உங்கள் கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி



*#பஞ்சாயத்த ஆரம்பிங்க...*

*ஐயா... என்ட்ற பேரு #விஜய்மல்லையாங்க ...*

*நீ எவ்வளவு வாங்கியிருக்க...?*

*9000 கோடிங்கய்யா...*

*#தள்ளுபடி தள்ளுபடி..!!*

              ------------------------------------------------------

*ஐயா.. நான் #அக்னைட்எஜுகேஷன் லிமிடெட் ...*

*நீ எவ்வளவு...?*

*315 கோடிங்கய்யா....*

*#தள்ளுபடி தள்ளுபடி..!!*

               ----------------------------------------------------

*ஐயா.. நான் #ஸ்ரீராம்கார்ப்பரேஷன் லிமிடெட் ...*

*நீ எவ்வளவு...?*

*வெறும் 283 கோடிங்கதான்யா...*

*#தள்ளுபடி தள்ளுபடி ...!!*

                -----------------------------------------------

*ஐயா.. நானும் #வாங்கியிருக்கேங்கய்யா...*

*நீ எவ்வளவு கண்ணு வாங்கின...?*

*#காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லாம எஜுகேஷன் லோன் போட்டு 2 லட்சம் வாங்கினேங்கய்யா...*

*#வேலைக்கு போன உடனே சம்பாதிச்சு கட்டிடுறேங்கய்யா...*

*#ஏண்டா பொறுப்பு இல்லாத நாயே...!!*

*#அரசாங்கத்தில பணம் என்ன மரத்திலயா காய்க்குது...??*

*#நாட்டோடு பொருளாதாரம் என்றா ஆவுறது...??*

*#ஒருமாசத்துக்குள்ள மொத்த பணத்தையும் திருப்பி கட்டுலன்னா குடியிருக்க வூடு இருக்காது ஆமா...*

*#இதுஇந்த நாட்டாமையோட தீர்ப்புடா...*

*#நீதிடா... நேர்மைடா...!!*

*#இதுதான் இப்போதைய #இந்தியாடா"...!!*
மோ(ச)டிடா..!

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...



வேலைக்கு போய் திரும்பி வந்த  தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் ..

 நம்ம வீட்டு  பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?

 அதைப் போய்  ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?
 நம்ம வீட்டு  பீரோல இருக்குற நகை,  பணம் எல்லாம்  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?

ஷ்ஷு....  அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...

உங்க ATM கார்டை  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?  என்ன கேள்வி இது..?

நீ சொல்றதெல்லாம்  ரொம்ப முக்கியமான பொருள்.  அதையெல்லாம்  ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...  "

அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? " 

 இம்முறை  அம்மாவிடமிருந்து பதில் இல்லை.  கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!




*இறப்பு*
எல்லோருக்கும் வந்தே தீரும்
ஆனால் யாரும்
*~_இறக்க விரும்புவதில்லை_~*

*உணவு*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும்
*~_பயிர் செய்ய விரும்புவதில்லை_~*

*தண்ணீர்*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும் அதை
*~_சேமிக்க விரும்புவதில்லை_~*

*பால்*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும் *~_பசுவை வளர்க்க விரும்புவதில்லை_~*

*நிழல்*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும் *~_மரம் வளர்க்க விரும்புவதில்லை_~*

*மருமகள்*
எல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும் *~_மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை_~*

*நல்ல செய்தி*
படித்து ஆஹா வென,
புகழ்பவர் அதை *~_மக்களிடம் கொண்டு செல்ல விரும்புவதே இல்லை_~*

*_நீங்கள் எப்படி?_*

 எங்கே செல்கிறோம் தமிழா ??   நாம் எங்கே செல்கிறோம் ??



எங்கே செல்கிறோம்  ?? 

நாம் எங்கே செல்கிறோம் ??

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே?

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க ஆலங்குச்சி எங்கே?

எலந்தை பழம் எங்கே?
சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடை பழக்கிய நடை வண்டி எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர் கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண் புழு எங்கே?

வெட்டு மண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள் எங்கே?

தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே?

குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால் கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே?

பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே?

தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே?

மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே?

மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?

இடுப்பை சுற்றி கட்டிய பணப் பை எங்கே?

இடுப்பில் சொருகிய சுருக்கு பை எங்கே?

தாவணி அணிந்த இளசுகள் எங்கே?

சுத்தமான கிணற்று நீரும் எங்கே?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?

எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே?

சிந்திக்க நமக்கு நேரம் தான் எங்கே?

எங்கே? 

எங்கே?? 

எங்கே???

இத்தனையும் தொலைத்து விட்டு நாம் செல்கின்ற அவசர பயணம் தான் எங்கே?!?!?!

இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினாலும் மற்றும் வேறு சில காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு தற்போது சக்கர நாற்காலியில் அவர்களது வாழ்நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் எமது பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பே "உயிரிழை"
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!



இவ் அமைப்பில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளை கொண்ட இவ் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற பயனாளிகளின் நலன் கருதி செயற்பாடுகளை முன்னெடுத்து  வருகின்றது. அதன் அடிப்படையில் இங்கிலாந்தில் உள்ள ஊதா என்கின்ற அமைப்போடு இணைந்து அவ் அமைப்பின் சிறுதுளி எனும் செயற்த்திட்டத்தின்கீழ் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று இடுப்பின் கீழாகவும் கழுத்தின் கீழாகவும் இயக்கம் இல்லாமல் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழும் பயனாளிகளுக்கான மாதாந்த உதவி தொககையினை பாதிப்பின் அடிப்படையிலும் பயனாளிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வழங்கி வருகின்றோம். 
பயனாளிகளில் இன்று  வரைக்கும் 41 பயனாளிகளிற்க்கு  மட்டுமே இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது 
ஆயினும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் சாதாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வரையில் மருத்துவம்  மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று வருவதற்கான அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் தேவைப்படுகின்றது. 
எனினும் எமது  பயனாளிகள் எதிர்நோக்கின்ற பிரதானமான பிரச்சினை அழுத்தப்புண் ஆகும் தொடர்ச்சியாக சக்கர நாற்காலியினை பாவிப்பது குடும்ப சூழ் நிலை காரணமாக கவனிக்காமல் இருப்பது கட்டாயம் வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலையில் தொடச்சியான சக்கர நாற்காலி பாவனை போன்ற காரணங்களினால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்
எமது பயனாளிகள் சிலர் அழுத்தப்புண் உருவாகி மிகவும் கொடிய வலியோடு வாழ்ந்து வருகின்றார்கள் அவ்வாறு  பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் அழுத்தப்புண்கள் சில
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!

எமது பயனாளிகள்  மருத்துவதேவைகளையும் அவர்களின் அன்றாட வாழ்கை செலவுகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள் இவர்களின்  அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் சிரப்படுகின்றார்கள் இவர்களில் சிலர்  தொழில் முயற்சிகளில் ஈடுபட முடியாதவர்களாகவும், ஏனைய குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். இதனால், அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
ஆகவே இவர்களின் தேவைகளை  ஓரளவேனும் பூர்த்தி செய்து கொள்வதற்கு நீங்களும் உங்களால் முடிந்தவரை இவர்களுக்கு  உதவலாம்.


இவர்களின் வாழ்க்கையை மாற்ற உங்களாலும் முடியும் .....



இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!
வெளிநாடுகளில் வாழும் எமது சொந்தங்கள் எம்முடன் தொடர்புகொண்டு நேரடியாகவும் உங்கள் பக்களிப்பினை வழங்கலாம் அல்லது ஏற்கனவே உயிரிழையோடு இணைந்து பக்களிப்பினை வழங்கிகொண்டிருக்கும்  இங்கிலாந்தில் உள்ள மனிதாபிமான பணிகளுக்கான ஜக்கிய அறக்கட்டளை ( UNITED TRUST FOR HUMANITARIAN AID (UTHA) ஊதா என்கின்ற அமைப்போடு இணைந்து உங்களுடைய பங்களிப்பினையும் மேற்கொள்ளலாம் 
உயிரிழை அமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் இணைந்து கொள்ளுங்கள் https://www.facebook.com/Uyirilai இதன் முலம் உங்களுக்கு தேவையான மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் 
இவர்களும் இம் மண்ணில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்..!!
Uyirilai
ஊதா அமைப்பின் இணையதள முகவரி :- http://www.utha.org.uk/

இத் தகவலினை முழுமையா படித்தமைக்கு மிக்க நன்றி 
நண்பர்களே உங்களால் இவர்களுக்கு உதவ முடியவில்லையாயின் இவர்களுக்கு உதவுவதற்கு எங்களாலும் முடியும் என்று முன்வரக்கூடிய நல்லுள்ளம் படைத்த எங்களுடைய சொந்தங்களுக்கு இத் தகவல் சென்றடைவதற்கு நீங்கள் இத்தகவலை  பகிர்வதன் (share) செய்வதன்மூலம் நீங்களும் ஒரு உதவியாளராக மாறலாம்.

நன்றி 

Neminathan Paramananthan paramananthan22@gmail.com


என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள் கேட்டால்.!!

நான் காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும் அதே கணினியில் வேலை செய்வதை கௌரவமாக நீ நினைப்பது ஏன்?

ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க மறுக்கும் நீ எனக்கு கார் பிடித்து கற்றுக்கொடுக்க துடிப்பது ஏன்?

உழுது வாழ கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு உழைக்காமல் வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ?

ஆசா, பாசம், நேசம், அண்ணன்,தம்பி,அக்கா, தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த நீ என்னை மட்டும் ஒற்றை பிள்ளையாய் பெற்றது ஏன்?

தாத்தா பாட்டின் கை பிடித்து நடக்க கற்றுக்கொண்ட நீ என்னை மட்டும் பெரியோர்களுடன் சேரவிடாமல் தவிர்ப்பது ஏன் ?

மணல் வீடு கட்டி விளையாடிய நீ என்னை மட்டும் பெரியவனாகியதும் மாட மாளிகைதான் கட்ட வேண்டும் என்று கட்டளை இடுவது ஏன்?

கம்மஞ்சசோறும், கேப்பையும் கூழும் குடித்து வளர்ந்த நீ எனக்கு மட்டும் "பெப்சியும், கோக்கையும் கொடுத்து என் ரத்தத்தில் விஷத்தை கலந்தது ஏன்?

மன்டியிட்டு மண்ணில் விளையாடிய நீ மார்பிலில்தான் எங்களை விளையாடவேண்டும் என்று சொல்லி முப்பதே வயதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப துடிப்பது ஏன் ?

அரச, ஆல, வேப்ப, புங்கமரக்காற்றை ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ,
ஏசி காற்றை மட்டுமே நான் சுவாசிக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?

நான் பண்ணையம் பார்ப்பதை ஏளனமாகவும்,பன்னாட்டு கம்பெனியில் அடிமையாக வேலை பார்ப்பதை நீ பெருமையாகவும் நினைப்பது ஏன்?

நீர் நிலம் காற்று அத்தனையும் நீ மாசுபடுத்தி விட்டு இவை அனைத்தயும் காசு கொடுத்து வாங்க துடிப்பது ஏன்?

எங்களுக்கு ஓர் கனவு இருக்கும் ஆனால் அந்த கனவை காவு வாங்கிவிட்டு நீ காசை மட்டுமே சம்பாதித்து குவித்து வைப்பது ஏன் ?

இனியாவது நாம் சிந்திப்போமா?

நம் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்கும் ஒரு நல்ல நண்பனாக இருக்க கற்றுக்கொள்வோம்.அதுவே நாம் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பெரிய சொத்து ஆகும்...

நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை, அதில் நம் பிள்ளைகளுக்கு இயற்கையும் நல்ல பண்புகளையும்  விட்டு போவோம்..!

2
உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

ஒரு கிலோ மிளகாய் ரூ.120
ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?


தோராயமாக மூன்றரைக் கிலோ கடலைப் பருப்பு போட்டால் தான் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கும்....

ஒரு கிலோ கடலைப் பருப்பு சராசரியாக ரூ.45
ஆனால், 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கிறது....உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

அடுத்து பாருங்க, இரண்டரை கிலோ எள் போட்டால் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும்.

ஒரு கிலோ எள் ரூ.100 வரை விற்கிறது...

இரண்டரைக் கிலோ எள்ளின் அடக்க விலையே ரூ.250... நல்லெண்ணெய் எப்படி 160 முதல் 220 வரை கிடைக்கிறது...உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

இப்படி நாம் வாங்கும் மூலப்பொருட்களின் விலைக்கும்... கிடைக்கும் பொருட்கள் விலைக்கும் சம்பந்தமில்லமல் இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?



 நண்பர்களே!...எவ்வாறு இது சாத்தியம் உங்கள் கருத்தை சொல்லுங்க!!

நெகிழ வைத்த நிஜங்கள்...சிறுகதை

இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் மகன் அமுதன்.
“அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து
விட்ருவாருடா. கவலைப்படாதே!’ குதர்க்கமாய்ப் பதில் சொன்னாள் உஷா, என்
மனைவி.
அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ உஷாவின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்.
“வணக்கம்ண்ணே, கோபுதான் பேசுறேன்… சொல்லுங்க’ என்றேன். “என்னடா, அப்பாவை
அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை.
அண்ணி தொந்தரவு
செய்திருப்பாள்.
“கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன்.
-
“அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் அமுதன். “என்னடா சந்தேகம்?’ “தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்கள்…
தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு
வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே
போவே...?’
என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தேன்...!

உங்கள் கருத்து...!!
உங்கள் கருத்து...!!

1. குடியரசு தலைவர்= 1.5 லட்சம்

2. துணை குடியரசு தலைவர்= 1.25 லட்சம்


3. லோக்சபா சபாநாயகர்= 1.25 லட்சம்

4. ராஜ்சபா சபாநாயகர்= 1.25 லட்சம்

5. மாநில ஆளுனர்= 1.10 லட்சம்

6. இந்திய தலைமை நீதிபதி= 1 லட்சம்

7. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி= 90 ஆயிரம்

8. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி= 90 ஆயிரம்

9. தலைமை தணிக்கைத்துறை அதிகாரி= 90 ஆயிரம்

10. தலைமை தேர்தல் ஆணையர்= 90 ஆயிரம்

11. மற்ற தேர்தல் ஆணையர்கள்= 80 ஆயிரம்

12. உயர் நீதிமன்றத்தின் நீதிபதி= 80 ஆயிரம்

13. பாராளுமன்ற உறுப்பினர்= 50 ஆயிரம்

14. சட்டமன்ற உறுப்பினர்= 55 ஆயிரம்
இவ்வளவு  சம்பளம் வாங்கும் இவர்களால் எப்படி கோடிகளில் புரளமுடிகிறதுQUESTION

1
உங்கள் கருத்து...!!
உங்கள் கருத்து...!!


1 மாதம் = 30 நாள்


1 வ௫டம் = 365 நாள்

5 வ௫டம் = 1825 நாள்


1 ஓட்டு =500 ௫பாய்


: 500 ÷1825 = 0.2740 பைசா ஒ௫ நாள்.


இந்த 27 பைசாவிற்க நம் நாட்டை அடமானம் வைக்கபோறிங்க.  QUESTION



அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி, பொதுமக்கள் பங்கேற்கும் அமைதி ஊர்வலம், அவிநாசியில் (27-2-2014) நடந்தது .

இந்த அமைதி ஊர்வலத்தை முன்று மதத்தை சேர்ந்த பெரியவர்கள் தொடங்கி வைத்தனர் ..

அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் மூலம், மழைக்காலங்களில், பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை, வாய்க்கால் மூலம் கொண்டு செல்லப்படும்; கோவை, காரமடையில் துவங்கி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 33 குளங்கள், 300 குட்டைகளில், நீர் நிரம்பும்.

முன்னாள் முதல்வர், காமராஜர் காலத்தில், அப்போதைய, எம்.எல்.ஏ., மாரப்பனால் வலியுறுத்தப்பட்ட இத்திட்டம், 50 ஆண்டுகளாக, கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

திட்டத்தை நிறைவேற்றக்கோரி, பல போராட்டங்கள் நடந்துள்ளன. 

இந்நிலையில், அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் மேம்பாட்டு போராட்டக்குழு, அவிநாசியில்  (27-2-2014) அமைதி ஊர்வலம் நடந்தது .

தண்ணீர் அவசியம் குறித்து வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள்,வாசகங்கள் அடங்கிய பலாகைகளை ஏந்தியபடி மக்கள் பங்கற்றனர் .

அமைதி ஊர்வலம் பங்கேற்ற கூட்டத்தில் ஒரு பகுதியுனர் ..










அவினாசி வ.வு.சி திடலில் அத்திகடாவில் இருந்து கொண்டுவந்த நீரில் மரக்கன்று நடப்பட்டது .


இருதியுள் அவினாசி  தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது 

இந்த அமைதி ஊர்வலத்தில் அவிநாசி வட்டாரத்தில் உள்ள கட்சிகள், தனியார், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட, 80க்கும் மேற்பட்ட அமைப்புகளிலும் பங்கேற்றனர் .


கடந்த 60 ஆண்டு காலமாக அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் பல போரட்டங்களில் ஈடுபட்டனர் .அதில் சில

அவினாசி அத்திக்கடவு

1. 1993-ம் வருடம் மக்கள் சக்தி இயக்க நிறுவனர், காலஞ்சென்ற முனவைர் எம். எஸ். உதயமூர்த்தி ஐயா அவர்கள் தலைமையில் 9 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ளபட்டது.

2. 1996-ல் ஈரோடு மாவட்டம் (தற்போது திருப்பூர் மாவட்டம்) குன்னதூரில் திட்டத்தை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்.

3. ஈரோடு மாவட்ட பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் அனைவரும் இணைந்து அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களிடம் மனு கொடுத்தனர்.

4. அவினாசி தொகுதியில் அவினாசி அத்திக்கடவு வேட்பாளராக திரு. மோகன்குமரை அவர்களை நிறுத்தி திட்டதிருக்கு அதரவாக 38,000 வாக்குகளை பெற்று அரசின் கவனத்தை திருப்பினர்.

5. 2003 - யில் கொங்கு பேரவை சார்வாக குமார. இரவிக்குமார் தலைமையில் உண்ணாவிரதம்.
....
....
என பல போராட்டங்களை நடத்தினர்  இதன் தொடர்ச்சியாக 27.02.2014 அன்று மக்கள் அமைதி ஊர்வலத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அவினாசி அத்திக்கடவு


இத்திட்டம் என்று நிறைவேறும் என்பதே காரமடை, மேட்டுபாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துகுளி, நம்பியூர், புளியம்பட்டி உள்ளிட்ட  7 சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த  மக்களின் கவலையாக உள்ளது ...

3
save indian economy


நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

சமீப காலமாக விலைவாசி உயர்ந்துவிட்டதே என்று அனைவரும் வருத்தப்படுகிறோம்  ..விலைவாசி உயர்வுக்கு அரசு மட்டும் காரணம் இல்லை நாமும்தான்  காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.


indian economy vs us economy

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

அரசு அந்நிய நேரடி முதலீடு மூலம் ஒரு காரணம் என்றல் அந்த அந்நிய நிறுவனங்களின் பொருள்களை வாங்கி நாமும்   தவறு செய்கிறோம் ..

உதாரணமாக :

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!
made in india


நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..



unity to save economy


கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--
some list of products to buy

COLD DRINKS:-

வாங்கவும்:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-

INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-

USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-

INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-

USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-

USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-

USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-

USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-

USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-

INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-

USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-

USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-

USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-

INSTEAD OF VODAFONE.

Food Items:-

வாங்கவும்:-

Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-

INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.