Tagavalthalam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சமூகவலை தளங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் பெங்களுருவில் உள்ள மொபைல் போன்களுக்கான திறனாய்வு மற்றும் பராமரிப்பு மென்பொருள்களைத் தயாரிக்கும் லிட்டில் ஐ லேப்ஸ் என்னும் நிறுவனத்தை அறிவிக்கப்படாத ஒரு தொகைக்கு வாங்கியதன் மூலம் இந்தியாவில் முதன் முதலாக தன் வர்த்தகக் காலடியை எடுத்து வைத்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக் நிறுவனத்தின் முதல் இந்திய முதலீடு ....


எனினும், தொழில்நுட்ப செய்தி இணையதளமான டெக்ரஞ்ச் இந்த விற்பனையின் மதிப்பு சுமார் 10 முதல் 15 மில்லியன் டாலர்கள் இருக்கலாம் என அளவிட்டுள்ளது. அளவு சிறியதாக இருந்தாலும், பேஸ்புக் நிறுவனத்தால் முதன்முதலில் வாங்கப்படும் இந்திய கம்பெனியாக லிட்டில் ஐ முக்கியத்துவம் பெறுகிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய தூண்.. 

"இந்த முயற்சியின் மூலம், லிட்டில் ஐ லேப்ஸ், பேஸ்புக் முயற்சிகளில் பங்கெடுத்து மொபைல் மென்பொருட்கள் முன்னேற்றத்தில் அடுத்த கட்டத்தை அடைய முயலும். இது பேஸ்புக் நிறுவனத்தின் முதல் இந்திய முதலீடு என்பதோடு, நாங்கள் அதுபோன்ற ஒரு சிறந்த அணியில் சேர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என அந்நிறுவன இணையதள அஞ்சல் குறிப்பு தெரிவிக்கிறது.


கலிபோர்னியா பயணம்.. இந்த ஒப்பந்தம் முடிந்த கையேடு, ஒட்டுமொத்த லிட்டில் ஐ லேப்ஸ் அணியும், கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் நிறுவன தலைமையகம் அமைத்துள்ள மென்லோ பார்க்கிற்கு இடம் மாற்றம் செய்ய உள்ளது.

அங்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய வர்த்தக முயற்சியான மொபைல்களுக்குத் தேவையான திறன் குறைபாடுகளை நீக்கும் கருவிகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடரும்.

லிட்டில் ஐ லேப்ஸ் வேஞ்சரீஸ்ட் மற்றும் ஜிஎஸ்எஃப் ஆகிய முதலீட்டாளர்களின் முதலீடுகளின் துணையோடு நடத்தப்படுகிறது.

கபில்சிபல்
கபில்சிபல்

கபில்சிபல்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது. இதனால் ஆ.ராசாவுக்குப் பதில் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக பொறுப்பேற்ற கபில் சிபல் மத்திய அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று மறுத்தார்.
ஆனால் அதன்பிறகு தான் சி.பி.ஐ. விசாரணையில் பல ஆதாரங்கள் சிக்கி கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்த கபில் சிபல் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவர் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகை எவ்வளவோ அதே அளவு வாக்குகளை கபில் சிபல் பெற்றுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டது. கபில் சிபல் தேர்தலில் 1 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
இதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஒரு பைசா கூட இழப்பு இல்லை என்று சொன்னவருக்கு அதே எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கபில் சிபலுக்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் பி.சிதம்பரம், மணீஷ் திவாரி ஆகியோரும் ஒரு பைசா கூட இழப்பு இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் கபில் சிபலை டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் ஹர்ஷ்வர்த்தன் தோற்கடித்தார். 
ஆம்ஆத்மி வேட்பாளர் அததோஷ் 2–வது இடம் பெற்றார். 

கபில் சிபல் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பாராளுமன்ற  வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கு உங்களுக்க தேர்தல் ஆணையம் இனியதலத்தில் பட்டியலிட்டு உள்ளது..  உங்கள் தொகுதி வேட்பாளரின் தெர்தல் செலவு வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு பதிவு வரை  வேட்பாளரின் செலவு கணக்கை பார்க்க

பாராளுமன்ற  வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கு உங்களுக்க தேர்தல் ஆணையம் இனியதலத்தில் பட்டியலிட்டு உள்ளது..

உங்கள் தொகுதி வேட்பாளரின் தெர்தல் செலவு வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு பதிவு வரை



ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும்
சக்தி அதிகம்.

எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) "துணியால் செய்யப்பட்டது.

ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.

வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.

உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே.ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில்இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது.அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.

ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால்,அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.

உலகின் அதிக அளவு மனித உயிர்கள்
பலியாக காரணமாக இருக்கும்
ஒரே உயிரினம்....கொசு.

ஒரு ஆய்வின்படி,
வலது கை பழக்கமுடைய மனிதர்கள்,
இடது கை பழக்கமுடைய
மனிதர்களை விட, சுமார்
ஒன்பது வருடங்கள் அதிகமாக
வாழ்கிறார்கள்.

நமது மூளை, ஒரு சிறந்த
கணிப்போறியைவிட நுட்பமானது.
அதில், சுமார் 100 மில்லியன்
நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் மரணமடையும்போது,
முதலில் செயல் இழக்கும்
உறுப்பு..அவனது காதுகள்.

ஒரு மனிதனின் விழித்திரைகள் 45
சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன..
.அவன்
தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.

தேன், மிக எளிதாக ஜீரணமடையும்
ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா?
அது ஏற்கனவே தேனீக்களால்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது.

டைட்டானிக் கப்பலை கட்ட ஆன
மொத்த செலவு சுமார் 7 மில்லியன்
டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ்
கேமரூன் படமாக எடுக்க ஆன
செலவு சுமார் 200 மில்லியன்
டாலர்கள்.

நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி'
முறிக்கும்போது ஏற்ப்படும்
சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில்
நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள்
உடைவதே.

ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில்
உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை.
அது நேரடியாக காற்றில்
இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கி
றது.

3
save indian economy


நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

சமீப காலமாக விலைவாசி உயர்ந்துவிட்டதே என்று அனைவரும் வருத்தப்படுகிறோம்  ..விலைவாசி உயர்வுக்கு அரசு மட்டும் காரணம் இல்லை நாமும்தான்  காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.


indian economy vs us economy

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

அரசு அந்நிய நேரடி முதலீடு மூலம் ஒரு காரணம் என்றல் அந்த அந்நிய நிறுவனங்களின் பொருள்களை வாங்கி நாமும்   தவறு செய்கிறோம் ..

உதாரணமாக :

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!
made in india


நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..



unity to save economy


கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--
some list of products to buy

COLD DRINKS:-

வாங்கவும்:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-

INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-

USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-

INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-

USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-

USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-

USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-

USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-

USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-

INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-

USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-

USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-

USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-

INSTEAD OF VODAFONE.

Food Items:-

வாங்கவும்:-

Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-

INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

Visa Mapper
Visa Mapper

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.

முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.

இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.

இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Visa Map
Visa Map


இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.

1
தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, கூகுள் உடன் இணைந்து செயல்படும் திட்டத்தை, தலைமைத் தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது.
டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

கூகுள் உடன் இணைந்து செயல்படும் திட்டத்தை, தலைமைத் தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்பா, எஸ்.என்.ஏ. ஜய்தி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி தேடு இயந்திரத் தளமான கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் திட்டத்தைக் கைவிட ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக, அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் வசம் உள்ள தகவல்களுடன் வாக்காளர்களுக்கு இணையம் மூலம் வழிகாட்டும் வகையில், கூகுள் மூலமாக மிகப் பெரிய அளவில் திட்டம் ஒன்றை செயல்படுத்த பேச்சுவார்த்தை நடந்தன.
மக்களவைத் தேர்தலின்போது அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளை கூகுள் வரைபடம் மூலம் கண்டறிவது, ஆன்லைனில் வாக்காளர் பட்டியலை தகவல்களை அறிந்து கொள்வது, தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் விரைவாக வெளியிடுவது என பல்வேறு சிறப்பு வசதிகளை கூகுள் உதவியுடன் செயல்படுத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கூகுள் சார்பில் சில நாள்களுக்கு முன்பு தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
அதேவேளையில், தேர்தல் ஆணையம் வசம் உள்ள 80 கோடிக்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் பற்றிய விவரம் உள்ளிட்ட தகவல்கள், கூகுளுக்குத் தரப்பட்டால், அது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை உண்டாக்கும் என்று இணைய நிபுணர்கள் எச்சரித்தனர்.
குறிப்பாக, அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான என்.எஸ்.ஏ., இணையதளங்கள் வாயிலாக ஊடுருவி உலக நாடுகளில் வேவு பார்த்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கூகுள் உடனான திட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய தலைமைத் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தது. இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இதன் தொடர்ச்சியாகவே, இந்தக் கூட்டுத் திட்டத்தைக் கைவிடுவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.


பாரத ரத்னா
Bharat Ratna.jpg
விருது குறித்தத் தகவல்
வகைகுடியியல் விருது
பகுப்புதேசிய விருது
நிறுவியது1954
கடைசியாக வழங்கப்பட்டது2013
மொத்தம் வழங்கப்பட்டவை44
வழங்கப்பட்டதுஇந்திய அரசு
விவரம்பாரத ரத்னா பதக்கம்:அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரிஎழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும்
கடைசி வெற்றியாளர்(கள்)சி.என்.ஆர்.ராவ்மற்றும் சச்சின் டெண்டுல்கர்
விருது தரவரிசை
ஏதுமில்லை ← பாரத ரத்னா → பத்ம விபூசண்


பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும் இவ்விருதை பெரும் வகையில் நவம்பர், 2011ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.

1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

 அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது.

இவரைத்தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

விருது பயன்பாட்டு விதிகள்

விதி 18 (1)-ன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது.
அவசியம் கருதினால் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விருது பெற்றோர் பட்டியல்


பெயர்ஆண்டு
முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975)1954
சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972)1954
முனைவர். சி. வி. ராமன் (1888-1970)1954
முனைவர். பக்வான் தாஸ் (1869-1958)1955
முனைவர். மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (1861-1962)1955
ஜவகர்லால் நேரு (1889 -1964)1955
கோவிந்த் வல்லப் பந்த் (1887-1961)1957
முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962)1958
முனைவர். பிதான் சந்திர ராய் (1882-1962)1961
புருசோத்தம் தாசு தாண்டன் (1882-1962)1961
முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963)1962
முனைவர். சாகிர் ஹுசைன்(1897-1969)1963
முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972)1963
லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966)1966
இந்திரா காந்தி (1917-1984)1971
வி.வி. கிரி (1894-1980)1975
கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975)1976
அக்னசு தெரேசா போயாக்சு (அன்னை தெரேசா) (1910-1997)1980
ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982)1983
கான் அப்துல் கப்பார் கான் (1890-1988)1987
எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987)1988
முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956)1990
நெல்சன் மண்டேலா (b 1918)1990
ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991)1991
சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950)1991
மொரார்ஜி தேசாய் (1896-1995)1991
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958)1992
ஜே. ஆர். டி. டாடா (1904-1993)1992
சத்யஜித் ராய் (1922-1992)1992
சுபாஷ் சந்திர போஸ் (1897-1945) (பின்னர் திரும்ப பெறப்பட்டது)1992
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (b 1931)1997
குல்சாரிலால் நந்தா (1898-1998)1997
அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996)1997
எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004)1998
சி. சுப்ரமணியம் (1910-2000)1998
ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979)1999
ரவி சங்கர் (b 1920)1999
அமர்த்தியா சென் (b 1933)1999
கோபிநாத் போர்டோலாய் (b 1927)1999
லதா மங்கேஷ்கர் (பி 1929)2001
பிஸ்மில்லா கான் (1916 - 2006)2001
பீம்சென் ஜோஷி (பி 1922)2008
சி.என்.ஆர்.ராவ் (பி 1934)2013
சச்சின் டெண்டுல்கர் (பி 1973)2013

google,yahoo mail hacked
google
கூகுள், யாஹூ ஆகியவற்றின் தகவல் மையங்களில் இருந்து அமெரிக்காவின் என்எஸ்ஏ அமைப்பு மின்னஞ்சல்களை திருடியது அம்பலமாகியுள்ளது. எட்வர்ட் ஸ்னோடென் அளித்த ஆவணங்களில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் இது குறித்து கூகுள் நிறுவனம் கடும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது. இது குறித்து தங்கள் நிறுவனத்திற்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ள கூகுள் நிறுவனம், தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனங்களின் தகவல் சேமிக்கப்படும் இடங்களை நேரடியாக அணுகாமல், கண்ணாடி இழை கேபிள்கள் வழியாக தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது இடைமறித்து மின்னஞ்சல்கள் திருடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்கு வெளியே இத்தகவல் திருட்டு நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் பிரிட்டனின் உளவு அமைப்பான ஜி சி ஹெச் க்யூ (GCHQ) வுக்கும் பங்கு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நன்றி:புதிய தலைமுறை

கேள்வி--பதில் (பொது அறிவு)



1 .உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது?

வத்திகான்

2. உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?

ரஷ்யா

3 .உலகிலேயே மிகப் பெரிய தீவு எது?

கிரீன்லாந்து

4. உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது?

தீபெத் பீட பூமி


5. உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?

சுவிட்சர்லாந்து

6. உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது?

சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)


7. உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?

ஆடகாமா பாலைவனம் (சிலி)


8. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா)


9. உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது?

நயாகரா நீர்வீழ்ச்சி


10. உலகிலேயே மிக நீளமான நதி எது?

நைல் நதி (6695கி.மீ)


11. உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?

எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)


12 . உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?

மெக்சிகோ வளைகுடா


13. உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?

ஆசியாக் கண்டம்


14. உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?

சவுதிஅரேபியா

கணினித் தொழில்நுட்பம் கொண்ட கண்ணாடியை அணிந்து அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவர்.



கணினி மென்பொருள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் கூகுள் நிறுவனத்தின் ஒரு தயாரிப்புதான் கணினித் தொழில்நுட்பம் இணைந்த கண்ணாடியாகும். இதனை அணிந்துகொண்டால் ஒருவர் செய்யும் செயலினைத் துல்லியமாக வெளியிலிருந்து கவனிக்க முடியும். மருத்துவத்துறையில் முக்கியமான அறுவை சிகிச்சைகள் நடைபெறும்போது அறைக்கு வெளியே மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பின்மூலம் அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியும். 



கணினித் தொழில்நுட்பம் கொண்ட கண்ணாடியை அணிந்து அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவர்.


சென்னையில் முதன்முறையாக இத்தகைய கண்ணாடியை அணிந்துகொண்டு லைப்லைன் மருத்துவமனை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார் நேற்று இரண்டு அறுவைசிகிச்சைகள் செய்துள்ளார். 45 வயதுடைய ஒருவருக்கு மேல் இரைப்பை குடல் லேப்ராஸ்கோப்பியையும், 42 வயதுடைய பெண்ணிற்கு குடலிறக்க அறுவை சிகிச்சையினையும் அவர் நேற்று செய்தார். இந்த சிகிச்சைகள் அவருடைய மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

காரோட்டும்போது பின்புறக் கண்ணாடி வழியே பார்ப்பது போலவே தான் உணர்ந்ததாக இவர் கூறுகின்றார். அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டே தன்னால் மாணவர்களிடமும் இந்த சிகிச்சை குறித்துப் பேச முடிந்தது என்றும் இவர் தெரிவித்தார். கூகுள் கண்ணாடி சாதாரணக் கண்ணாடியைப் போலவே அணியக்கூடிய விதத்தில் உள்ளது. இதன் தொழில்நுட்பம் குரல் கட்டளைகள் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வீடியோவாக உபயோகிப்பவரின் திரையில் காட்சிகள் வெளிவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை துறையில் இந்த முறை ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கும் என்று கருதும் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை அறைக்குள் நடைபெறும் விஷயங்கள் குறித்து வெளியில் இருப்போர் அறிந்து கொள்ளுவதற்கு இது ஒரு நல்ல செயல்பாடாகும் என்று குறிப்பிட்டனர். இந்தக் கண்ணாடி இன்னும் விற்பனை சந்தைக்கு வெளிவரவில்லை என்றபோதும், இந்த வருட ஆரம்பத்தில் கூகுள் நிறுவனம் 2 ஆயிரம் கண்ணாடிகளை பரிசோதனை முயற்சியாக பொதுமக்களின் புழக்கத்தில் விட்டுள்ளது.

அடுத்து தங்களது நிறுவனம் வெளியிட உள்ள ஸ்மார்ட்போனில் 64 பிட் பிராசசரை பயன்படுத்த சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 64 பிட் பிராசசருடன் கூடிய ஐபோன் 5S யை 
வெளியிட்ட சில நாட்களுக்குள் சாம்சங் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது.
ஸ்மார்ட்போனில் 64 பிட் பிராசசரை பயன்படுத்த சாம்சங் நிறுவனம் முடி

சாம்சங் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஷின் ஜாங் க்யுன் (Shin Jong Kyun) கொரியா டைம்ஸ் இதழிற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக 64 பிட் பிராசசர் கொண்ட ஸ்மார்ட் போன்களை வெளியிட அவசரம் காட்ட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். 64 பிட் பிராசசருக்கு மாறுவதற்கு முன்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தரம் உயர்த்துதல் அவசியம் என்றும் கூறப்படுகிறது.

CompactFlash நிறுவனமானது கடந்த வருடம் CFast 2.0 மெமரி கார்ட் தொடர்பான அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடிய மெமரி கார்ட் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது ...

இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த மெமரிக் கார்ட் ஆனது உலகின் வேகம் கூடிய தரவுப்பரிமாற்றம் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இதன் அடிப்படையில் இதிலுள்ள தரவுகள் 450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடியதாகவும், 350 MB/s எனும் வேகத்தில் பதிவேற்றம் செய்யக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

256 GB சேமிப்பு கொள்ளவு உடைய CFast 2.0 மெமரி கார்ட்டின் விலையானது 1,809 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடிய மெமரி கார்ட் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது ...


ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம்....
வருங்காலப் போக்குவரத்தின் நவீன மாதிரி

பயண நேரம் மிச்சமாகும் ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம். கேட்பதற்கு ஆச்சர்யமாகத் தோன்றும் இந்த யோசனை வருங்காலத்தில் உண்மையாகப் போகிறது. ஈ பி எஃப் எல் (EPFL) என்ற ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் க்ளிப் ஏர் (CLIP AIR), இதன்படி, ரயில்பாதையில் சென்று கொண்டிருக்கும் ரயில் பெட்டிகளை பறந்து செல்லும் விமானம், தூக்கிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும். 



ஒரு நேரத்தில் 3 பெட்டிகளை இந்த விமானத்தால் கொண்டு செல்ல முடியும். பயணிகள், சரக்குகள், கச்சா எண்ணெய் போன்றவற்றை இந்த விமானங்கள் எடுத்துச் செல்லும். இந்த விமான மாதிரியின் மூலம் ரயில், தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முறை சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விமானங்களுக்காக இப்போது ஏர்போர்ட் (Airport) இருப்பதைப் போன்று வருங்காலத்தில் ஸ்கை ஸ்டேஷன்ஸ் (Skystations) என்பவை அமைக்கப்படும். 

அங்கு ரயில்களில் ஏறினால் செல்ல வேண்டிய இடத்துக்கு விமானங்களே வந்து ரயில்பெட்டிகளைத் தூக்கிச் சென்று இறக்கிவிடும். ரயில் பெட்டிகள் தூக்கப்படும்போதும், இறக்கிவிடப்படும்போதும் மட்டும் பயணிகள் தங்களது இருக்கைகளில் அமர வேண்டும். மற்ற நேரங்களில் ரயில் பெட்டிகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். தற்போதுள்ள ரயில்பெட்டிகளைப் போல் இல்லாமல், சக்கரங்கள் இல்லாத பெட்டிகளாக இவை இருக்கும். க்ளிப் ஏர் (CLIP AIR) போன்றே, பிரிட்டனின் க்லாஸ்கோ (Glasgow) பல்கலைக்கழக மாணவர்களும் இதுபோன்ற ரயிலைத் தூக்கிச் செல்லும் விமான மாதிரியை உருவாக்கியுள்ளனர். 


இது க்ளிப் ஏர் (CLIP AIR)-ஐ விட கூடுதல் பெட்டிகளைத் தூக்கிச் செல்லும் வசதியுடன் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பறக்கும் ரயில்கள் நடைமுறைக்கு வந்தால், விமான நிலையத்துக்கு காரில் செல்வது, விமான நிலையத்தில் காத்திருப்பது போன்ற பயண நேரங்கள் மிச்சமாவதுடன், செல்ல வேண்டிய இடத்துக்கும் நேரடியாகச் சென்று சேர முடியும். 

source

விரைவில் வர இருகும்   HTCஇன்  Harmony விண்டோஸ் ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள்


கைப்பேசி உற்பத்தியில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் HTC நிறுவனமானது Harmony எனும் Windows Phone 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்நிலையில் இக்கைப்பேசி தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் வர இருகும்   HTCஇன்  Harmony விண்டோஸ் ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள்


இதன்படி 4.7 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution HD Super LCD 3 தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது பிரதான நினைவகமாக 2GB RAM இனைக் கொண்டுள்ளது.

இது தவிர சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவும் தரப்பட்டுள்ளது.

இக்கைப்பேசி தொடர்பான ஏனைய தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் வர இருகும்   HTCஇன்  Harmony விண்டோஸ் ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள்

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.