History லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 ரா. பி. சேதுப்பிள்ளை


ரா. பி. சேதுப்பிள்ளை ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். 

உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே .

சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். 

ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார்.

 பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங் கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார்.

 உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுவிற்கு தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.

1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார்.

 வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

 கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.

அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருது வழங்கியது. 

சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

 மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும், "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது. சேதுப்பிள்ளை ஏப்ரல் 25, 1961ல் தம் 65 -ஆம் வயதில் இறந்தார்

 ஏ.என்.சிவராமன்

பத்திரிக்கை உலக ஜாம்பவான் யார்


  •  பத்திரிக்கை உலக ஜாம்பவான் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான ஏ.என்.சிவராமன் 1904ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சினில் பிறந்தார்.
  • தினமணி நாளிதழில் 43 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அரும்பெரும் சாதனையாளர்.
  •  இவர் கல்லூரியில் படித்தப்போது ஒத்துழையாமை இயக்கத்துக்காக காந்திஜி அழைத்தார். எனவே படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  •  காந்திஜியின் 'ஹரிஜன்' இதழின் தமிழ் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.
  •  கணக்கன், ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி, குமாஸ்தா, அரைகுறை வேதியன், அரைகுறை பாமரன் ஆகிய புனைப்பெயர்களில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதினார்.
  •  பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் பெறும் வாய்ப்பு தேடிவந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை ஏற்றார்.
  •  தமிழ் பத்திரிக்கை உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவரும், 'ஏஎன்எஸ்' என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான ஏ.என்.சிவராமன் தனது பிறந்தநாளன்றே 97வது வயதில் (2001) மறைந்தார்.


அலெசான்றோ வோல்ட்டா

அலெசான்றோ வோல்ட்டா

  • மின்துறை என்ற ஒரு துறை உண்டாவதற்கு வழிகாட்டியாக இருந்த அலெசான்றோ வோல்ட்டா 1745ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
  • 1775ஆம் ஆண்டு மின் ஏற்பை உருவாக்கும் எலெக்ட்ரோஃபோரஸ் (electrophorus) என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். 1776ஆம் ஆண்டு மீத்தேனை கண்டுபிடித்தார். 1800ஆம் ஆண்டுகளில் முதல் மின்கலத்தை உருவாக்கினார்.
  • வோல்ட் என்னும் மின்னழுத்த அலகானது இவருடைய பங்களிப்பை பெருமை செய்யவும், நினைவுக்கூறவுமே வைக்கப்பட்டது. இதனாலேயே மின்னழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி (Voltmeter) என்று அழைக்கின்றோம்.
  •  முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவரான அலெசான்றோ வோல்ட்டா 82வது வயதில் (1827) மறைந்தார்.

 சார்லஸ் ராபர்ட் டார்வின்

சார்லஸ் ராபர்ட் டார்வின்

 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உலகுக்கு தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.

 அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.

 இவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு இவருடைய கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்து வந்தது.

 தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். இந்த ஆராய்ச்சி 1831ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது.

 அதில் பலவகையான ஊர்வன, பறப்பன, நடப்பன என அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் மற்றும் தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் ஏராளமாகச் சேகரித்தார்.

 தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உருவானது. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி On the Origin of Species என்ற புத்தகத்தை எழுதினார்.

 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய டார்வின் 1882ஆம் ஆண்டு தனது 73வது வயதில் மறைந்தார்.

         லாலா லஜபதி ராய்

லாலா லஜபதி ராய்


  •  இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.
  • இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர்.
  • இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ஆம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
  • இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்' என்று கூறினார். இவர் தன்னுடைய 63வது வயதில் (1928) மறைந்தார்.

        நிலவில் இறங்கிய இரண்டாவது வீரர் - பஸ் ஆல்ட்ரின்

நிலவில் இறங்கிய இரண்டாவது வீரர் - பஸ் ஆல்ட்ரின்


  •  அமெரிக்க விண்வெளி வீரரும், விமானியுமான பஸ் ஆல்ட்ரின் 1930ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள கிளென் ரிட்ச்சில் பிறந்தார். இவரின் இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின் ஆகும். 
  •  இவர் பஸ் (Buzz) என்ற பெயரிலேயே பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். எனவே, இவர் தனது பெயரை ,பஸ் ஆல்ட்ரின், என அதிகாரபூர்வமாக 1988ஆம் ஆண்டு மாற்றிக் கொண்டார். 
  • 1963ஆம் ஆண்டு நாசா விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  •  முதன்முதலாக சந்திரனுக்கு மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில், நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் நிலாவை நோக்கி பயணம் செய்த இவர், சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமைக்குரியவர்.


.

தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் - ஜேம்ஸ் வாட்


  •  பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.
  •  இவருக்கு சிறு வயதில் இருந்தே வரைவதில் ஆர்வம் அதிகம். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். பின்பு இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
  •  இவருக்கு 1764ஆம் ஆண்டு தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்றம் செய்தார். இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. அதற்கு காப்புரிமையையும் பெற்றார்.
  •  இவர் இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.
  •  இவர் பொறியாளர் மேத்யூ போல்டனுடன் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்துள்ளார். எனவே தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது. மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு வாட் என இவரது பெயரே சூட்டப்பட்டது. ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவர் இவரே.
  •  இயற்கையான நீராவி சக்தியை கொண்டு மகத்தான பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 83 வயதில் (1819) மறைந்தார்.

 

கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை அதுவும் 1957லில்

கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை அதுவும் 1957ல்



கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது.....நம்ப முடிகிறதா......???? 
ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. 1957 உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.
1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது
 1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது.
 ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த சேவை ஒரு அதிசயமே.....!!!

ஆல்பர்ட் டிராவல் இதற்காக எடுத்த பாதை
இங்கிலாந்து, பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியா.

 பெஞ்சமின் பிராங்கிளின் 

பெஞ்சமின் பிராங்கிளின்

  •  ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர் பெஞ்சமின் பிராங்கிளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார்.
  •  இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் என பல துறைகளில் ஈடுபட்டுள்ளார்.
  •  இவர் Poor Richards Almanack என்ற புகழ்பெற்ற இதழை இவ்வுலகுக்குத் தந்தவர்.
  •  மின்சாரம், பற்றியும் இடி மின்னல் பற்றியும், புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் (bifocal glasses) மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர்.
  •  அறிவியல் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய பிராங்கிளின் 1790ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தனது 84வது வயதில் மறைந்தார்.


 சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்

🌟 இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

🌟 சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.

🌟 இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.

🌟 சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

🌟 ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.

🌟 1893ஆம் ஆண்டு சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையை தொடங்குவதற்கு முன், 'அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!' என்று ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்துக்கும் சென்றார். அங்கே பல மக்கள் இவருக்கு சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், 'சகோதரி நிவேதிதா'.

🌟 இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த இவர் தன்னுடைய 39வது வயதில் (1902) காலமானார்.


உலகின் முதல் கோயில்..!

உலகின் முதல் கோயில்

துருக்கியில் அமைந்துள்ள இந்த கோவில் கி.மு. 8000 காலக்கட்டத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று அகழ்வராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு காணப்படும் சிற்பங்களில் வேட்டையாடும் வழிமுறைகள் வடிக்கப்பட்டுள்ளன.

இந்த மலை கஹ்தாவிற்கு வடக்கே 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ளது.


உலகின் முதல் கோயில்

இந்த சிலைகள் ஒரு காலத்தில் அமர்ந்திருந்தன, அவற்றில் ஒவ்வொரு கடவுளின் பெயர்களும் பொறிக்கப்பட்டன. 

சில கட்டங்களின் சிலைகளின் தலைகள் அவற்றின் உடலில் இருந்து அகற்றப்பட்டு, 

இப்போது அவை தளம் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன.

 நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா

அமெரிக்க கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர் தான் நிகோலா டெஸ்லா.
ஜூலை 10, 1856 அன்று ஆஸ்திரியாவில் பிறந்தார். டெஸ்லா, தனது பணிகளை மேற்கொள்வதற்காக நியூயார்க் நகரத்திற்கு சென்றார்.

அமெரிக்காவில் இருந்தபோது, ​​அவரது கண்டுபிடிப்புகள் அவருக்கு 'பைத்தியகார விஞ்ஞானி' என்ற பெயரைப் பெற்றுதந்தது.இவர்
நவீன வாழ்க்கைக்கு அவசியமான பல கண்டுபிடிப்புகள் உருவாக்கியவர். 
இவர் கண்டுபிடிப்புகளை காணலாம்.

எக்ஸ் ரே

எக்ஸ் ரேவை முதலில் வில்ஹெலம் ரோன்ட்கென் என்பவர் கண்டுபிடித்திருந்தாலும் அதில் அதிநவீனத்தை புகுத்தியவர் டெஸ்லா தான். அவர் தனது நண்பரை அதன் மூலம் புகைப்படம் எடுக்கும் போது ஏற்பட்ட விபத்து தான் இதை கண்டுபிடிக்க வைத்துள்ளது. தற்போது டெஸ்லா கண்டுபிடித்த முறை படிதான் இன்றளவும் உலகளவில் எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படுகிறது.

ரேடியோ

ரேடியோவை கண்டுபிடித்தது மார்க்கோனி என நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் 1892ம் ஆண்டே ரேடியாவிற்கான மாடலை கண்டுபிடித்தனர் டெஸ்லா, ஆனால் அதற்கான காப்புரிமையை அவருக்கு வழங்க அப்போதைய அமெரிக்க அரசு மறுத்துவிட்டது. அதன்பின் 1901ம் ஆண்டு மார்க்கோணி ரோடியவை விடிவமைத்து அதற்கான காப்புரிமையை பெற்றார்.

ரிமோட் கண்ட்ரோல்

இன்று நாம் வீட்டில் இருந்த இடத்தில் இருந்த ரிமோட் மூலம் வீட்டில் டிவியில் சேனலை மாற்றுகிறோம். ஏசியில் அளவுகளை மாற்றுகிறோம். இந்த வயர்லெஸ் மூலம் செயல்படும் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டத்தை கண்டுபிடித்தவர் டெஸ்லா தான்.

நியான் லைட்ஸ்

டெஸ்லா நேரடியாக நியான் லைட்களை கண்டுபிடிக்காவிட்டாலும், அவர் கேத்தோடு கதிர்களில் இருந்து 4 விதமான லைட்களை வெளிப்படுத்தலாம் என்ற கோட்பாட்டை எழுதியிருந்தார். அதை மூலமாக கொண்டே நியான் லைட்ஸ் தயாரிக்கப்பட்டது.

வயர்லெஸ் டெக்னாலஜி

டெஸ்லாவில் இந்த உலகை வயர்லெஸ் மூலம் இணைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக அவர் 185 அடி உயரத்தில் ஒரு டவர் கட்டி அதன் மூலம் உலகில் உள்ளவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையில் தொலை தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அதை கட்டமைக்க பணம் இல்லாததால் அவரால் அதை செய்ய முடியவில்லை.

விஞ்ஞான உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் கண்டுபிடித்த விஷயங்களை எல்லாம் அதற்கு முன்னரே கண்டுபிடித்து விஞ்ஞான உலகில் உள்ள அரசியலால் இவரது பெயர் மறைக்கப்படாலும் சமீபகாலமாக இவரது புகழ் ஓங்கிவருகிறது.

தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறாக்கள் எதற்காக வளர்க்கபடுகிறது ?
 

1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது.

2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும்.

3. கரையான் வராது அப்படியே வந்தால் அதுவும் இரையாகி விடும். 

4. வவ்வால் உள்ளே வராது, ஆந்தையும் உள்ளே வராது புறாக்கள் எழுப்பப்படும் ஓசை அவைகளை விரட்டிவிடும். 

5. புறாக்கள் எழுப்பப்படும் ஓசையானது நோயாலிகளை குணப்படுத்தும். கோயில்களில் உள்ள சக்தியை சிதையாமல் அதிகரித்து மனிதனுக்கு தரவல்லது.

 புத்தர் சிலை

ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை ..!

ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை நிறுவப்பட்டது. இதே தேதிஉலகின் மிகப்பெரிய புத்தர் சிலை ஹாங்காங்கில் நிறுவிய நாள்: 29-12-1993

 இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 * 1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயார்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர். 

 * 1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

 * 1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28-வது மாநிலமாக இணைந்தது.

 * 1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.

 * 1876 - ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் ரெயில்வே பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர். 

 *1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.

 * 1891 - தாமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார். 

 *1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார். 

 *1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.


 தஞ்சை பெரிய கோயில் 

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க உலக பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. ராஜ ராஜ சோழன் எப்படி இந்த கோயிலை கட்டினார், அதன் பின்னனி, சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம். 


பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் இன்றளவும் எப்படி கட்டப்பட்டது என்ற தெளிவான பார்வை கிடைக்கவில்லை. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கோயில் பெயர் மாற்றம்:
பிரகதீஸ்வரர் கோயில் இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. தற்போது அழைக்கப்படும் இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயிலை மகா சிவன் கோவில் என்றும் அழைத்து வந்துள்ளனர்.

கோபுர அதிசயம்:
இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் மதிய வேளைகளில் இந்த கோவிலில் உள்ள கோபுரத்தின் நிழல் ஆனது கீழே விழுவதில்லை என்பதாகும்.

கிரகண நேரத்திலும், நள்ளிரவிலும் கூட மூடப்படாத கோயில் எங்குள்ளது தெரியுமா?- ஓயாமல் பசி எடுக்கும் சுவாமி இதோ

அதே போல் கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதை விட அதிசயமாக அதை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என வியக்க வைப்பதாக உள்ளது.

கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கமானது அதிகப்படியான மின்காந்த ஆற்றலை வெளியிடுவதாகவும் அந்த ஆற்றலானது, இந்த ஒற்றை கல்லினாலான மேற்கூரைகள் எதிரொளிக்கப்பட்டு, ஒருமுகப்படுத்த படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நேர்மறையான எண்ணங்களால் ஆன இந்த ஆற்றலானது, இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியையும், சாந்தியையும், கொடுப்பதுடன், அவர்களையும் மனதளவிலும், உடலளவிலும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

உலகில் அதிகமானோர் தரிசிக்கும் தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் இந்து கோயில்!

சப்தம், ஞானிகளின் ஞான ஆற்றல் மூலம் அந்த பெரிய கல்லை மேலே ஏற்றியிருக்கலாம் என பலரும் தெரிவிக்கின்றனர்.

நந்தி சிலை மாற்றம்:
இங்கு சிவபெருமானுக்கு எதிரில் உள்ள பெரிய நந்தி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. அதோடு ராஜராஜ சோழன் வைத்த நந்தி சிலை மாற்றப்பட்டு, மராட்டியர்களால் வைக்கப்பட்ட நந்தி சிலை தான் இப்போது உள்ளது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம்... கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் சிறப்புகள்

ராஜ ராஜன் வைத்த நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால், அதில் அதிர்ச்சியும், பிரம்மிப்பும் அடைந்த மராட்டியர்கள் அந்த நந்தி சிலையை அகற்றிவிட்டு புதிய நந்தி சிலை வைத்துள்ளனர். இன்றளவும் அந்த பழைய நந்தி சிலை கோயில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கட்டுமானம்;
மாமன்னர் ராஜராஜ சோழன் இலங்கைக்கு சென்று வந்த பிறகு இந்த கோயிலை வடிவமைத்தார். இலங்கையில் இந்து மன்னர்கள் வேதத்தை தழுவிய இந்து கோயில்களால் கவரப்பட்டதானாலேயே அந்த வடிவமைப்பில் இந்த பெரிய கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வணங்க வேண்டிய வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்!

கட்டிடக் கலை வல்லுனர்:
இந்த கோவிலில் பொரித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம், இந்த கோவிலானது குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் எனும் கட்டிடக்கலை நிபுணர்கள் கட்டப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, நேர்த்தியான இவரது படைப்புகளில் மூலமே அவரது பெயரில் இன்றளவும் நிலைத்து நிற்கிறது, மேலும் இவரது வாஸ்து சாஸ்திரம் எனும் கலை இன்றும் போற்றப்படுகிறது.

சுரங்கப்பாதை:
இந்தப் பெரிய கோவிலானது பல சுரங்கப் பாதைகளை கொண்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. பல்வேறு இடங்களை இணைக்கும் இந்த பாதைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பாதையில அந்த காலத்தில் வாழ்ந்த முனிவர்கள், ராஜாக்கள், ராணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரகசியமாக செல்ல பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக தீபாவளி மகா சிவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்களில் இந்த பாதைகள்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிரானைட் கற்கள்:
கோயிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோயிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம்:
தஞ்சை கோயில் வெறும் கோயிலாக மட்டும் பார்க்கப்படாமல், பாரம்பரியம், வரலாறு தொல்லியல் தன்மை ஆகியவை வியக்க வைக்கும் வகையில் உள்ளதால் யுனெஸ்கோவால் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

                                          வாஜ்பாயின் வாழ்க்கை  வரலாறு

அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை  வரலாறு...!

வாஜ்பாய் அவர்கள் இந்திய பிரதமராக 1996 ஆம் ஆண்டு மே 16 முதல் 31ஆம் தேதி வரையும் பின்னர் மறுபடி 1998, மார்ச் 19 முதல் 2004, மே 13ஆம் தேதி வரையும் பதவி வகித்தவர். 1999 அக்டோபரில் நடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப்பிறகு பிரதமராக பதவியேற்றதன் மூலம், ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு பிரதமராக தொடர்ந்து மூன்று மக்களவைகளில் பதவி வகித்த முதல் பிரதமராவார். திருமதி.இந்திரா காந்திக்கு பிறகு தன் தலைமையிலான கட்சியை தேர்தல்களில் வெற்றி பெற வைத்த முதல் பிரதமரும் ஆவார்.
1924, டிசம்பர் 25ஆம் தேதியன்று, ஸ்ரீ கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கும் ஸ்ரீமதி கிருஷ்ண தேவி அம்மையாருக்கும் மகனாக பிறந்த வாஜ்பா் அவர்கள், சுமார் 40 ஆண்டு கால பாராளுமன்ற அனுபவம் உடையவர். 1957 லிருந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், 5வது, 6வது, 7வது, 10வது, 11வது, 12வது மற்றும் 13வது மக்களவைக்கும் 1962 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ல் உ.பியின் லக்னோவிலிருந்து தொடர்ச்சியாக 5 முறை பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தார்.
உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி போன்று 4 வெவ்வேறு மாநிலங்களிலிருந்து, வெவ்வேறு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாராளுமன்றவாதியாகவும் திகழ்கிறார். பிரதமராக அவர் ஆற்றிய சீரிய பணி, பதவியை விட்டுச்சென்று 10 வருடங்கள் ஆனாலும் இன்றளவும் நினவுகூரத்தக்க வகையிலும் போற்றத்தக்க வகையிலும் அடல் பிஹாரி வாஜ்பா் அமைந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், போக்ரான் அணுகுண்டு சோதனையிலும், நுட்பமான, அறிவார்ந்த பொருளாதார கொள்கைகளிலும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் தங்க நாற்கர திட்டங்கள் போன்ற பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அவர் அமைத்த அடித்தளம் நீண்டகால ஸ்திரமான வளர்ச்சிக்கு அடிகோலியது. ஒரு சில பிரதமர்களே சமூகத்தில் தாக்கம் உண்டாக்கும் இத்தகைய திட்டங்களை செய்துள்ளனர்.
குவாலியரிலுள்ள விக்டோரியா கல்லூரியில் (தற்போது லக்ஷ்மிபாய் கல்லூரி) படித்து, கான்பூரில் (உ.பி) டிஏவி கல்லூரியில் முதுகலை (அரசியல் அறிவியல்) 

பட்டம் பெற்ற வாஜ்பாய் அவர்கள் சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்று 1942ல் சிறைக்கு சென்றுள்ளார். 1975-77 க்கு இடையில் எமெர்ஜென்சி காலத்தில் தடுப்புக்காவலில் அவரை வைத்திருந்தனர்.
வாஜ்பாய், இலக்கியம், கலை, அறிவியல் துறைகளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். ராஷ்ட்ர தர்மம் (ஹிந்தி மாதப்பத்திரிக்கை), பஞ்சஜன்ய (ஹிந்தி வார பத்திரிக்கை) மற்றும் தினப்பத்திரிக்கைகளான ஸ்வதேஷ், வீர் அர்ஜூன் போன்ற பத்திரிக்கைகளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். 'மேரி சன்சதிய யாத்ர' (4
தொகுதிகள்), 'மேரி இக்கியவான் கவிதாயென்', 'சங்கல்ப் கால்', 'சக்தி-ஸே-சாந்தி', 'பாராளுமன்றத்தில் நாற்பதாண்டுகள்' (பேச்சுகள் அடங்கிய 3 தொகுதிகள்), '1957-95, மக்களவையில் அடல்ஜி' (பேச்சுக்களின் தொகுப்பு), 'ம்ரித்யு ய ஹத்ய', 'அமர் பலிதன்', 'கைதி கவிராஜ் கி குந்தலியன்' (எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்தபோது எழுதிய கவிதைகளின் தொகுப்பு), இந்திய வெளியுறவுக்கொள்கையின் புதிய பரிணாமங்கள்' (1977-79 காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது பேசிய பேச்சுக்களின் தொகுப்பு), 'ஜன சங்கமும் முஸ்லிம்களும்', 'பாராளுமன்றத்தில் 30 வருடங்கள்' (ஹிந்தி - 1957-1992 பேச்சுகள்- 3 தொகுதிகள்) மற்றும் 'அமர் ஆக் ஹை' (1994 கவிதைத்தொகுப்பு) போன்ற படைப்புக்கள் அவருடையது.
பல்வேறு சமூக கலாச்சார நடவடிக்கைகளிலும் வாஜ்பாயீ பங்குபெற்றுள்ளார். 1961லிருந்து தேசிய ஒருமைப்பாட்டு கௌன்சிலில் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் அவர் பங்கு வகித்தவை:
(i) தலைவர், அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் துணை ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் (1965-70);
(ii) பண்டித் தீன்தயாள் உபாத்யாய ஸ்மரக் சமிதி (1968-84);
(iii) தீன்தயாள் தம், ஃபரா, மதுரா, உ.பி; மற்றும்
(iv) ஜன்மபூமி ஸ்மரக் சமிதி (1969 முதல்).


நிறுவனர் - உறுப்பினர், அப்போதைய ஜனசங்கம் (1951),
தலைவர், பாராளுமன்ற ஜன சங்கக்கட்சி (1955-77),
தலைவர், பாரதிய ஜனசங்கம் (1968-73),
நிறுவனர் - உறுப்பினர், ஜனதா கட்சி (1977-80),
தலைவர், பாஜக (1980-86) மற்றும்
தலைவர், பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சி (1980-84, 1986, 1993-96).
11வது மக்களவையின் காலம் முழுதும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அதற்கும் முன் மொரார்ஜி தேசாயின் அரசில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக, மார்ச் 24, 1977 முதல் ஜூலை 28, 1979 வரை பதவி வகித்தார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலாக மதிக்கப்படும் ராஜதந்திரிகள் வரிசையில் பண்டித ஜவஹர்லால் நேருவிற்குப்பின், வாஜ்பாயீ அவர்கள் உள்ளார், அவர் 1998-99 வரை பிரதமர் பதவியில் இருந்த காலமானது, ' ஒரு வருட வீரத்தின் நம்பிக்கை' என உருவகப்படுத்தப்படுகிறது. அந்த பதவிக்காலத்தில்தான், போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு (மே, 1998), இதில் வெற்றிகண்ட வெகு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்தது. பிப்ரவரி 1999-ல் பாகிஸ்தானுக்கு பஸ் பயணம் மேற்கொண்டதன் மூலம், துணைக்கண்டத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் பிரச்னைகளை தீர்க்கும் முயற்சியில், புதிய சகாப்தம் படைத்ததாக பரவலாக வரவேற்கப்பட்டது. இந்தியாவின் இந்த நேர்மை உலக சமுதாயத்தின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், நட்புறவுக்கு நாம் விடுத்த அறைகூவல், கார்கில் ஊடுருவலில் பொய்த்துப் போனபோது, சூழ்நிலையை விவேகமாக கையாண்டதால், ஊடுருவல்காரர்கள் இந்திய மண்ணிலிருந்து விரட்டப்பட்ட போது வாஜ்பாயீ அவர்கள் வாழ்த்தப்பட்டார்.
வாஜ்பாயீ அவர்களின் 1998-99 பதவிக்காலத்தில், உலக அளவிலான பொருளாதார தேக்கத்திலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் GDP) இந்தியா 5.8% வளர்ச்சி அடைந்தது (இது முந்தைய ஆண்டுக்கும் அதிகம்). மேலும் அக்காலத்தில், அதிகரித்த வேளாண்மை உற்பத்தி மற்றும் அதிகரித்த அந்நிய செலாவணி கையிருப்பு போன்றவை, மக்களின் தேவைக்கேற்ப தொலைநோக்கு பொருளாதாரத்தை அமல்படுத்தியதை தெளிவாக்குகிறது. "நாம் வேகமாக வளர வேண்டும். நமக்கு வேறு வழி இல்லை", என்பதுதான் வாஜ்பாயீ அவர்களின், குறிப்பாக கிராமப்புற ஏழைகளின் பொருளாதார முன்னேற்றம் குறித்த மந்திரச்சொல்லாக இருந்தது. கிராமப்பொருளாதாரத்தை பலப்படுத்துவதிலும், வலுவான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், புதுப்பிக்கப்பட்ட மனிதவள மேம்பாட்டு திட்டங்களிலும், அவருடைய அரசு எடுத்த தைரியமான நடவடிக்கைகள், வலுவான சுய சார்புள்ள தேசத்தை உருவாக்கி, 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவை பொருளாதார சக்தியாக்குவதிலும், அடுத்த ஆயிரமாண்டுகளுக்கான சவால்களை சந்திக்கும் விதமாகவும், அவருடய அரசு, அர்ப்பணிப்புடன் செயல்பட்டது புலனாகிறது. 52வது சுதந்திர தின விழாவில், டெல்லி செங்கோட்டையிலிருந்து பேசும்போது அவர் இப்படி குறிப்பிட்டார்: "இந்தியா குறித்து எனக்கொரு பார்வை இருக்கிறது: பசி, பயமற்ற எழுத்தறிவின்மை இல்லாத இந்தியாதான் தேவை"
பாராளுமன்றத்தின் பல நிலைக்குழுக்களிலும் அவர் பணிய்யற்றியுள்ளார்.
அரசுறுதிக்குழு தலைவராகவும் (1966-67); பொது கணக்கு குழுவின் தலைவராகவும் (1967-70); பொது நோக்கங்கள் குழுவின் உறுப்பினராகவும் (1986); பாராளுமன்றக்குழுவின் உறுப்பினர் மற்றும் ராஜ்ய சபை வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் (1988-90); ராஜ்ய சபை மனுக்கள் குழுவின் தலைவாராகவும் (1990-91); பொது கணக்குக்குழு தலைவராகவும் (1991-93); வெளியுறவுத்துறை நிலைக்குழுவின் தலைவராகவும் (1993-96) பொறுப்பு வகித்துள்ளார்.

பரவலான பயணங்களால் வாஜ்பா் அவர்களுக்கு வெளியுறவுத்துறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மேம்பாடு, மகளிர் மற்றும் சிறார் நலவாழ்வு போன்ற துறைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. வெளிநாட்டுப்பயணங்களும் மேற்கொண்டுள்ளார். அவை-
பாராளுமன்ற நல்லெண்ண குழுத்தலைவராக கிழக்கு ஆப்ரிக்கா, 1965; பாராளுமன்றக்குழு ஆஸ்திரேலியா, 1967; ஐரோப்பிய பாராளுமன்றம், 1983; கனடா, 1987; கனடாவில் நடந்த காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் இந்திய பிரதிநிதி, 1966 மற்றும் 1994; ஜாம்பியா,1980; ஐல் ஆஃப் மான், 1984; பாராளுமன்றங்களுக்கு இடையேயான அமைப்பின் கூட்டத்துக்கு பிரதிநிதியாக, ஜப்பான்,1974; ஸ்ரீலங்கா,1975; சுவிட்ஸர்லேண்ட்,1984; ஐ.நா.போது சபையின் இந்திய பிரதிநிதி, 1988,1990,1991,1992,1993 மற்றும் 1994; மனித உரிமைகள் கமிஷனின் இந்திய பிரதிநிதிகளின் தலைவர், ஜெனீவா,1993.

தேசத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கான அங்கீகாரமாக வாஜ்பா்க்கு பத்மா விபூஷன் பட்டம் 1992ஆம் ஆண்டில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு, கான்பூர் பல்கலை தத்துவயிலாளராக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 1994ஆம் ஆண்டு, சிறந்த பாராளுமன்றவாதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு லோக்மான்ய திலக் புரஷ்கர் விருதும் பாரத் ரத்னா பண்டித் கோவிந்த் வல்லப் பந்த் விருதும் அவருக்கு வழங்கப்பட்டன.

நாவன்மை மிக்க பேச்சாளர். கவிதையின் மேல் அவருக்கிருந்த காதல் புகழ்பெற்றதும் மதிப்பு மிக்கதுமானதாகும். அவர் மிகச்சிறந்த புத்தக விரும்பியும் கூட. அவருக்கு இந்திய இசையும் நடனமும் பிடிக்கும்.

வகித்த பதவிகள்:
1951 - நிறுவனர் - உறுப்பினர், பாரதிய ஜனசங்கம்
1957 - 2வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1957-77 - தலைவர், பாராளுமன்ற ஜன சங்கக்கட்சி
1962 - மாநிலங்களவை உறுப்பினர்
1966-67 - தலைவர், அரசு உறுதிக்குழு
1967 - 2ஆம் முறையாக 4வது மக்களவைக்கு.
1967-70 - தலைவர், பொது கணக்குக்குழு'
1968-73 - தலைவர், பாரதிய ஜனசங்கம்
1971 - 3வது முறையாக 5வது மக்களவைக்கு.
1977 - 4வது முறையாக 6வது மக்களவைக்கு.
1977-79 - மத்திய காபினட் அமைச்சர், வெளியுறவுத்துறை
1977-80 - நிறுவனர் - உறுப்பினர், ஜனதா கட்சி
1980 - 5வது முறையாக 7வது மக்களவைக்கு.
1980-86- தலைவர், பாஜக
1980-84, 1986 and 1993-96 - தலைவர், பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சி
1986 - உறுப்பினர், பொது நோக்கங்கள் குழு
1988-90 - உறுப்பினர், பாராளுமன்றக்குழு மற்றும் உறுப்பினர், ராஜ்ய சபை வணிக ஆலோசனைக்குழு
1990-91- தலைவர், மனுக்கள் குழு
1991- 6வது முறையாக 10வது மக்களவைக்கு.
1991-93 - தலைவர், பொது கணக்குக்குழு'
1993-96 - தலைவர், வெளியுறவுத்துறை நிலைக்குழு, தலைவர், மக்களவை எதிர்க்கட்சி
1996 - 7வது முறையாக 11வது மக்களவைக்கு.
16 May 1996 - 31 May 1996 - இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை மற்றும் பின்வரும் துறைகள் / அமைச்சகங்களின் பொறுப்பையும் நிர்வகித்தார் -
ரசாயனம் மற்றும் உரங்கள், குடிமைப்பொருள்கள் வழங்கல், நுகர்வோர் நலன் மற்றும் பொது வழங்கல், நிலக்கரி, வணிகம், தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனம், உணவு பதப்படுத்தல், மனிதவள மேம்பாடு, தொழிலாளர் நலன், சுரங்கம், மரபுசாரா எரிசக்தி, வேலைவாய்ப்பு, பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் பென்ஷன், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு, திட்டம் மற்றும் அமலாக்கம், மின்சக்தி, ரயில்வே, கிராமப்புறம் மற்றும் வேலைவாய்ப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எக்கு, சாலைப்போக்குவரத்து, ஜவுளி, நீர்வளம், அணுசக்தி, மின்னணு, ஜம்மு காஷ்மீர், கடல்சார் மேம்பாடு, விண்வெளி மற்றும் இன்னபிற வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.
1996-97 - எதிர்க்கட்சித்தலைவர், மக்களவை
1997-98 - தலைவர், வெளியுறவுக்குழு
1998 - 8வது முறையாக 12வது மக்களவைக்கு.
1998-99 - இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.
1999- 9வது முறையாக 13வது மக்களவைக்கு
13 அக்.1999 to 13 மே 2004- இந்திய பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

சீனப் பெருஞ்சுவர், இதனைப்பற்றி கேள்விப்பட்டிராதவர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட 2,000 கி.மீ நீளமுடைய இந்த பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

எங்கோ சீனாவில் இருக்கும் இந்த இடத்தை பற்றி அறிந்திருக்கும் நமக்கு ராஜஸ்தானில் இருக்கும் கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort)  பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort)  பற்றி  சில தகவல்கள் இதோ !!


சீன பெருஞ்சுவருக்கு அடுத்த உலகின் 2வது பெருஞ்சுவராக விளங்குகிறது.
பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மலைக் கோட்டை 15ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டு, இந்த கோட்டை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய குழுவினரால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??


கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீற்றர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் எல்லை சுவர்களின் நீளம் மட்டுமே சுமார் 36 கி.மீ நீளம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இந்த 36 கி.மீ சுவர் தான் உலகளவில் மிகபெரியதான சீன பெருஞ்சுவருக்கு அடுத்து மிகப்பெரிய சுவராக அமைந்துள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இந்த எல்லை சுவரின் முன் சுவர்களின் அகலம், சுமார் 15 அடிகள் தடிமனாக அமைந்திருக்கும். மேலும் இந்த கோட்டையில் 7 பலத்த பாதுகாப்பான நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன.

இந்த கோட்டைக்குள் சுமார் 360 கோவில்கள் உள்ளதாகவும், அவற்றில் 300 பழமைவாய்ந்த சமண மத கோவில்களும், 60 இந்து மத கோவில்களும் உள்ளதாக கூறுகின்றனர்.

இந்த கோட்டைக்குள் ஏன் இத்தனை கோவில்களை கட்டியுள்ளனர் என்பதும் மர்மமாகவே உள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இதுபோல் பல மர்மங்களை உள்ளடக்கியதாக கருதப்படும் இந்த கோட்டைச் சுவர் பல நூற்றாண்டுகளை கடந்தும் பெருமளவில் சேதமாகாமல் கம்பீரமாக நிற்கிறது.

ஆனால் இந்திய பெருஞ்சுவர் என அழைக்கப்படும், உலகின் 2வது மிகப்பெரிய பெருஞ்சுவரான இதனை பற்றி உலகில் பலரும் அறியாமல் உள்ளது தான் வியப்பையும், மர்மத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும், இந்த சுவர் கட்டப்பட்டது பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்றையும் புராணத்தில் கூறியுள்ளனர்.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??



கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort) வரலாறு :

1443ம் ஆண்டு இந்த கோட்டை சுவரை மன்னர் ராணா கும்பா கட்ட முயற்சித்த போதெல்லாம் மீண்டும் மீண்டும் இன்னல்கள் வந்த வண்ணமே இருந்துள்ளன.

அப்போது ராணா கும்பாவிடம் ஆன்மிகவாதி ஒருவர், யாராவது உயிர்பலி கொடுக்க தாமாக முன்வந்தால் இந்த சுவரை கட்ட வரும் தடைகள் அனைத்தும் விலகும் என்று யோசனை கூறியுள்ளார்.

மேலும், அவ்வாறு நரபலி கொடுக்கப்படும் நபரின் தலை விழும் இடத்தில் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்றும், அந்த நபரது உடல் விழும் பக்கத்தில் கோட்டையும், கோட்டைச் சுவரும் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். எதிர்பார்த்த்து போலவே பலகாலமாக உயிர் பலி கொடுக்க யாரும் தாமாக முன்வராத சூழ்நிலையே நிலவியுள்ளது.

பின்னர் ஒருநாள் யாத்ரீகர் ஒருவர் உயிர்பலி கொடுக்க முன்வந்துள்ளார். இதையடுத்து சடங்குகள் சம்பிரதாயத்துடன் அந்த நபரின் உயிர் பலியிடப்பட்டுள்ளது.

இதனை விளக்கும் விதமாகவும் அந்த தியாகத்தை போற்றும் விதமாகவும் அந்த கோட்டையின் பிரதான வாசலான Hanuman Pol அருகே நினைவு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??


எந்த தாக்குதல்களாலும் நிலைகுலையாத இந்த கோட்டை, ஒரே ஒரு முறை மட்டுமே போரில் தோல்வியை சந்தித்துள்ளது.

மொகலாய பேரரசர் அக்பர், அம்பரின் மன்னன் ராஜா மான் சிங், மார்வாரின் அரசர் ராஜா உதய் சிங் போன்ற அனைவரும் ஒன்றினைந்து இந்த கோட்டையை எதிர்த்து போரிட்ட போது ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 360 கோவில்களை உள்ளடக்கியுள்ள இந்த கோட்டை, உலகின் அறியப்படாத மர்மம் நிறைந்த புதையலாகவே விளங்குகிறது.

இந்தக் கோட்டையுன் அமைவிடம்:



இந்த மலைக் கோட்டை உதைப்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 82 கி.மீரில் அமைந்துள்ளது.

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!



சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.


சூவன்லிசௌ(shuan Chou) துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

மேலும் படிக்க

பனை மரத்தை வெட்டாதீங்க!!!  வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...!!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

நுங்கில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்குத்தெரியுமா!?

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க


இன்று முதல் நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்க போகிறார்கலம் ...
அவர்கள்  பெயர்:-


சந்தோஷம்

நிம்மதி
ஆரோக்கியம்
ஆனந்தம்
கல்வி 
அறிவு 
ஆயுள் 
ஆற்றல் 
இளமை
துணிவு
பெருமை 
பொருள் 
பொன்
புகழ் 
நிலம் 
நன்மக்கள்
நல்லொழுக்கம் 
நோயின்மை
முயற்சி 
வெற்றி
மன்மத வருஷம்...
சித்திரை முதல் நாள்...
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே.............

நம்மில் பலர் தை ௧(1) தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் நாம் ஏன் தமிழ் புத்தாண்டு சித்திரையில் கொண்டாடுகிறார்கள் என்று ஆராயுந்து பார்த்தல் தெரியும் அதை பற்றிய சிறு குறிப்பு உங்களுக்காக ...

உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.

இந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே 12 ராசிகள் என அழைக்கப்படுகின்றன.

சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரை மாதம் முதல் நாள் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளாக நம் மூதாதையர்கள் முடிவு செய்தனர்.

இதை அடிப்படையாக கொண்டு புதுவருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள். அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினார்கள். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன.

அசுவதி மேஷத்தில் தொடங்குவதால் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது. 

அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்து வைத்துள்ளார்கள்.

 இளவேனில் (சித்திரை, வைகாசி), 

முதுவேனில் (ஆனி, ஆடி), 

கார் காலம் (ஆவணி, புரட்டாசி), 

கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை),

முன் பனிக்காலம் (மார்கழி, தை) 

பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில், 

இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் சித்திரைத் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.