10 ரூபாய்க்கு recharge செய்து 60 ருபைக்கான recharge பெறவேண்டுமா ???

௧.முதலில்  :http://frch.in/fcharge. என்ற இணையதிக்கு செல்லுங்கள்

௨.அதில் FreeCharge - Mobile Recharge என்ற அப்ப்ளிக்கேஸனை பதிவிறக்கம் (Download) செய்யுங்கள்

௩.பதிவிறக்கம் செய்த பிறகு google mail idயுள் login செய்யுங்கள்

௪.அதன் பின் மேல் உள்ள mobile no என்ற இடத்தில் Recharge செய்ய வேண்டிய நம்பரை டைப் செய்யுங்கள் பின் அந்த mobile no operatorறை தேர்ந்தெடுங்கள்  அதன் பின் Recharge amount கொடுங்க (rs 10)

௫.recharge கொடுங்க அதன் பின் skip coupon கொடுங்க

10 ரூபாய்க்கு recharge செய்து 60 ருபைக்கான recharge பெறவேண்டுமா ???


௬.அதன் பின் மேலே உள்ள படத்தில் உள்ள i have freefund/promo code டை click செய்யுங்கள் ..

௭. பின் enter your code என்ற இடத்தில  RVUYRWD   codeடை கொடுத்து apply கொடுங்க ..

௮.இப்பொது அந்த code ஏற்றுக்கொள்ளப்பட்டும் அதன் பின் continue கொடுத்து உங்கள் debit card கொண்டு 10rs க்கு recharge செய்யுங்கள் ..

௯.recharge ஆன அடுத்த நொடி உங்களுக்கு 50RS கிரெடிட் ஆகும் ..

அதை MYCREDITS சென்று உறுதி செய்யுங்கள் ...

Paise kya ped pe ugte hai? -Yes ! So use FreeCharge promocode RVUYRWD & get Rs.50 Instant Cashback on your next Mobile Recharge.  Redeem on :http://frch.in/fcharge. Code valid only once per debit/credit card & user.

இதை உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்...

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை! ரூ100 கோடி அபராதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வர், எம்.எல்.ஏ., பதவிகளை இழந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கின்றனர். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கவர்னர் ரோசையா, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்தால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்ய வேண்டும்,
ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு அக்டோபர் 5 வரை தசரா விடுமுறை என்று அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நீதிபதி வீட்டில் அவசர வழக்கு விசாரிக்கும் நடைமுறையில் இல்லை.
தற்போதைய தகவல்படி அக்டோபர் 5&க்கு பிறகு தான் ஜாமீன் மனு விசாரிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் . இந்த வழக்கின் மேல் முறையீட்டை விசாரிக்க கர்நாடகா ஐகோர்ட்டிற்கு அதிகாரம் இல்லை என்பதால், ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டை மற்றுமே அணுக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
கோர்ட் வளாகத்தில் ஜெ., வுக்கு நெஞ்சுவலி
ஆஸ்பத்திரி அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வருகிறது...


2வது முறையாக பறி போன ஜெ.வின் முதல்வர் பதவி- அடுத்த முதல்வர் ஷீலா? ஓ.பி.எஸ்? செந்தில் பாலாஜி?

சிறுகதை:முதியோர் இல்லத்தில் உங்கள் பெற்றோரை விட்டால் இதை விட பலமடங்கு கஷ்ட்டப்பட வேண்டியதிருக்கும்!!!படித்து தெரிந்துகொள்ளுங்கள்

வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர்.


“என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?...

வீடு மூடியே இருந்துச்சே?...

சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?”

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம் கேட்டார்.


“புதன்கிழமை கிழமை நைட் என் பையன் பயங்காட்டிட்டான் சார்!...

மணி ரெண்டு இருக்கும். திடீர்ன்னு வயித்து வலி தாங்காம துடிக்கிறான். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம்.

உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போனா, அவங்க ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு ரெண்டு நாள் அவங்க எல்லா டெஸ்டையும் எடுத்துப் பார்த்தாங்க.

அப்புறம் ‘பயப்படும்படி ஒண்ணும் இல்லை’ன்னு சொல்றதுக்குள்ள எங்களுக்கு உயிரே போயிடுச்சு. அவனுக்கும் வயித்து வலி தானா போயிடுச்சு. நேத்து சாயங்காலம்தான் டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சுட்டு வந்தோம்.

ரெண்டு நாள்ல எழுபதாயிரத்துக்கு மேல செலவாயிடுச்சு. பணம் போனா போகட்டும், பையனுக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்களே... அது போதும் சார்!” சங்கர் பெருமூச்சு விட்டான்.


“என்ன பேசறீங்க நீங்க?...

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் என் பையனும் வயித்து வலி வந்து துடிச்சான். உங்களை மாதிரியே நாங்களும் பயந்தப்ப, உங்க அம்மாதான், ‘அது சூட்டு வலியா இருக்கும்.

தொப்புள்ல நல்லெண்ணை வைங்க. சட்டுன்னு சரியாடும்’ன்னு சொன்னாங்க. நம்பி வைச்சோம். பத்தே நிமிஷத்துல அவன் விளையாட கிளம்பிட்டான். ஏன்... இதை உங்க அம்மா உங்களுக்கு அன்னைக்கு சொல்லலையா?...” செல்வம் கேட்டார்.


அம்மா இப்போது முதியோர் விடுதியில் இருக்கிறாள் என்பதை அவரிடம் சங்கர் எப்படிச் சொல்வான்...?

இன்று நீங்கள் உங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தல் நாளை உங்களுக்கும் அதே இல்லம் தான் என்பதை மறக்காதீங்க .....

முதியோரை மதிப்போம்!!!


பெண்கள் கொலுசு அணிவது ஏன்?? தங்கத்தில்  கொலுசு அணியாதது  ஏன்?

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது.  பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.

உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.
மேலும் இ

உங்கள் கைபேசியுள் வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம் அறிய  ...

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

092123 57123 ( இந்த என் வருங்காலத்தில் பையன்படாது அந்த எண்ணுக்கு பதில் 07738299899 ) என்ற எண்ணுக்கு vahan>space<பதிவு எண்- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

உங்கள் கைபேசியுள் வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம் அறிய  ...

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.


பிராடுபேண்டு சேவையின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள். பிஎஸ்என்எல் பிராடுபேண்டு சேவையின் வேகத்தினை அதிகரிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

பிராடுபேண்டு வேகத்தினை அதிகப்படுத்த சில டிப்ஸ்!

டிஎன்எஸ் சர்வர்:
வேகமாக இயங்கும் டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தி கொள்வது நல்லது. பிஎஸ்என்எல் நிறுவனம் நிறைய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. ஆனாலும் அனால் ஒரே டிஎன்எஸ் சர்வரை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதனால் இரவு போன்ற நேரத்தில் அதகமானோர் ஒரே டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தும் போது, இதன் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தி பார்ப்பது நல்லது.
208.67.222.222
208.67.220.220
ஏடுப்ளாக் ப்ளஸ் ஏடுஆன்:
பிராடுபேண்டின் வேகத்தினை அதிகரிக்க ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏட்-ஆனை பயன்படுத்தலாம். பொதுவாக வெப் பேஜில் நிறைய விளம்பரங்கள் இருப்பதனாலும், இன்டர்நெட்டின் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. மேலே கூறப்பட்டுள்ள ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏட்ஆனை பயன்படுத்துவதால், இது போன்ற தேவையில்லாத விளம்பங்களினால் பிராடுபேண்டு சேவையின் வேகம் குறைவதை தவிர்க்கலாம். இந்த ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏடுஆனை ஃபையர்ஃபாக்ஸ் வெப் பிரவுசரில் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.
ஃபாஸ்டர்ஃபாக்ஸ் ஏடுஆன்:
பிரவுசரில் ஒவ்வொரு பக்கத்தினை திறக்கும் போதும், லோடாவதற்கு நிறைய நேரத்தினை எடுத்து கொள்கிறது. இப்படி லோடாக எடுத்த கொள்ளும் நேரத்தினை குறைக்க ஃபாஸ்டர்ஃபாக்ஸ் என்ற ஃபையர்ஃபாக்ஸ் ஏடுஆனை பயன்படுத்தலாம். வலைத்தளத்தினை திறக்க லோடாகும் நேரம் இந்த புதிய ஃபாஸ்டர்ஃபாக்ஸ் மூலம் குறைக்கப்படும்.
கேச்சி ஸ்பேஸ்:
தேவையில்லாத ஃபைல்களை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். டூல்ஸ்—> இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் —> பிரவுஸிங் ஜிஸ்டரி —> செட்டிங்ஸ் —> டிஸ்க் ஸ்பேஸ் ஆகிய இந்த வழிமுறைகளை பயன்படுத்தி டிஸ்க் ஸ்பேஸில் 50 என்று செட் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஸ்பேஸின் அளவை 50தாக குறைத்து செட் செய்து கொண்டால், 50 என்ற அளவு வந்தவுடன் ஆட்டோமெட்டக்காக தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். இதனாலும் இன்டர்நெட்டின் வேகத்தினை அதிகப்படுத்தலாம். இப்படி இன்டர்நெட்டின் வேகத்தினை அதிகப்படுத்துவதால் ஃபேஸ்புக்போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக வேகத்துடன் கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும்.

Torrent பற்றி சில தகவல்கள்.............


Torrent எனப்படுவது ஒரு குறிப்பிட்ட File களை Web Server இல் இருந்து download பண்ணாமல் பலரது கணணிகளினுடாக விரும்பிய File ஐ பகிர்ந்து கொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகும்.

Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவதற்கு நமது கணணியில் μTorrent அல்லது Bittorrent என்ற மென்பொருள் இருத்தல் அவசியம்.



Seeds, Leechers என்றால் என்ன ?
நீங்கள் download பண்ணும் File ஐ முழுமையாக வைத்திருப்பவர்களை இங்கு நாம் Seeds என அழைக்கின்றோம். நீங்கள் download பண்ணும் File ஐ உங்களைப் போல download பண்ணிக் கொண்டு இருப்பவரை Leechers என அழைக்கின்றோம்


Torrent வழங்கும் சில இணையத்தளங்கள்
  1. Isohunt.com
  2. Mininova.com
  3. btjunkie.org
  4. ThePirateBay.org
  5. Torrentz.com

Torrent ஊடாக விரும்பிய File ஐ டவுன்லோட் பண்ணுவது எப்படி?
  • முதலில் μTorrent என்ற மென்பொருளை உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.
  • பின் மேல் உள்ள Torrent ஐ வழங்கும் எதாவது இணையத்தளத்தில் இருந்து உங்களுக்கு விரும்பிய Torrent File ஐ download பண்ணிக் கொள்ளவும்
  • பின் μTorrent என்ற மென்பொருளை திறந்து அதனுள் இழுத்து விடவும்
  • அவ்வளவுதான் அந்த File ஐ download பண்ணி முடிந்ததும் அந்த File ஆனது My Documents இல் Downloads என்ற folder இல் save செய்யப்பட்டு இருக்கும்.
Torrent ஐ download பண்ணும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Torrent ஐ download பண்ணும் போது Seeds அதிகமாக உள்ள File ஐ தெரிவு செய்து download பண்ண வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் விரும்பிய File ஐ முழுமையாக வேகமாக download பண்ணி முடிக்க முடியும்.


சில வேளைகளில் மென்பொருட்களை download பண்ணும் போது அந்த மென்பொருள் சில நேரங்களில் Virus களினால் பாதிப்படைத்திருக்கக் வாய்ப்புக்கள் உண்டு. அதனால் Torrent இல் மென்பொருள் download பண்ணும் போது அந்த Torrent இனுடன் இருக்கும் அதைப் முன்னதாகவே download பண்ணியவர்களின் Comments ஐ வாசித்தபின் download பண்ணுவது பாதுகாப்பானதாகும்.


இரகசிய தகவல்களை மறைத்து வைக்க இலகுவழி..!!!


அனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...??


இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது. சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. என்ன செய்வது நானும் இந்த முறையைத்தான் பின்பற்றி ஒரு திருட்டு வழி முறையை கற்றுத்தர போகிறேன். எவ்வாறு எல்லா வகையான மென்பொருள்களுக்கும் இலகுவாக serial, keygen and patch இணையத்தில் பெறுவது. அதற்கு நாங்கள் செய்ய வேண்டியது கிழே உள்ள படிமுறைகளை பின்பற்றினால் போதும்.

  1. முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com 
  2. பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.
  3. அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.


அனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...??





தினம் ஒரு தகவல் உங்களுக்க ...



* ஒரு அணுகுண்டு தயாரிக்க சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும்.


* 1984-ல் ஓசோனில் துளை இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


* அமெரிக்க டாலர் நோட்டுக்கு `கீரின்பைக்' என்று பெயர்.


* மதுரை மீனாட்சி கோவில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.


* இந்தியாவுக்கு இந்தியா என்று பெயரிட்டது, கிரேக்கர்கள்.


* காந்தியடிகள் சிறையில் 2 ஆயிரத்து 338 நாட்கள் இருந்தார்.


* உலகில் உள்ள அணுஉலைகளின் எண்ணிக்கை 529.


* முதன் முதலில் அணுஉலையை உருவாக்கியவர் எண்ரிக்கோ பெர்மி.



தினம் ஒரு தகவல் உங்களுக்க ...

• அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் செட்னா.

• வுட் செரல் என்பது இரண்டு வகையான பூ பூக்கும் செடி.

• திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து 'ஒள'.

• ஹைகூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை.

• உலகில் அதிக ஆண்டு வாழும் மனிதர்கள் ஜப்பானியர்கள்.
• மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.

• சீன நகரங்களில் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் அந்த வீட்டின் தலைவர் பெயர், மனைவி, மக்கள், பணியாளர், ஆடு, மாடு, நாய், குதிரை இவற்றின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முறையினால் நகரின் மக்கள் தொகை, கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசு அலுவலர்கள் எளிதில் கணக்கிடுகின்றனர்.

• ஹாக்கி என்ற சொல் ஹெகோ என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து பிறந்தது. ஹாக்கி விளையாட்டு கி.பி.514இல் தொடங்கப்பட்டது. ஹாக்கி மட்டை இடையர் கைக்கோலைப் பார்த்து உருவாக்கப்பட்டது. ஹாக்கி மைதானம் செவ்வக வடிவமாக இருக்க வேண்டும். அணிக்கு 11 பேர் விளையாடுவார்கள். 1860ம் ஆண்டில் லண்டனில் ஹாக்கி விளையாட்டு விதிகள் உருவாக்கப்பட்டன.

• ஒரு பூவுக்கு மேல் தாங்க வலிமையில்லாததால் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து அடுத்த பூவுக்கு இடமளிக்கும் தாவரம் நீலக்கண் புல்.

• வண்ணத் திரைப்படங்களுக்கு 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர் சூட்டுவதுண்டு. அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா? 1883ம் ஆண்டில் முதன் முதலாக வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர் கண்டுபிடித்தார். அதன் காரணமாக அவருடைய பெயரை வண்ண பிலிம்களுக்கு சூட்டலாயினர்.

• காக்காய் வலிப்பு நோய் வந்தவர்களை பார்த்திருப்பீர்கள். காக்கைக்கும் வலிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லை! கால், கை வலிப்பு என்பதுதான் காக்காய் வலிப்பு என பேச்சுவழக்கில் மருவியது.

• யானையின் காது முறம் போல இருக்கும் என்று கூறுவார்கள். யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.

• தலாடம் என்றால் என்ன தெரியுமா? ராமன் இலங்கைக்குச் சென்றபோது அணை கட்டினானே அப்போது எந்த சிறுபிராணி உதவியது? அணில் தானே! அணிலுக்கு இன்னொரு பெயர்தான் 'தலாடம்'.

• ஆறுகள், ஏரிகள், குளங்களில் பயணம் செய்ய உதவும் சிறுபடகுக்கு 'நடைச்சலங்கு' என்று பெயர்.

• கன்னியாகுமாரி முதல் மகாராஷ்டிரா வரை விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி பாயும் நதிகளின் எண்ணிக்கை 36. இதில் கேரளாவில் மட்டும் 19 நதிகள் பாய்கின்றன. இந்த 19 நதிகளில் பாயும் தண்ணீரில் 85% அரபிக் கடலில் போய் சேர்கிறது.

• சவுதி அரேபியாவிலுள்ள கிங் காலித் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தான் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். 236 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது இது.

• பாரீஸ் நகரில் நாய்களுக்கான பொது கழிப்பறை வசதி இருந்தது.

• பைபிள் 349 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

• காகிதத்திலிருந்தே காகிதம் தயாரிப்பதுதான் காகிதம் தயாரிப்பதற்கான மிக எளிய வழியாகும். மூன்று கோடி டன் காகிதக் கூழ் உற்பத்தி செய்ய இரண்டரை கோடி டன் கழிவுக் காகிதம் சேர்க்கப்படுகிறது. எழுதிய காகிதங்களை வீணாக்காமல் ஏழு முறை புதிய காகிதம் தயாரிக்க மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

• பெட்ரோலில் கலக்கும் ஒருவகை ஈயம் 1921ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் எளிதாக இயங்கின. ஆனால், ஈயம் கலந்த பெட்ரோல் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று கருதி அது தவிர்க்கப்பட்டது.

• 1925ம் ஆண்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன.

• நாணயத்தில் தனது உருவத்தை பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்.

• தவளைகள் பெரும்பாலும் குளம், குட்டைகளில் தான் அதிகம் வசிக்கின்றன. கடல்களில் இவை வசிப்பதில்லை.

• பெரும்பாலும் சிறு விலங்குகளின் இதயத் துடிப்பு அதிகமாகவும், பெரியனவற்றின் துடிப்பு குறைவாகவும் இருக்கிறது. சிறு விலங்குகளின் உடலிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதால் அதை ஈடு செய்கின்ற வகையில் இதயத்துடிப்பும் அதிகரிக்கின்றது.

• பாலூட்டிகளான திமிங்கலங்கள் காற்றை சுவாசிக்க நீர்மட்டத்திற்கு வந்தாக வேண்டும். அவ்வாறு வரும் போது இரண்டே செக்கண்டுகளில் 530 காலன் வரை காற்றை அவை இழுத்துக் கொள்கின்றன.

• தவளை இனத்தை சேர்ந்த தேரைகள் பார்க்க அருவெறுப்பாக தோற்றமளித்தாலும் பூச்சிகளை அழிப்பதில் அவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. மூன்று மாத காலத்தில் ஒரு தேரை 10000க்கும் மேற்பட்ட பூச்சிகளை உணவாகக் கொள்கிறது.



சாப்ட்வேர்(software) இல்லாமலேயே போல்டர்களை  மறைக்க இலகுவாக வழி ...

hidden folder beforeafter hidden folder
எந்த ஒரு சாப்ட்வேர்(software) இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள்(secret folders) அடங்கிய போல்டர்களை மறைக்க சுலபமான வழியை நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்.


இனி நீங்கள் எந்த ஒரு மென்பொருள்(software) துணையுமின்றி உங்களுடைய ரகசிய கோப்புகள் அடங்கிய போல்டர்களை மறைக்கலாம்.

இதோ அதற்கான சுலப வழி ஒன்றை சொல்லப்போகிறேன்.

முதல் வழி: Start==>RUN==>cmd


அதாவது start button அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும்.. தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள்.

Command Prompt விண்டோ ஓப்பன் ஆகும்.. அதில்  D: என தட்டச்சிடுங்கள்.  மறைக்க வேண்டிய போல்டர் உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும். E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு என்டர் பட்டன் தட்டுங்கள். இப்போது


D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல் 

attrib +h +s foldername

அதாவது இப்படி இருக்க வேண்டும்  

D:/>attrib +h +s foldername
(இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் போல்டரின் பெயரைக் கொடுக்கவும். உதாரணத்திற்கு போல்டரின் பெயர்  songs என இருந்தால் songs என டைப் செய்யுங்கள்.)

இவ்வாறு இருக்க வேண்டும்.

D:/>attrib +h +s songs இவ்வாறு உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் போல்டர் காணாமல் போய் இருக்கும்.



 தெளிவாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.

hidden folder command prompt image
மீண்டும் பெற விரும்பினால் முன்னது போலவே செய்து + குறிக்கு பதில் - குறி இட்டால் போதும். 

அதாவது இப்படத்தில் உள்ளவாறு, 

D:/>attrib -h -s songs என்பதை டைப் செய்து என்டர் தட்டினால் மறைந்திருந்த போல்டர் உடனே கண்ணுக்குத் தெரியும்.


சாப்ட்வேர்(software) இல்லாமலேயே போல்டர்களை  மறைக்க இலகுவாக வழி ...

தெளிவாகப் பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.
முக்கிய குறிப்பு: இதில் முக்கியமாக நாம் நினைவில் நிறுத்த வேண்டியது.. எந்த போல்டரை மறைக்கிறோமோ அந்த போல்டர் உள்ள டிரைவின் பெயர் மற்றும் போல்டரின் பெயர்ஆகியவற்றை நிச்சயமாக நாம் நினைவில் நிறுத்தியிருக்க வேண்டும்
.


சமீபத்தில் நிறைய சமூக வலைத்தளங்களின் ரகசிய குறியீடுகள் (பாஸ்வேர்டுகள்) களவாடப்பட்டதன் தகவல்களை கேட்டிருப்போம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 சமீபத்தில் நிறைய சமூக வலைத்தளங்களின் ரகசிய குறியீடுகள் (பாஸ்வேர்டுகள்) களவாடப்பட்டதன் தகவல்களை கேட்டிருப்போம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அது மட்டும் அல்லாமல் இதில் நிறைய தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் இந்த சமூக வலைத்தளங்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்கு சிறந்த மற்றும் எளிதான சில வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
  • முதலில் தேர்வு செய்யும் பாஸ்வேர்டு, எளிதாக அனைவராலும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். இது முதல் வழி என்று கூறலாம். இப்படி யாராலும் அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிட முடியாத பாஸ்வேர்டை தேர்வு செய்வது ஃபேஸ்புக் வலைத்தளத்திற்கு மட்டும் அல்லாமல், பாஸ்வேர்டு வைத்து திறக்கும் வழி கொண்ட எல்லா வலைத்தளத்திற்கும் பொருந்தும்.
  • பிறகு நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதற்காக எல்லாரையும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக தேர்வு செய்து கொள்வதை தவிர்த்து கொள்ளவது நல்லது.
  • அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றி கொள்வது நல்லது. அப்படி மாற்றம் பாஸ்வேர்டு ஞாபகத்தில் இருக்கும் வகையில் தேர்வு செய்ய வேண்டும்.
  • பிரவுசிங் மூலம் லாகின் செய்யும் போது ரிமெம்பர் மீ போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்தாது இருப்பதும் சிறந்தது. இதெல்லாம் சின்ன யோசனைகள் தான். ஆனாலும் சில பேர் மறந்து ரிமெம்பர் மீ என்ற ஆப்ஷனை பயன்படுத்துவதை பார்க்கலாம்.
  • நம்பகத்தன்மை இல்லாத எந்த ஒரு லிக்ங்கையும், இமெயிலையும் திறந்து பார்ப்பது சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கும். இதனால் ஃப்ரீ டவுன்லோடு, பரிசு என்று குறிப்பிட்டால் உடனை அதை டவுன்லோட் செய்ய முயற்சிப்பதையும், திறக்க முற்படுவதையும் தவிர்ப்பது நல்லது.
இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டவைகள் எளிய வழிமுறைகள் தான். இந்த குட்டி டிப்ஸ்கள்பாஸ்வேர்டு ஹோக்கர்களிடமிருந்து, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை காப்பாற்ற உதவும்.



Android Mobile பாதுகாப்பானதா?


 ஆன்ட்ராய்ட் பற்றிய சிறு அறிமுகத்தை ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? என்ற பதிவில் பார்த்தோம். ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பல்வேறு பிரமிக்கும் வசதிகள் இருந்தாலும் அதிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை பற்றி இங்கு பார்ப்போம்.


Background Applications:


நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களை விட்டு வெளியேறினாலும் அவற்றில் சில பின்புலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இது Background Applications ஆகும். இதனால் உங்கள் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும். மேலும் உங்கள் மொபைலில் கட்டண இணைய வசதி இருந்தால் இந்த அப்ளிகேசன்கள் இணையத்தை தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் பணமும் தீர்ந்துவிடும்.

பின்புல அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?


Android Mobile பாதுகாப்பானதா?


ஆன்ட்ராய்ட் மொபைலில் Settings => Applications => Running Services என்ற பகுதிக்கு சென்றால் பின்புலத்தில் செயல்படும் அனைத்து அப்ளிகேசன்களின் பட்டியலை காட்டும். அதில் தேவையில்லாத அப்ளிகேசன்களை க்ளிக் செய்து,Stop என்பதை க்ளிக் செய்யவும். 



இயங்குதளம் தொடர்பான சில அப்ளிகேசன்களும் இருக்கும். அதனை நீக்கிவிட வேண்டாம்.


பின்புல அப்ளிகேசன்கள்களை செயல்படாமல் வைப்பது எப்படி?


Android Mobile பாதுகாப்பானதா?


ஆன்ட்ராய்ட் மொபைலில் Settings => Accounts & Sync என்ற பகுதிக்கு சென்றுBackground data traffic என்ற இடத்தில் டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள். இதனால் எந்த அப்ளிகேசனும் பின்புலத்தில் செயல்படாது. ஆனால் நீங்கள் உலவியில் இணையத்தை பயன்படுத்தலாம்.



Google Play (முன்பு Android Market) போன்ற சிலவற்றை பயன்படுத்த இந்த தேர்வினை டிக் செய்திருக்க வேண்டும்.



மொபைல்  இணைய இணைப்பை நிறுத்தி வைக்க:


Android Mobile பாதுகாப்பானதா?

மொபைல் இணைய இணைப்பை பயன்படுத்தாமல் Wi-fi மூலம் மட்டும் இணையத்தை பயன்படுத்துமாறு வைக்கலாம். 

Settings => Wireless & Networks => Mobile Networks என்ற பகுதிக்கு சென்றுData enabled என்பதில் டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள்
.

2
கணினி முன்பு அதிக நேரம் இருப்பவரா? இதோ சில டிப்ஸ்!

இன்று எந்த வேலையாக இருப்பினும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் கணினியின் பயன்பாடுகள் அதிகம் கொண்டவர்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

கம்ப்யூட்டர் முன்பு அதிகம் வேலை செய்பவர்கள், உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதற்கான சில டிப்ஸ்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கம்ப்யூட்டர் திரையில் வெளிச்சத்தினை பார்ப்பதால், கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது.

இதனால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒய்வு கொடுப்பது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது.
இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஒய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.

தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொருமுறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது.

கணினியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. இதனால் முதுகுத்தண்டு நேராகா இருக்கும். இது போல் செய்வதால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம்.

பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்தது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.

டைப் செய்யும் போது முழங்கைகள், இடையின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு சிறப்பாக சப்போர்ட் கொடுக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடியும். அதோடு தோள்பட்டை வலியினையும் எளிதாக குறைக்க முடியும்.

கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தினை குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம். இங்கே கூறப்பட்டுள்ளதெல்லாம் சின்ன சின்ன வழிகள் தான். இருப்பினும் இதை பின்பற்றுவதால் உடலை நல்லமுறையில் பாதுகாக்க முடியும்.

ஜிமெயிலில் தமிழ்மொழியில் டைப் செய்ய எளிய வழி!

தகவல்களை அனுப்ப நிறைய வசதிகள் வந்தாலும், வேலை நிமித்தமாக இ-மெயில் அனுப்பும் வழக்கம் இன்னும் மாறவில்லை. ஜிமெயிலில் தமிழில் டைப் செய்யவும் வசதிகள் உள்ளது. இதன் வழி முறையையும் கொஞ்சம் பார்க்கலாம்.

ஜிமெயிலில் தமிழ்மொழியில் டைப் செய்ய எளிய வழி!


ஜிமெயில் பக்கத்தில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு செட்டிங்ஸ் பக்கம் திறக்கப்படும். இதில் எனேபில்டு ட்ரேன்ஸ்லிட்டிரேஷன் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனை செலக்ட் செய்து வைக்க வேண்டும்.
அதன் பிறகு கீழே மொழிகளுக்கு தனியாக ஒரு பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பாக்ஸில் தமிழ் மொழியை செலக்ட் செய்து வைத்துவிட வேண்டும். பின்னர் ஸ்குரோல் செய்து கீழே பார்த்தால் சேவ் சேன்ஜஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்ய வேண்டும்.
அவ்வளவு தான் இனி மீண்டும் ஜமெயிலில், மெயில் டைப் செய்யும் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதில் டைப் செய்ய தொடங்கினால் தமிழில் எழுத்துக்கள் அச்சிடப்படுவதை காணலாம். ஜமெயிலில் டைப் செய்ய, இது மிக எளிய வசதியாக இருக்கும்.


ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் மெமரியை அவ்வப்போது கண்கானித்து கொள்வது மிக அவசியம். அதிக விலை போட்டு வாங்கும் ஸ்மார்ட்போன்களில், என்னதான் உயர்ந்த தொழில் நுட்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதன் வேகம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட்போன்களின் வேகம் குறைய மெமரியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இதனால் தேவையில்லாத விஷயங்களையும், தகவல்களையும் அவ்வப்போது அகற்றுவது சிறந்தது. அதிக மெசேஜ்கள், புகைப்படங்கள் நிறைய இடத்தை காத்து கொள்ளும். இதனால் புதிதாக ஏதேனும் தகவல்களை லோட் செய்ய வேண்டும் என்றால் தாமதமாகும். நிறைய புகைப்படங்கள் எடுத்தாலும், அதில் சரியில்லாதவற்றை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். இப்படி செய்யாமல் நிறைய புகைப்படங்களை ஸ்மார்ட்போன்களில் சேர்த்து வைத்து கொள்வதால், முக்கியமான நேரத்தில் புதிய புகைப்படங்களை க்ளிக் செய்ய முடியாமல் போகும்.ஸ்மார்ட்போன்களின் வேகம் குறைய மெமரியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இதனால் தேவையில்லாத விஷயங்களையும், தகவல்களையும் அவ்வப்போது அகற்றுவது சிறந்தது. அதிக மெசேஜ்கள், புகைப்படங்கள் நிறைய இடத்தை காத்து கொள்ளும். இதனால் புதிதாக ஏதேனும் தகவல்களை லோட் செய்ய வேண்டும் என்றால் தாமதமாகும்.
நிறைய புகைப்படங்கள் எடுத்தாலும், அதில் சரியில்லாதவற்றை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். இப்படி செய்யாமல் நிறைய புகைப்படங்களை ஸ்மார்ட்போன்களில் சேர்த்து வைத்து கொள்வதால், முக்கியமான நேரத்தில் புதிய புகைப்படங்களை க்ளிக் செய்ய முடியாமல் போகும்.
இதனால் புகைப்படங்களை டெலீட் செய்தால் தான் அடுத்த புகைப்படமோ, வீடியோவோ எடுக்க முடியும். தேவையில்லாத புகைப்படங்களை முதலில் டெலீட் செய்து கொள்வது அவசியம். இப்படி அடிக்கடி டெலீட் செய்ய நேரமில்லாதவர்கள், முக்கிய தகவல்களை பிசி கம்ப்யூட்டர்களில் ஸ்டோர் செய்து கொள்வது நல்லது. இதனால் ஸ்மார்ட்போனின் மெமரி கார்டில் நிறைய இடத்தினை தக்க வைத்து கொள்ள முடியும்.
டெக்ஸ்ட மற்றும் பிக்சர்மெசேஜ்களுக்கு, பிரத்தியேகமாக ஆட்டோமேட்டிங் டெலீட் செட்டிங்ஸ் வசதியினை செட் செய்து கொள்வது சிறந்தது. போன் மெமரியில் நிறைய இடத்தினை தக்க வைத்து கொள்ள வேண்டும். இதனால் புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றை எக்ஸ்டர்னல் மெமரி கார்டில் சேகரித்து கொள்வது நல்லது.
இது போல் மெமரியில் இருக்கும் தேவையில்லாத தகவல்களை நீக்குவதன் மூலம் மெமரி வசதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்பேஸை சரியாக தக்க வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் வேகத்தினையும் சரியாக பராமரித்து கொள்ள முடியும்.




Android என்றால் என்ன?

தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.
ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள்.

ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions):

ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள்.

இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்:

Android என்றால் என்ன?

சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும்.

ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:

Android என்றால் என்ன?

1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படிWidget-களை வைத்துக் கொள்ளலாம்.

2. Threaded SMS - நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும்.

3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும்.

4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும்.  உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை. :) :) :)

5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்).

மேலும்  பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்கவிக்கிபீடியாவில் பார்க்கவும்.

ஆன்ட்ராய்ட் பயன்பாடு:

ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.

Android Market:

ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. இறைவன் நாடினால் இதைப்பற்றி தனிப பதிவில் பார்ப்போம்.


மேலும் சில 

ஆன்ட்ராய்டு போனில் சிறப்பான மெமரியை பெற சில டிப்ஸ்!

Android Mobile பாதுகாப்பானதா?

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.