Awareness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி




இறைந்து கிடந்த எலுமிச்சம்பழம் இன்னைக்கு ஒன்னு ஏழு  ரூவா..

 சும்மா கிடந்த பப்பாளி இன்னைக்கு கிலோ நாப்பது ரூவா..

வீடு தோறும் இருந்த கொய்யா இன்னைக்கு கிலோ அறுவது ரூவா..

வேலியில் படர்ந்து கிடந்தும் பழுக்கும் வரை தீண்டப்படாத கோவைக்காய் கிலோ அறுவது ரூவா..

கேட்பாரற்று கிடந்த கொடுக்காப்புளி, சீத்தாப்பழம் இன்னைக்கு கிலோ எண்பது ரூவா..

நினைத்த போதெல்லாம் பறித்து தின்ற சப்போட்டா கிலோ எண்பது ரூவா..

கொட்டிக்கிடந்த நாவல்பழம் இன்னைக்கு கிலோ நூத்தி இருவது ரூவா..

 ரூவாக்கு பத்து வித்த நெல்லிக்காய் இன்னைக்கு கிலோ நூத்தி இருவது ரூவா..

திட்டினாலும் திங்காத மாதுளை கிலோ நூத்தி எண்பது ரூவா..

இனி கூடிய விரைவில் ஈச்சம்பழம், விளாம்பழம், வேப்பம்பழம், நார்த்தம்பழம், கிடாரங்காய், கருவேலங்குச்சி, மருதாணி, வேப்பிலை, மாவிலை, நொச்சி, ஆடாதொடா, வில்வம், பவளமல்லி, பப்பாளி இலை, அருகம்புல் எல்லாம் இந்த விலைபட்டியலில் சேர இருக்கு..

அதோட வேப்பம்பூ, மாம்பூ, மாதுளை பூ, செம்பருத்திப்பூ, நந்தியாவட்டை பூ, மகிழம்பூ மாதிரி மறந்து போனவை பலவும் இனி வரும்.

இதெல்லாம் என்ன விளைய வைக்க முடியாத அதிசய பொருளா..?

இவ்ளோ விலை விக்குதே, இதை உற்பத்தி செஞ்சு வளர்ந்தது விவசாயியா..?

நம்ம வீட்டிலேயே இதையெல்லாம் வளர்த்தா நம்ம பிள்ளைங்களாவது சாப்பிட கிடைக்குமல்லவா..

வரும் தலைமுறைக்கு சொத்து மட்டும் சேர்த்தா போறாது சொந்தங்களே ..                  
மரங்களை வளர்ப்போம்.


மயிரைழையில் உயிர் தப்பினோம் என்று கேள்விபட்டிருப்போம் யாரேனும் கண்டதுன்டா இதோ காணோளி👇அனைவரும் காணலாம் பயம் தேவையில்லை...சாலையில் கவனம் தேவை 🚘🙏👋







எச்சரிக்கை!! உங்கள் வங்கி கணக்கிலுள்பணத்தை அபேஸ் செய்ய பேஸ்புக்கிலுள்ள தகவலே போதும்!

வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் இருந்து டெபிட் கார்டு மூலம் சமீபத்தில், பல கோடி பணம் சுருட்டப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு பணம் திருடுவதில் ஹேக்கர்களுக்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் முக்கிய கருவியாக பயன்படுகிறது. பேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த நாள் தினம், மற்றும் உங்கள் செல்போன் எண் இந்த திருட்டின் மூல காரணம்.

சமீபத்தில் சைபர் கிரைம் போலீசார் எடுத்த ஆய்வில், 75 சதவீதம் சைபர் குற்றவாளிகள், படித்த இளைஞர்களாகவே இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. எந்த இணையதளத்தை எப்படி முடக்கலாம் என்பது இவர்களுக்கு அத்துப்படியாம்.

மோசடி நடப்பது இப்படித்தான்:

  • பேஸ்புக் கணக்கை ஹேக் செய்யும் சைபர் குற்றவாளிகள் அதில் இருந்து, பிறந்த தேதி, செல்போன் நம்பர், பெயரை எடுத்துக்கொள்வார்கள்.

  • செல்போன் திருடுபோனதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பார்கள். காவல் நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆரை பெற்று, புதிய சிம்கார்டுகளை உங்கள் செல்போன் நம்பரில் பெறுவார்கள். 

  • அதை வைத்து உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கை திறப்பார்கள்.

  • பேஸ்புக் தகவலை வைத்து போலியான பான் கார்டு பெற்று, ஆன்லைன் வங்கி கணக்குகளை முடக்குவார்கள்.
  • வங்கி ஆன்லைன் பாஸ்வேர்ட் மறந்துவிட்டதாக கூறி, புதிய பாஸ்வேர்ட் கேட்பார்கள். 

  • வங்கிகள் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பும் பாஸ்வேர்ட் ரீ-செட்டிங் பார்மட்டை கொண்டு புது பாஸ்வேர்டை உருவாக்குவார்கள்.

  • பிறகு என்ன..? உங்கள் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக பணி பரிமாற்றத்தை எளிதாக முடித்துவிடுவார்கள்.

  • இந்த பிரச்சினையை தீர்க்க பேஸ்புக்கில் உங்கள் பிறந்த நாள், தேதி, வருடம், செல்போன் எண் போன்றவற்றை பதிவிடுவதை தவிருங்கள்.

 எங்கே செல்கிறோம் தமிழா ??   நாம் எங்கே செல்கிறோம் ??



எங்கே செல்கிறோம்  ?? 

நாம் எங்கே செல்கிறோம் ??

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே?

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க ஆலங்குச்சி எங்கே?

எலந்தை பழம் எங்கே?
சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடை பழக்கிய நடை வண்டி எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர் கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண் புழு எங்கே?

வெட்டு மண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள் எங்கே?

தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே?

குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால் கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே?

பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே?

தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே?

மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே?

மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?

இடுப்பை சுற்றி கட்டிய பணப் பை எங்கே?

இடுப்பில் சொருகிய சுருக்கு பை எங்கே?

தாவணி அணிந்த இளசுகள் எங்கே?

சுத்தமான கிணற்று நீரும் எங்கே?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?

எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே?

சிந்திக்க நமக்கு நேரம் தான் எங்கே?

எங்கே? 

எங்கே?? 

எங்கே???

இத்தனையும் தொலைத்து விட்டு நாம் செல்கின்ற அவசர பயணம் தான் எங்கே?!?!?!

நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.  🌷18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.  🌷குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.  👍👍இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும். எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?💥


🌺நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.

🌷18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.

🌷குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

👍👍இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?💥

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும்,
பெண்கள்
நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.🌷🌷

இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடம்.👍

இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?🌺🌺

20 நிமிடம்.👍👍

இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?🌸🌸

350 மில்லி.👍👍

(நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது)
எடுக்கப்படுகிற
இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.🌺

இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?🔥🔥

10 லிருந்து 21 நாட்களில்.🌷

இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?🍁🍁

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும்.

பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல்.
ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து
உயிர் காப்பது
நல்லதுதானே?🌺🌺

நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.  🌷18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.  🌷குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.  👍👍இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும். எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?💥


இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?🔥

நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.
தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.
சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?🌷

உதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்டை பயன்படுத்துங்கள்.

💢சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.

💢 ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

💢ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.

💢குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.

💢 அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

🌹குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.

🌹பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

🌹 சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

🌹பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்

🌷 பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

🌷 இதய நோய்கள் _ வேண்டாம்.

🌷 இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

🌺வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம்.
மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

🌺தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

🌺 நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

🍁மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.

🍁மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு.

🍁 காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.
மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

🔥 சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

🔥 ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

🔥 நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்.

💦இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

💦ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

💦இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

இரத்ததானம்👍👍👍 கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?

💥 நல்ல திரவ உணவை அருந்துங்கள்.
ஹெவி உணவு வேண்டாம்.

💥 ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.
3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.

💥 இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.

💉🚑🚨


நம் பேர் சொல்ல மரங்கள் இருக்கும்!!!

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.

உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.

நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை மரத்தை நடு.

நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை மரத்தை நடு.

நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.

நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.

வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை நடு.

கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை நடு.

நேத்தாஜிகாக செம்பருத்தியினை நடு.

அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.

எம்.ஜி.ஆர் காக எழும்பிச்சை மரத்தை நடு.

அப்துல் கலாமிரற்காக மா மரத்தை நடு.

உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.

உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்... நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்கொண்டு....

மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!

Let us Plant & Save trees...

இது கதையல்ல நிஜம இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் ...

ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார்.
அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம் குறைவாக உள்ளது என்றார்.

அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான். நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான். மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம்நின்று விட்டது போல் உணர்தேன்.


 அவன் கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என் தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன்.
எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன்,

ஆனால் அம்மா கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார். மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான் அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும் கூறினான்.

நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து, மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன். அவனும் இசைந்தான், நாங்கள் எண்ணிய போது போதிய
பணத்திற்கு மேல் இருந்தது அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது,
மகிழ்வுந்தில்(car) பயணம் செய்தஅம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck) மோதி விபத்துக்குள்ளானது என்றும்
அதன் ஓட்டுனர் குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவஇடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி !!

இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண் இறந்து விட்டாள் என்று.

நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன் அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் , கையில் சிறுவனின் புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும் தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. ஆனால் ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது..

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ...


Please Avoid using  Mobile Phones on driving
Don't use Mobile Phones on driving

இன்று, உலகையே உள்ளங்கைக்கு கொண்டு வந்துவிட்டது, மொபைல் போன். இதன் வரவால் பல சாதக அம்சங்கள் உள்ளன; பாதக அம்சமும் இருக்கத்தான் செய்கிறது. வளர்ச்சிக்கும், பணி எளிமைக்கும், விரைவான தகவல் தொடர்புக்கும் உதவும் மொபைல் போன், சில நேரங்களில் சிலரின் வாழ்க்கைக்கு எமனாக மாறி வருகிறது.தினமும் பல இடங்களில், மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டும் பலரை பார்க்க முடிகிறது. இவர்கள், கவனக்குறைவால் விபத்துகளை சந்திக்கின்றனர். இதில் உயிரிழப்போர், உடல் உறுப்புகளை இழப்போர் என பலர், தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்கும் அவலம் தொடர்கிறது.அதனால், மொபைல் போனில் பேசிக் கொண்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்கவும்.

பெண்கள் மனதை புன்படுத்தாதீர்!!

ஒரு நாட்டு மன்னன்  தன்  அரன்மனையில்  நாட்டியம் ஆடவந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்பட்டான். அப்பெண்னோ  மன்னா நாங்கள் நடனம் ஆடுவது எங்கள் குல தொழில்  வேண்டாம் .

மன்னா நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள் என்றால் .


மன்னவனோ ஆண்டவனும் அரசனும் ஒன்று தான் .

நீ என் இச்சைக்கு இனங்கதான் வேண்டும் .

வா நான் இந்த நாட்டிற்க்கே உன்னை அரசியாக்குகுறேன் என்றான் .

அப்பெண் எவ்வளவே வாதாடியும் விடவில்லை மன்னன்யிடம் கடைசியில்
ஒப்புக் கொண்டால் .

அப்பெண் சரி மன்னா நாளை தாங்கள் என் வீட்டிற்க்கு வாங்கள் விருந்து வைக்கிறேன் .

அமுதுண்டு பிறகு சல்லாபிக்களாம் என்றால் .

மன்னனும் சென்றான் ..

அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலரில் இனிப்பு வழங்கினாள் .

மன்னன் எனக்கு சாப்பிட பொருமை இல்லை ..
நீயே ஊட்டி விடு என்று கூறினான் .....


அப்பெண்ணும் ஊட்டி விட்டால் !!மன்னன்  சுவைத்தான் விருத்து முடிந்தது ..

மன்னனிடம் கேட்டாள் மன்னா 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே ஒவ்ஒன்றின் சுவை எப்படி இருந்தது  மன்னா ??.

மன்னன் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தான் என்றான்..

பெண் மன்னா நாங்களும் அப்படிதான் பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தானே என்றால் .....

மன்னன் அப்பெண்ணின் காலில் விழுந்து வணங்கி தாயே என் அறிவுக்கண் திரந்தவளே என்றான் ......

இது கதை அல்ல உண்மை


நம் வீட்டிலும் பெண்கள் உண்டு!! பிற பெண்களிடம் பழகும் போது நம் வீட்டு பெண்ளாக நினைத்து சகோதரிகளிடம் பழகுவதாக பழகுங்கள் ..

நட்பு வளரும் பிற பெண்கள் மனதை காயப்படுத்தாதீர்கள் ....


"நன்றி நன்றி நன்றி"


  • வாகனம் ஓட்டும்போது எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அவ்வப்போது ஸ்பீடாமீட்டரைப் பார்த்து உங்கள் வேகம் எவ்வளவு என்பதில் தெளிவாக இருங்கள். இதனால், அதிவேக த்தில் செல்வதைத் தவிர்க்கலாம்.
  • காவல்துறையினர் வாகனங்களோ அல்ல‍து ஆம்புலன்ஸ் வாகனங்ளோ அல்ல‍து தீ அணைப்பு வாகனங்களை, அவசர ஒலி எழுப்பி வேகமாக வரும்போது அந்த வாகனங்களுக்கு தாமதிக்காமல் உடனடியாக அந்த வாகனங்கள்   செல்ல‍ வழிவிட  வேண்டும். 
  • நீங்கள் பைக்கில் நெடுஞ்சாலையில் செல்லும்போது சைடு மிர்ர‍ர் (பக்க‍ வாட்டு கண்ணாடி)யை அடிக்கடி பார்த்த‍து ஏதேனும் கனரக வாகனங்களோ பேரூந்துகளோ வந்தால், அந்த வாகனங்களுக்கு முதலில் வழிவிடுங்கள். 
  • நீங்கள் வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது, எச்சிலை துப்பாதீர்கள். அது உங்களுக்கு பின்னால் வருபவர்களை சற்று நிலை தடுமாறி விபத்துக்குள்ளாக நேரிடும்.
  • மது அருந்திவிட்டோ அல்ல‍து அருந்திக்கொண்டோ வாகனத்தை ஓட்ட வேண்டாம். 

வாகனம் ஓட்டும்போது தயவுசெய்து கவனமாக இருங்க....

For more Videos Subscribe https://www.youtube.com/user/tagavalthalam/ 

இணையத்தில் இருந்த தகவல்களை உங்களுக்க இணைக்கிறோம்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.