பேராசை இல்லாது இருந்தால்,  வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக  இருக்கலாம் சிறுகதை..

பாண்டிய நாட்டு அரண்மனையில் அரசரின் பிறந்த நாள் விழாவை கோலாகலாமாகக் கொண்டாடினர். வந்தவர்களுக்கெல்லாம் இல்லை என்னாது வாரி வழங்கினார் அரசர். அங்கே வந்த மலையன் என்பவன் அரசரை பணிவாக வணங்கினான்.

"அரசர் பெருமானே! நான் வறுமையில் வாடுகிறேன். வளமாக வாழ நீங்கள் அருள் புரிய வேண்டும்,'' என்று பணிவாக வேண்டினான்.

"உனக்கு என்ன வேண்டும்? தயங் காமல் கேள்,'' என்றார் அவர்.
பேராசை கொண்ட அவனுக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை.

"அரசர் பெருமானே! என் உள்ளம் மகிழு மாறு நீங்கள் பொற்காசுகளைத் தாருங்கள்,'' என்றான் அவன்.

இவன் பேராசை கொண்டவனாக இருக் கிறான். அதனால்தான் இப்படிக் கேட்கிறான் என்று நினைத்த அரசர், அவனைக் கருவூலத் திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே குவியல் குவியலாகப் பொற்காசு கள் கொட்டிக் கிடந்தன. அவற்றை வியப் புடன் பார்த்தான் அவன்.

"உனக்கு எவ்வளவு பொற்காசுகள் விருப்பமோ அவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லலாம்,'' என்றார் அவர்.

"நீ இங்கிருந்து ஒரே ஒருமுறை எவ்வளவு பொற்காசுகளை வேண்டு மானாலும் எடுத்துச் செல்லலாம். வெளியே செல்லும் வரை அவற் றைக் கீழே வைக்கக் கூடாது. கீழே வைத்தால் பொற்காசுகள் மீண்டும் கருவூலத்தில் சேர்ந்து விடும்,'' என்றார்.

அவனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்.

"நான் வலிமையாக இருக்கிறேன். இங்கிருந்து ஏராளமான பொற்காசுகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வந்தன் நான்தான்' என்று மகிழ்ச்சி அடைந்தான் அவன்.

அங்கிருந்த சாக்குப் பை ஒன்றை எடுத்தான். அதற்குள் பொற்காசுகளை அள்ளி அள்ளிக் கொட்டினான்.பையில் பாதி நிரம்பியது. அதைத் தூக்கிப் பார்த்தான். அவனால் தூக்க முடிந்தது. பேராசை கொண்ட அவன், இன்னும் தன்னால் தூக்க முடியும் என்று நினைத்தான்.

மேலும், பொற்காசுகளைப் பைக்குள் போட்டான்.

அப்போதும் அவனுக்கு நிறைவு ஏற்படவில்லை.

கருவூல வாயில் வரை தூக்கிச் செல்ல வேண்டும். சிறிது தொலைவுதானே. எப்படியும் தூக்கிச் செல்லலாம் என்று நினைத்தான்.

பை நிரம்ப பொற்காசுகளைப் போட்டான்.அந்தப் பையை அசைத்துப் பார்த்தான். மிகவும் கனமாக இருந்தது.

முயற்சி செய்து அந்தப் பையைத் தூக்கி முதுகில் வைத்து அதைச் சுமந்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.


பத்தடி எடுத்து வைத்திருப்பான். அதற்கு மேல் அவனால் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியவில்லை; பையைக் கீழே போடவும் விரும்பவில்லை.

முதுகெலும்பு முறிந்து அங்கேயே விழுந் தான் அவன். பொற்காசுப் பை அவன் மேல் கிடந்தது. அப்படியே இறந்து போனான்.


அங்கே வந்த அரசர் அவன் கீழே விழுந்து இறந்து கிடப்பதைப் பார்த்தார்.

பேராசை இல்லாது இருந்திருந்தால், இவன் வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாக இருந்து இருக்கலாம். பேராசையால், அவனுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினர் அரசர்.
'பேராசை பெருநஷ்டம்' என்று சும்மாவா சொன்னார்கள்!

முருங்கையின் மருத்துவ மகிமை...

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(Sperm)பெருகும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.

தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

முருங்கையின் மருத்துவ மகிமை...


முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்,
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது,
புரதம் – 6.7%,
கொழுப்பு – 1.7%,
தாதுக்கள் – 2.3% மற்றும்
கார்போஹைட்ரேட்கள் – 12.5%.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.