கணினி மென்பொருள்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 பழங்கள் மாநாடு

பழங்கள் மாநாடு


உலகில் இருக்கக் கூடிய  பழங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின.

எந்தப் பழம் அதிகச் சுவையுடையது; சிறப்புடையது? என்ற கேள்வி

ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப் பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம் எல்லாம் ஒவ்வொன்றும் தானே அதிகச் சுவை உடையது என்று கூறி.ஒன்றுக் கொன்று அடித்து கொண்டன.

ஆனால், திராட்சைப் பழம்  எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது.

இதனால் மற்ற பழங்கள் திராட்சை பழத்தை பார்த்து இழிவாக சிரித்தன.

பலாப்பழம் திராட்சைப் பழத்தைப் பார்த்து அன்புடன் நீ ஏன் மவுனமாக நிற்கிறாய்? எனக்குத் தெரியும் .

அதை நீயே உன் வாயால் சொல்ல வேண்டும். அப்போது தான் மற்றப் பழங்களும் உன் தகுதி பற்றி அறிந்து கொள்ளும்,'' என்று கூறியது.

நீங்கள் எல்லாருமே தனித்தனியாகவே வருகிறீர்கள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். 

ஆனால், நாங்கள், ஒரு கூட்டமாக, கொத்தாக வள்கிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு மற்றவர்களுக்கு இடம் தருகிறோம். விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும் போதும் கொத்தாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.

வாழ்விலும், வளர்ச்சியிலும், மரணத்திலும் நாங்கள் இணைபிரியாமல் இருக்கிறோம்.ஆனால் நீங்கள் யார் பெரியவர்கள் என்று அடித்து கொண்டு  இருக்குறீர்கள்? என்றது

மற்ற பழங்கள் வெட்கத்தால் தலைகுனிந்தன.

 10 கீபோர்ட் விண்டோஸ்  ஷார்ட்கட்ஸ்

                                      (10  KeyBoard  Windows Shortcuts)

(10  KeyBoard  Windows Shortcuts)




1.Windows key+E -  Open File Manager 

2.Windows Key+ D -  Desktop Mode

3.Windows Key + Print Screen - to take a screenshot

4.Windows Key + I -   Windows Security

5.Window Key + L -    Profile Lock Page

6.Windows Key+ I -   Display  Setting

7.Windows Key + Tab -   Multiple Desktops

8.Windows Key + . -    Emoji 😀

9.Windows Key + ⬅  - Window left
   Windows Key + ➡  - Window right

10.Windows Key + p -Duplicate the Display, Extend it or Mirror

                                    வாழ்க்கையை மாற்ற உதவும் 5 வழிகள்


1. கோபம் 

 உங்கள் வாழ்க்கையில், கோபத்தால் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள், நீங்கள் கொள்ளும் கோபமே உங்களை மறைமுகமாக தண்டிக்கும். ஆகையால், வாழ்வில் கோபம் கொள்ளாமல் கூலாக வாழ முயலுங்கள்!

2.உணருங்கள்

உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்; உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!

3.எண்ணங்கள்

உங்கள் எண்ணங்கள் உயர்வாக இருந்தால், நீங்கள் வாழ்வில் உயரத்தை அடைவதோடு, நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்வு கிடைக்கும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - என்ற கோட்பாட்டை கடைபிடிக்க முயலுங்கள்.

4.வழி 

மற்றவர்கள் பின்பற்றிய வழியை பின்பற்றி சென்று வெற்றி காண்பது சாதாரணம்; உங்களுக்கென நீங்களே ஒரு தனிப்பாதை அமைத்து, அதை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவதே அசாதாரணம். சாதாரண விஷயத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், அசாதாரண விஷயத்தை உங்களால் மட்டுமே செய்ய முடியும் என்று எண்ணி செயல்படுங்கள்!

5.பயம் 

 வாழ்வில் பயம் எனும் உணர்வே கொள்ளாமல், நாளையை பற்றிய, எதிர்காலம் குறித்த பயங்களை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையை அதன் போக்கில், அந்தந்த நிமிடங்களில் வாழ்ந்து பாருங்கள், வாழ்வின் அழகான மாற்றத்தை உங்களாலேயே உணர முடியும்.


நம்   வாழ்க்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும்..!

ஆனால்  ஒரே  நாளில் எல்லாம் மாறாது ..!




உங்களது கணனி பற்றிய முழுமையான தகவல்களை System Information Viewer என்ற மென்பொருளின் துணையுடன் அறிந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் உங்கள் கணனி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது.
System Information Viewer: கணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு
Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது.
இந்த மென்பொருளை தரவிறக்கி Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணனி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும்.
பல Tab-களில் ஒவ்வொரு பகுதி பற்றியும் விரிவாக காணலாம்.
System Information Viewer: கணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு

Torrent பற்றி சில தகவல்கள்.............


Torrent எனப்படுவது ஒரு குறிப்பிட்ட File களை Web Server இல் இருந்து download பண்ணாமல் பலரது கணணிகளினுடாக விரும்பிய File ஐ பகிர்ந்து கொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகும்.

Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவதற்கு நமது கணணியில் μTorrent அல்லது Bittorrent என்ற மென்பொருள் இருத்தல் அவசியம்.



Seeds, Leechers என்றால் என்ன ?
நீங்கள் download பண்ணும் File ஐ முழுமையாக வைத்திருப்பவர்களை இங்கு நாம் Seeds என அழைக்கின்றோம். நீங்கள் download பண்ணும் File ஐ உங்களைப் போல download பண்ணிக் கொண்டு இருப்பவரை Leechers என அழைக்கின்றோம்


Torrent வழங்கும் சில இணையத்தளங்கள்
  1. Isohunt.com
  2. Mininova.com
  3. btjunkie.org
  4. ThePirateBay.org
  5. Torrentz.com

Torrent ஊடாக விரும்பிய File ஐ டவுன்லோட் பண்ணுவது எப்படி?
  • முதலில் μTorrent என்ற மென்பொருளை உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.
  • பின் மேல் உள்ள Torrent ஐ வழங்கும் எதாவது இணையத்தளத்தில் இருந்து உங்களுக்கு விரும்பிய Torrent File ஐ download பண்ணிக் கொள்ளவும்
  • பின் μTorrent என்ற மென்பொருளை திறந்து அதனுள் இழுத்து விடவும்
  • அவ்வளவுதான் அந்த File ஐ download பண்ணி முடிந்ததும் அந்த File ஆனது My Documents இல் Downloads என்ற folder இல் save செய்யப்பட்டு இருக்கும்.
Torrent ஐ download பண்ணும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Torrent ஐ download பண்ணும் போது Seeds அதிகமாக உள்ள File ஐ தெரிவு செய்து download பண்ண வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் விரும்பிய File ஐ முழுமையாக வேகமாக download பண்ணி முடிக்க முடியும்.


சில வேளைகளில் மென்பொருட்களை download பண்ணும் போது அந்த மென்பொருள் சில நேரங்களில் Virus களினால் பாதிப்படைத்திருக்கக் வாய்ப்புக்கள் உண்டு. அதனால் Torrent இல் மென்பொருள் download பண்ணும் போது அந்த Torrent இனுடன் இருக்கும் அதைப் முன்னதாகவே download பண்ணியவர்களின் Comments ஐ வாசித்தபின் download பண்ணுவது பாதுகாப்பானதாகும்.

அனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...??


இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது. சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. என்ன செய்வது நானும் இந்த முறையைத்தான் பின்பற்றி ஒரு திருட்டு வழி முறையை கற்றுத்தர போகிறேன். எவ்வாறு எல்லா வகையான மென்பொருள்களுக்கும் இலகுவாக serial, keygen and patch இணையத்தில் பெறுவது. அதற்கு நாங்கள் செய்ய வேண்டியது கிழே உள்ள படிமுறைகளை பின்பற்றினால் போதும்.

  1. முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com 
  2. பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.
  3. அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.


அனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...??





எளிதாக Video Editing செய்ய


மிக எளிதாக Video Editing செய்யப் பயன்படும் மென்பொருள் இது. இதன் இடைமுகம் – Interface சாதாரணமானவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்ரீதியான வீடியோ எடிட்டிங் – Professional video Editing செய்திடும் வகையில் பல்வேறு விதமான சிறப்பம்சங்களை – Featured Effects இம்மென்பொருள் கொண்டுள்ளது.


மூவி மேக்கிங் – Movie Making என்பது அவ்வளவு சுலபமானதல்ல. மூவி மேக்கிங் மிக எளிமையாக செய்து முடிப்பதற்கு இம்மென்பொருள் எளிமையான வசதிகளைக் கொண்டுள்ளது.


VideoPAD Video Editing Software Features and Specifications


வீடியோக்களை Drop and Drag செய்து எடிட் செய்திடும் வசதி

Transition மற்றும் வீடியோ எஃபக்ட்களை கொடுக்கும் வசதி அத்துடன் வீடியோவின் வேகத்தை சரிசெய்யும் வசதி என அதிக வசதிகளை இம்மென்பொருள் பெற்றிருக்கிறது.

avi, wmv,mpv and divx போன்ற எந்த ஒரு பார்மட்டிலிருப்பினும் எடிட் செய்யும் வசதி

50 க்கும் மேற்பட்ட visual மற்றும் transition effects கொடுக்கும் வசதி.

TV போன்ற சாதனங்களில் வீடியோக்களை பார்ப்பதற்கு DVD Burn செய்யும் வசதி

Sound Effect மற்றும் ஆடியோ டிராக் பதிவு செய்யும் வசதி, Audio Effect கொடுக்கும் வசதி

வீடியோவை HD ஆக எக்ஸ்போர்ட் செய்யும் வசதி, Youtube போன்ற தளங்களில் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி என பல்வேறுவிதமான வசதிகளை உள்ளடக்கியது இம்மென்பொருள் .


பதிவிறக்கம் செய்ய

உங்கள் டெஸ்க்டாப்பில்(desktop) நீங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு(capture) செய்ய வேண்டுமா கீழ்காணும் இலவச சாப்ட்வேர்(free software) உங்களுக்கு உதவும். இதில் நேரடியாக யூடிப்ல்(youtube) அப்லோட் செய்யும் வசதியும் உண்டு.


நீங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு செய்ய ....(Desktop capture)
Desktop capture

http://www.ezvid.com/


மேலும் சில,
நீங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு செய்ய ....(Desktop capture)
Desktop capture



http://www.bbsoftware.co.uk/BBFlashBack_FreePlayer.aspx


http://www.screenr.com/


http://www.rylstim.com/rylstim-screen-recorder/


http://camstudio.org/

தற்போது உலகின் மொபைல் சந்தையை தன் வசம் வைத்துள்ள ஆண்ட்ராய்டு தனது அடுத்த வெர்ஷனான கிட்கேட் 4.4 யை கூகுள் நெக்ஸஸ் 5 மொபைலில் வெளியிட்டுவிட்டது கூகுள். ஆண்ட்ராய்டின் முந்தைய வெர்ஷன்களில் இல்லாத பல வசதிகள் இந்த வெர்ஷனில் உள்ளது. 

மேலும் இந்த கிட்கேட் 4.4 ஆனது விரைவில் சாம்ங்கின் S4 லும் HTC One Google Play Edition மொபைலிலும் வெளிவரும் என கூகுள் அறிவித்திருக்கிறது. சரி அப்படி என்ன மற்ற ஆண்ட்ராய்டு வெர்சன்களில் இல்லாத தனித்துவம் இதில் இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க...

அசத்தும் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 ன் ஆப்ஷன்கள்..!

வேகம் 
இந்த கிட்கேட் வெர்ஷனை 512MB க்கு ரேம் இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டுமே இயக்க முடியும் இதன் வேகமும் மிக மிக அதிகம்
.

ஆப்ஸ்
இதில் அதிகப்படியான ஆப்ஸ்களை பயன்படுத்தும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளது இதன் மூலம் நாம் மல்டி அப்ளிகேஷன்களை ஒரே சமயத்தில் ரன் செய்யலாம்

மெசேஜ் ஆப்ஸ்
இதில் உங்களது மெயில் மற்றும் குறுந்தகவல் அனுப்ப உதவும் ஆப்ஸ்கள் இந்த ஓ.எஸ் உடனே வருகின்றன

ஸ்மார்ட் காலர் ஐ.டி
இதன் மூலம் உங்களுக்கு அன்நோன் நம்பரில் இருந்து கால் வந்தால் கூகுள் மேப்பின் உதவியால் அந்த நம்பர் எந்த டவரிலிருந்து கால் செய்தது என்று கண்டு பிடித்து விடலாம்

Immersive Mode
இதன் மூலம் படத்தின் உள்ளது படி எந்த ஒரு அப்ளிகேஷன் அல்லது இ புக்ஸ் எதாவது நீங்கள் படிக்கும் போது புல் ஸ்கிரான் மோட்க்கு கொண்டு வரலாம்

Cloud Storage 
இதில் கூகுள் உங்களுக்கு ஆன்லைன் நினைவகத்தை வழங்குகிறது இதன் மூலம் உங்களது தனிப்பட்ட அல்லது மிகவும் முக்கியமான தகவல்களை மொபைலில் சேமிக்காமல் ஆன்லைனில் பாதுகாப்பாக சேமிக்கலாம்.

பிரிண்டிங் ஆப்ஷன்ஸ்
இது உங்களது முக்கியமான சில மெசஜ்கள் அல்லது இ மெயில்களை புளூடூத் அல்லது Wi-Fi வழியாக பிரிண்ட் செய்ய உதவுகிறது

பவர் சென்சார்
இந்த பவர் சென்சார் மூலம் நமது பேட்டரியை நாம் சேமிக்கலாம்...

சிஸ்டம் கேப்ஷன்ஸ்
இந்த ஆப்ஷன் உங்களது மொபைலை எந்த டிகிரியிலும் திருப்பி வைத்து பயன்படுத்த நமக்கு பயன்படுகின்றது

லாக் ஸ்கிரின்
இந்த லாக் ஸ்கிரின் ஆப்ஷனில் நாம் ஏதாவது படங்களை மொபைலின் கோட் வேடாக வைத்து கொள்ளலாம் மொபைலை திறக்க நாம் அந்த படங்களின் சில பகுதிகளை சரியாக தொட்டால் தான் திறக்கும்.

Read more at: gizbot.com


தமிழில் இணையத்தில் எழுத....

http://tamil.yahoo.com/type-in-tamil/ அனைத்து வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களும் வணிக நோக்கத்தினாலாவது தமிழை ஆதரிக்கின்றன. ஆனால் தமிழன் மட்டும் தமிழில் இணையத்தில் எழுத முடியாத / விரும்பாத நிலையில் இருக்கிறான்.
இதை மற்ற வேண்டியது நம் கடமை...

http://transliteration.yahoo.com/tamil/
http://tamil.yahoo.com/

Google

தமிழில் இணையத்தில் எழுத....



Google Input Tools for Windows




அனைவர்க்கும் பகிருங்கள்...இணையத்தில்   நாம் தமிழால் இணைவோம்...

யூடியுப்பில் விளம்பரங்களை தடை செய்ய

யூடியுப்பில்(youtube) வீடியோ ஓடும் போது குறுக்கே வரும் விளம்பரங்கள் இடையூறு செய்கின்றதா? கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவரா நீங்கள்?குரோம் பிரவுசர்கென ஒரு யெக்டென்ஸன்(extension) உள்ளது.

அதுதான் ஆட்பிளாக் பிளஸ்(Adblock plus). இதை கூகிள் குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது..இதுவே வீடியோ ஓடும் போது வரும் விளம்பரங்களை தடுத்துவிடும். விளம்பர தொந்தரவின்றி வீடியோ பார்க்கலாம்.

youtube add Block

இப்போது தகவல்தளம் அன்ராய்டு மற்றும் toolbarஇல் உங்களுக்காக......


இப்போது தகவல்தளம் அன்ராய்டு மற்றும் toolbarஇல் உங்களுக்காக......

தகவல்தளம் அன்ராய்டு APP DOWNLOAD செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்

இப்போது தகவல்தளம் அன்ராய்டு மற்றும் toolbarஇல் உங்களுக்காக......



இப்போது தகவல்தளம் அன்ராய்டு மற்றும் toolbarஇல் உங்களுக்காக......

தகவல்தளம் TOOLBARஐ DOWNLOAD  செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்
இப்போது தகவல்தளம் அன்ராய்டு மற்றும் toolbarஇல் உங்களுக்காக......





Operating System Live CD என்றால் என்ன ...?? Free Live CDs...!!!
சாதாரணமாக நீங்கள் உங்கள் கணினியை தொடங்கியவுடன், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்கில் பதியப்பட்ட ஆபரேட்டிங் என்ன செய்யும்? 



கணிப்பொறி இயக்கப்பட்டவுடன் முதன் முதலில் Operating System என்ற சொல்லக்கூடிய இயங்குதள புரோகிராம்களை Hard Disc அடுக்குகளில் ஏற்றும். அதன் பிறகே அதில் குறிப்பிட்ட செயல்முறையில் சில கோப்புகளை இயக்க தொடங்கும். இக்கோப்புகள் கணினியில் உள்ள Hardware களை சரிபார்க்கும். Driver Files களை Memory-க்கு ஏற்றிக்கொள்ளும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களுக்கு ஏற்ற, அதற்கு தேவையான Library Files (கோப்புகளை) தயார்படுத்தி வைக்கும். இதுதான் கணினி உயிர்ப்பு பெற்றவுடன் செய்யும் வேலைகள். 



Operating System Live CD என்றால் என்ன ...?? Free Live CDs...!!!Operating System Live CD என்றால் என்ன ...?? Free Live CDs...!!!

சரி.. Hard Disk -ல் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் செய்யும் வேலைகளை, ஹார்ட் டிஸ்க்கில் பதியபட்டாமல், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் CD யில் பதியப்பட்டு, கணினியை இயக்கினால் என்ன? 



இந்த சிந்தனையில் விளைவாக உருவானவே லைவ் சி.டி. 





லைவ் சி.டி. என்றால் என்ன? இந்த லைவ் சி.டி என்ன செய்யும்? 





ஹார்ட் டிஸ்க்கில் நாம் பதித்து இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும்,  இந்த சிடி உள்ளடக்கியிருப்பதால், ஆபரேட்டிங் சிஸ்டம் (operating system) செய்யும் அதே வேலையை இந்த லைவ் சி.டி. யும் செய்யும்.  





அதாவது, பொதுவாக கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில்(Hard Disk) ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் (OS files) பதியப்பட்டிருக்கும்.  அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குகான கோப்புகள்  இங்கு குறுவட்டு என்று சொல்லக்கூடிய சி.டியில் உள்ளது அவ்வளவே.





இதில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகள் மிக நுணுக்கமாக, செறிவுடன் கூடிய கம்ப்ரஸ் செய்யப்பட்டுள்ளது. சிடியை கணினியில் செலுத்தி இயக்கம் பெறும்பொழுது இதிலுள்ள கோப்புகள் கணினியில் உள்ள Ram Memory -ல் uncompress ஆகும்.  அதன் பிறகு அந்த RAM யை ஒரு Disk Driver ஆக கணினி டிரைவர் கோப்புகளுக்கு அறித்துவிடும். அதன் பிறகு எப்பொழுதும் போல புரோக்கிராம் கோப்புகளை அங்கிருந்து செயல்படுத்த தொடங்கும். 





அதாவது சிடியில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் கோப்புகளை அன்கம்ப்ரஸ் ரேமை (RAM) உபயோகித்துக்கொள்ளும். பிறகு அந்த ரேமையே டிஸ்க் டிரைவாக (Disk Drive) பாவித்து கணினியிலுள்ள அனைத்து டிரைவர் கோப்புகளுக்கும் 'இது தான் டிஸ்க் டிரைவ்' என்பதை உணர வைத்துவிட்டு, வழக்கம்போல ஆபரேட்டிங் சிஸ்டத்திலுள்ள புரோகிராம் கோப்புகளை செயல்படுத்த தொடங்கும்.





 பெரும்பாலான Booting disk கள் அனைத்தும் இதே செயல்பாட்டை தொடர்ந்து செய்துகொண்டுள்ளன. OS இன்ஸ்டால் செய்யும்பொழுது இதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது.





இவற்றையே பணம் கொடுத்து உபயோகிக்காமல் இலவசமாக உபயோகிக்க என்ன வழி என்று சிந்தித்ததின் விளைவே ஓப்பன் சோர்ஸ்(Open Source) என்று சொல்லக்கூடிய திற மூல அங்கத்தின் உறுப்பினர்கள் இந்த செயல்முறைகளை ஆராய்ந்து மேம்படுத்தி, பல்வேறு இயக்க முறைமைகளைக் கொண்டு லைவ் சிடிக்களை கண்டுபிடித்து இலவசமாக வெளியிட்டுள்ளனர். 





இன்று லினக்ஸ்சின் உபுண்டு(Ubuntu), குபுண்டு(gubuntu) ஆகிய லைவ் சிடிக்கள் கிடைப்பதோடு, விண்டோஸ் லைவ் சிடிக்களும் இணையத்தில்  இலவசமாக கிடைக்கின்றன. 





இலவச லைவ்  சி.டி.க்களை பெற்றுக்கொள்ள கீழ்க்கண்ட இணைப்புகள் உங்களுக்கு உதவும். 

1. shipit.ubuntu.com
2. www.frozentech.com/content/livecd.php
மேலும் google Search-ல் free live operating system cd என்று தேடினால் உங்களுக்கு நிறைய இலவச ஆப்பரேட்டிங் லைவ் சிடிக்களுக்கான தங்கள் கிடைக்கும்.

Wikipedia is one of the most popular website, Wikipedia providing information about Place, Film, Celebrity and other too many contents. Wikipedia is the biggest online Encyclopedia. Wikipedia contains more than 3+ Million articles.

Many people open Wikipedia website but most of the people don't know about this feature.

How To: Export Wikipedia Articles as PDF and Create Ebook

WIKI-PDF



  1. Open Wikipedia article that you wanted to download as a PDF or Create Ebook.
  2. Now click on Print/export option [ See above picture].
  3. If you want to export single page then click on Download as PDF.
  4. To export multiple number of articles or wiki web pages Click on Create a book.
  5. After Clicking on Create a book option, then click on Start book creator browse wiki articles to select wiki article click on Add this page to your book , After adding wiki articles click on Show book and download it as PDF , Word processor , EPUB & OpenZim Formats.

As we know Windows media player is the default media player on windows operating system, It is used by millions of computer users. If we look at the history, The first version of the windows media player released in April 26th 1999 for Windows OS.

Trick to Play All Audio/Video Formats in Windows Media Player

As you can see in the below picture, Windows media player only supports only limited number of audio and video formats

windows media player only supports only limited number of audio and video formats

How to play all audio and video formats in Windows Media Player?

Media Player codec pack is a free software , after installation of this software you can able to play all audio/video formats on your Window media player




இணையத்தில் தமிழ் புத்தகங்களை இலவசமாக படிக்க!

ஓபன் ரீடிங் புக் என்னும் இணையதளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.

முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம்.

அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.

அ.சிதம்பர செட்டியாரில் துவங்கி ,அ.ச.ஞா., அண்ணாதுரை, அவ்வை தி.க. சண்முகம், ஆ. கார்மேகக் கோனார், என்.வி. கலைமணி, எஸ்.எஸ். தென்னரசு,ஔவை துரைசாமிப் பிள்ளை,க.நா.சு, கல்கி என எழுத்தாலர்களின் பட்டியலும் நீள்கிற‌து.

நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
சமீபத்தில் துவக்கப்பட்ட இந்த தளம் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த தளத்தை நடத்தி வரும் சிங்கபூரை சேர்ந்த தமிழ் ஆர்வலரும் பத்திரைகையாளருமான ரமேஷ் சக்ரபாணி பாராட்டுக்குரியவர்.

இலவச இணைய நூலகமாக இதனை அவர் குறிப்பிடுகிறார்.

இணையதள முகவரி:- http://www.openreadingroom.com/


கணினி விளையாட்டு பிரியர்களை இலக்காகக் கொண்டு அப்பிளின் iPad மற்றும் iPhone ஆகிய சாதனங்களில் நிறுவி விளையாடக்கூடிய iSniper 3D Arctic Warfare எனும் கேம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்னைப்பர் தாக்குதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கேம் ஆனது சினிமா பாணியில் அமைந்துள்ளதுடன் 10 விதமான ஆயுதங்களை பயன்படுத்தி 11 வரையான எதிரிகளுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் காணப்படுகின்றது.

மேலும் iPod Touch - இலும் பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கேம் ஆனது 117 MB கோப்பு அளவு உடையதுடன், இதனை குறிப்பிட்ட கால எல்லைக்கு இலவசமாக தரவிறக்கம் செய்யமுடியும்.

தரவிறக்கச் சுட்டி


ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை தன்னகத்தே கொண்டு உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழுகின்றது. 

facebook

இத்தளத்தில் பகிரப்படும் பல்வேறு வீடியோ மற்றும் MP3 கோப்புக்களை தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்துக் கொள்வதற்கு Bigasoft Facebook Downloader எனும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இது தவிர இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் MP3 கோப்புக்களின் போர்மட்களை விண்டோஸ் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு, மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பதும் விசேட அம்சமாகும்.


கோப்புகளை பாதுகாப்பாக சுருக்கி அனுப்புவதற்கு பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படுவது WinZip.

மேலும் ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட்(ZipShare, ZipSend) போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.

iOS மற்றும் Android சிஸ்டங்களுக்கான WinZip வெளியான நிலையில், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்குமான WinZip வெளியாகியுள்ளது.

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கேற்ப, தொடுதிரை செயல்பாட்டிலும், 128 or 256 Bit AES Encryption தொழில்நுட்பத்திலும் இயங்குகிறது.


இன்று எமக்கு தேவையான அத்தனை விடயங்களையும் இலகுவாக பெற்றுத்தரும் அளவிற்கு இணையத்தளங்களின் வளர்ச்சி அபரிமிதமானதாகக் காணப்படுகின்றது.

இதன் அடிப்படையில் இணையத்தளங்களில் இருக்கும் பல்வேறு பயனுறுதி மிக்க கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்துகொள்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அவற்றின் உதவியுடன் பொதுவாக குறித்த ஒரு நேரத்தில் ஒரு கோப்பு வீதமே தரவிறக்கம் செய்துகொள்ள முடிகின்றது.

ஆனால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை Web Batch Downloader எனும் மென்பொருள் தருகின்றது.


தரவிறக்கச் சுட்டி

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.