தண்ணீரில் மூழ்கி எங்கோ சென்றுவிட்டது. இனிமேல் இந்தக் கொடிய நண்பனிடம் பழகக்கூடாது என்று முடிவெடுத்தது.

நீதி:

பாம்பைப் போன்று விஷத்தன்மை உள்ளவர்களிடம் பழகக்கூடாது.

 Google Maps-இல் Drawing அம்சம்கூகுள் மேப்ஸ் துல்லியமான வழிசெலுத்தலை வழங்கினாலும், சில நேரங்களில் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைய நீண்ட பாதையை தேர்வு செய்ய வேண்டியதாக இருக்கும்.

கூகுள் மேப்ஸ் சில புதிய அம்சங்கள்

அதாவது காணாமல் போன சாலைகளைச் சேர்க்கவும், தவறானவற்றை மறுவடிவமைக்கவும், மறுபெயரிடவும் அல்லது நீக்கவும் பயனர்களுக்கு உதவும் வகையில் இந்த தொழில்நுட்ப நிறுவனமானது அதன் 'மேப்ஸ் எடிட்டிங்' அனுபவத்தைஅப்டேட் செய்கிறது.

மைக்ரோசாப்ட் பெயின்ட்டில் காணப்படும் 'லைன்' டூலை பயன்படுத்துவதற்கு ஒத்ததாக “டிராயிங்” எனப்படும் புதிய அனுபவம் மேப்ஸ் எடிட்டிங்கில் இருப்பதாக ஒரு பிளாக் போஸ்ட் வழியாக கூகுள் கூறியுள்ளது. அந்த போஸ்டின் படி, அப்டேட் செய்யப்பட்ட இத டூல் வரும் மாதங்களில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளிவரும்.

தற்போது, ஒரு பயனர் காணாமல் போன சாலையைச் சேர்க்க முயற்சித்தால், அவர்கள் சாலை இருக்க வேண்டிய இடத்தில் 'பின் டிராப்' செய்ய வேண்டும் மற்றும் அந்த தகவலை Google இல் சமர்ப்பிக்க சாலையின் பெயரை டைப் செய்ய வேண்டும். இதேபோல் தேதிகள், திசைகள் போன்ற விவரங்களுடன் ஒரு சாலை மூடப்பட்டிருந்தால் அதைப்பற்றியும் பயனர்கள் புகாரளிக்கலாம்.

                               தினம் 2 கடி ஜோக்ஸ்  ( பெயர் )

    தினம் 2 கடி ஜோக்ஸ் ( பெயர் )


1.

தமிழ் ஆசிரியர்: உன் பெயர் என்னப்பா?
 
மாணவர்: பசுவுக்கு உடம்பு சரியில்லை சார்.
 
தமிழ் ஆசிரியர்: என்னப்பா சொல்றே? ஒன்னுமே புரியலையே.
 
மாணவர்: என் பெயர் “கௌ” சிக்” சார். அதைத் தான் தமிழில் சொன்னேன்..?

தமிழ் ஆசிரியர்: 🙄🙄🙄 ..?

2.

ஆங்கில ஆசிரியர்: உங்க அப்பா பேரு என்ன?
 
மாணவர்: எங்க அப்பா பேரு “Black” ”God” சார்.
 
ஆங்கில ஆசிரியர்: ஏண்டா கொல்ற? தமிழ்ல சொல்லேண்டா.
 
மாணவர்: எங்க அப்பா பேரு ”கருப்பசாமி”  சார். 

ஆங்கில ஆசிரியர்: 😓😓😓 ..?
          

பஞ்சதந்திரம் 

பஞ்சதந்திரம் என்றால்

பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். 

அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்து செங்கோலாட்சி புரிபவனாகவம் விளங்கினான். ஆனால் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாகவும், மூடர்களாகவும் இருந்தார்கள். 

நமக்குப் பின் இந்த ராஜ்ஜியத்தின் கதி என்ன என்ற கவலை அரசனைப் பிடித்துக் கொண்டது. இதற்கு என்ன செய்வது? பலமுறை யோசித்த அரசன் அரச சபையைக் கூட்டி பல சான்றோர்களையும் வரவழைத்தான்.

 அவர்களிடம் மன்னன் தனது கவலையைச் சொன்னான். வந்திருந்த சான்றோர்களில் நீதிசாஸ்திரம் மட்டுமின்றி சகல சாச்த்திரத்திலும் வல்லவராக இருந்த சோமசன்மா என்பவர் எழுந்தார். அரசே! கவலைப் படாதீர்கள்.

 நான் இவர்களுக்குத் தகுந்தமாதிரி கல்வியைப் புகட்டுகிறேன் என்றான். சோமசன்மா அரச குமாரர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முறைப்படி நீதி சாஸ்திரத்தை பஞ்சதந்திரக் கதையாகக் கூறத் தொடங்கினார். 

பஞ்சதந்திரம் என்றால் ஐந்து தந்திரங்கள் என்று பொருள். அவை மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்த நாசம், அசம்பிரேட்சிய காரித்துவம் என்பனவாகும். 

அப்படிஎன்றால்? சிநேகத்தைக் கெடுத்துப் பகை உண்டாக்கல். சுகிர் லாபமானது தங்களுக்குச் சமமானவரோடு கூடி பகையில்லாமல் வாழ்ந்திருத்தல். சந்திவிக்கிரமாவது பகைவரை அடுத்துக் கெடுத்தல், அர்த்த நாசமாவது தன் கையில் கிடைத்தப் பொருளை அழித்தல், அசம்பிறேட்சிய காரித்துவமாவது ஒரு காரியத்தைத் தீர விசாரிக்காமல் செய்தல் என்று அர்த்தம். 

இக்கதைகளைக் கேட்டால் இவ்வுலக நடைமுறைகளையும் அதில் உண்டாகும் பிரச்சனைகளைச் சமாளிக்கிற விதங்களையும் தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி அரச குமாரர்களுக்கு நீதிக்கதைகளை போதிக்கத் துவங்கினார். அரசகுமாரர்களும் ஆர்வத்துடன் அந்தக் கதைகளைக் கேட்டு அப்படியே நல்ல போதனைகளைக் கதைவடிவில் கற்கத்துவங்கினார்கள்.

 பஞ்சதந்திரக் கதைகள். இப்படித்தான் உருவாயின. அவற்றில் ஒவ்வொன்றாக இனி வரும் நாட்களில் பார்ப்போம். சரியா! நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.


 கறிவேப்பிலை

கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. 

நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது மட்டும் இரத்த சோகைக்கான (Anemia) காரணம் இல்லை. இரும்புச்சத்தினை உறிஞ்சுவதிலும் உறிஞ்சிய இரும்புச் சத்தினைப் பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடும் இரத்தசோகைக்கான மற்றுமொரு காரணமாகும். 

கறிவேப்பிலை வயிற்றுப் போக்கிற்கு சிறந்தத் தீர்வாக உள்ளது. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) உள்ளன. இவை பாக்டீரியா மற்றும் அழற்சியை எதிர்க்கும் சக்தியினைக் உடலுக்குத் தருகின்றன.

புதிய கறிவேப்பிலைச் சாற்றுடன் எலுமிச்சைக் கலந்து உண்பதன் மூலம் குமட்டல் மற்றும் தலைச்சுற்று போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக விளங்கும். அதிகப்படியானக் கொழுப்பினைக் குறைக்கப் பயன்படுகிறது. 

கறிவேப்பிலை இலைகளில் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants), பாக்டீரியா எதிர்ப்பொருள் (Antibacterial) மற்றும் அழற்சி எதிர்ப்பொருள் (Anti-inflammatory) போன்ற எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளன. எனவே கறிவேப்பிலை இலைகள் நோய்த் தொற்றுகளுக்கான மிகப்பெரியத் தீர்வாக அமைகிறது. 

கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ நிறைந்து காணப்படுகிறது. இந்த இலைகளில் இருக்கும் வைட்டமின் ஏ கரோட்டிகளைக் கொண்டுள்ளது. எனவே வைட்டமின் – ஏ செயல்பாடு கண்ணின் கார்னியா சேதமடைவற்கான ஆபத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.

 செவ்வாய் கிரகத்தில் சத்தம்  

செவ்வாய் கிரகத்தில் சத்தம்

நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். அதாவது நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது.

ரோவர் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர்

பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்ட சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்த சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாசா அமைப்பு வெளியிட்ட தகவலின்படி பெர்சவரன்ஸ் ரோவரில் இருகக்கும் லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லை தாக்கும் சத்தம் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் வெளிவந்த சத்தம் மூலம் அந்த கல் எவ்வளவு கடினத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவரின் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள், அந்த கல் எதனால் ஆனது என்பதை ஆராய்ச்சி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.


                                               தினம் ஒரு பொன்மொழி (துன்பம்)எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம்..

இன்னொன்று மெளனம்..  

ஒரு சேல்ஸ்

ஒரு சேல்ஸ்


நம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,

கொஞ்சம் பெரிய தூண்டில்,

அதைவிடப் பெரிய தூண்டில்,

ஃபிஷிங் ராட்,

ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.

பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"


1

                          தினம் 2 கடி ஜோக்ஸ்  ( பணம் )

   தினம் 2 கடி ஜோக்ஸ் ( பணம் )


1.

நண்பன் 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் பணம்
                          இல்லை..... ? 

நண்பன் 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?

நண்பன் 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்.

2.

நண்பன் 1 : அதிக பணம் கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு                               ஒண்ணுமே தெரிலபோல.

நண்பன் 2 : எத வச்சு சொல்ற?

நண்பன் 1 : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார் .                

 குஸ்டவ் கிர்க்காஃப்

குஸ்டவ் கிர்க்காஃப்


 • மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை வெளியிட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 1824ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் பிறந்தார்.
 • கல்லூரியில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ்பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21வது வயதில் வெளியிட்டார்.
 • ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து 1854ஆம் ஆண்டு சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தார். மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
 • இவர் 1859ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். மேலும் 1862ஆம் ஆண்டு 'கரும்பொருள் கதிர்வீச்சு' பற்றிய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார்.
 • ராபர்ட் புன்செனுடன் இணைந்து சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக 'ரூம்ஃபோர்டு' பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றார்.
 • தன் வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 63வது வயதில் (1887) மறைந்தார்.

வோடபோன் ஐடியா

இரவு முழுக்க இலவச டேட்டா..

வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 401 முதல் ரூ. 801 வரை நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டங்கள் பயனர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார், வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர், நைட் டைம் டேட்டா மற்றும் பலவற்றிற்கு மாதாந்திர இலவச அணுகலை வழங்குகிறது.

றிமுகப்படுத்தப்பட்ட நான்கு புதிய திட்டங்களின் விலை ரூ .401, ரூ .501, ரூ .601 மற்றும் ரூ .801 ஆகும். இந்த திட்டங்கள் அனைத்தும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாக்களுடன் வருகின்றன,

ஆனால் இதில் ஒரு சூட்சமம் உள்ளது. வோடபோன் ஐடியா வழங்கும் இந்த டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா ஒரு விஐபி சந்தாவாகும். இது பிரீமியம் சந்தா இல்லை என்பதை மறக்கவேண்டாம், இது விஐபி சந்தா என்பதனால் நீங்கள் விளம்பரங்களைப் பார்க்கவேண்டியிருக்கும்.


ரூ 401 ப்ரீபெய்டு திட்டம்

இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 3GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS

நீங்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வரம்பும் இல்லாமல் டேட்டாவை பயன்படுத்தலாம்.

இத்துடன் 16 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான 1 ஆண்டு விஐபி சந்தாவும் கிடைக்கிறது. வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர், vi மூவிஸ் மற்றும் டிவி சந்தவுடன் இத்திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

ரூ 501 ப்ரீபெய்டு திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு செல்லுபடியாகும் காலம் வரை 75 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் உங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலுக்கான 1 ஆண்டு சந்தாவுடன் வருகிறது. இது 56 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை வேண்டாம் என்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.

ரூ 601 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டம் உங்களுக்கு தினமும் 3 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 56 நாட்கள் செல்லுபடியாகும்.

தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை, வரம்பற்ற அழைப்பு நன்மை, 16 ஜிபி கூடுதல் டேட்டா, 1 ஆண்டு டிஸ்னி + Hotstar விஐபி சந்தா, நைட் டைம் இலவச டேட்டா நன்மை, வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ 801 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டம் உங்களுக்கு தினமும் 3 ஜிபிடேட்டா நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ், 16 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான 1 ஆண்டு விஐபி சந்தா கிடைக்கிறது. கூடுதல் நன்மைகள் மேலே உள்ளதைப் போலவே அடங்கும், வோடபோன் ஐடியா இந்த திட்டங்களுக்கு அதிவேக இரவுநேர டேட்டா நன்மை, வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.


 எறும்பு தரும் நம்பிக்கை

எறும்பு தரும் நம்பிக்கை

தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து  கொண்டிருந்தது. அப்போது பூரான்  அருகே வந்தது.

“நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?” என்று எறும்பிடம் கேட்டது.

எறும்பு “பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் செய்ய முடியாதே” என்று ஊர்ந்து கொண்டே சொன்னது.

“அப்படியென்ன முக்கியமான கடமை?” என்று பூரான் கேட்டது.

எறும்பும் ஊர்வதை நிறுத்தாமல் “மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து கொண்டு இருக்கிறேன். உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது” என்று கூறிச் சென்று விட்டது.

பூரான், எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்து.

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று அதை வழி மறித்தது. “எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!.

 உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக் கொள்கிறேன்” என்று கேட்டது..

அதற்கு எறும்பு மிக அமைதியுடன் “பூரானே. உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம்” என்று திரும்பவும் கூறியது.

பூரானோ “அப்படி என்ன  நீ  செய்துவிடுவாய் " என்று கூறியது.

எறும்பு பூரானை பதில் பேசாமல் ஒரு தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் சென்றது. பூரானை வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் தொற்றிக்கொண்டு தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது.

பூரானைப் பார்த்து “உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா?” என்று கேட்டது.

பூரானுக்கு அப்போதுதான் எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு என்று புரிந்தது. எறும்பிடம் மன்னிப்புக் கேட்டது.

 

  இந்திய தொழிலாளர் சட்டம்

இந்திய தொழிலாளர் சட்டம்

தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காத்து அவர்களின் உழைப்பு சுரண்டப் படுவதைத் தடுத்து அவர்களுடைய உரிமைகளை காப்பதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளது.

 • இந்தியத் தொழில் பழகுனர் சட்டம் - 1961 (Apprentices Act-1961)
 • இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் - 1952 (Employees Provident Funds Act-1952)
 • இந்தியத் தொழிலாளர் காப்புறுதிச் சட்டம் (Employees State Insurance Act-ESI Act)
 • இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் -1948 (Factories Act-1948)
 • இந்திய போனஸ் பட்டுவாடா சட்டம் -1965 (Payment of Bonus Act-1965)
 • இந்திய பணிக்கொடை சட்டம் – 1972(Payment of Gratuity Act 1972)
 • இந்தியத் தொழில் தகராறுகள் சட்டம் -1947(Industrial Disputes Act 1947)
 • இந்தியத் தொழிற்சாலைகள் (நிலை ஆணைகள்) சட்டம் -(Industrial Employment ( Standing Orders) Act
 • இந்திய குறைந்த பட்ச ஊதிய சட்டம் (Minimum Wages Act)
 • இந்தியத் தொழிற்சங்கங்கள் சட்டம் (Trade Unions Act)
 • இந்தியத் தொழிலார்கள் ஈட்டுறுதிச் சட்டம் (Workmen's Compensation Act -1923)
 • தொழிற்சாலைகள் சட்டம் 1948...!
 • தொழிலாளர்கள் , தொழிற்சாலைகளில் பணிபுரியும் சூழ்நிலையை முறைப்படுத்துவதற்காக இந்திய அரசால் இயற்றப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களுள் தொழிற்சாலைகள் சட்டம் 1948 (Factories Act 1948) மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


 புடலங்காய் மருத்துவ பயன்கள்

புடலங்காய் மருத்துவ பயன்கள்

புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருக்கும்.

மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.

 • 100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரோட்டீன் 0.5 கிராமும், கொழுப்புச்த்து 0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோகிராமும் , விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன.
 • புடலங்காய் ஓர் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது, மாரடைப்பைத் தடுக்க வல்லது. 
 • விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் மறைந்து போகும்.
 • புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும்.
 • இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர்.
 • ஆலோபேஷியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும்.

புடலங்காயின் விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்றாலும் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வாந்தி மற்றும் வயிற்று வலி உண்டாகலாம்.


உதாரணம்


மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*

இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ._

மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . 

 This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking

அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்.._..

இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்  "Being Professional & Focus only on what you are trained

கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று .

மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம்  செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்.

இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!

This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! "

கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்.

வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்.

"காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் "

 This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.

இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .

இதுதான் சுயநலமான உலகம்!

This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.

மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி.

கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் .

எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை .

கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.

ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது

இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்

True. Knowledge is nowadays very important than money in this world.

வி. சாந்தா

வி. சாந்தா

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா.

இவர் தனது குருவாக டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை போற்றுகிறார். 12 படுக்கைகளுடன் மட்டுமே இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.

இவர் புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, ஒளவையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

 உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். 

19 ஜனவரி 2021 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.