உங்கள் செல்போன் மூலம் , ரயில் வரும் நேரம் , இடம், இருக்கை வசதி ஆகியவற்றை அறிய வேண்டுமா கவலையை விடுங்க !
உங்கள் செல்போன் மூலம் , இந்தியாவில், ரயில் வரும் நேரம் , இடம், இருக்கை வசதி ஆகியவற்றை அறிந்துகொள்ள ரயில்வே நிர்வாகம் எளிய முறையில் வசதியை அளித்துள்ளது.
உங்கள் செல்போன் மூலம் , ரயில் வரும் நேரம் , இடம், இருக்கை வசதி ஆகியவற்றை அறிய வேண்டுமா கவலையை விடுங்க !

1. ரயில் வரும் நேரம், இடம் , புறப்படும் நேரம், ஆகியவற்றை அறிந்து கொள்ள
ரயில் வரும் நேரம், தற்போது ரயில் வந்து கொண்டு இருக்கும் இடம், புறப்படும் நேரம் , சென்றடையும் நேரத்தை அறிய உங்களது செல் போனில் spot என டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு வண்டி எண் XXXXX செய்து 139 -க்கு அனுப்பினால், உடனே அறிந்து கொள்ளலாம். மேலும், தாமதமாக வரும் ரயில் குறித்த விவரங்களையும் கூட அறியலாம்.
2. முன் பதிவு நிலையை அறிந்து கொள்ள
உங்களது செல்போனில் PNR என டைப் செய்து 10 இலக்க PNR எண்ணை குறிப்பிட்டு, 139 -க்கு அனுப்பினால், முன் பதிவு குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
3. இட வசதி நிலையை அறிந்து கொள்ள
உங்களது செல்போனில் SEAT , வண்டி எண், பயண தேதி, புறப்படும் இடம், STD கோட் எண், ரயில் பயணம் செல்லும் வகுப்பு, கோட்டா , ஆகியவற்றை டைப் செய்து 139 -க்கு அனுப்பினால் இருக்கை குறித்த விவரங்கள் கிடைக்கும்.
4. பயண கட்டணம் குறித்த விவரம் அறிந்து கொள்ள
உங்களது செல்போனில் FARE என டைப் செய்து, ரயில் புறப்படும் இடம் ,தேதி, சேரும் இடம், வகுப்பு ஆகியவற்றை குறிப்பிட்டால் கட்டண விவரம் உடனே கிடைத்துவிடும்.
இனி என்ன? கவலையைவிடுங்க, செல்போன் எடுங்க. தகவலை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.



பில்கேட்ஸ் அவர்கள் ஃபேஸ்புக் நிறுவுணரான மார்க் ஜுகர்பெர்க் பற்றிக்கூறுகையில், “நாங்கள் இருவரும் படிப்பை பாதியில் விட்டவர்கள். ஆனால் அதே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நான் பாடம் நடத்தியுள்ளேன்” என்றார்.

இந்தப்பதிவானது இன்று மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் ஆனால் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள்
ஸ்டீவ் ஜாப்ஸ்:

ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்பத்தின் ‘கிராண்ட்மாஸ்டர்’ என அழைக்கப்படுபவர் தான் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் ‘ரிஸ்க்’களுக்கு அஞ்சாதவர். மேக் கணினி, ஐபாட், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவைகளை நமக்கு அறிமுகப்படுத்தியதில் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு பெரும் பங்குள்ளது.

பில்கேட்ஸ்: மைக்ரோசாப்ட் -

தொழில்நுட்பத்தின் கடவுள் என்று போற்றப்படுபவர் மைக்ரோசாப்ட் நிறுவினர் பில்கேட்ஸ் அவர்கள்தான். இந்த பில்கேட்ஸ் 1995 முதல் 2007 வரை உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற முதலிடத்தை தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பதவியிலிருந்து விலகிய பில்கேட்ஸ், தனது மனைவியுடன் சேர்ந்து அறக்கட்டளைகளை ஆரம்பித்து நற்பணிகளை செய்துவருகிறார்.

மார்க் ஜுகர்பர்க்:

ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் ஜுகர்பர்க் “ஃபேஸ்புக்” என்ற புதிய உலகத்தையே நமக்காக உருவாக்கிக்கொடுத்தவர். ஃபேஸ்புக் பற்றித்தெரியாத குழந்தைகூட இருக்கமுடியாத அளவுக்கு கணினி முதல் சீனா போன் வரையிலும் ஃபேஸ்புக் உலகம் விரிவடைந்துள்ளது. இவர்தான் உலகின் 2வது சிறுவயதுடைய பணக்காரர் என்ற பெருமையை பெறுகிறார். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் முதலாவது சிருவயதுடைய பணக்காரருக்கும் இவருக்குமான வயது வித்யாசம் வெறும் 8 நாட்கள் தானாம்.

டஸ்டின் மார்கோவிச்:

இவர்தான் உலகின் 1வது சிறுவயதுடைய பணக்காரர் என்ற பெருமையை பெறுகிறார். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் முதலாவது சிருவயதுடைய பணக்காரருக்கும்மார்க் ஜுகர்பர்க்குமான வயது வித்யாசம் வெறும் 8 நாட்கள் தானாம்.

மைகேல் டெல்:

இவர் பெயர் மைகேல் டெல். இவர் தான் டெல் நிறுவனத்தின் செயல் அதிகாரி.




‘ஐடி’ பெரும்பாலான இளைய சமுதாயத்தினரின் இதயத்துடிப்பு. ’ஐடி’ இல்லையென்றால் எதுவும் இல்லையென்ற நினைப்புவேறு. கண்டிப்பான உண்மைதான். அனைத்து தொழிலிலும் ’ஐடி’ மாயம் பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உலகில் பல்வேறு ஐடிசார்ந்த மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சிறந்ததென ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வின் சாராம்சம் இங்கே தரப்பட்டுள்ளது. உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்!!

1. Microsoft

1. Microsoft

2. IBM

2. IBM

3. Oracle

3. Oracle

4. SAP

4. SAP

5. Ericsson

5. Ericsson

6. Hewlett Packard

6. Hewlett Packard

7. Symantec

7. Symantec

8. Nintendo

8. Nintendo

9. Activision Blizzard

9. Activision Blizzard

10. EMC

10. EMC

11. Nokia Siemens Networks

11. Nokia Siemens Networks

12. CA

12. CA

13. Electronic Arts

13. Electronic Arts

14. Adobe

14. Adobe

15. Alcatel-Lucent

15. Alcatel-Lucent

16. Cisco

16. Cisco

17. Sony

17. Sony

18. Hitachi

18. Hitachi

19. Dassault

19. Dassault

20. BMC

20. BMC

21. SunGard

21. SunGard

22. Autodesk

22. Autodesk

23. Konami

23. Konami

24. Salesforce.com

24. Salesforce.com

25. Sage

25. Sage



Source:http://tamil.gizbot.com


ஜுராசிக் பார்க் திரைப்படம் பார்க்காதவர்கள் இருப்பார்களா என்ன?. உலகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய படமாயிற்றே!

இதற்கான ஜுராசிக் பார்க் பாகம் 4 அடுத்த வருடம் வெளிவரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது ஜூன் 13ஆம் தேதி 2014 தான் இதன் வெளியிடும் நாளாம். இதை அமெரிக்காவின் மிகப்பெரிய படத்தயாரிப்பு நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

மேலும் இந்த ஜுராசிக் பார்க்கின் பாகத்தை 3டியில் வெளியிட திட்டமிட்டுள்ளனராம். இந்தப்படத்தின் திரைக்கதையை ரிக் ஜப்பா மற்றும் அமன்டா சில்வர் எழுதுகின்றனர். இயக்கப்போவது ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் இல்லையாம்! பாகம் 2 மற்றும் 3 இயக்கியவரே இதையும் இயக்குகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்கினால் தான் படம் 8 மாதங்கள் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. கடைசிநேரத்தில் பின்வாங்கியுள்ளார் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்.

மேலும் இந்த திரைப்படம் ஐமேக்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறதாம்.

பழைய ஜுராசிக் பார்க் ஒரு பார்வை:

ஜுராசிக் பார்க் (Jurassic Park) என்பது 1993 ஆம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க அறிவியல் சார்ந்த திகில் நிறைந்த திரைப்படம் ஆகும். இதே பெயரில் மைக்கேல் கிரைட்டனால் எழுதப்பட்டு வெளியான ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இதில் சாம் நீல், லாரா டென், ஜெப் கோல்டுப்ளும், ரிச்சர்ட் அட்டென்பாரோ, மார்டின் பெர்ரீரோ, மற்றும் பாப் பெக் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மத்திய அமெரிக்காவின் கோஸ்டாரிக்காவின் அருகில் அமைந்துள்ள தீவினில் நிகழ்வதாக தொடங்குகிறது. அந்த தீவினில் ஒரு கோடிஸ்வரர் அவரது ஆராய்ச்சி கூடத்தில் முற்காலத்தில் வாழ்ந்த டைனோசர்களை நவீன அறிவியலின் துணையுடன் மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள். அவற்றை கொண்டு ஒரு பொழுதுபோக்கு பூங்காவுடன் இணைந்த மிருககாட்சி சாலை அமைக்க திட்டமிடுகிறார்கள்.

இந்த திரைப்படம் கணினியால் உருவாக்கப்பட்ட உருவங்களால் எடுக்கப்பட்ட ஒரு அனிமேஷன் படங்களின் வரிசையில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது. இந்த படத்தின் வெளியீட்டின் பொழுது உலகம் முழுவதிலும் $914 மில்லியன்களை வசூலித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் தற்போது அதிக வசூலை குவித்த படங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தில உள்ளது.

jurassic-park


கணினி விளையாட்டு பிரியர்களை இலக்காகக் கொண்டு அப்பிளின் iPad மற்றும் iPhone ஆகிய சாதனங்களில் நிறுவி விளையாடக்கூடிய iSniper 3D Arctic Warfare எனும் கேம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்னைப்பர் தாக்குதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கேம் ஆனது சினிமா பாணியில் அமைந்துள்ளதுடன் 10 விதமான ஆயுதங்களை பயன்படுத்தி 11 வரையான எதிரிகளுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் காணப்படுகின்றது.

மேலும் iPod Touch - இலும் பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கேம் ஆனது 117 MB கோப்பு அளவு உடையதுடன், இதனை குறிப்பிட்ட கால எல்லைக்கு இலவசமாக தரவிறக்கம் செய்யமுடியும்.

தரவிறக்கச் சுட்டி



இனிமேல் எஸ்எம்எஸ்-களை மொபைல் மற்றும் டேப்லெட்களில் மட்டுமல்லாது நமது வீட்டுச் சுவற்றில்கூட டைப் செய்யலாம். இதற்காக கூகுள் நிறுவனம் புதிதாக ஒரு யோசனையை தனது முந்தைய ப்ராஜெக்ட்டுடன் இணைத்துள்ளது.

கூகுள் ஏற்கெனவே ‘ப்ராஜெக்ட் கிளாஸ்’ என்ற கண்ணாடியை உருவாக்கிவருவது நினைவிருக்கலாம். அந்த ப்ராஜெக்ட் கிளாசுடன் இந்த புதிய முறையையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

SMS-களை சுவற்றிலிருந்தும் ‘டைப்’ செய்யும் முறையானது லேசர் கிபேட் என அழைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் நீங்கள் மொபைல் போன் மட்டுமல்லாது எங்குவேண்டுமானாலும் டைப் செய்து அதை எஸ்எம்எஸ் மற்றும் சாதாரண தரவுகளாகவும் மாற்றமுடியும்.

ஆனால் இதற்காக கூகுளின் விசேஷ கண்ணாடி மற்றும் கைகளுக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ளதை போல சில விசேஷ முறைகளை பின்பற்றவேண்டும். ஆரம்ப நிலையிலுள்ள இந்த சிறப்பு சாதனங்கள் அடுத்த வருடம் வெளியிடப்படலாம் எனத்தெரிகிறது.

Avvaiyar (ஔவையார்) is the most well-known and respected Tamil female poet of all time. Avvaiyar was not just one single person, but there were at least 3 Tamil poets with that name. Avvaiyar's work, Aathichudi is best known even among kids. Her quote, "Known is a drop; Unknown is an ocean" (கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு) has been exhibited in NASA.



Avvaiyar I: During the last Sangam- 300 BC -contemporary of Kings Adhiyaman and Paari , and poets Kabilar and Thiruvalluvar. Wrote poems in Aha-naanooru, Pura-naanooru.
Avvaiyar II: During 12th century CE Chola period- During Kambar and Ottakoothar's period. Wrote Aathichudi.
Avvaiyar (legendary): During the period of Siththar Agasthiyar. Lord Muruga played the prank "Sutta pazhamaa sudaadha pazhama" with her.

Let's not forget Avvaiyar. "If WE don't SHARE this, WHO will?"

இப்பொழுதெல்லாம் கணினிகளுக்கான ஹார்ட் டிஸ்க்குகளெல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது. எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கி இணைக்கிறோம்.

ஹார்ட் டிஸ்க்குகலில் இடம் பிடிக்கும் கோப்புகளை அழிக்க...

 ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு “low disk space” என்ற செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம்.நம் டிஸ்க்கில் பைல்களை உருவாக்குவதும், மற்றவற்றிலிருந்து காப்பி செய்து வைப்பதும் மிக எளிதாக உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றுக்கு இரண்டாக காப்பி செய்யப்பட்டவற்றை நீக்குவதும், தேவையற்றவற்றை அழிப்பதும் சற்று சிரமமான, நேரம் எடுக்கும் வேலையாகவே உள்ளது எனவே தான் ஹார்ட் டிஸ்க்கில் சேரும் பைல்களின் எண்ணிக்கை குறித்தோ, அது எடுத்துக் கொள்ளும் இடம் குறித்தோ கவலை கொள்வது இல்லை. மேலே சுட்டிக் காட்டியது போல செய்தி வரும்போதுதான், கவலை கொண்டு அதற்கான வழிகளைத் தேடுகிறோம்.குவிந்திருக்கும் பைல்களில் எது அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளது, 

எதனை நீக்கலாம் என்று குறுகிய நேரத்தில் அறியமுடிவதில்லை. இந்த தகவல்கள் நமக்குக் கிடைத்தால், அவற்றின் அடிப்படையில், பைல்களை நம்மால் நிர்வகிக்க முடியும். இதற்கு நமக்கு உதவும் வகையில், இலவச புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது.


இதன் பெயர் WinDirStat.


இதனைத் தரவிறக்கம் செய்து இயக்கினால், அது கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் ட்ரைவ் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பின்னர், நம் டிஸ்க்கில் எத்தகைய பைல்கள், எவ்வளவு இடம் எடுத்துக் கொள்கின்றன என்று வண்ண வரைபடத்தில் காட்டுகிறது. ஒவ்வொரு வகை (MP3, ZIP, EXE, JPEG, etc.) பைலுக்கும் ஒரு வண்ணம் தரப்பட்டு, அவை கலந்த சதுரங்களால் காட்டப் படுகின்றன.


இந்த வண்ண சதுரங்களும், பைலின் அளவிற்கேற்ப சிறியதாகவும், பெரியதாகவும் காட்டப்படுகின்றன. இதன் அடிப்படையில், நாம் எந்த பைல்களை அழிக்கலாம் என முடிவு செய்து, நீக்கலாம். அல்லது மொத்தமாக ஒரு வகை பைல்களை நீக்கலாம். எடுத்துக்காட்டாக ஸிப் செய்யப்பட்ட பைல்களிலிருந்து, பைல்களைப் பெற்ற பின்னரும், ஸிப் பைல்களை நாம் கம்ப்யூட்டரில் வைத்திருப்போம்.

இவற்றை மொத்தமாக நீக்கலாம். இதே போல நாம் அவ்வப்போது தற்காலிகமாக சில வகை பைல்களை டவுண்லோட் செய்து பயன்படுத்திய பின்னர் நீக்காமல் வைத்திருப்போம். இவற்றையும் மொத்தமாக நீக்கலாம். குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருக்கும் சில பைல்களை நீக்கலாம்.

இதனை எப்படி மேற்கொள்வது?


WinDirStat புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின்னர், எந்த ட்ரைவ் குறித்த பைல் தகவல்களைக் காண விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அந்த ட்ரைவினை ஸ்கேன் செய்து தகவல்களைத் தர, புரோகிராம் 5 முதல் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஸ்கேன் முடிந்தவுடன், ட்ரைவ் குறித்த தொகுப்பு தகவல்களுடன் ஒரு திரை காட்டப்படும்.


இதன் முதல் பாதியில், பைல்களும் போல்டர்களும் அவற்றின் அளவிற்கேற்ப வரிசைப் படுத்தப்பட்டு காட்டப்படும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது பைலைக் கிளிக் செய்தால், அதன் கலர் தொகுதி கீழாகக் காட்டப்படும். அல்லது மிகப் பெரிய பைல்களை, அதாவது, டிஸ்க்கில் அதிக இடம் எடுக்கும் பைல்களை, அதன் அளவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.


அடுத்து எதனை நீக்க வேண்டும் என முடிவெடுக்கிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்து டெலீட் செய்திட கட்டளை கொடுக்கலாம். இதில் இரண்டு வகை ஆப்ஷன் தரப்படுகிறது. முதலாவதாக, (“Delete (to Recycle Bin”) அழித்து ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு சென்று, பின்னர் அதனை ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்குவது. இரண்டாவதாக, நேரடியாக “Delete (no way to undelete)” அதனைக் கம்ப்யூட்ட ரிலிருந்து அடியோடு நீக்குவது.


இந்த முறையில் தேவையற்ற, அதிக இடத்தை எடுத்துக் கொண்டிருக்கும் பைல்களை நீக்கலாம். இப்படியே வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை இந்த புரோகிராமினை இயக்கி, டிஸ்க் இடத்தை மீட்கலாம். எப்போதும் முதல் முயற்சியிலேயே, ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல், அழிக்கப்படுவதனையே தேர்ந்தெடுக்கவும்.


ஏனென்றால், ரீசைக்கிள் பின்னிலிருந்து பின்னாளில் அழித்தாலும், அந்த பைலின் சில அம்சங்கள், நம் கம்ப்யூட்டரில் எங்காவது வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.


இப்பொழுது தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் எளிதாகியுள்ளது. உங்களுடைய ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் இருந்தால் மிக எளிதாக தட்டச்சு செய்ய கூகுள் பல அப்ளிகேசன்களை இலவசமாகவே வழங்குகிறது.


தமிழ் மொழியில் தட்டச்சு செய்யும் வகையிலான கிபோர்ட்கள் சில பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தகவல்களை அடுத்தடுத்து காண்க.


தமிழ் எஸ்எம்எஸ் அனுப்ப தமிழ் கிபோர்ட்:

தமிழ் எஸ்எம்எஸ் அனுப்ப தமிழ் கிபோர்ட்:
இந்த அப்ளிகேசன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே செயல்படக்கூடியது என்பதை நினைவில் கொள்க. இதன் மூலமாக குறுஞ்செய்திகளை தமிழிலேயே அனுப்பலாம் என்பது தனிச்சிறப்பு.

தமிழ் பார் எனிசாப்ட்கிபோர்ட்:
தமிழ் எஸ்எம்எஸ் அனுப்ப தமிழ் கிபோர்ட்:
இதில் தமிழ் கிபோர்ட்கான வடிவமைப்பு உள்ளது. இதை பயன்படுத்தினால் தமிழ் எழுத்துக்கள் எதையும் உங்கள் போனில் பதியத்தேவை இல்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...
ஃபேஸ்புக் தமிழ் போஸ்டிங்:
தமிழ் எஸ்எம்எஸ் அனுப்ப தமிழ் கிபோர்ட்:
இந்த அப்ளிகேசன் மூலமாக உங்கள் தமிழ் செய்திகளை ஃபேஸ்புக் சுவரில் நேரடியாக பதியலாம். தமிழில் தட்டச்சு செய்வதும் மிகவும் எளிதே!

மேலும் இதில் புகழ்பெற்ற பழமொழிகளும் இடம்பெற்றுள்ளன என்பது இதன் தனிச்சிறப்பு.
இதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழ் யுனிகோட் கிபோர்ட்:

தமிழ் எஸ்எம்எஸ் அனுப்ப தமிழ் கிபோர்ட்:
நீங்கள் தங்லிஸ்ஸில் டைப் செய்தாலே போதும் இந்த அப்ளிகேசன் தானாகவே தமிழுக்கு மாற்றிக்கொள்ளும்.



          சென்னையில் செயல்பட்டுவரும் நோக்கியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடிசோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நோக்கியா செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் மிகப் பெரிய தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த ஆலையில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பிடும்படியாக இந்நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடிகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


சென்னை:
சென்னையில் செயல்பட்டுவரும் நோக்கியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடிசோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோக்கியா செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் மிகப் பெரிய தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த ஆலையில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பிடும்படியாக இந்நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடிகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.