today special லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

CHENNAI RTO Codes List 

CHENNAI RTO Codes

RTO - Regional Transport Office 

RTO LOCATIONS                              RTO CODE

CHENNAI (CENTRAL)                         TN01

CHENNAI(NORTH-WEST)                   TN02

CHENNAI(NORTH EAST)                 TN03

CHENNAI(EAST)                                   TN04

CHENNAI(NORTH)                                 TN05

CHENNAI(SOUTH-EAST)                 TN06

CHENNAI(SOUTH)                                 TN07

CHENNAI (WEST)                                 TN09

CHENNAI(SOUTH-WEST)                 TN10








ஜி.டி.நாயுடு

உலகின்  பல கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்  ஜி.டி.நாயுடு..!


 ஒரு மனிதர், ஒரு துறையில் கில்லியாக இருக்கலாம். ஆனால், ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், விவசாயம் என்று பல துறைகளில் கில்லியாக இருந்தார்.

உலக அளவில் மிக முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும், இதற்கான அங்கீகாரம் ஜி.டி.நாயுடுவுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி, தவிர்க்க முடியாத சக்தியாக வந்தார் ஜி.டி.நாயுடு. ஜி.டி.நாயுடுவின் பல கண்டுபிடிப்புகளில், முக்கியமானவற்றை இங்கே பார்க்கலாம்.

ஷேவிங் ரேசர்

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜி.டி.நாயுடு ஐரோப்பா செல்கிறார். அங்கு பிளேடுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. ஷேவிங்குக்கு ஒரே பிளேடைத்தான் பயன்படுத்த வேண்டிய நிலை. ஒரு பேக்கரிக்குச் செல்கிறார். அங்கு ரொட்டித்துண்டுகளை வித்தியாசமாக வெட்டுவதை பார்க்கிறார் ஜி.டி.நாயுடு. உடனடியாக ஒரு பொம்மை காரை வாங்கி, அதன் மோட்டாரை மட்டும் கழட்டி, பிளேடில் பயன்படுத்திப் பார்க்கிறார். சக்சஸ் ஆகிறது. நண்பர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. ஐரோப்பாவில் காப்புரிமை கிடைக்கிறது. லண்டனில் விற்பனைக்கு வருகிறது. முதல் மாதத்திலேயே 7,500 ரேசர்கள் விற்பனையானது.

ஜுசர்

ஜி.டி.நாயுடு ஒருமுறை சிக்காகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு, ஆரஞ்ச் ஜுஸில் இருக்கும் வைட்டமின்கள் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த ஒரு பேராசிரியரை சந்தித்தார். ஆராய்ச்சிக்காக, அந்தப் பேராசிரியர் ஒரு ஜுசரும் தயாரித்துள்ளார். ஆனால், அதில் ஜுஸ் தயாரிக்கும் போது, ஆரஞ்சின் விதைகள் வீணாவதுடன், சுவையும் மாறுவதாகக் கூறியுள்ளார். சிறிது நேரம் அதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஜி.டி.நாயுடு, சிம்பிள் காய்ன் ஸ்ப்ரிங் என்ற ஐடியாவை கொடுக்கிறார். அதில் ஸ்ப்ரிங் பொருத்தியவுடன், பிரச்னையும் சரியாகிவிட்டது. ஜுசரும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி

உருளைக் கிழங்கு தோல் எடுப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். ஜி.டி நாயுடு கண்டுபிடித்துள்ள கருவி, உருளைக் கிழங்கில் இருக்கும் தோலை மட்டும் தனியாக எடுத்துவிடும். இதை 1940-களிலேயே அவர் கண்டுபிடித்துவிட்டார்.

கீ வால் கிளாக் (Key Wall Clock)

அந்தக் காலத்தில் இருக்கும் வால் கிளாக்குகளுக்கு, தினமும் கீ கொடுக்க வேண்டும். ஆனால், 1950-ம் ஆண்டு வாரத்தில் இரண்டு முறை கீ கொடுத்தால் இயங்கும் வால் கிளாக்கைக் கண்டுபிடித்தார் ஜி.டி.நாயுடு.

ரேடியோகிராம்

ஜி.டி.நாயுடுவின் யூ.எம்.எஸ் ஃபேக்டரியில் ரேடியோகிராம் தயாரிக்கப்பட்டது. 6 Valves, 4 Band, 4 ஸ்பீக்கர் வசதிகள் இதில் உள்ளன. மேலும்,10 ரெக்காடர்களை மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி கொண்ட ரேடியோகிராமை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியது ஜி.டி.நாயுடுதான். பலவகையான ரேடியோகிராம்களை, அவர் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.


இவை மட்டுமல்ல, கால்குலேட்டர், பிளேடு, ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின் என்று ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஜி.டி.நாயுடுவுக்கு 18 வயது இருக்கும்போது, ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் பைக்கில் செல்வதைப் பார்க்கிறார். அதைப் பார்த்தவுடன், இந்த வண்டியைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஜி.டி.நாயுடுவுக்கு வருகிறது. ஹோட்டலில் பணிக்குச் சேர்கிறார்.

அந்த வருமானத்தில் பணத்தைச் சேமிக்கிறார். அதே ஐரோப்பா நபரிடம் சென்று பைக்கை வாங்குகிறார். பைக் வாங்கியவுடன் அவர் செய்த முதல் வேலை, அந்த பைக்கை அக்கு வேறு, ஆணி வேராகப் பிரிக்கிறார். அங்குதான் ஆட்டோ மொபைல்ஸ் பற்றிய ஆர்வம் தொடங்கியது.

அதன் பிறகு, ஸ்பின்னிங் மில், போக்குவரத்து என்று பலதுறைகளில் இறங்கினார். ஜி.டி.நாயுடு தொடங்கிய டிரான்ஸ்போர்டின் முதல் பேருந்தில், நடத்துனர், ஓட்டுநர் எல்லாமே அவர்தான். பிறகு அது, 600 பேருந்துகளுடன், யுனைட்டட் மோட்டர் சர்வீஸாக வளர்ந்தது. ஒருகட்டத்தில், ஜி.டி.நாயுடுவுக்குக் கீழ் 62 நிறுவனங்கள் இயங்கின. ஜி.டி.நாயுடு சித்த மருத்துவராகவும் இருந்தார்.

பல மருந்துகளை ஆவணப்படுத்தியது, தயாரித்தது என்று சித்தாவில் ஜி.டி.நாயுடுவின் பணிகள் மிக முக்கியமானவை. கோவை மிகப்பெரிய தொழில் நகரமாக இருக்க ஜி.டி.நாயுடு முக்கிய காரணம். அவரின் உழைப்பின் மூலம் பல விஷயங்கள் நமக்கு வரமாகக் கிடைத்துள்ளன" என்றார்.

கோவை, அவினாசி சாலையில் அவர் நினைவாக, ஜி.டி.நாயுடு மியூசியம் இருக்கிறது.அங்கு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல், பல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.


பிரச்னைகளைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண்பது ஜி.டி.நாயுடுவுக்கு மிகவும் பிடிக்குமாம்.
 


பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.