Breaking News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2
Ombudsman

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், 

அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.


வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.


இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.


அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.


அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.


அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக  
Ombudsman  ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 5

25/-ம் செலுத்தி உள்ளனர்.அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }"Ombudsman  சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.


மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.


இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.


எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை


PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS


Ombudsman

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை! ரூ100 கோடி அபராதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வர், எம்.எல்.ஏ., பதவிகளை இழந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கின்றனர். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கவர்னர் ரோசையா, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்தால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்ய வேண்டும்,
ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு அக்டோபர் 5 வரை தசரா விடுமுறை என்று அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நீதிபதி வீட்டில் அவசர வழக்கு விசாரிக்கும் நடைமுறையில் இல்லை.
தற்போதைய தகவல்படி அக்டோபர் 5&க்கு பிறகு தான் ஜாமீன் மனு விசாரிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் . இந்த வழக்கின் மேல் முறையீட்டை விசாரிக்க கர்நாடகா ஐகோர்ட்டிற்கு அதிகாரம் இல்லை என்பதால், ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டை மற்றுமே அணுக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
கோர்ட் வளாகத்தில் ஜெ., வுக்கு நெஞ்சுவலி
ஆஸ்பத்திரி அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வருகிறது...


2வது முறையாக பறி போன ஜெ.வின் முதல்வர் பதவி- அடுத்த முதல்வர் ஷீலா? ஓ.பி.எஸ்? செந்தில் பாலாஜி?

கபில்சிபல்
கபில்சிபல்

கபில்சிபல்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது. இதனால் ஆ.ராசாவுக்குப் பதில் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக பொறுப்பேற்ற கபில் சிபல் மத்திய அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று மறுத்தார்.
ஆனால் அதன்பிறகு தான் சி.பி.ஐ. விசாரணையில் பல ஆதாரங்கள் சிக்கி கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்த கபில் சிபல் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவர் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகை எவ்வளவோ அதே அளவு வாக்குகளை கபில் சிபல் பெற்றுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டது. கபில் சிபல் தேர்தலில் 1 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
இதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஒரு பைசா கூட இழப்பு இல்லை என்று சொன்னவருக்கு அதே எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கபில் சிபலுக்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் பி.சிதம்பரம், மணீஷ் திவாரி ஆகியோரும் ஒரு பைசா கூட இழப்பு இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் கபில் சிபலை டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் ஹர்ஷ்வர்த்தன் தோற்கடித்தார். 
ஆம்ஆத்மி வேட்பாளர் அததோஷ் 2–வது இடம் பெற்றார். 

கபில் சிபல் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

1
chennai central


சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலி 8 பேர் காயம் அடைந்தனர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9வது பிளாட்பார்மில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. காயம் அடைந்தவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை. குண்டு வெடிப்பில் கவுகாத்தி - பெங்களூர் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகள் சேதம் அடைந்தன.

தீவிரவாதிகள் சதியா?

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது.

அறிக்கை அளிக்க உத்தரவு:

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீடு அறிவிப்பு:

குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார். குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறினார்.

3
save indian economy


நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

சமீப காலமாக விலைவாசி உயர்ந்துவிட்டதே என்று அனைவரும் வருத்தப்படுகிறோம்  ..விலைவாசி உயர்வுக்கு அரசு மட்டும் காரணம் இல்லை நாமும்தான்  காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.


indian economy vs us economy

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

அரசு அந்நிய நேரடி முதலீடு மூலம் ஒரு காரணம் என்றல் அந்த அந்நிய நிறுவனங்களின் பொருள்களை வாங்கி நாமும்   தவறு செய்கிறோம் ..

உதாரணமாக :

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!
made in india


நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..



unity to save economy


கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--
some list of products to buy

COLD DRINKS:-

வாங்கவும்:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-

INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-

USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-

INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-

USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-

USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-

USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-

USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-

USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-

INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-

USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-

USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-

USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-

INSTEAD OF VODAFONE.

Food Items:-

வாங்கவும்:-

Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-

INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.) செல்போன்களில் இருந்து நாள்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ்.களை திருடியிருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. என்.எஸ்.ஏ. முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென்னின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி கார்டியன் நாளிதழ் மற்றும் சேனல் 4 செய்தி தொலைக்காட்சி ஆகியவை இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.








உலகம் முழுவதும் செல்போன்களில் இருந்து அனைத்துவிதமான தகவல்களையும் என்.எஸ்.ஏ. திருடியுள்ளது. இந்த தகவல்களை பிரிட்டன் உளவாளிகளுக்கும் என்.எஸ்.ஏ. அளித்துள்ளது. ஆனால் முழுமையான தகவல்களை அளிக்காமல் குறிப்பிட்ட சில தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.


கிரெடிட் கார்டு குறித்து வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்களையும் என்.எஸ்.ஏ. திருடியுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட கிரெடிட் கார்டு வங்கி வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்றங்கள் அவர்களின் எஸ்.எம்.எஸ். தகவல்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி பணப் பரிமாற்ற தகவல் களும் கண்காணிக்கப்பட்டுள்ளன.


இதற்காக பல்வேறு நிறுவனங்க ளுடன் என்.எஸ்.ஏ. ரகசிய உடன் படிக்கை மேற்கொண்டிருந் ததாகத் தெரிகிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஜிசிஎச்கியூ என்ற அமைப்புடன் இணைந்து அந்த நாட்டு செல்போன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.


இதுகுறித்து ஜிசிஎச்கியூ வெளி யிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டன் சட்டவிதிகளுக்கு உள்பட்டுதான் நாங்கள் செயல்பட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து என்.எஸ்.ஏ. வட்டாரங்கள் கூறியபோது, சட்டப்பூர்வமாகவே எஸ்.எம்.எஸ். தகவல்கள் திரட்டப்பட்டன, நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, இதுதொடர்பாக வெளியான தகவல்கள் உண்மைக் குப் புறம்பானவை என்று தெரி வித்துள்ளது.


செல்போன்களில் இருந்து திரட்டப்பட்ட எஸ்.எம்.எஸ். தகவல் கள் டிஷ்பயர் என்ற பெயரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.


என்.எஸ்.ஏ. அத்துமீறல்கள்


உலகம் முழுவதும் நாள்தோறும் 500 கோடி தொலைபேசி உரை யாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டு கேட்டதாக அண்மையில் செய்தி வெளியானது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 35 நாடுகளின் தலைவர்களின் செல்போன் உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் உலக நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் களில் ரகசியமாக சிப் சொருகி தகவல்கள் திருடப்பட்டது குறித்தும் அண்மையில் செய்தி வெளியானது. இந்தியாவில் ஒரு மாத காலத்துக்குள் அரசியல் நிலவரம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி குறித்த திட்டங்கள் குறித்த 1350 கோடி தகவல்களை என்.எஸ்.ஏ. திருடியதாக ஸ்னோடென் ஏற்கெனவே ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.


என்.எஸ்.ஏ.வின் அத்துமீறல்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கும் வேளையில் அதன்மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.


நன்றி:தி ஹிந்து

11:49 - 29/11/2013

தேஜ்பால் பிற்பகல் வரை இடைக்கால ஜாமீன்


16:26 - 28/11/2013

தெகல்கா வழக்கு: தேஜ்பால் கோவா போலீஸ் முன் தோன்றும் இரண்டு நாட்கள் நேரம் முற்படுகிறது


11:47 - 27/11/2013

தெகல்கா வழக்கு: கோவா போலீஸ் சம்மன் தருண் தேஜ்பால்


11:49 - 26/11/2013

தல்வார் தம்பதி ஆருஷி-Hemraj கொலை வழக்கில் குற்றவாளியாக


12:04 - 25/11/2013

2 மணிக்கு தீர்ப்பு: ஆருஷி-Hemraj கொலை மர்மம்


11:56 - 22/11/2013

AAP சிக்கவைக்கும் நடவடிக்கையில் விசாரிக்க குழு அமைக்கிறது


11:58 - 21/11/2013

தருண் தேஜ்பால் சக தவறான மீது தெகல்கா ஆசிரியர் ஒதுக்கி படிகள்: மீடியா ரெபோ ...


11:53 - 20/11/2013

விளையாட்டு அமைச்சகம் பத்ம பூஷன் ஐந்து லியாண்டர் பயஸ் பரிந்துரை: ஊடக அறிக்கை


11:34 - 19/11/2013

நாசா செவ்வாய்க்கு மேவன் பணி தொடங்குகிறது


12:05 - 18/11/2013

சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது வேண்டும்


11:58 - 14/11/2013

அமெரிக்க விமர்சன இந்தியா பாதுகாப்பு கூட்டு: அமெரிக்க விமானப்படை தளபதி


12:12 - 13/11/2013

நவம்பர் 15 ம் தேதி இந்தியா வருகை ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்


16:25 - 12/11/2013

உதவி குழுக்களும் பிலிப்பைன்ஸ் தைபூன் Haiyan பதிலளிக்க


12:13 - 12/11/2013

தில்லி தேர்தல்: மேலும் முதல் முறையாக வாக்காளர்கள் ஆனால் கவரும் கடினம்


12:01 - 11/11/2013

காங்கிரஸ், பாஜக ராஜஸ்தான் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது


11:08 - 08/11/2013

காங்கிரஸ் எம்.பி. 13 வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடுகிறது


11:02 - 07/11/2013

காங்கிரஸ், பாஜக நரேந்திர மோடி பாதுகாப்பு கவர் கம்பு


12:04 - 06/11/2013

நாம் எதிர் கட்சிகள் ஈடுபட: நரேந்திர மோடி மீது பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்


11:53 - 05/11/2013

கவுண்டவுன் செவ்வாய் பயணம், இன்று ஆஃப் தூக்கி விண்கலம் தொடங்குகிறது


12:11 - 01/11/2013

பாட்னா குண்டுவெடிப்பு காயம் சந்தேக மருத்துவமனையில் காலமானார்

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.