Natural Medicine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 பேரீச்சம்பழம்

 

பேரீச்சம்பழம்

  • தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். 
  • புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். 
  • கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும்.
  •  தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது.
  •  பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

 வில்வம்  மருத்துவ பயன்கள்

வில்வம்  மருத்துவ பயன்கள்

நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.

நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது.

கோடை காலம் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும்  இதற்கு வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு  நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். இதற்கு வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும்.

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்தல். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

 கறிவேப்பிலை

கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. 

நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது மட்டும் இரத்த சோகைக்கான (Anemia) காரணம் இல்லை. இரும்புச்சத்தினை உறிஞ்சுவதிலும் உறிஞ்சிய இரும்புச் சத்தினைப் பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடும் இரத்தசோகைக்கான மற்றுமொரு காரணமாகும். 

கறிவேப்பிலை வயிற்றுப் போக்கிற்கு சிறந்தத் தீர்வாக உள்ளது. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) உள்ளன. இவை பாக்டீரியா மற்றும் அழற்சியை எதிர்க்கும் சக்தியினைக் உடலுக்குத் தருகின்றன.

புதிய கறிவேப்பிலைச் சாற்றுடன் எலுமிச்சைக் கலந்து உண்பதன் மூலம் குமட்டல் மற்றும் தலைச்சுற்று போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக விளங்கும். அதிகப்படியானக் கொழுப்பினைக் குறைக்கப் பயன்படுகிறது. 

கறிவேப்பிலை இலைகளில் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants), பாக்டீரியா எதிர்ப்பொருள் (Antibacterial) மற்றும் அழற்சி எதிர்ப்பொருள் (Anti-inflammatory) போன்ற எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளன. எனவே கறிவேப்பிலை இலைகள் நோய்த் தொற்றுகளுக்கான மிகப்பெரியத் தீர்வாக அமைகிறது. 

கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ நிறைந்து காணப்படுகிறது. இந்த இலைகளில் இருக்கும் வைட்டமின் ஏ கரோட்டிகளைக் கொண்டுள்ளது. எனவே வைட்டமின் – ஏ செயல்பாடு கண்ணின் கார்னியா சேதமடைவற்கான ஆபத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.

 புடலங்காய் மருத்துவ பயன்கள்

புடலங்காய் மருத்துவ பயன்கள்

புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருக்கும்.

மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.

  • 100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரோட்டீன் 0.5 கிராமும், கொழுப்புச்த்து 0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோகிராமும் , விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன.
  • புடலங்காய் ஓர் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது, மாரடைப்பைத் தடுக்க வல்லது. 
  • விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் மறைந்து போகும்.
  • புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும்.
  • இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர்.
  • ஆலோபேஷியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும்.

புடலங்காயின் விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்றாலும் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வாந்தி மற்றும் வயிற்று வலி உண்டாகலாம்.


சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவக் குணமா..?!


சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும். இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.
இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது
பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.
மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்
எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.
இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.
பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.
பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.
சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.
காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.
சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

மாதுளை



மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.

பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.

தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

 பலாவின் மருத்துவ பயன்கள்

பலாவின் மருத்துவ பயன்கள்

  • மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே. மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் ஆரோக்கியத்தோடு வாழ வைக்கும் தன்வந்திரியாகவும் திகழ்கிறது.
  • பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை தேனில் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும். 
  • பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும். 
  • பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும். நீர்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும். உடலுக்கு வலு கொடுக்கும். 
  • நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும். மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும். 
  • பலாக் கொட்டைகளை சுட்டும் அவித்தும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும்.

எலுமிச்சை பயன்கள்


  • தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சையை இரண்டாக நறுக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க விஷம் இறங்கும்.
  • எலுமிச்சம் பழச்சாற்றுடன் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் வெட்டை சூடு, மலச்சிக்கல், நீர்சுருக்கு, பித்தநோய் ஆகியவை நீங்கும்.
  • நாம் சமைக்கும் காய்கறிகளில் எலுமிச்சை சாறை சேர்க்கும்போது அதன் சத்துக்கள் மேலும் அதிகமாகிறது.
  • எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இது நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வழங்குகிறது. 
  • எலுமிச்சை பழச்சாற்றை அடிக்கடி அருந்தி வந்தால் அதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து எலும்புகளுக்கு சக்தியை அள்ளித்தரும்.


 புதினாவின் மருத்துவ பயன்கள்

புதினாவின் மருத்துவ பயன்கள்

  • தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
  • பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • பித்தத்தால் ஏற்படும் பாத எரிச்சலுக்கு, ஒரு கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எரிச்சல் உண்டான பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும்.
  • புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை  குறையும்.
  • மூச்சுத்திணறல் உடனே நிற்க வேண்டுமானால், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இந்த ஊறல் குடிநீரைக் குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

 கருஞ்சீரகம் மருத்துவம்  நன்மைகள்

கருஞ்சீரகம் மருத்துவம்  நன்மைகள்

  • கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். இவை உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற துணை புரிகின்றன. அதனால் உடல் செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகின்றன. 
  • தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும்.
  • கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களில் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை குறிப்பிடத்தக்கது. வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும்.
  • பாக்டீரியாக்களால் ஏற்படும் தோல் வியாதியைக் குணப்படுத்தக் கருஞ்சீரகத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளலாம்.
  •  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கருஞ்சீரகத்தை அளவான அளவு எடுத்துக்கொள்ளலாம்.
  • வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும்
  • நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவையான ஒன்றுதான். இதில் நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு நன்மை செய்யும் ,கெட்ட கொலஸ்ட்ரால் தீங்கு செய்யும்.கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. 
  • பெரும்பாலான குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை இருக்கும். பூச்சித்தொல்லையால் அவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படும். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையும் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த மாதிரி குழந்தைகளுக்கு வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து பருக தரலாம்.
  • கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து பாலில் கலந்து கொள்ளவும்.இதை முகத்தில் தொடர்ந்து பூசி வர முகத்தில் ஏற்பட்டுள்ள முகப்பருக்கள்,கொப்பளங்கள்,புண்கள் மறையும்.
  • இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது. தினம் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகம் பொடியைக் கலந்து அருந்தலாம். 
















 ஆமணக்கு எண்ணெயின் மருத்துவப் பயன்கள் 

ஆமணக்கு எண்ணெயின் மருத்துவப் பயன்கள்


  • விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில்பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது.
  • விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.
  • இந்தியாவின் பஸ்தர் பழங்குடி மக்கள் இதன் இலைச்சாற்றை மூட்டுகளில் ஏற்படும் வலியைப் போக்கவும், இளம் இலைகளை பேதி மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.
  • சிறு வயது குழந்தைகளாக இருந்தாலும் காலையில் வெறும் வயிற்றில் கால் தம்ளர் மிதமான வெந்நீரில் 5 முதல் 10 சொட்டு கள் வரை (வயதுக் கேற்ப) விட்டு கலந்து குடிக்க வைத்தால் அடுத்த சில மணிநேரத்தில் குடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும். 
  • இரவு படுக்கும் முன்பு சில துளி விளக்கெண்ணெயை இலேசாக சூடுபடுத்தி மூட்டு இருக்கும் பகுதிகளில் மசாஜ் போன்று தேய்த்து வந்தால் சரும துவாரங்களின் வழியாக எண்ணெய் உட்புகுந்து மூட்டுகளின் உராய்வைத் தடுப்பதோடு வலியை யும் குறைக்கிறது.
  • விளக்கெண்ணையை உள்ளங்கையில் ஊற்றி நன்றாக குழைத்து கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தில் வட்டவடிவமாக தேய்த்து மசாஜ் போல் 10 நிமிடங்கள் செய்து வந்தால் ஒரே வாரத்தில் கண்கள் புத்துணர்வோடு இருக்கும். கருவளையம் இருந்த இடம் தெரியாது.

செம்பருத்தியின் 8 பயன்கள்

செம்பருத்தியின் 8 பயன்கள்


  • முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும்  உதவுகிறது. 
  • பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சோர்வுகளிலிருந்து விடுபடலாம். 
  • பாலில் சாப்பிட்டால் உடல் ஊட்டம் பெறும். சிறுவர்களுக்கு உடம்பு  பெருக்கும்.
  • செம்பருத்தி இலை தேநீரை பருகும் பலருக்கும், உயர் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது.
  • இலையை அரைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து சாப்பிட வெள்ளை, வெட்டை நோய் குணமாகும்.
  •  பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி  காலை, மாலை குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும். அதாவது இதய பலவீனம், மார்பு வலி முதலியவை தீரும்.
  • செம்பருத்தம் பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினசரி தலைக்கு தடவி வர மூளை  குளிர்ச்சி அடையும்.
  • 100 கிராம் பூக்களை தண்ணீர்ல் போட்டு பிசைந்து வடிகட்டி சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்து வர மேக வெள்ளை, ரத்த பிரமேகம் குணமாகும். 

 ஈசல் மருத்துவ குணங்கள்

ஈசல் மருத்துவ குணங்கள்


  • ஒரு கிலோ ஈசலின் விலை 200 ரூபாய் தட்டான், வண்ணத்துப்பூச்சி மாதிரி ஈசலும் ஒரு பூச்சிதான்.
  • ஈசலை நன்றாக அரைத்து மாவாக்கி அதனுடன் தேன்மெழுகை உருக்கி எடுத்த எண்ணெயை கலந்து உறைய வைக்கவேண்டும். இந்த க்ரீமை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குணமாகும். இளம்பிள்ளை வாதம், பக்கவாதம் (hemiplegia), முகவாதம் (facial paralysis) போன்ற நோய்களுக்கும் மருந்தாக இருக்கின்றது." என்கிறார்

 பாராசிட்டமால்(paracetamol )

பாராசிட்டமால்(paracetamol )


பொதுவாக வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைக்கவும் இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக, தலைவலி, உடல் வலி, தசை வலி, முது வலி, போன்றவற்றிற்கும் இதனை பயன்படுத்தலாம் என்றே மருத்துவர்கள் கூறுவார்கள். அதுவும் அந்தந்த வலியின் தன்மையை பொருத்தே இதன் அளவு வேறுபடும். சிலர் தேவையற்ற பல நோய்களுக்கும் இதனை பயன்படுத்துகின்ற்னர்.

சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்தை தரலாம்

பக்க விளைவுகள் :- பாராசிட்டமாலை அதிகம் எடுத்தால், பின்வரும் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். - வாந்தி - மயக்கம் - அதிக காய்ச்சல் - வாய் புண் - அல்சர் - குடல் பாதிப்பு - ரத்த சோகை - பசியின்மை - உதடுகள் வெந்து போகுதல் இத்தகைய கொடுமையான விளைவுகளால் பாதிக்கப்படுவீர்கள்.

முன்னெச்சரிக்கை

பாராசிட்டமால் சாப்பிட்ட 3 நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் தொடர்ந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்தவும். -

பெரியவர்களுக்கு 7 நாட்களுக்கு மேலும், குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கும் வலி ஏதேனும் இருந்தால் மருத்துவரை கட்டாயம் அணுகவும். 

 உடலில் திடீர் வீக்கமோ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் பாராசிட்டமால் எடுத்து கொள்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.


 தலைவலிக்கு பாட்டி வைத்தியம்

தலைவலிக்கு பாட்டி வைத்தியம்

பெரும்பாலான மக்களுக்கு, அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது.

இன்னும் சிலருக்கோ, குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படும்.

தலைவலிக்கு உதவும் பாட்டி வைத்திய முறைகள்:

☘ கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

 வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

  கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

 கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

 2 மிளகை எடுத்து அதை சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

  கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

  முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

  புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

  டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.



 துளசிக்கு  இருக்கும் மருத்துவ குணங்கள்


காய்ச்சல்

காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்.

தொண்டைப்புண்

தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

தலை வலி

உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

கண் பிரச்சனைகள்

கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.

வாய் பிரச்சனைகள்

ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.

இதய நோய்

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சளி, இருமல்

இருமல் கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.

மேலும்


அத்திப்பழம் பயன்கள்

அத்திப்பழம் பயன்கள்

  • ஒருவர் தொடந்து 40 நாட்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் அவரது உடல் பலம் பெறும்.
  • தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
  • மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
  •  நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
  •  போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
  • தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
அத்தி பழம்  (1 பழம் = 50gm) 
நார்ச்சத்து: 5.8%
பொட்டாசியம்: 3.3%
மாங்கனீசு: 3%
விட்டமின் பி6: 3%
கலோரி(37): 2%
புரதம்-2 கிராம்,
கால்ஷியம்-100 மி.கி,
இரும்பு-2 மி.கி

மேலும்


 ஆவாரம்பூ பயன்கள்


  •  ஆவாரம்பூ சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு. 
  • குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
  • நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
  • பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
  • ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி முகம் அழகு பெரும்.
  • ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும்.
  • ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
  • ஆவாரம் பூக்களை அரைத்து அவ்வப்போது, உடலில் ஆறி வரும் புண்கள், காயங்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறும்.

 கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள்

கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள்
  • கழற்சிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிப் பலன் தருகிறது. விதைகள் வயிற்றுப்போக்கைக் நிறுத்தக் கூடியது.
  • உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக் கூடியது.
  • வயிற்று புண்கள் வயிற்று வலி சரியாகும்.
  • தைராய்டு, கொழுப்புக்கட்டிகள், நீர்கட்டிகள் பிரச்சினைகள் சரியாகும்.
  • கழற்சிக் கொடியின் துளிர்கள் ஈரல் நோய்களைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

 சீரகத்தின் 7 மருத்துவ குணங்கள்

சீரகத்தின் 7 மருத்துவ குணங்கள்

  •  சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
  • சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
  • கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
  • பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.
  • வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
  • சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.