10 கீபோர்ட் விண்டோஸ்  ஷார்ட்கட்ஸ்

                                      (10  KeyBoard  Windows Shortcuts)

(10 KeyBoard Windows Shortcuts)
1.Windows key+E -  Open File Manager 

2.Windows Key+ D -  Desktop Mode

3.Windows Key + Print Screen - to take a screenshot

4.Windows Key + I -   Windows Security

5.Window Key + L -    Profile Lock Page

6.Windows Key+ I -   Display  Setting

7.Windows Key + Tab -   Multiple Desktops

8.Windows Key + . -    Emoji 😀

9.Windows Key + ⬅  - Window left
   Windows Key + ➡  - Window right

10.Windows Key + p -Duplicate the Display, Extend it or Mirror

செம்பருத்தியின் 8 பயன்கள்

செம்பருத்தியின் 8 பயன்கள்


 • முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும்  உதவுகிறது. 
 • பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சோர்வுகளிலிருந்து விடுபடலாம். 
 • பாலில் சாப்பிட்டால் உடல் ஊட்டம் பெறும். சிறுவர்களுக்கு உடம்பு  பெருக்கும்.
 • செம்பருத்தி இலை தேநீரை பருகும் பலருக்கும், உயர் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது.
 • இலையை அரைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து சாப்பிட வெள்ளை, வெட்டை நோய் குணமாகும்.
 •  பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி  காலை, மாலை குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும். அதாவது இதய பலவீனம், மார்பு வலி முதலியவை தீரும்.
 • செம்பருத்தம் பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினசரி தலைக்கு தடவி வர மூளை  குளிர்ச்சி அடையும்.
 • 100 கிராம் பூக்களை தண்ணீர்ல் போட்டு பிசைந்து வடிகட்டி சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்து வர மேக வெள்ளை, ரத்த பிரமேகம் குணமாகும். 

 சிறுவன் சொல்ல, நிங்கள் என்ன  நினைக்கிறார்கள்

சிறுவன் சொல்ல, நிங்கள் என்ன நினைக்கிறார்கள்

தன்னம்பிக்கை ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். 

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன  நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். 

சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.

 தினம் 2 கடி ஜோக்ஸ்( தேர்வு தாள் )

தினம் 2 கடி ஜோக்ஸ்( தேர்வு தாள் )


1.

அம்மா: டே ஏன்டா அப்பா பேர பேபெர்ல எழுதி பிரிட்ஜ்ல வைக்கிற?

மகன்: நீ தான்மா சொன்ன அப்பா பேர் கெடாம பாதுக்கொனு


2.
அப்பா:எக்ஸாம் ஹாலிலே துங்கிட்டு வரேன்னு சொல்றியே வெக்கமாயில்ல ..?

மகன்:நீங்கதாப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னா முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னிங்க..


மேலும்
அலெசான்றோ வோல்ட்டா

அலெசான்றோ வோல்ட்டா

 • மின்துறை என்ற ஒரு துறை உண்டாவதற்கு வழிகாட்டியாக இருந்த அலெசான்றோ வோல்ட்டா 1745ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
 • 1775ஆம் ஆண்டு மின் ஏற்பை உருவாக்கும் எலெக்ட்ரோஃபோரஸ் (electrophorus) என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். 1776ஆம் ஆண்டு மீத்தேனை கண்டுபிடித்தார். 1800ஆம் ஆண்டுகளில் முதல் மின்கலத்தை உருவாக்கினார்.
 • வோல்ட் என்னும் மின்னழுத்த அலகானது இவருடைய பங்களிப்பை பெருமை செய்யவும், நினைவுக்கூறவுமே வைக்கப்பட்டது. இதனாலேயே மின்னழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி (Voltmeter) என்று அழைக்கின்றோம்.
 •  முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவரான அலெசான்றோ வோல்ட்டா 82வது வயதில் (1827) மறைந்தார்.

கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை  ..?

கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை ..?

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

 தோல்விக்கான 10 விதிகள்

தோல்விக்கான 10 விதிகள்1. ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.

2. மாற்றங்கள் எதையும் செய்யாமல் பிடிவாதமான குணத்துடன் இருங்கள்

3. மேனேஜரோ/சி.இ.ஓ.வோ உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் வாழுங்கள்.

4. நான் தவறே செய்யமாட்டேன் என்ற இறுமாப்புடன் இருங்கள்.

5.தவறாகப் போய்விடும் வாய்ப்பிருக்கும் ரேஞ்சிலேயே உங்கள்

 தொழிலை எப்போதும் நடத்திச் செல்லுங்கள்.

6. எதையும் யோசித்து செய்யாதீர்கள்.

7. வெளியாட்களின் சிறப்பறிவை (எக்ஸ்பர்ட்டைஸ்) மட்டுமே முழுமையாக நம்பியிருங்கள்.

8. உங்களை அதிகாரக் குவியலின் மையமாக்கிக் கொண்டு என்னைக் கேட்டுத்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அதிகாரத்தை ரசித்து அனுபவியுங்கள்.

9. வரும், ஆனா வராது; கிடைக்கும், ஆனா கிடைக்காது போன்ற குழப்பமான தகவல்களையே உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு அனுப்புங்கள்.

10. எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே பயத்துடன் செயல்படுங்கள்.

வெற்றிக்கான 10 விதிகள்

வெற்றிக்கான 10 விதிகள்


 • நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான  மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.
 • நீங்கள் செய்வதை விரும்புங்கள்.
 • நீங்கள் இளைஞராக இருக்கும்போதே துணிந்து செயல்படகூடிய சரியான தருணமாகும்.
 • நீங்கள் செய்வதை விட்டுவிடாதீர்கள்.
 • ஒவ்வொரு விழித்திருக்கும் மணி நேரமும் கடுமையாக உழையுங்கள்.
 • உங்கள் முக்கிய பணியின் மீது கவனம் செலுத்துங்கள்.
 • தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். நீங்கள் தோல்வியடைய விருப்பமில்லையென்றால், புதுமையாக  எதையும் படைக்க இயலாது.
 • உங்களுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
 • இந்த உலகத்தில் உள்ளதை தாண்டி யோசியுங்கள்.
 • வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள்.

தன்னம்பிக்கை கதைகள்தினம் 2 கடி ஜோக்ஸ்( தம்பி )

தினம் 2 கடி ஜோக்ஸ்( தம்பி )


1.
அண்ணன்:ஏன்டா ஆட்டோவுல இருந்து ஒரு Weel ல கழட்டுன ... ?

தம்பி: க Too weeler மட்டும் தான் ' பார்க் ' பண்ணனும்மாண்ணே 

2.
ண்ணன்:ஏன்டா கடைகாரன் மண்டையா உடைச்ச..?

தம்பி:நீதான் டார்ச்லைட் வாங்கும்போது அடுச்சு பாத்து வாங்க சொன்ன..!
அ்தான்


மேலும் ரெனே லென்னக்

ரெனே லென்னக்

 •  இதய துடிப்பை கண்டறிய புதிய வழிமுறையை கண்டுபிடித்த ரெனே லென்னக் 1781ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
 •  பல தடைகளுக்கு பிறகு மருத்துவம் பயின்று கல்லீரல் நோய்கள், ரத்தத்தில் காணப்படும் நுண்ணுயிரிகளை குறித்து கட்டுரைகள் வெளியிட்டார். 1804ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார்.
 •  இவர் 1808ஆம் காலக்கட்டத்தில் நோயியல், உடற்கூறியல் குறித்து பல கட்டுரைகள் எழுதினார். மேலும் காசநோய், புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
 •  இவர் கண்டுபிடித்த நோய்களின் பெயர்கள், சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
 •  அந்த நாட்களில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர். இவர் மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்து 'ஸ்டெதஸ்கோப்' கருவியை கண்டுபிடித்தார்.
 •  சமூகத்திற்காக பல நன்மைகளை செய்த லென்னக் தனது 45வது வயதில் (1826) மறைந்தார்.

 ஈசல் மருத்துவ குணங்கள்

ஈசல் மருத்துவ குணங்கள்


 • ஒரு கிலோ ஈசலின் விலை 200 ரூபாய் தட்டான், வண்ணத்துப்பூச்சி மாதிரி ஈசலும் ஒரு பூச்சிதான்.
 • ஈசலை நன்றாக அரைத்து மாவாக்கி அதனுடன் தேன்மெழுகை உருக்கி எடுத்த எண்ணெயை கலந்து உறைய வைக்கவேண்டும். இந்த க்ரீமை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குணமாகும். இளம்பிள்ளை வாதம், பக்கவாதம் (hemiplegia), முகவாதம் (facial paralysis) போன்ற நோய்களுக்கும் மருந்தாக இருக்கின்றது." என்கிறார்

 மறக்க முடியாத  உதவி

மறக்க முடியாத உதவி

 இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர்.

வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின.

கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.

அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான்.

தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான்.

இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.

பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.

உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.

உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே.

பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை.

அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா?

என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன்.

அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர்.

வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில்,

"இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்" என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடந்தான் ஏழை.

ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.

அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.

திடீரென நண்பனின் நினைவு வந்தது.

இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணர்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான்.

குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான்.

இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும்.

நீயே குடித்துக்கொள் என்றான் பணக்காரன்.

உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.

பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர்.

ஏழை நண்பன் அங்கிருந்த ஒரு கல்லில்,

"என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்"

என்று எழுதி வைத்தான்.

உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய்.

உதவி செய்தபோதோ அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய்.

அது ஏன்? என்று கேட்டான்.

நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை.

அதனால் அதை மணலில் எழுதினேன்.

ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது.

ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன் என்றான் ஏழை.

ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும். பாராசிட்டமால்(paracetamol )

பாராசிட்டமால்(paracetamol )


பொதுவாக வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைக்கவும் இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக, தலைவலி, உடல் வலி, தசை வலி, முது வலி, போன்றவற்றிற்கும் இதனை பயன்படுத்தலாம் என்றே மருத்துவர்கள் கூறுவார்கள். அதுவும் அந்தந்த வலியின் தன்மையை பொருத்தே இதன் அளவு வேறுபடும். சிலர் தேவையற்ற பல நோய்களுக்கும் இதனை பயன்படுத்துகின்ற்னர்.

சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்தை தரலாம்

பக்க விளைவுகள் :- பாராசிட்டமாலை அதிகம் எடுத்தால், பின்வரும் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். - வாந்தி - மயக்கம் - அதிக காய்ச்சல் - வாய் புண் - அல்சர் - குடல் பாதிப்பு - ரத்த சோகை - பசியின்மை - உதடுகள் வெந்து போகுதல் இத்தகைய கொடுமையான விளைவுகளால் பாதிக்கப்படுவீர்கள்.

முன்னெச்சரிக்கை

பாராசிட்டமால் சாப்பிட்ட 3 நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் தொடர்ந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்தவும். -

பெரியவர்களுக்கு 7 நாட்களுக்கு மேலும், குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கும் வலி ஏதேனும் இருந்தால் மருத்துவரை கட்டாயம் அணுகவும். 

 உடலில் திடீர் வீக்கமோ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் பாராசிட்டமால் எடுத்து கொள்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.


 குறுக்கு வழி

குறுக்கு வழி

சாதாரண விஷயத்துக்குக் கூட குறுக்கு வழியை கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நாளை எதையுமே நேர் வழியில் செய்ய மனசு வராது. அது கடைசியில் நமக்கு கெட்டப் பெயரையும், அவப் பெயரையும்தானே தேடித் தரும். எப்போதும் நேர் வழியில் செல்லுங்கள்.. அது உங்களது கெளரவத்தை உயர்த்தும்,மனசுக்கு நிம்மதி தரும். பெருமையுடன் நடக்க சக்தி தரும்.


 தினம் 2 கடி ஜோக்ஸ்( ஊழியர்)

தினம் 2 கடி ஜோக்ஸ்(ஊழியர்)


1.
ஊழியர் 1:நம்ம மேனேஜர் ஆஸ்பத்திரியில சீரியஸா இருக்காராம் 

ஊழியர் 2:அவரு ஆபீஸ்லயே சீரியசா தான்டா இருப்பாரு

ஊழியர் 1:😮😮😮😮 ..?


2.
ஊழியர் 1: வேலை பாக்குறதுல பாதி வாழ்க்கை போயிருது..

ஊழியர் 2:வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்த மீதி வாழ்க்கையும் போயிரும் ..!


 தாதாசாஹேப் பால்கே

தாதாசாஹேப் பால்கே

 •  இந்தியத் திரையுலகின் தந்தை, தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவரின் இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.
 •  பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர், இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் இவரே மேற்கொண்டார்.
 •  1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டார். இதன்மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.
 •  தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.
 •  வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 73வது வயதில் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் தாதாசாஹேப் பால்கே விருதினை இந்திய அரசு, 1969ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.

மேலும்

1.நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - தாமஸ் ஆல்வா எடிசன்

2.உலக குடை தினம்

3.மூலக்கூறு உயிரியலின் தந்தை - ஜாக்குவஸ் லூசியன் மோனாட்

4.மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை

5.திமீத்ரி மெண்டெலீவ்

6.தானாக நகரும் கற்கள்

7.2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் ஆற்றல் - ஜி.ஹெச்.ஹார்டி

8.சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர்..!

9.ரப்பர் டயரை கண்டுபிடித்தவர் யார் ..?

10.சார்லஸ் ஹென்றி டர்னர்

11.தாதாசாஹேப் பால்கே


தூக்கத்தை கெடுக்கும்  தர்பூசணி

தூக்கத்தை கெடுக்கும் தர்பூசணி

 • தர்பூசணி பழத்தை இரவில் சாப்பிடுவதால் பல ஆபத்துகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.
 • நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. இவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் உடலுக்கு அதிக சத்துக்கள் தரக்கூடியவை. அவ்வாறு உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் தர்பூசணி பழத்தில் சில ஆபத்துகளும் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா. அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். தர்பூசணி பழத்தை பகல் நேரத்தில் சாப்பிட்டால் மட்டுமே அதிக நன்மைகள் கிடைக்கும்.
 • ஆனால் இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படும். இரவு நேரத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை வரும். அது மட்டுமன்றி வயிற்று பிரச்சினைகளும் ஏற்பட வழிவகுக்கும். குடல் எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது ஆயுர்வேதப் புத்தகங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் 92 சதவீதம் நீர் உள்ளடக்கம் உள்ளது. அதனால் உச்ச கோடைகாலங்களில் உங்கள் நீரேற்றம் பிளுசே தீர்க்கும். அதே சமயத்தில் இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
 • இது உங்களின் தூக்கத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சில சமயத்தில் தர்பூசணி கட்டுப்பாட்டில் சாப்பிடாவிட்டால் தண்ணீரை தக்கவைத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படும். அதனால் வீக்கம் மற்றும் அதிக நீரிழப்பு ஏற்படும். தர்பூசணி பழத்தில் அதிக சர்க்கரை உள்ளது. சர்க்கரை இரவில் சிறந்த முறையில் தவிர்க்கப்படுகிறது மற்றும் எடை அதிகரிப்பை கூட இது ஊக்குவிக்கும். மேலும் கூடுதலாக சந்தையிலுள்ள பல பழங்களை அவற்றின் இனிப்பை அதிகரிக்க ரசாயனங்கள் மூலம் கூர்மையாக்க படலாம். இது உங்களின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இனிமேல் இரவு நேரத்தில் தர்பூசணிப் பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

 தலைவலிக்கு பாட்டி வைத்தியம்

தலைவலிக்கு பாட்டி வைத்தியம்

பெரும்பாலான மக்களுக்கு, அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது.

இன்னும் சிலருக்கோ, குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படும்.

தலைவலிக்கு உதவும் பாட்டி வைத்திய முறைகள்:

☘ கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

 வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

  கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

 கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

 2 மிளகை எடுத்து அதை சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

  கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

  முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

  புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

  டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும். மூட்டையில் கல்

பணமூட்டை


முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.

"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநூறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.


மேலும் கதைகள் தினம் 2 கடி ஜோக்ஸ்(லூசாடா நீ)

தினம் 2 கடி ஜோக்ஸ்(லூசாடா நீ)


1.
அண்ணன்: டேய் எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?

தம்பி: கரண்ட் இல்லடா..

அண்ணன்: சரி! சரி, பேனையாவது போடு..

தம்பி: வேண்டாம் மெழுகுவத்தி அணைஞ்சிடும்?


2.
மேலாளர்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன்: பி.எ.

மேலாளர்:அடப்பாவி!படிச்சதே ரெண்டு எழுத்து!அதையும் தலை கீழாபடிச்சிருக்கே! கலீலியோ கலிலி •  அறிவியலில் புரட்சியை ஏற்படுத்திய கலீலியோ கலிலி 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
 •  இவர் தூர உள்ள பொருட்களை கிட்டவாக பார்க்கும் பொருளை கண்டறிய ஒரு சாதனத்தை உருவாக்க வேண்டுமென ஆராய்ச்சி மேற்கொண்டார். விடாமுயற்சிக்கு பிறகு 3 மடங்கு உருப்பெருக்கவல்ல ஒரு சாதனத்தை கண்டுபிடித்தார். அதை தொடர்ந்து 10 மடங்கு உருப்பெருக்கும் தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தார்.
 •  இவர் தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வௌ;வேறு முகங்கள் மற்றும் வியாழனை நான்கு பெரிய நிலாக்கள் (இவரது புகழைச் சொல்லும் வகையில் கலீலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) சுற்றி வருவதாகவும் கண்டறிந்தார்.
 •  மேலும் கலீலியோ மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைக்காட்டி உட்பட பல்வேறு கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.
 •  கலீலியோவின் சூரியமையக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக 1632ஆம் ஆண்டு கலீலியோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்.
 •  பிறகு தனது இருவகை முதன்மை உலக கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள் என்ற புத்தகத்தில் இவருடைய சூரியமைய கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார்.
 •  கலீலியோ வீட்டுச்சிறையில் இருந்தபோது தான், தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றும், இறுதிப் படைப்புமான இரண்டு புதிய அறிவியல்கள் என்ற நூலை எழுதினார். அதில் இயங்கியல், பொருட்களின் வலிமை போன்ற துறைகளைப் பற்றிய ஆய்வுகளை தொகுத்து அளித்தார்.
 •  'நோக்கு வானியலின் தந்தை', 'நவீன இயற்பியலின் தந்தை', 'நவீன அறிவியலின் தந்தை' என்று பலவாறாக பெருமையுடன் அழைக்கப்படும் இவர் தனது 77வது வயதில் (1642) மறைந்தார்.


1.நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - தாமஸ் ஆல்வா எடிசன்

2.உலக குடை தினம்

3.மூலக்கூறு உயிரியலின் தந்தை - ஜாக்குவஸ் லூசியன் மோனாட்

4.மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை

5.திமீத்ரி மெண்டெலீவ்

6.தானாக நகரும் கற்கள்

7.2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் ஆற்றல் - ஜி.ஹெச்.ஹார்டி

8.சுதந்திரத்திற்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர்..!

9.ரப்பர் டயரை கண்டுபிடித்தவர் யார் ..?

10.சார்லஸ் ஹென்றி டர்னர்

 துளசிக்கு  இருக்கும் மருத்துவ குணங்கள்


காய்ச்சல்

காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்.

தொண்டைப்புண்

தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

தலை வலி

உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

கண் பிரச்சனைகள்

கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.

வாய் பிரச்சனைகள்

ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.

இதய நோய்

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சளி, இருமல்

இருமல் கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.

மேலும்


 டெலிகிராம் எந்த நாட்டு செயலி

டெலிகிராம் எந்த நாட்டு செயலி

ரஷ்யாவை சேர்ந்த பவல் துரவ்

டெலிகிராம் செயலி 2013 ஆம் ஆண்டில் ரஷ்யாவை சேர்ந்த பவல் துரவ் என்பரவால் உருவாக்கப்பட்டது.முதற்கட்டமாக ஐஓஎஸ் பயனர்களுக்கும் அடுத்த சில மாதங்களில் ஐஓஸ் பயனர்களுக்கும் உருவாக்கப்பட்டது. இந்த செயலி தகவல் பரிமாற்றம், வீடியோ தொடர்பு உள்ளிட்ட அம்சங்கள் கொண்டவை. 

1.5 ஜிபி வரை அளவுள்ள வீடியோவை பகிரலாம் 

டெலிகிராம் செயலியில் 1.5 ஜிபி வரை அளவுள்ள வீடியோக்களை பரிமாறிக் கொள்ளலாம். சமீபத்தில் அமேசானின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோசின் வாட்ஸ்அப் கணக்கை சவுதி இளவரசர் ஹேக் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜெஃப் பெசோஸ் டெலிகிராம் கணக்கை பயன்படுத்தியிருந்தால் ஹேக் செய்திருக்க முடியாது எனவும் வாட்ஸ்அப் கணக்கு எளிதாக ஹேக் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனவும் டெலிகிராம் நிறுவனம் பவல் துரவ் தெரிவித்தார். 

சில காலக்கட்டங்களுக்கு முன்பு டெலிகிராம் ஒரு இந்திய செயலி எனவும் அதை இந்தியனாய் இருந்தால் பயன்படுத்தும்படியும் சமூகவலைதளங்களில் கருத்துகள் பரவின என்பது கவனிக்கத்தக்க ஒன்று. 

மேலும் கதைகள்

கிழ ஆந்தையின் அறிவுரை 

இரவு நேரம். தெருவோரமாக நின்ற மின்கம்பத்தில் ஆந்தைகள் எல்லாம் கூட்டமாகக் கூடின. அந்த ஆந்தைகளில் பிரிதிவாதன் என்ற ஒரு ஆந்தையுமிருந்தது.

அந்த ஆந்தை மற்ற ஆந்தைகளைப் பார்த்து, ""நண்பர்களே! நாம் எல்லாரும் கூட்டமாகக் கூடி இருக்கிற இந்த இரவுப் பொழுதில், அழகான பாடல் ஒன்றினை நாம் எல்லாருமாகச் சேர்ந்து பாடலாமே!'' என்றது.

அதனைக் கேட்ட ஒரு கிழ ஆந்தை, ""பிரதிவாதா! உன் எண்ணத்தை உடனடியாக மாற்றிக்கொள். இந்த இரவு நேரத்தில் நாம் எல்லாரும் சேர்ந்து சப்தமிட்டால், இந்தத் தெருவாசிகளின் தூக்கம் கலைந்துவிடும். எல்லாரும் உடனேயே படுக்கையை விட்டு எழுந்து தெருவிற்கு வந்துவிடுவர்.

""நம்மைப் பார்த்தால் எரிச்சலில் கண்டதைக் கையிலெடுத்து நம்மைத் தாக்கினாலும் தாக்கி விடுவர். அதனால் நாம் சிறிதுநேரம் அமைதியாக இந்த மின்கம்பத்தில் இருந்துவிட்டு அதன் பின்னர் நம் இருப்பிடத்திற்கு செல்லலாம்!'' என்று அறிவுரை கூறியது.

எல்லா ஆந்தைகளும் கிழ ஆந்தையின் அறிவுரையை ஏற்றுக் கொண்டன. ஆனால், பிரதிவாதன் ஆந்தை மட்டும் கிழ ஆந்தையைக் கோபத்துடன் பார்த்தது. ""கிழவா! உனக்கு வயதாகிவிட்டதால் அறிவும் மழுங்கி விட்டது. அதனால்தான் எங்களின் மனநிலை தெரியாமல் எங்களை எல்லாம் உன்னைப்போன்று அஞ்சி ஓடச் சொல்கிறாய். மற்றவர்கள் வேண்டுமானால் உன் பேச்சைக் கேட்டு உன்பின்னால் வரட்டும். ஆனால், நான் என்றுமே உன் பின்னால் வரமாட்டேன்!'' என்று பிடிவாதமாக மின்கம்பத்தில் அமர்ந்து கொண்டது.

கிழ ஆந்தையின் பேச்சை மதித்த மற்ற ஆந்தைகள் எல்லாம் மின்கம்பத்தைவிட்டு சென்றுவிட்டன. பிரதிவாதன் மட்டும் மின்கம்பத்தில் அமர்ந்த படி பலமாக சப்தம் கேட்கும்படியாக "ஆ... ஆ... ஆ...' என்று கத்தியது.

வீட்டினுள் தூக்கத்தில் இருந்த தெருவாசிகளுக்கு, ஆந்தையின் சப்தம் சங்கு ஊதுவது போன்ற ஒலியை ஏற்படுத்தவே, அவர்கள் அனைவரும் படுக்கையைவிட்டு எழுந்து கதவைத் திறந்து வேகமாக வெளியே வந்து பார்த்தனர்.

அங்கே பிரதிவாதன் மின்கம்பத்தில் அமர்ந்தபடி, "ஆ... ஆ... ஆ...' என்று அலறிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட கூட்டத்திலிருந்த ஒருவருக்குக் கோபம் வந்துவிட்டது.

""ஆந்தையே! இரவு நேரம் என் வீட்டின் முன்னே வந்து அலறி என் தூக்கத்தை கெடுத்துவிட்டாயே... இதோ உன்னை என்ன செய்கிறேன் பார்!'' என்று கூறியபடி தன் நடை வாசலின் அருகே கிடந்த கல்லை எடுத்தார்.

மிகவும் நேர்த்தியாக குறி பார்த்து பிரதிவாதன் மீது எறிந்தார். அவர் எறிந்த கல் குறி தவறாமல் பிரதிவாதன் மீது நச்சென்று மோதியது.

அடுத்த நிமிடம் பிரதிவாதன் சுருண்டு தரையில் பொத்தென்று விழுந்தது. அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. அதனைக் கண்ட அந்தத் தெருவாசிகள் எல்லாம் ஓடிவந்து கற்களாலும், கம்பாலும் பிரதிவாதனைக் கண் மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர்.

"கிழ ஆந்தையின் அறிவுரையைக் கேட்டு நடந்திருந்தால், இப்போது நமக்கு இப்படி ஒரு ஆபத்து நேர்ந்திருக்காதே!' என்று மிகவும் கவலைப்பட்டது. பிரதிவாதனின் அழுகுரலைக் கேட்டு மனம் பொறுக்காத கிழ ஆந்தை, தூரத்திலிருந்த கம்பத்தில் உட்கார்ந்து கத்தத் தொடங்கியது. எல்லாரும் அதை அடிக்க ஓடினர். அந்த நேரத்தை பயன்படுத்திக் பிரதிவாதன் தப்பிப் பறந்தது. பறந்து கொண்டே அது கிழ ஆந்தைக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

 தினம் 2 கடி ஜோக்ஸ்(அறிவுரை)

தினம் 2 கடி ஜோக்ஸ்

1.
நண்பன் 1 : யாருAdvice ஐயும் கேக்காத உன் மனசுக்கு பட்டத செய் .  

நண்பன் 2 : யாரு Adviceஐயும் கேக்காதன்னு சொல்லிட்டு Advice பண்றியேடா .


2.
நண்பன் 1:கஷ்டங்கள் தான் நம் வாழ்க்கைக்கு கற்று கொடுத்த பாடம்!

நண்பன் 2:சாப்பிடம்போது டிவி பாக்காத.

நண்பன் 1:ஏன்..?

நண்பன் 2:சாப்பிட முடியலா..


 சார்லஸ் ராபர்ட் டார்வின்

சார்லஸ் ராபர்ட் டார்வின்

 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உலகுக்கு தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.

 அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.

 இவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு இவருடைய கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்து வந்தது.

 தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். இந்த ஆராய்ச்சி 1831ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது.

 அதில் பலவகையான ஊர்வன, பறப்பன, நடப்பன என அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் மற்றும் தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் ஏராளமாகச் சேகரித்தார்.

 தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உருவானது. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி On the Origin of Species என்ற புத்தகத்தை எழுதினார்.

 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய டார்வின் 1882ஆம் ஆண்டு தனது 73வது வயதில் மறைந்தார்.

அத்திப்பழம் பயன்கள்

அத்திப்பழம் பயன்கள்

 • ஒருவர் தொடந்து 40 நாட்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் அவரது உடல் பலம் பெறும்.
 • தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
 • மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
 •  நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
 •  போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
 • தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
அத்தி பழம்  (1 பழம் = 50gm) 
நார்ச்சத்து: 5.8%
பொட்டாசியம்: 3.3%
மாங்கனீசு: 3%
விட்டமின் பி6: 3%
கலோரி(37): 2%
புரதம்-2 கிராம்,
கால்ஷியம்-100 மி.கி,
இரும்பு-2 மி.கி

மேலும்


 ஏன் சோகமாக இருக்கிறீர்கள் நஷ்டம்

நஷ்டம்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

அதற்கு இவர் "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றால் அவர்.

"50 கோடி ரூபாய்" என்றார் இவர்.

"அப்படியா, நான் யார் தெரியுமா?" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

"சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் "ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி "இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் "எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?" என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்

இவர் "இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார்.

அந்த பெண்மணி "இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

நம்மால் எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

நஷ்டம் கஷ்டம் உங்களை திரும்பிபார்க்க  வைக்கும்

தாமஸ் ஆல்வா எடிசன்


 உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளை கண்டறிந்த தாமஸ் ஆல்வா எடிசன் 1847ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார்.

 தன்னுடைய சிறுவயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் 8 வயதில் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பிறகு மூன்றே மாதத்தில் பள்ளியை விட்டு நின்ற இவர், தன்னுடைய அம்மாவிடம் பாடம் கற்றார்.

 பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறுவயதில் இருந்தே இவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்திருக்கிறான்.

 எடிசன் தன்னுடைய 11 வயதிற்குள் ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங்களை கற்றுத் தேர்ந்தார்.

 ரயில் நிலையத்தில் பணியாற்றிய போது, 'கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட்' வாரப் பத்திரிக்கையை அச்சிட்டு வெளியிட்டார். மேலும் அங்கேயே சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளை தொடங்கினார்.

 இவர் தன் வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராம் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப்பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

 ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சி கூடத்திற்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், 'நேற்றைய கண்டுபிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' என்பார்.

 இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று முறையாக எதையும் கற்காமல், உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கையில் சாதனை படைத்த எடிசன் தன்னுடைய 84வது வயதில் (1931) மறைந்தார்.

 இவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் படி, அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

உண்மை

உண்மை

 ஓரு ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு நல்ல நீதிக் கதைகளைக் கூறி வளர்த்து வந்தார். அந்தத் தாய், கஷ்டப்பட்டாலும் தனது மகன் நல்லவனாக பிற்காலத்தில் வாழ்ந்து சிறப்புப் பெற வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாள்.

உண்மைஅதனால் அவனுக்குத் தீய பழக்கங்கள், தீய நண்பர்கள் சேர்ந்துவிடாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

அவன் வாலிபனான். வேலைக்குச் சென்றால்தான் தாயைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

வேறு ஒரு ஊருக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது. தாயைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற வருத்தம் இருந்தாலும், நன்கு வேலை பார்த்துத் தாயைக் கவனிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஊரை விட்டுக் கிளம்பினான்.

அவன் ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் தாய் மிகுந்த அக்கறையுடன் செய்து முடித்தாள். அவன் கிளம்பும் நாள் வந்த போது தாய் அவனிடம் -

“மகனே! உனக்கு என்ன நேர்ந்தாலும் உண்மை பேசுவதை மட்டும் விட்டுவிடாதே! எங்கும் எப்போதும் யாரிடத்திலும் உண்மையை மட்டுமே நீ பேச வேண்டும். இதை மட்டும் மறக்காதே!’ என்று கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

அக்காலத்தில் எங்கு சென்றாலும் நடைப் பயணம்தான். வாகன வசதிகள் கிடையாது. ஆகவே, அந்த வாலிபன் ஒரு கூட்டாத்தாருடன் சேர்ந்து தனது பயணத்தைத் துவக்கினான்.

செல்லும் வழியில் சில கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தை வழிமறித்தனர். கூட்டத்தினரிடம் இருந்த பொருள்களையெல்லாம் பறித்தனர்.

அந்த வாலிபனிடம் ஒரு கொள்ளையன் வந்து, “உன்னிடம் என்ன உள்ளது?’ என்று கேட்டான்.

அப்போது, அந்த வாலிபன் தனது தாய் சொன்னது போல, மறைக்காமல் உண்மையைக் கூறினான் -

“என்னிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே உள்ளன…’

கொள்ளையர்கள் அவனைப் பரிசோதித்துப் பார்த்தனர். ஆச்சரியமைடந்தனர். அவன் சொன்னது போலவே அவனிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே இருந்தன.

கொள்ளையர்களின் தலைவன் அசந்து போனான்.

அந்த சிறிய வாலிபனிடம் இருந்த உண்மை பேசும் குணம் கொள்ளையனின் மனதைக் கரைத்தது.

ஆபத்திலும் இவ்வளவு நேர்மை, உண்மை ஒரு மனிதனிடம் காணப்பட்டதைக் கண்டு மனம் மாறினான்.

அன்றே தனது திருட்டுத் தொழிலை விட்டுவிட முடிவெடுத்தான். அவர்களிடமிருந்து திருடிய பொருள்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நல்ல மனிதனாக மாறி உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பிச் சென்றான், 

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.