computer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி


(Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.

China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??

நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று

அந்த தளத்திற்கு செல்ல Click Here


உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும்.


இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான்.


பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.

இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும்  உபயோகிக்க‌ முடியும்..

Memorycard

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . 
சரிதானே ?
sony Memory Card class10

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது

நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள்!!



2
பொதுவாக கம்ப்யூட்டர்களில் எத்தகைய தொழில் நுட்பங்கள் வந்தாலும், வேகம் இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிடும்.

Increase System Speed
Increase System Speed

சொந்த பயன்பாட்டிற்காக பயன்படு்ததும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக பயன்படு்த்தும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி நாளடைவில் இதன் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது.
இதற்கு முதலில் தேவையில்லாத ஃபைல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து அழிப்பது நல்லது. அன்றாடம் அப்படி தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்தும், கம்ப்யூட்டரின் வேகம் குறைவதாக இருந்தால் நாமாகவே சின்ன சின்ன முயற்சிகளை செய்து கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்கலாம்.
முதலில்
 ஸ்டார்ட் பட்டனை அழுத்தி —> அதில் ப்ரோக்கிராம் பட்டனை அழுத்த வேண்டும்.

அதன் பின் அக்சஸரீஸ் பட்டனை அழுத்தி —> சிஸ்டம் டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டர் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷன்களில் க்ளீன் அப் என்ற பட்டனை க்ளிக் செய்தால் தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்படும் .
Disk Fragmentation
Disk Fragmentation

உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டீஃப்ரேக்மென்ட் செய்வதன் படத்தினை பார்க்கவும். இதில் டீஃப்ரேக்மென்ட் என்ற பட்டனை அழுத்தி, எளிதாக சிதறி கிடக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம்.

இதன் மூலம் ‘சி’ ட்ரைவில் ஆங்காங்கே சிதறி இருக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம். பயன்படுத்தாத சில ஃபைல்கள் அடுத்து அடுத்து சேர்ந்து கொண்டே போவதன் மூலம் கூட கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.
வாரம் ஒரு முறை டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டேஷன் செய்து கொள்வது, கம்ப்யூட்டரின் வேகம் குறையாமல் இருக்க உதவும். இந்த சின்ன விஷயங்கலெல்லாம் தினமும் கம்ப்யூட்டரினை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.


கணனி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் HP நிறுவனமானது தற்போது Spectre 13 Ultrabook எனும் புதிய மடிக்கணனியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

15 மில்லி மீற்றர்கள் தடிப்புடைய இக்கணினி யானது 13.3 அங்குல IPS தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

மேலும் இவற்றில் Core i7 Processor பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 8 GB RAM காணப்படுகின்றது.

Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கணனிகளில் சேமிப்பு நினைவகமாக 256 GB தரப்பட்டுள்ளது.

இவற்றின் விலையானது 999.99 டொலர்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


CompactFlash நிறுவனமானது கடந்த வருடம் CFast 2.0 மெமரி கார்ட் தொடர்பான அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடிய மெமரி கார்ட் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது ...

இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த மெமரிக் கார்ட் ஆனது உலகின் வேகம் கூடிய தரவுப்பரிமாற்றம் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இதன் அடிப்படையில் இதிலுள்ள தரவுகள் 450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடியதாகவும், 350 MB/s எனும் வேகத்தில் பதிவேற்றம் செய்யக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

256 GB சேமிப்பு கொள்ளவு உடைய CFast 2.0 மெமரி கார்ட்டின் விலையானது 1,809 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடிய மெமரி கார்ட் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது ...


இன்று உலகில் பல பிராஸஸர்கள் வந்து விட்டன, ஆனால் அவையனைத்திற்க்கும் தலைமை என்று சொன்னால் இன்டெல்தான். இன்டெல் நிறுவனம் கணினியின் ப்ராஸஸர்கலுக்கு பெயர் பெற்ற ஒன்று. பல கணினி நிறுவனங்களுக்கும் இன்டெல் ப்ராசசர்களை உள்ளடக்கி கணினிகளை வெளியிட்டு வருகின்றன. நேற்று இன்டெல் நிறுவனம் டெல்லியில் தனது புதிய 4-ஆம் தலைமுறை ப்ராசசர்களை அறிமுகம் செய்தது. இன்டெல் நிறுவனம் இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது. முந்தைய தலைமுறை ப்ராசசர்களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.





Operating System Live CD என்றால் என்ன ...?? Free Live CDs...!!!
சாதாரணமாக நீங்கள் உங்கள் கணினியை தொடங்கியவுடன், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்கில் பதியப்பட்ட ஆபரேட்டிங் என்ன செய்யும்? 



கணிப்பொறி இயக்கப்பட்டவுடன் முதன் முதலில் Operating System என்ற சொல்லக்கூடிய இயங்குதள புரோகிராம்களை Hard Disc அடுக்குகளில் ஏற்றும். அதன் பிறகே அதில் குறிப்பிட்ட செயல்முறையில் சில கோப்புகளை இயக்க தொடங்கும். இக்கோப்புகள் கணினியில் உள்ள Hardware களை சரிபார்க்கும். Driver Files களை Memory-க்கு ஏற்றிக்கொள்ளும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களுக்கு ஏற்ற, அதற்கு தேவையான Library Files (கோப்புகளை) தயார்படுத்தி வைக்கும். இதுதான் கணினி உயிர்ப்பு பெற்றவுடன் செய்யும் வேலைகள். 



Operating System Live CD என்றால் என்ன ...?? Free Live CDs...!!!Operating System Live CD என்றால் என்ன ...?? Free Live CDs...!!!

சரி.. Hard Disk -ல் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும் வேலைகளை, ஹார்ட் டிஸ்க்கில் பதியபட்டாமல், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் CD யில் பதியப்பட்டு, கணினியை இயக்கினால் என்ன? 



இந்த சிந்தனையில் விளைவாக உருவானவே லைவ் சி.டி. 





லைவ் சி.டி. என்றால் என்ன? இந்த லைவ் சி.டி என்ன செய்யும்? 





ஹார்ட் டிஸ்க்கில் நாம் பதித்து இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும்,  இந்த சிடி உள்ளடக்கியிருப்பதால், ஆபரேட்டிங் சிஸ்டம் (operating system) செய்யும் அதே வேலையை இந்த லைவ் சி.டி. யும் செய்யும்.  





அதாவது, பொதுவாக கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில்(Hard Disk) ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் (OS files) பதியப்பட்டிருக்கும்.  அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குகான கோப்புகள்  இங்கு குறுவட்டு என்று சொல்லக்கூடிய சி.டியில் உள்ளது அவ்வளவே.





இதில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் மிக நுணுக்கமாக, செறிவுடன் கூடிய கம்ப்ரஸ் செய்யப்பட்டுள்ளது. சிடியை கணினியில் செலுத்தி இயக்கம் பெறும்பொழுது இதிலுள்ள கோப்புகள் கணினியில் உள்ள Ram Memory -ல் uncompress ஆகும்.  அதன் பிறகு அந்த RAM யை ஒரு Disk Driver ஆக கணினி டிரைவர் கோப்புகளுக்கு அறித்துவிடும். அதன் பிறகு எப்பொழுதும் போல புரோக்கிராம் கோப்புகளை அங்கிருந்து செயல்படுத்த தொடங்கும். 





அதாவது சிடியில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகளை அன்கம்ப்ரஸ் ரேமை (RAM) உபயோகித்துக்கொள்ளும். பிறகு அந்த ரேமையே டிஸ்க் டிரைவாக (Disk Drive) பாவித்து கணினியிலுள்ள அனைத்து டிரைவர் கோப்புகளுக்கும் 'இது தான் டிஸ்க் டிரைவ்' என்பதை உணர வைத்துவிட்டு, வழக்கம்போல ஆபரேட்டிங் சிஸ்டத்திலுள்ள புரோகிராம் கோப்புகளை செயல்படுத்த தொடங்கும்.





 பெரும்பாலான Booting disk கள் அனைத்தும் இதே செயல்பாட்டை தொடர்ந்து செய்துகொண்டுள்ளன. OS இன்ஸ்டால் செய்யும்பொழுது இதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது.





இவற்றையே பணம் கொடுத்து உபயோகிக்காமல் இலவசமாக உபயோகிக்க என்ன வழி என்று சிந்தித்ததின் விளைவே ஓப்பன் சோர்ஸ்(Open Source) என்று சொல்லக்கூடிய திற மூல அங்கத்தின் உறுப்பினர்கள் இந்த செயல்முறைகளை ஆராய்ந்து மேம்படுத்தி, பல்வேறு இயக்க முறைமைகளைக் கொண்டு லைவ் சிடிக்களை கண்டுபிடித்து இலவசமாக வெளியிட்டுள்ளனர். 





இன்று லினக்ஸ்சின் உபுண்டு(Ubuntu), குபுண்டு(gubuntu) ஆகிய லைவ் சிடிக்கள் கிடைப்பதோடு, விண்டோஸ் லைவ் சிடிக்களும் இணையத்தில்  இலவசமாக கிடைக்கின்றன. 





இலவச லைவ்  சி.டி.க்களை பெற்றுக்கொள்ள கீழ்க்கண்ட இணைப்புகள் உங்களுக்கு உதவும். 

1. shipit.ubuntu.com
2. www.frozentech.com/content/livecd.php
மேலும் google Search-ல் free live operating system cd என்று தேடினால் உங்களுக்கு நிறைய இலவச ஆப்பரேட்டிங் லைவ் சிடிக்களுக்கான தங்கள் கிடைக்கும்.

இப்பொழுதெல்லாம் கணினிகளுக்கான ஹார்ட் டிஸ்க்குகளெல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது. எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கி இணைக்கிறோம்.

ஹார்ட் டிஸ்க்குகலில் இடம் பிடிக்கும் கோப்புகளை அழிக்க...

 ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு “low disk space” என்ற செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம்.நம் டிஸ்க்கில் பைல்களை உருவாக்குவதும், மற்றவற்றிலிருந்து காப்பி செய்து வைப்பதும் மிக எளிதாக உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றுக்கு இரண்டாக காப்பி செய்யப்பட்டவற்றை நீக்குவதும், தேவையற்றவற்றை அழிப்பதும் சற்று சிரமமான, நேரம் எடுக்கும் வேலையாகவே உள்ளது எனவே தான் ஹார்ட் டிஸ்க்கில் சேரும் பைல்களின் எண்ணிக்கை குறித்தோ, அது எடுத்துக் கொள்ளும் இடம் குறித்தோ கவலை கொள்வது இல்லை. மேலே சுட்டிக் காட்டியது போல செய்தி வரும்போதுதான், கவலை கொண்டு அதற்கான வழிகளைத் தேடுகிறோம்.குவிந்திருக்கும் பைல்களில் எது அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளது, 

எதனை நீக்கலாம் என்று குறுகிய நேரத்தில் அறியமுடிவதில்லை. இந்த தகவல்கள் நமக்குக் கிடைத்தால், அவற்றின் அடிப்படையில், பைல்களை நம்மால் நிர்வகிக்க முடியும். இதற்கு நமக்கு உதவும் வகையில், இலவச புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது.


இதன் பெயர் WinDirStat.


இதனைத் தரவிறக்கம் செய்து இயக்கினால், அது கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவ் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பின்னர், நம் டிஸ்க்கில் எத்தகைய பைல்கள், எவ்வளவு இடம் எடுத்துக் கொள்கின்றன என்று வண்ண வரைபடத்தில் காட்டுகிறது. ஒவ்வொரு வகை (MP3, ZIP, EXE, JPEG, etc.) பைலுக்கும் ஒரு வண்ணம் தரப்பட்டு, அவை கலந்த சதுரங்களால் காட்டப் படுகின்றன.


இந்த வண்ண சதுரங்களும், பைலின் அளவிற்கேற்ப சிறியதாகவும், பெரியதாகவும் காட்டப்படுகின்றன. இதன் அடிப்படையில், நாம் எந்த பைல்களை அழிக்கலாம் என முடிவு செய்து, நீக்கலாம். அல்லது மொத்தமாக ஒரு வகை பைல்களை நீக்கலாம். எடுத்துக்காட்டாக ஸிப் செய்யப்பட்ட பைல்களிலிருந்து, பைல்களைப் பெற்ற பின்னரும், ஸிப் பைல்களை நாம் கம்ப்யூட்டரில் வைத்திருப்போம்.

இவற்றை மொத்தமாக நீக்கலாம். இதே போல நாம் அவ்வப்போது தற்காலிகமாக சில வகை பைல்களை டவுண்லோட் செய்து பயன்படுத்திய பின்னர் நீக்காமல் வைத்திருப்போம். இவற்றையும் மொத்தமாக நீக்கலாம். குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருக்கும் சில பைல்களை நீக்கலாம்.

இதனை எப்படி மேற்கொள்வது?


WinDirStat புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின்னர், எந்த ட்ரைவ் குறித்த பைல் தகவல்களைக் காண விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அந்த ட்ரைவினை ஸ்கேன் செய்து தகவல்களைத் தர, புரோகிராம் 5 முதல் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஸ்கேன் முடிந்தவுடன், ட்ரைவ் குறித்த தொகுப்பு தகவல்களுடன் ஒரு திரை காட்டப்படும்.


இதன் முதல் பாதியில், பைல்களும் போல்டர்களும் அவற்றின் அளவிற்கேற்ப வரிசைப் படுத்தப்பட்டு காட்டப்படும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது பைலைக் கிளிக் செய்தால், அதன் கலர் தொகுதி கீழாகக் காட்டப்படும். அல்லது மிகப் பெரிய பைல்களை, அதாவது, டிஸ்க்கில் அதிக இடம் எடுக்கும் பைல்களை, அதன் அளவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.


அடுத்து எதனை நீக்க வேண்டும் என முடிவெடுக்கிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்து டெலீட் செய்திட கட்டளை கொடுக்கலாம். இதில் இரண்டு வகை ஆப்ஷன் தரப்படுகிறது. முதலாவதாக, (“Delete (to Recycle Bin”) அழித்து ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு சென்று, பின்னர் அதனை ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்குவது. இரண்டாவதாக, நேரடியாக “Delete (no way to undelete)” அதனைக் கம்ப்யூட்ட ரிலிருந்து அடியோடு நீக்குவது.


இந்த முறையில் தேவையற்ற, அதிக இடத்தை எடுத்துக் கொண்டிருக்கும் பைல்களை நீக்கலாம். இப்படியே வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை இந்த புரோகிராமினை இயக்கி, டிஸ்க் இடத்தை மீட்கலாம். எப்போதும் முதல் முயற்சியிலேயே, ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல், அழிக்கப்படுவதனையே தேர்ந்தெடுக்கவும்.


ஏனென்றால், ரீசைக்கிள் பின்னிலிருந்து பின்னாளில் அழித்தாலும், அந்த பைலின் சில அம்சங்கள், நம் கம்ப்யூட்டரில் எங்காவது வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.


Mouse என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கணிப்பொறிகளுக்கான சுட்டெலியின் அட்டைகளை நாம் தினசரிப்பயன்பாட்டில் நிறைய பார்த்திருக்கிரோமல்லவா? ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை.
Mouse என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கணிப்பொறிகளுக்கான சுட்டெலியின் அட்டைகளை நாம் தினசரிப்பயன்பாட்டில் நிறைய பார்த்திருக்கிரோமல்லவா?
ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை.

2

Mouse என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கணிப்பொறிகளுக்கான சுட்டெலியின் அட்டைகளை நாம் தினசரிப்பயன்பாட்டில் நிறைய பார்த்திருக்கிரோமல்லவா? ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை.

3

Mouse என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கணிப்பொறிகளுக்கான சுட்டெலியின் அட்டைகளை நாம் தினசரிப்பயன்பாட்டில் நிறைய பார்த்திருக்கிரோமல்லவா? ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை.

4

Mouse என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கணிப்பொறிகளுக்கான சுட்டெலியின் அட்டைகளை நாம் தினசரிப்பயன்பாட்டில் நிறைய பார்த்திருக்கிரோமல்லவா? ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை.

5

Mouse என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கணிப்பொறிகளுக்கான சுட்டெலியின் அட்டைகளை நாம் தினசரிப்பயன்பாட்டில் நிறைய பார்த்திருக்கிரோமல்லவா? ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை.

6

Mouse என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கணிப்பொறிகளுக்கான சுட்டெலியின் அட்டைகளை நாம் தினசரிப்பயன்பாட்டில் நிறைய பார்த்திருக்கிரோமல்லவா? ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை.


கூகுள் தயாரிக்கும் குரோம்புக் என்ற லேப்டாப்பை பள்ளிக் குழந்தைகளுக்காக குறைந்த விலையில் வெளிவிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை சுமார் ரூ.4500 இருக்கலாமெனவும் கூறப்படுகிறது.

இந்த குரோம்புக், அடிப்படையில் குறைந்த அளவிலான சிறப்பம்சம்களை மட்டுமே கொண்டிருக்கும். பள்ளிகளுக்கு மட்டும் குரோம்புக்கள் ரூ.4500க்கு கிடைக்கும். மற்றபடி இதன் சந்தை விலை மாறுபடும்.

படிப்பு சார்ந்த இந்தச் சிறப்பு சலுகை குரோம்புக் சீரிஸ் 5க்கு மட்டும் பொருந்தும். இதற்கான சந்தை விலை சுமார் ரூ.13,500 நிர்ணயிக்கப்பட்டிருக்கலாமென இணைய வல்லுனரொருவர் தெரிவித்துள்ளார். இந்த குரோம்புக்கள் சாம்சங் நிறுவனத்திடமிருந்து வரும் டிசம்பர் 21ஆம் தேதி வாங்கப்படுகிறது.
GOOGLE

MIT விரிவுரையாளர் திரு.நிக்கோலஸ் நெக்ரோபோன்ட் என்பவர். “ஒரு குழந்தைக்கு ஒரு லேப்டாப்” என்ற அறக்கட்டளையை நடத்திவருகிறார். இவருடைய அறக்கட்டளையின் இலட்சியங்களும் சரியாக நிறைவேற்ற முடியவில்லை. அதாவது, ஒரு குழந்தைக்கு ஒரு லேப்டாப் தரமுடியவில்லை என்கிறார் அவர். இவருடைய XO எனப்படும் லேப்டாப்கள் தற்பொழுது விலை ரூ.10,000க்கு விற்கப்படுகின்றன.

இவர் இன்னும் லேப்டாப்களின் விலையைக் குறைக்க பல முயற்ச்சிகளையும், உதவிகளையும் நாடிவருகிறார்.

சாதனங்கள் சார்ந்த வியாபாரச்சந்தையின் முக்கியப் புள்ளிகளான இன்டெல் கார்ப், மைக்ரோசாப்ட் கார்ப், HP மற்றும் டெல் Inc போன்றவையும் தங்கள் சாதங்களின் விலையைக் குறைத்தே விற்பனை செய்யவுள்ளன. உதாரணத்திற்கு நெட்புக்.

எப்படியோ விலைகுறைந்த மற்றும் தரம் நிறைந்த லேப்டாப்கள் மக்களுக்கு கிடைக்கப்பெற்றால் நல்லதே!


பல சூப்பரான வீடியோ கேம்களைக் களமிறக்கி இருக்கும் ரோவியோ நிறுவனத்தின் ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்டார் வார்ஸ் என்ற வீடியோ கேம் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த வீடியோ கேமை உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் விளையாடி வருகின்றனர். அந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேமின் பல புதிய வெர்சன்களை ரோவியோ ஏற்கனவே களமிறக்கி இருக்கிறது.
Angry Birds

அந்த வகையில் தற்போது ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்டார் வார் கேமின் புதிய வெர்சனை மிக விரைவில் ரோவியோ களமிறக்க இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த புதிய வெர்சனின் ட்ரைலரை ரோவியோ தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த ட்ரைலருக்கு அபிசியல் கேம்ப்ளே ட்ரைலர் என்று ரோவியோ பெயர் சூட்டி இருக்கிறது.
இந்த ட்ரைலர் ஆங்கிரி பேர்ட்ஸ் கேமின் கதாபாத்திரங்களான ஸ்கைவாக்கர், பிரின்சஸ் லியா, மற்றும் சூபக்கா போன்றவற்றை விவரிக்கிறது. மேலும் இந்த புதிய கேம் வெர்சனின் ஒலி அமைப்பையும் இந்த ட்ரைலர் மூலம் அறிய முடிகிறது. மேலும் இந்த புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் வெர்சன் கண்டிப்பாக மிகவும் திரிலிங்காக இருக்கும் என்று இந்த ட்ரைலர் மூலம் அறிய முடிகிறது.


ஸ்கைப் மற்றும் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இரண்டு முக்கிய தயாரிப்புகளாகும். இந்த இரண்டு நொட்வொர்க்குகளிலும் ஏராளமான உறுப்பினர்கள் உள்ளனர்.

Skype on TV
தற்போது லைவ் மெசஞ்சரை நீக்கிவிட்டு ஸ்கைப்பை மட்டும் முழுவீச்சில் களமிறக்க இருக்கிறது மைக்ரோசாப்ட். இந்த தகவை இன்று மைக்ரோசாப்ட் உறுதி செய்திருக்கிறது. அதன்படி வரும் 2013ல் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக ஸ்கைப் மட்டும் செயல்படும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது.
மேலும் 100 மில்லியன் லைவ் மெசஞ்சர் வாடிக்கையாளர்களை ஸ்கைப்பில் இணைக்க இருக்கிறது மைக்ரோசாப்ட். எனவே லைவ் மெசஞ்சர் சேவையை நிறுத்தினாலும் மைக்ரோசாப்ட்டுக்கு எந்த இழப்பும் இருக்காது என்று தெரிகிறது. மேலும் லைவ் மெசஞ்சரில் இருந்து ஸ்கைப்பிற்கு மாற இனி ஸ்கைப் உதவி செய்யும் வகையில் ஸ்கைப் சேவை இருக்கும் என்று தெரிகிறது.


கடந்த வாரம் மைக்ரோசாப்ட் தனது புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தைக் களமிறக்கியது. கடந்த செவ்வாய் வரை இந்த விண்டோஸ் 8 இயங்கு தளத்தை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் அப்க்ரேட் செய்துள்ளனர். அதனால் மைக்ரோசாப்ட் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
Microsoft vs Sarfcast

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சர்ப்காஸ்ட் என்ற ஒரு நிறுவனம் மைக்ரோசாப்ட்டுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விண்டோஸ் 8ல் உள்ள லைவ் டைல்ஸ்கள் தமக்கு சொந்தமானவை என்றும் அவற்றை 90களிலே தாங்கள் வெளியிட்டிருப்பதாகவும், அவற்றை மைக்ரோசாப்ட் காப்பி அடித்திருப்பதாகவும் இந்த சர்ப்காஸ்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் மீது புகார் எழுப்பி இருக்கிறது.
இந்த லைவ் டைல்ஸ்களை மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் இந்த லைவ் டைல்ஸ் தனது நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அதை மைக்ரோசாப்ட் உரிமை கொண்டாட முடியாது என்றும் சர்ப்காஸ் தெரிவித்திருக்கிறது.
தற்போது இந்த சர்ப்காஸ் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்திலும் புகார் செய்திருக்கிறது. ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு மைக்ரோசாப்ட்டுக்கு எதிராக இருந்தால், சர்ப்காஸ்ட் நிறுவனத்திற்கு இழப்பீடாக ஒரு பெரிய தொகையை மைக்ரோசாப்ட் வழங்க வேண்டும். அப்படி ஒரு பெரிய தொகையை வழங்க வேண்டியதாக இருந்தாலும் மைக்ரோசாப்ட்டுக்கு அது ஒரு பெரிய இழப்பாக இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணனிப் பாவனையாளர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ள விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கென விசேடமானதும், பிரத்தியேகமானதுமான Shortcut Key-கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவற்றினை பின்வரும் அட்டவணையிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
Win + Start Typing - Search your PC.
Ctrl + Plus (or) Ctrl + Minus - Zoom in or out of a large number of items.
Ctrl + Scroll Wheel - Zoom in or out of a large number of items.
Win + C - Open the Charms.
Win + F - Open the search charm to search files.
Win + H - Open the share Charm.
Win + I - Open the Settings Charm.
Win + J - Switch the main app and snapped app.
Win + K - Open the Devices charm.
Win + O - Lock the screen orientation.
Win + Q - Open the Search charm to search apps.
Win + W - Open the Search charm to search settings.
Win + Z - Show the commands available in the app.
Win + Space - Switch input languages and keyboard layout.
Win + Ctrl + Space - Change to a previously selected input.
Win + Tab - Cycle through open apps (except desktop app).
Win + Ctrl + Tab - Cycle through open apps (except desktop apps) and snap them as they are cycled.
Win + Shift + Tab - Cycle through open apps (except desktop apps) in reverse order.
Win + PgUp - Move the Start screen and apps to the monitor on the left.
Win + PgDown - Move the Start screen and apps to the monitor on the right.
Win + Shift + Period(.) - Snaps an app to the left.
Win + period (.) - Snaps an app to the right.
இவை தவிர முன்பு காணப்பட்ட வழமையான Shortcut Key-களும் இவ் இயங்குதளத்தில் செயற்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையான Shortcut Key-களை தெரிந்துகொள்வதற்கு -http://windows.microsoft.com/en-IN/windows-8/keyboard-shortcuts


ஆப்பிள் தனது கவனத்தை தற்போது இந்தியாவின் பக்கம் திருப்பி இருக்கிறது. அதன் விளைவாக தற்போது தனது ஐமேக் மற்றும் மேக் மினி டெஸ்க்டாப்புகள் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்புகளை இந்திய கணினிச் சந்தையில் களமிறக்கி இருக்கிறது. இந்த 3 சாதனங்களும் மேக் ஒஎஸ் எக்ஸ் மவுண்டைன் லயன் சிப்புடன் வருகின்றன.
Apple Macbook Pro

13 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்பை எடுத்துக் கொண்டால் இந்த லேப்டாப் 13.3 இன்ச் ரெட்டின் டிஸ்ப்ளே மற்றும் ஐபிஎஸ் பேனலுடன் வருகிறது. அதோடு 8ஜிபி ரேம் மற்றும் இன்டல் கோர் ஐ7 ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வருவதால் இந்த லேப்டாப் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்பதில் ஐயமில்லை.
வாட் வரியோடு சேர்த்து இந்த மேக்புக் ப்ரோ 128ஜிபி ப்ளாஷ் சேமிப்புடன் ரூ.1,14,900க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் 256ஜிபி ப்ளாஷ் சேமிப்புடன் வரும் மேக்புக் ப்ரோ வாட் வரியோடு சேர்த்து ரூ.1,34,900க்கு விற்கப்படுகிறது.
அடுத்ததாக புதிய ஐமேக் லேப்டாப் க்வாட்ர் கோர் இன்டல் கோர் ஐ5 ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்கள், என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிபியு, 8ஜிபி 1600 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ரேம் மற்றும் 1டிபி ஹார்ட் ட்ரைவ் ஆகியவற்றுடன் வருகின்றது. மேலும் இந்த லேப்டாப்பை அப்க்ரேட் செய்யவும் முடியும். மேலும் இந்த ஐமேக் 21.5 இன்ச் மற்றும் 27 இன்ச் ஆகிய 2 அளவுகளில் வருகின்றன. அதோடு 4 யுஎஸ்பி போர்ட்டுகளுடன் இந்த லேப்டாப் வருகிறது.
21.5 இன்ச் ஐமேக் லேப்டாப் ரூ.85,900க்கும், 27 இன்ச் ஐமேக் ரூ.1,22,900க்கும் விற்கப்படுகின்றன.
அடுத்ததாக புதிய மேக் மினி லேப்டாப் ஐவி பிரிடட்ஜ் டூவல் கோர் இன்டல் கோர் ஐ5 மற்றும் க்வாட் கோர் இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர்களுடன் வருகிறது. மேலும் இதில் 4ஜிபி 1600 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு போன்றவற்றைப் பார்க்கலாம். இந்த ஐ5 மேக் மினி வாட் வரியோடு சேர்த்து ரூ.39,900க்கும், இன்டல் கோர் ஐ7 டர்போ பூஸ்ட் ஆகியவற்றுடன் வரும் மேக் மினி ரூ.52,900க்கும் விற்கப்படுகின்றன.
இன்டல் கோர் ஐ7 மற்றும் ஒஎஸ் எக்ஸ் செர்வருடன் வரும் மேக் மினி லேப்டாப் வாட் வரியுடன் சேர்த்து ரூ.65,900க்கு விற்கப்படுகிறது.மேலும் 

சீராக வளர்ந்து வரும் ஆப்பிளின் வருமானம் பற்றி பார்ப்போம்....

Tim Cook Apple Quarterly Eearnings
ஆப்பிள் நிறுவனம் தனது இந்த ஆண்டின் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரைக்குமான அதாவது நான்காவது காலாண்டின் வருமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி இந்த காலாண்டில் ஆப்பிள் 36 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் மற்றும் தனது நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 8.67 டாலர்களையும் பெற்றிருப்பதாக ஆப்பிள் அறிவித்திருக்கிறது. ஆனாலும் இந்த வருமானம் எதிர்பார்த்ததைவிட குறைவு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த காலாண்டில் மட்டும் 26.9 மில்லியன் ஐபோன்கள் விற்றிருக்கின்றன. இது 58 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த காலாண்டில் 14 மில்லியன் ஐபேடுகளை ஆப்பிள் விற்றிருக்கிறது. இது 26 சதவீதம் அதிகமாகும். அதோடு ஆப்பிள் 4.9 மில்லியன் மேக்குகளை விற்றிருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் ஆகும். ஆனால் இந்த காலாண்டில் 5.3 மில்லியன் ஐபோடுகளை மட்டுமே ஆப்பிள் விற்றிருக்கிறது. இது 19 சதவீதம் குறைவாகும்.
மேலும் தாங்கள் இந்த விடுமுறை காலத்திற்காக சிறந்த ஐபோன், ஐபேட், மேக், மற்றும் ஐபோடுகளைத் தயாராக வைத்திருப்பதாக ஆப்பிளின் தலைவர் டிம் குக் கூறியிருக்கிறார்.
வரும் காலாண்டில் 51 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை வரும் காலாண்டில் இலக்காக வைத்திருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. இந்த இலக்கை ஆப்பிள் அடைந்தால் அது ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக இருக்கும் என்று தெரிகிறது.


மைக்ரோசாப்ட் தனது புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை உலகம் முழுவதும் களம் இறக்கியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த புதிய இயங்கு தளத்தை இந்தியாவில் வாங்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் இந்தியாவில் இந்த புதிய இயங்கு தளத்தில் வரும் புதிய லேப்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் அவற்றின் விலையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Windows 8 Devices

குறிப்பாக எஆர்எம் என்விடியா டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரில் வரும் விவோஆர்டி டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த டேப்லெட் ரூ.54,990க்கு விற்கப்பட இருக்கிறது.
இன்டல் ஐ7 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு போன்ற அம்சங்களுடன் வரும் டெல் நிறுவனத்தில் டெல் எக்ஸ்பிஎஸ் 12 டூவோ லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த லேப்டாப் ரூ.1,04,990க்கு விற்கப்பட இருக்கிறது.
விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் லெனோவா யோகா லேப்டாப் இன்டல் கோர் ஐ5 ப்ராசஸர், 4ஜிபி ரேம், 128ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு போன்ற வசதிகளுடன் வருகிறது. இந்த லேப்டாப் ரூ.79,990க்கு விற்கப்பட இருக்கிறது.
சாம்சங் சீரிஸ்7 டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த டேப்லெட் ரூ.75,000க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக ஏசரின் அஸ்பயர் எஸ்7 அல்ட்ராபுக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. 13.3 இன்ச் மல்டி டச் டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த அல்ட்ராபுக் ரூ.92,999க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக அஸ்பயர் எஸ்7-191 லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த லேப்டாப் ரூ.88,499க்கு விற்கப்பட இருக்கிறது.
ஐ5 ப்ராசஸர், 4ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு கொண்ட டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த லேப்டாப் 1,04,990க்கு விற்கப்பட இருக்கிறது. எக்ஸ்பிஎஸ்14 லேப்டாப் ரூ.1,08,490க்கு விற்கப்பட இருக்கிறது.
விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் எச்பி என்வி 14 அல்ட்ராபுக் ரூ.64,990க்கும், யு310 லேப்டாப் ரூ.52,990க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதுபோல் யு510 லேப்டாப் ரூ.64,990க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக சாம்சங் சீரிஸ் 9 அல்ட்ராபுக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. மேலும் ஐ7 ப்ராசஸர், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி எஸ்எஸ்டி சேமிப்புடன் வரும் இந்த லேப்டாப் ரூ.1,00,000க்கு விற்கப்பட இருக்கிறது. அதுபோல் சாம்சங் சீரிஸ் 5 அல்ட்ராபுக் ரூ.65,000க்கு விற்கப்பட இருக்கிறது.
டெல் நிறுவனத்தின் ஆல் இன் என் டெஸ்க்டாப்பான டெல் இன்பைரன் ஒன் கணினி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த கணினி ரூ.81,990க்கு விற்கப்பட இருக்கிறது.
அதுபோல் எச்பியின் என்வி டச் ஸ்மார்ட் ஆல் இன் ஒன் கணினி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த புதிய கணினி ரூ.71,990க்கு விற்கப்பட இருக்கிறது.
லெனோவா நிறுவனத்தின் லெனோவா எ720 ஆல் இன் ஒன் கணினி ரூ.1,13,990க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக சாம்சங் சீரிஸ் 5 ஆல் இன் ஒன் மேசைக் கணினி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த கணினி ரூ.60,000க்கு விற்கப்பட இருக்கிறது. சாம்சங் சீரிஸ் 7 ஆல் இன் ஒன் கணினி ரூ.74,000க்கு விற்கப்பட இருக்கிறது.
சோனி நிறுவனத்தின் சோனி வயோ டி நோட்புக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வர இருக்கிறது. இந்த நோட்புக் ரூ.59,990க்கு விற்கப்பட இருக்கிறது.
இவற்றைத் தவிர்த்து மேலும் பல கணினிகள் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வர இருக்கின்றன. அவற்றின் விலை ரூ.24,000லிருந்து தொடங்குகின்றன.

447315-lenovo-windows-8-yoga-ultrabook

447315-lenovo-windows-8-yoga-ultrabook

acer_s7_01

acer_s7_01
.

dell

dell

dsfsda

dsfsda

hp-all-in-ones

hp-all-in-ones

hp-envy-14-spectre-high-end-laptop

hp-envy-14-spectre-high-end-laptop



மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் அக்டோபர் 26 அதாவது இன்று முதல் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் உயர்தர மொபைல் சாதனங்களில் அப்க்ரேட் செய்ய முடியும்.
Windows 8
அதோடு ஏசர், ஆசஸ், டெல், பிஜிட்சு, எச்சிஎல், எச்பி, லெனோவா, ஆர்பி இன்போ சிஸ்டம், சாம்சங், சோனி, தோஷிபா, விப்ரோ மற்றும் செனித் கம்யூட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளை இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இந்தியாவில் களமிறக்க காத்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் விண்டோஸ் 7, எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயங்கு தளங்களைக் கொண்டிருக்கும் கணினிகளிலும் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை அப்டேட் செய்யலாம்.
அதோடு கடந்த ஜூன் 2க்கு முன் விண்டோஸ் கணினிகளை வாங்கி இருப்போரும் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை ரூ.1,999க்கு பதிவிறக்கம் செய்யலாம். அதோடு டிவிடி வாங்குபவர்கள் ரூ.3,499 செலுத்தி இந்த விண்டோஸ் 8 டிவிடியை வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் விண்டோஸ் 8 இயங்கு தளம் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களில் வருகிறது. குறிப்பாக வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு விண்டோஸ் 8 என்டர்பிரைஸ், விண்டோஸ் டு கோ, டைரக்ட் அக்சஸ் மற்றும் ப்ராஞ்ச் கேச் போன்ற வசதிகளை வழங்குகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் எஆர்எம் டேப்லெட்டுகளுக்கான விண்டோஸ் ஆர்டியையும் வழங்கி இருக்கிறது. இந்தியாவில் விண்டோஸ் 8 இயங்கு தளத்தோடு பாரத் மேட்ரிமனி, பிக்பிலிக்ஸ், புக் மை ஷோ, புக் யுவர் டேபுள், பர்ப், டின்கனா, பாஸ்ட்ராக் டீஸ், ப்ளைட் எம்பி3, கானா, கிபிபிபோ, ஐசிஐசிஐ பேங்க் ஐமொபைல், ஐசிஐசிஐ டைரக்ட், ஜஸ்ட் ஈட், மேக் மை டிரிப் எக்ஸ்ப்ளோர், மேப் மை இந்தியா, மை ஏர்டெல், பிவிஆர் சினிமாஸ், டர்லா டலால், யாகூ கிரிக்கெட் மற்றும் சோவி போன்ற அப்ளிகேசன்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.


ஆப்பிள் நிறுவனம் ஐமேக் என்ற ஒரு புதிய ஆன் இன் ஒன் டெஸ்க்டாப் கணினியை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஆல் இன் ஒன் டெஸ்க்டாப் கணினி 21.5 இன்ச் மற்றும் 27 இன்ச் ஆகிய இரண்டு மாடல்களில் வருகிறது. இந்த புதிய கணினி அபாரமான வேகத்தில் இயங்கும் வகையில் இதில் ஏராளமான தொழில் நுட்ப வசதிகள் உள்ளன.
Apple All in one Desktop PC

குறிப்பாக 21.5 இன்ச் மாடலில் வரும் கணினியில் க்வாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம், 1டிபி சேமிப்பு மற்றும் என்விடியாவின் ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் ஜிபியு ஆகியவை உள்ளன. இந்த கணினி ரூ.85,900க்கு விற்கப்பட இருக்கிறது.
அதுபோல் 21.5 இன்ச் மாடலில் வரும் உயர்தர கணினி, க்வாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 1டிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் என்விடியாவின் ஜிஇபோர்ஸ் 650எம் ஜிபியு போன்றவை உள்ளன. இந்த கணினி ரூ.99,900க்கு விற்கப்பட இருக்கிறது.
அதே நேரத்தில் 27 இன்ச் மாடலில் வரும் சாதாரண கணினி ரூ.1,22,900க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த கணினி குவாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர், 2.7 ஜிஹெர்டஸ், 8ஜிபி மெமரி, 1டிபி சேமிப்பு மற்றும் என்விடியா ஜிஇபோர்ஸ் 660எம் ஜிபியு போன்றவை உள்ளன.
மேலும் 27 இன்ச் மாடலில் வரும் உயர்தர கணினி ரூ.1,34,500க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த கணினி குவாட் கோர் இன்டல் ஐ5 சிபியு, 8ஜிபி மெமரி, 1டிபி சேமிப்பு மற்றும் என்விடியா ஜிடிஎக்ஸ் 660எம்எக்ஸ் ஜிபியு போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த கணினிகளில் இன்டல் ஐ7 ப்ராசஸர், 32ஜிபி ரேம் மற்றும் 768 ஜிபி ப்ளாஷ் சேமிப்பு போன்றவற்றை அப்க்ரேட் செய்து கொள்ளலாம். இந்த 21.5 இன்ச் கணினிகள் வரும் நவம்பரிலும், 27 இன்ச் கணினிகள் வரும் டசம்பரிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.


விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பிசி கம்ப்யூட்டர்களில் ரூ. 699 விலையில் எளிதாக அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது விண்டோஸ்-7 இயங்குதளத்தில் இயங்கும் பிசி கம்ப்யூட்டரை வாங்குவதன் மூலம் விண்டோஸ்-8 இயங்குதளத்தினை ரூ. 699 விலையில் அப்கிரேடு செய்யும் வசதியினை பெறலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Upgrade your Windows 7 PC to Windows 8  easily for Rs 699

வருகிற 26ம் தேதி வரை விண்டோஸ்-8 இயங்குதளம் வெளியீடு செய்யப்படாது என்பது போல் சில தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விண்டோஸ்-8 இயங்குதளத்தை உங்கள் பிசி கம்ப்யூட்டர்களில் சிறப்பாக ரூ. 699 விலையில் அப்கிரேட் செய்ய முடியும் என்பது போன்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற 26ம் தேதி வரை வெளியீடு செய்யப்படாது என்பது போன்ற தகவல்கள் வெளியானாலும், இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை, ஆர்டர் செய்ய முடியும். அதற்கு விண்டோஸ்-7 பிசி கம்ப்யூட்டரை வாங்கினால், மைக்ரோசாஃப்ட்விண்டோஸ்-8 ப்ரோ இயங்குதளத்திற்கான அப்கிரேடு வசதியை பெறலாம் என்ற தகவலும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நமது இமெயில் ஐடிக்கு ப்ரொமோஷன் கோடும் அனுப்பப்படும். இதனுடன் பதிவிறக்கம் செய்யப்படும் தகவல்களையும் பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது போன்று பதிவிறக்கம் செய்யப்படும் விஷயங்களை பொருத்திருந்து செய்வது சிறந்தது. இல்லையென்றால் பிசி கம்ப்யூட்டர்களில் இருக்கும் தகவல்களை
சரியாக பதிவு செய்து வைத்து கொண்டு பின், பதிவிறக்கும் செய்வது இன்னும் சிறந்ததாக இருக்கும்.


ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் புதிய சாதனங்களைக் களமிறக்குவதற்கு முன்பகா கூகுள் தனது புதிய விலை குறைந்த லேப்டாப்பை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பை சாம்சங் நிறுவனத்தின் கூட்டணியோடு களமிறக்க இருக்கிறது. மேலும் எடை குறைந்த இந்த புதிய லேப்டாப்பை 249 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது கூகுள்.
Google Samsung Chromebook

இந்த புதிய லேப்டாப் கூகுளின் க்ரோம் வெப் ப்ரவுசரில் இயங்கும். மற்ற லேப்டாப்புகளைப் போல் இதில் ஹார்ட் ட்ரைவ் இருக்காது. மாறாக இந்த லேப்டாப் இணையதள உதவியுடன் இயங்கும். இந்த லேப்டாப்தான் மிகக் குறைந்த விலை லேப்டாப்பாக இருக்கும் என்று தெரிகிறது.
இதற்கு முன் சாம்சங் கூட்டணியில் கூகுள் சற்று உயர்தரமான லேப்டாப்பை களமிறக்கி இருந்தது. அந்த லேப்டாப் 449 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த புதிய குறைந்த விலை லேப்டாப் அமெரிக்காவில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெஸ்ட் பை ஸ்டோர்களில் அடுத்த வாரம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த லேப்டாப்பை வாங்க ப்ரீ ஆர்டரும் செய்யலாம்.
வரும் அக்டோபர் 26ல் மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த இயங்கு தளத்தை கணினிகள், லேப்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகளில் பயன்படுத்தலாம். அதனால் இந்த புதிய இயங்கு தளத்தில் ஏராளமான சாதனங்கள் விற்பனைக்கு வரும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த சாதனங்களின் விலை 500 அமெரிக்க டாலர்களிலிருந்து 1000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆப்பிள் தனது மினி ஐபேடை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த மினி ஐபேட் 249 அமெரிக்க டாலர்களிலிருந்து 299 அமெரிக்க டாலர்களுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே இந்த சூழலில் குறைந்த விலையில் தனது க்ரோம்புக் லேப்டாப்பைக் களமிறக்கினால் மிக விரைவில் லாபம் பார்த்துவிடலாம் என்று கூகுள் கணக்குப் போடுகிறது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.