தகவல்தளம் ஸ்பெஷல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1

 தினம் ஒரு பொன்மொழி ( பலம் )

தினம் ஒரு பொன்மொழி ( பலம் )
        

பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.

பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்.


தினம் ஒரு பொன்மொழி!

 தினம் ஒரு பொன்மொழி ( வெற்றி  )

                                                         தினம் ஒரு பொன்மொழி ( வெற்றி  )


எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது.

முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.


தினம் ஒரு பொன்மொழி!

                                               தினம் ஒரு பொன்மொழி (துன்பம்)



எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம்..

இன்னொன்று மெளனம்..  

வோடபோன் ஐடியா

இரவு முழுக்க இலவச டேட்டா..

வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 401 முதல் ரூ. 801 வரை நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டங்கள் பயனர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார், வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர், நைட் டைம் டேட்டா மற்றும் பலவற்றிற்கு மாதாந்திர இலவச அணுகலை வழங்குகிறது.

றிமுகப்படுத்தப்பட்ட நான்கு புதிய திட்டங்களின் விலை ரூ .401, ரூ .501, ரூ .601 மற்றும் ரூ .801 ஆகும். இந்த திட்டங்கள் அனைத்தும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாக்களுடன் வருகின்றன,

ஆனால் இதில் ஒரு சூட்சமம் உள்ளது. வோடபோன் ஐடியா வழங்கும் இந்த டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா ஒரு விஐபி சந்தாவாகும். இது பிரீமியம் சந்தா இல்லை என்பதை மறக்கவேண்டாம், இது விஐபி சந்தா என்பதனால் நீங்கள் விளம்பரங்களைப் பார்க்கவேண்டியிருக்கும்.


ரூ 401 ப்ரீபெய்டு திட்டம்

இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 3GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS

நீங்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வரம்பும் இல்லாமல் டேட்டாவை பயன்படுத்தலாம்.

இத்துடன் 16 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான 1 ஆண்டு விஐபி சந்தாவும் கிடைக்கிறது. வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர், vi மூவிஸ் மற்றும் டிவி சந்தவுடன் இத்திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

ரூ 501 ப்ரீபெய்டு திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு செல்லுபடியாகும் காலம் வரை 75 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் உங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலுக்கான 1 ஆண்டு சந்தாவுடன் வருகிறது. இது 56 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை வேண்டாம் என்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.

ரூ 601 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டம் உங்களுக்கு தினமும் 3 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 56 நாட்கள் செல்லுபடியாகும்.

தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை, வரம்பற்ற அழைப்பு நன்மை, 16 ஜிபி கூடுதல் டேட்டா, 1 ஆண்டு டிஸ்னி + Hotstar விஐபி சந்தா, நைட் டைம் இலவச டேட்டா நன்மை, வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ 801 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டம் உங்களுக்கு தினமும் 3 ஜிபிடேட்டா நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ், 16 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான 1 ஆண்டு விஐபி சந்தா கிடைக்கிறது. கூடுதல் நன்மைகள் மேலே உள்ளதைப் போலவே அடங்கும், வோடபோன் ஐடியா இந்த திட்டங்களுக்கு அதிவேக இரவுநேர டேட்டா நன்மை, வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.


 ரூ.22,000 கோடியில் 30 ஆயுத டிரோன்கள்

ரூ.22,000 கோடியில் 30 ஆயுத டிரோன்கள்


அமெரிக்காவிடம் இருந்து சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 30  ராணுவ ஆயுத டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவில் பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், இந்திய வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த இந்த கொள்முதல் உதவிகரமாக இருக்கும். அமெரிக்காவில், சாண்டியாகோவில் உள்ள ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து எம்கியூ 9-பி பிரிடேட்டர் (MQ-9B Predator drones) என்ற டிரோன்கள் வாங்கப்பட உள்ளன.

இந்த டிரோன்கள் தொடர்ந்து 48 மணி நேரம் பறக்கமுடியும்.

1700 கிலோ எடை உள்ள ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும். 

தென்சீன கடலில் சீன போர் கப்பல்களின் நடமாட்டத்தையும், இமாலய பகுதிகளில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறுவதை தடுக்கவும் இந்த டிரோன்கள் உதவும்

 தினம் ஒரு பொன்மொழி! (முயலாமை)

                                                         தினம் ஒரு பொன்மொழி! (முயலாமை)


முயலாமை என்பது உங்களின் வெற்றியை முடக்கிப்போடக்கூடிய வலிமை உடையது. 

முயற்சி என்பது வெற்றியை உங்களது காலுக்கு கீழே சமர்பிக்கக்கூடிய வலிமை உடையது. 


                                               விரைவில் தமிழகத்தில் ஐபோன் 12

விரைவில் தமிழகத்தில் ஐபோன் 12


ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 உற்பத்தியை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தகவல்களின்படி ஐபோன் 12 உற்பத்தி தமிழ் நாட்டில் இயங்கி வரும் பாக்ஸ்கான் ஆலையில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு ஆலைகளில் இருந்து 10 சதவீத உற்பத்தியை இந்தியாவுக்கு கொண்டுவர ஆப்பிள் முடிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஐபோன் 12 உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என தெரிகிறது. 

இதே ஆலையில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.


யூரி ககாரின் மாஸ்கோ



யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934-ல் பிறந்தார்.

இவர் விண்வெளிக்கு பயணித்த முதல் விண்வெளி வீரர்.

விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார்.

1955-ல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School)-ல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார்.

பின்பு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957-ல் திருமணம் புரிந்தார். 

1960-ல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில்  20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி.

விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில், நெடுஆரம் 203 மைல், குறுஆரம் 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.

இவர்  27-03-1968 ல்  மரணம் அடைந்தார்.


CHENNAI RTO Codes List 

CHENNAI RTO Codes

RTO - Regional Transport Office 

RTO LOCATIONS                              RTO CODE

CHENNAI (CENTRAL)                         TN01

CHENNAI(NORTH-WEST)                   TN02

CHENNAI(NORTH EAST)                 TN03

CHENNAI(EAST)                                   TN04

CHENNAI(NORTH)                                 TN05

CHENNAI(SOUTH-EAST)                 TN06

CHENNAI(SOUTH)                                 TN07

CHENNAI (WEST)                                 TN09

CHENNAI(SOUTH-WEST)                 TN10








ஜியோபுக்' லேப்டாப்

மலிவு விலையில் ஜியோபுக்' லேப்டாப்.

ஜியோ நிறுவனம் புதிதாக 'ஜியோபுக்' (JioBook) என்ற மலிவு விலை லேப்டாப் சாதனத்தை வடிவமைத்து உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது.

ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

இது 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் தயாரிப்பு சரிபார்ப்பு சோதனை கட்டத்தை இந்த ஆண்டின் நடுப்பகுதியில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் ஜியோபுக்கின் முன்மாதிரியை நிறுவனம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபுக்கின் புகைப்படம் இந்த லேப்டாப் அதன் இறுதி வளர்ச்சி கட்டத்தில் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

JioBook சிறப்பம்சங்கள்

  • 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்
  • ஸ்னாப்டிராகன் எக்ஸ் 12 4 ஜி மோடம்
  • 2 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 32 ஜிபி ஈஎம்சி ஸ்டோரேஜ்
  • 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 64 ஜிபி இஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜ்

  தினம் ஒரு பொன்மொழி ( முயற்சி )

தினம் ஒரு பொன்மொழி! (முயற்சி)


1.

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்

வலிகளும் பழகிப்போகும்.

2.

பல முறை முயற்சித்தும்

உனக்கு தோல்வி என்றால்

உன் இலக்கு தவறு

சரியான இலக்கை தேர்ந்தெடு

 என்றி டிரேப்பர் 

என்றி டிரேப்பர்


என்றி டிரேப்பர் (Henry Draper) (மார்ச் 7, 1837 – நவம்பர் 20, 1882), ஒரு அமெரிக்க மருத்துவரும், தொழில்சாரா வானியலாளரும் ஆவார்

என்றி டிரேப்பரின் தந்தை, யோன் வில்லியம் டிரேப்பர் ஒரு பெயர்பெற்ற மருத்துவரும் வேதியியலாளரும் தாவரவியலாளரும் நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார்.

1839ல் முதன் முதலாக நிலவைத் தொலைநோக்கி ஒன்றினூடாக ஒளிப்படம் எடுத்தவரும் இவரே.

என்றி டிரேப்பர், 1857ல், தனது 20 ஆவது வயதில் மருத்துவத்துக்கான நியூயார்க் பல்கலைக்கழகப் பள்ளியில் மருத்துவத்துக்கான பட்டம்பெற்று வெளியேறினார். முதலில், பெல்லெவு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்தார். பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மருத்துவத்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 

1867ல் இவர் பணக்காரரான மேரி அன்னா பாமர் என்பவரை மணம் செய்துகொண்டார். டிரேப்பர் வானொளிப்படங்களைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக விளங்கினார். 

1872ல், உறிஞ்சர் கோடுகளைக் காட்டிய விண்மீன் நிறமாலை ஒளிப்படம் ஒன்றை எடுத்தார். இத்துறையில், யோசெப் புரோன்டோபர், லூயிசு மொரிசு ருதர்போர்ட், ஆஞ்செலோ செக்கி என்போர் இவருக்கு முன்னோடிகளாக இருந்தனர். 

ஆய்வில் ஈடுபடுவதற்காக 1873ல், நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் தனது பதவியைத் துறந்தார்.

1882ல் அமெரிக்கச் சட்டமன்றப் பதக்கம் ஒன்றையும் பெற்றார். தேசிய அறிவியல்களுக்கான அக்கடமி, அசுட்ரோமினிசே கெசேசாஃப்ட்டு (Astronomische Gesellschaft) ஆகியவற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இரட்டை நுரையீரல் உறையழற்சி நோயினால் நவம்பர் 20, 1882 ல்  காலமானார்.

                   விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்



  • வலண்டீனா விளாடிமீரொவுனா தெரெசுக்கோவா மார்ச் 6, 1937 அன்று பிறந்தவர்.
  • அவர் ஓய்வு பெற்ற ரஷ்ய விண்வெளி வீரர், பொறியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
  • விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார்.
  • இவர் வத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.
  • 1961ஆம் ஆண்டு சோவியத்தொன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.
  • சோவியத்தொன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’, வேறு பல விருதுகள் எனக் குவிந்தன. இந்த வெற்றிகளைனைத்தையும் பொதுவுடைமைக் கட்சிக்கு அருப்பணித்தார் வலண்டீனா.


 ஆக்சோலோட்ஸ் மீன்

ஆக்சோலோட்ஸ் மீன்


  • ஆக்சோலோட்கள் அதன் உடலில் உள்ள கைகால்களை இழந்தால் மிண்டும்  வளர்க்க முடியும்.
  • ஆக்சோலோட்ல் ஒரே கால்களை 5 முறை வரை மீண்டும் வளர்க்க முடியும்.
  • ஆக்சோலோட்களுக்கு புற்றுநோயை எதிர்க்கும் திறன் பாலூட்டிகளை விட 1,000 மடங்கு அதிகம்.
  • ஆக்சோலோட்ல் மெக்சிகோவில் மட்டுமே காணப்படுகிறது.தெற்கு மெக்ஸிகோ நகரத்தில் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பழங்கால வலையமைப்பான சோச்சிமில்கோ அதற்கான இயற்கை வாழ்விடமாகும். 
  • ஆக்சோலோட்ல் ஆண் மற்றும் பெண் மீன்களால் கடலில் நடக்க முடியும்,

இந்திய ஆராய்ச்சியாளருக்கு அடித்த ஜாக்பாட்

இந்திய ஆராய்ச்சியாளருக்கு அடித்த ஜாக்பாட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக தனித்துவமான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம் கொண்டுவரும் சாதனங்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்தபடி அனைத்து அம்சங்களும் இருக்கும்.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு ஐம்பதாயிரம் அமெரிக்க டாலரை சன்மானமாக வழங்கியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 36,36,875 ரூபாய்க்கு அந்த தொகை நிகராகும்.

Bug Bounty Program எனும் திட்டத்தின் கீழ் இந்த சன்மானத் தொகையை வழங்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். அதாவது வாடிக்கையாளர்களின் மைக்ரோசாப்ட் கணக்குகளை எளிதில் ஹைஜெக் (hijack) செய்யப்படலாம் என்ற பாதிப்பை சந்தேகத்தின் அடிப்படையில் கண்டறிந்ததற்காக இந்த சன்மானம் லட்சுமண் முத்தையா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எந்தவொரு மைக்ரோசாப்ட் கணக்கையும் அனுமதியின்றி அதன் விவரங்களை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கலாம் என்ற பிழையை முத்தையா கண்டறிந்தார் என்று கூறப்படுகிறது. எனவே இது பயனர்களின் தகவல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதை மைக்ரோசாப் நிறுவனத்திற்கு தெரிவித்ததன் மூலம் முத்தையா இந்த சன்மானத்தை பெற்றுள்ளார்.


  தினம் ஒரு பொன்மொழி! (வாழ்க்கை)

தினம் ஒரு பொன்மொழி! (வாழ்க்கை)


சகித்துக்கொண்டு வாழ்வதல்ல

வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...

இழப்புக்கள் வலியை தரும் உன் வாழ்க்கையை மாற்றாது

இழந்ததை மறந்து விடு

உன் எல்லை மனதுக்கு தெரியும் கவலை எதற்கு

புத்தகங்களை திறந்து வைப்பவன் மேதை ஆகிவிட முடியாது

நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி  திறமையை வளர்த்து கொள்.

இன்றைய பொழுது உன்னுடையது

வெற்றியை தேடி ஓடாதே அது உன் கண்ணை மறைத்து விடும்

எவ்வித முயற்சியின்றி வெற்றி கிடைப்பதில்லை.

முயற்சிகள் முதலில் தோல்வியை தரும் நம்பிக்கையை இழக்காதே

சந்தர்ப்பம் தேடிவரும்பொதெல்லாம்  பயன்படுத்தி கொள்ளுகள்.

கனவில் தான் கனவுகள் தேடி வரும்.

நினைவில்  பிரச்சனைகள்  தான் தேடி வரும்.

அதனால் இன்றைய பயனத்தை தீ பொறியாய் மாற்ற பார்.

நாளைய அது தீயாய்  மாரிவிடும்.
















 ஈரான் தேசிய மரம் நடுதினம்

ஈரான் தேசிய மரம் நடுதினம்


ஈரான் தேசிய மரம் நடுதினம் மார்ச் 5 ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது.

பெரிய நகரங்களில் காற்றை மேம்படுத்துவதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதனால் ஆண்டுதோறும் ஈரானின் உயர் அதிகாரிகள் ஈரானின் சுற்றுச்சூழலுக்கு மரங்களின் முக்கியத்துவம் குறித்து மக்கள் கவனத்தை ஈர்க்க தேசிய மரம் நடும் நாள் கொண்டாடப்படுகிறது.

 நிலவுக்கு செல்ல டிக்கெட்  இலவசம்

நிலவுக்கு செல்ல டிக்கெட்  இலவசம்

ஜப்பானிய தொழிலதிபர் ஒருவர் இலவச டிக்கெட் மூலம் நிலவுக்கு செல்லும் வாய்ப்பை அறிவித்துள்ளார்.

நிலவிற்கு செல்லும் 'டியர் மூன்" என்ற திட்டத்தில் வேலை செய்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேக் எக்ஸ்நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சூப்பர் திட்டத்தை தொடங்கியது.

நிலவிற்கு செல்லும் 'டியர் மூன்" என்ற திட்டத்தில் வேலை செய்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேக் எக்ஸ்நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சூப்பர் திட்டத்தை தொடங்கியது. அதாவது மக்களை நிலவுக்கு அழைத்து செல்ல ஸ்டார்ஷிப் என்ற விண்கலத்தை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. 

பின்பு இந்தஸ்டார்ஷிப் விண்கலத்தில் பயணம் செய்ய உலகம் முழுவதிலுமிருந்து 8 பேரை தேர்ந்தெடுக்க இருப்பதாக ஜப்பானிய தொழிலதிபர் மொய்சவா அறிவித்துள்ளார். 

அதுவும் அடுத்த 6 மாதங்களுக்குள்ளா?- பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி! குறிப்பாக இதுபற்றி எலான் மஸ்க் அவர்கள் கூறியது என்னவென்றால், நிலவில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது போல பொது மக்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.

 அதனால் என்னுடன் 8 பேரை அழைத்து செல்ல விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் விண்வெளிக்கு பயணிக்க விருப்பம் உள்ளவர்களும், விண்வெளிக்கு செல்பவர்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் இருப்பவர்களுக்கு இந்த இலவச டிக்கெட்டுகளை தரவுள்ளேன் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.

 தினம் ஒரு பொன்மொழி! (பெருமை)

                                                         ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம்  எழுந்தான் என்பதுதான் பெருமை!


ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம்  எழுந்தான் என்பதுதான் பெருமை!

 தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

  • இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.