இந்த வார வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

சீனப் பெருஞ்சுவர், இதனைப்பற்றி கேள்விப்பட்டிராதவர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட 2,000 கி.மீ நீளமுடைய இந்த பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

எங்கோ சீனாவில் இருக்கும் இந்த இடத்தை பற்றி அறிந்திருக்கும் நமக்கு ராஜஸ்தானில் இருக்கும் கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort)  பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort)  பற்றி  சில தகவல்கள் இதோ !!


சீன பெருஞ்சுவருக்கு அடுத்த உலகின் 2வது பெருஞ்சுவராக விளங்குகிறது.
பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மலைக் கோட்டை 15ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டு, இந்த கோட்டை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய குழுவினரால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??


கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீற்றர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் எல்லை சுவர்களின் நீளம் மட்டுமே சுமார் 36 கி.மீ நீளம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இந்த 36 கி.மீ சுவர் தான் உலகளவில் மிகபெரியதான சீன பெருஞ்சுவருக்கு அடுத்து மிகப்பெரிய சுவராக அமைந்துள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இந்த எல்லை சுவரின் முன் சுவர்களின் அகலம், சுமார் 15 அடிகள் தடிமனாக அமைந்திருக்கும். மேலும் இந்த கோட்டையில் 7 பலத்த பாதுகாப்பான நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன.

இந்த கோட்டைக்குள் சுமார் 360 கோவில்கள் உள்ளதாகவும், அவற்றில் 300 பழமைவாய்ந்த சமண மத கோவில்களும், 60 இந்து மத கோவில்களும் உள்ளதாக கூறுகின்றனர்.

இந்த கோட்டைக்குள் ஏன் இத்தனை கோவில்களை கட்டியுள்ளனர் என்பதும் மர்மமாகவே உள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இதுபோல் பல மர்மங்களை உள்ளடக்கியதாக கருதப்படும் இந்த கோட்டைச் சுவர் பல நூற்றாண்டுகளை கடந்தும் பெருமளவில் சேதமாகாமல் கம்பீரமாக நிற்கிறது.

ஆனால் இந்திய பெருஞ்சுவர் என அழைக்கப்படும், உலகின் 2வது மிகப்பெரிய பெருஞ்சுவரான இதனை பற்றி உலகில் பலரும் அறியாமல் உள்ளது தான் வியப்பையும், மர்மத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும், இந்த சுவர் கட்டப்பட்டது பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்றையும் புராணத்தில் கூறியுள்ளனர்.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??



கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort) வரலாறு :

1443ம் ஆண்டு இந்த கோட்டை சுவரை மன்னர் ராணா கும்பா கட்ட முயற்சித்த போதெல்லாம் மீண்டும் மீண்டும் இன்னல்கள் வந்த வண்ணமே இருந்துள்ளன.

அப்போது ராணா கும்பாவிடம் ஆன்மிகவாதி ஒருவர், யாராவது உயிர்பலி கொடுக்க தாமாக முன்வந்தால் இந்த சுவரை கட்ட வரும் தடைகள் அனைத்தும் விலகும் என்று யோசனை கூறியுள்ளார்.

மேலும், அவ்வாறு நரபலி கொடுக்கப்படும் நபரின் தலை விழும் இடத்தில் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்றும், அந்த நபரது உடல் விழும் பக்கத்தில் கோட்டையும், கோட்டைச் சுவரும் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். எதிர்பார்த்த்து போலவே பலகாலமாக உயிர் பலி கொடுக்க யாரும் தாமாக முன்வராத சூழ்நிலையே நிலவியுள்ளது.

பின்னர் ஒருநாள் யாத்ரீகர் ஒருவர் உயிர்பலி கொடுக்க முன்வந்துள்ளார். இதையடுத்து சடங்குகள் சம்பிரதாயத்துடன் அந்த நபரின் உயிர் பலியிடப்பட்டுள்ளது.

இதனை விளக்கும் விதமாகவும் அந்த தியாகத்தை போற்றும் விதமாகவும் அந்த கோட்டையின் பிரதான வாசலான Hanuman Pol அருகே நினைவு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??


எந்த தாக்குதல்களாலும் நிலைகுலையாத இந்த கோட்டை, ஒரே ஒரு முறை மட்டுமே போரில் தோல்வியை சந்தித்துள்ளது.

மொகலாய பேரரசர் அக்பர், அம்பரின் மன்னன் ராஜா மான் சிங், மார்வாரின் அரசர் ராஜா உதய் சிங் போன்ற அனைவரும் ஒன்றினைந்து இந்த கோட்டையை எதிர்த்து போரிட்ட போது ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 360 கோவில்களை உள்ளடக்கியுள்ள இந்த கோட்டை, உலகின் அறியப்படாத மர்மம் நிறைந்த புதையலாகவே விளங்குகிறது.

இந்தக் கோட்டையுன் அமைவிடம்:



இந்த மலைக் கோட்டை உதைப்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 82 கி.மீரில் அமைந்துள்ளது.

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!



சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.


சூவன்லிசௌ(shuan Chou) துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

மேலும் படிக்க

பனை மரத்தை வெட்டாதீங்க!!!  வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...!!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

நுங்கில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்குத்தெரியுமா!?

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க

மாவீரன் தீரன் சின்னமலை
மாவீரன் தீரன் சின்னமலை 

மாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.

பெற்றோர் மற்றும் பிறந்தஊர் 


தீரன் சின்னமலை உருவச்சிலை
தீரன் சின்னமலை உருவச்சிலை

இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.

அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் ,
தாயார் பெயர் பெரியாத்தா .
இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.

வரலாற்று குறிப்புக்கள் :

கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார்.

அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அன்றுமுதல்  தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார்.

இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார்.

மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்ற வெற்றிகள் :

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும்,
1802-இல் ஓடாநிலையிலும்,
1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

சூழ்ச்சி 

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

தீரன் சின்னமலை நினைவுகள்

முன்பு 

தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது.

இன்று

 தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது.

தீரன் சின்னமலை உருவச்சிலை
தீரன் சின்னமலை உருவச்சிலை

 தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.
சின்னமலை நினைவு மணிமண்டபம்
சின்னமலை நினைவு மணிமண்டபம் 


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.

இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை
தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை

2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. அவ்வாறே கட்டி முடிக்கப்பட்ட மண்டபம் டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது.

அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.




இன்று முதல் நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்க போகிறார்கலம் ...
அவர்கள்  பெயர்:-


சந்தோஷம்

நிம்மதி
ஆரோக்கியம்
ஆனந்தம்
கல்வி 
அறிவு 
ஆயுள் 
ஆற்றல் 
இளமை
துணிவு
பெருமை 
பொருள் 
பொன்
புகழ் 
நிலம் 
நன்மக்கள்
நல்லொழுக்கம் 
நோயின்மை
முயற்சி 
வெற்றி
மன்மத வருஷம்...
சித்திரை முதல் நாள்...
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே.............

நம்மில் பலர் தை ௧(1) தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் நாம் ஏன் தமிழ் புத்தாண்டு சித்திரையில் கொண்டாடுகிறார்கள் என்று ஆராயுந்து பார்த்தல் தெரியும் அதை பற்றிய சிறு குறிப்பு உங்களுக்காக ...

உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.

இந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே 12 ராசிகள் என அழைக்கப்படுகின்றன.

சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரை மாதம் முதல் நாள் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளாக நம் மூதாதையர்கள் முடிவு செய்தனர்.

இதை அடிப்படையாக கொண்டு புதுவருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள். அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினார்கள். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன.

அசுவதி மேஷத்தில் தொடங்குவதால் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது. 

அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்து வைத்துள்ளார்கள்.

 இளவேனில் (சித்திரை, வைகாசி), 

முதுவேனில் (ஆனி, ஆடி), 

கார் காலம் (ஆவணி, புரட்டாசி), 

கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை),

முன் பனிக்காலம் (மார்கழி, தை) 

பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில், 

இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் சித்திரைத் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

மைசூர் அரண்மனையும் அதன் வரலாறும்..
மைசூர் அரண்மனையும்

கர்நாடகாவின் சுற்றுலா நகரமான மைசூருக்கு அழகுசேர்க்கும் மைசூர் அரண்மனை.அரசர் வசிக்கும் இடமான கோட்டைகள் அரண்மனைகளாக அவரது கலா ரசனையை, மக்களின் கலையுள்ளத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது .

மைசூர் அரண்மனை வரலாறு.


மைசூர் அரண்மனையில் உள்ள மன்னர் அமரும் தங்க இருக்கை.
மைசூர் அரண்மனையில் உள்ள மன்னர் அமரும் தங்க இருக்கை.
மைசூர் மாகாணத்தை ஆட்சி நடத்திய உடையார்கள்க காலத்தால் அழிக்க முடியாத பல கட்டிடங்களை வருங்காலத்தினருக்கு கலைப்பொக்கிஷமாக கொடுத்து சென்றுள்ளனர். மாநகரில் மைய பகுதியில் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இருந்தது. கலைநுட்பத்துடன் கட்டியிருந்த அரண்மனை 1897ம் ஆண்டு எதிர்பாராத வகையில் தீப்பிடித்து எரிந்து நாசமாகியது.

அப்போது மன்னராக இருந்த மும்மடி கிருஷ்ணராஜ உடையார் புதிய அரண்மனை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக மரத்தால் செய்து தீயில் கருகிய அரண்மனை பகுதியில் கலைநுட்பத்துடன் அரண்மனை எழுப்ப தீர்மானித்தார். அதற்கான பொறுப்பை சென்னை மாகாணத்தில் கட்டிடக்கலை நிபுணராக இருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி இர்விடம் ஒப்படைத்தார். அவர் இந்திய,ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் அழகிய அரண்மனை அமைக்கும் பணி சுமார் 15 ஆண்டுகளாக நடைபெற்றது. 1912ல் ‘அம்பா விலாஸ் அரண்மனை‘ திறப்பு விழா கண்டது.

நூறாண்டுகண்ட மைசூர் அரண்மனை 245 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 150 அடி உயரத்தில் சாம்பல் நிற சலவைக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிட உள்பகுதி முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன. அரண்மனையை ஒட்டி 44.2 மீட்டர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொன்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது. இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையில் கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம்

அரண்மனையில் இரண்டாவது தளத்தில் மன்னர் குடும்பத்தினர் திருமணம் வைபபவம் நடக்கும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாட்களில் மக்களின் குறை கேட்க தர்பார் மண்டபம் அமைக்கபட்டுள்ளது. இங்கிருந்து சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி தேவியை மன்னர் தரிசனம் செய்யும் வகையில் நேர்கோட்டில் தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை வளாகத்தில் அமைத்துள்ள தூண்கள், கம்பங்கள் அனைத்தும் சிற்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் பலவிதமான படைப்புகள் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் மர வேலை செய்யும் தொழிலாளர்கள் வடிவமைத்துள்ள கதவு, ஜன்னல், அலங்கார கண்ணாடி அலமாரிகளில் கலைநுணுக்கங்கள் தற்போதும் பார்வையாளர்களை கவர்கின்றன.  அரண்மனை வளாகத்தில் ஆங்காங்கே கண்ணாடி சுவர்கள் பொருத்தியுள்ளனர். ஓவியங்களில் உலக பிரசித்தி பெற்றதாக கருதப்படும் தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள் அழகுசேர்க்கின்றன.  ரவிவர்மன், எல்லோரா ஆகியோர் வரைந்த ஓவியங்கள் இன்று வரைந்ததை போல் கண்ணுக்கு விருந்து படைக்கிறது. அரண்மனை வளாகத்தில் உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிசுகளின் வரலாறு அனைத்தும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

97ஆயிரம் ஒளி விளக்குகள்


தண்ணீரில் பிரதிபலிக்கும் மைசூர் அரண்மனையின் அழகிய தோற்றம்
தண்ணீரில் பிரதிபலிக்கும் மைசூர் அரண்மனையின் அழகிய தோற்றம்
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் அரண்மனை அரசுடமையாக்கப்பட்டது. இதை தொடர்ந்து மன்னர் கட்டிய அரண்மனை¬க்கு மெருகூட்டும் வகையில் அரண்மனை கட்டிடத்தை சுற்றி 97 ஆயிரம் விளக்குகள் பதிக்கப்பட்டது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு ஒரு மணி நேரம் விளக்கு போடப்படுகிறது. விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் அரண்மனை கட்டிடம் மின்னுகிறது. இதை காண ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்.

விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் மின்னும் மைசூர் அரண்மனை
விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் மின்னும் மைசூர் அரண்மனை

விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் மின்னும் மைசூர் அரண்மனை
விளக்கு வெளிச்சத்தால் தங்கம் போல் மின்னும் மைசூர் அரண்மனை

அச்சமயத்தில் போலீசாரின் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. தசரா விழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் மின் விளக்கு போடப்படுகிறது.

மைசூர் அரண்மனையில் நடைபெறும் தசரா விழா.
மைசூர் அரண்மனையில் நடைபெறும் தசரா விழா.

அரண்மனையின் பின்னணியில், பேண்ட் வாத்தியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி
அரண்மனையின் பின்னணியில், பேண்ட் வாத்தியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி
மைசூர் அரண்மனைக்குச் செல்ல

மைசூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனைக்கு சுற்றுலா செல்வது மிகவும் எளிது.

பேருந்து மார்கமாக சென்றால், மைசூர் நகரத்தின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 5 அல்லது 10 நிமிடம் நடந்தாலே மைசூர் அரண்மனையை அடைந்து விடலாம். ஆனால் வெளியூர்களில் இருந்து பேருந்து மூலமாகச் செல்லும் பயணிகள், வெளியூர் பேருந்துகளுக்கான பேருந்து நிலையத்தில் இருந்து மற்றொரு உள்ளூர் பேருந்து பிடித்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அரண்மனையை அடையலாம்.

மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து, அரண்மனை சற்று தொலைவில் உள்ளது. எனினும், ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் அரண்மனைக்குச் செல்கின்றன. பேருந்து அல்லது ஆட்டோ மூலமாக ரயில் நிலையத்தில் இருந்து அரண்மனைக்குச் செல்லலாம்.


மொழிகளின் தோற்றம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு எழுத தெரியாது. ஏனென்றால் அப்பொழுது எழுத்துக்களோ, மொழிகளோ உருவாகவில்லை.
தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த செய்கைகளை பயன்படுத்தினார்கள். பின்னர் படங்களை காட்டினர். உந்தாரனமாக ஒரு புலியை பற்றிய தகவலை தெரிவிக்க, புலியின் உருவத்தை காட்டினர்.

          ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலும், மேசப்போடோமியாவிலும் வாழ்ந்து வந்த மக்கள் இப்படிதான் செய்து வந்தனர். அவர்கள் வரைந்த இந்த உருவங்களுக்கு " பட எழுத்துக்கள் " என்று பெயர்.  எகிப்தில் உள்ள பிரமீடுகளிலும் பட எழுத்துக்களை இன்றும் காணலாம். காலப்போக்கில் பட எழுத்துக்களில் இருந்து "குறி எழுத்துக்கள்" பிறந்தன. மரம் என்ற சொல்லைக் குறிப்பதற்கு மரம் போல படத்தை வரையாமல், ஏதேனும் குறி ஒன்றை எழுதும் வழக்கம் வந்தது. பேச்சில் வரும் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஆயிரக்கணகான குறிகள் எழுதப்பட்டன. பழங்காலத்தில் வாழ்ந்த பாபிலோனியர்களும், ஆசாரியரும் எழுதிய குறி எழுத்துக்கள், உளி வெட்டுக்கள்போல காணப்பட்டன.

    சீன மொழிகள் எழுத்துக்கள் குறிஎலுத்துக்கலாகும் அம்மொழியில் 5000 திற்கும் மேற்பட்ட குறி எழுத்துக்கள் உள்ளன. குறி எழுத்துக்களை கற்பதும், எழுதுவதும் எளிதல்ல. மேல்நாட்டில் முதன் முதலாக எழுத்துக்களை எழுத கற்றுக் கொண்டவர்கள் பெணீசியர்கள். இவர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் வாழ்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து கிரேகர்கள்  எழுத்துக்களை கற்றுக்கொண்டார்கள். கிரேகர்கள் அந்த எழுத்துக்களை ரோமானியர்களுக்கு கற்றுத்தந்தனர். 

இந்திய மொழிகள் 
மொழிகளின் தோற்றம்

     இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எழுத்துக்கள் யாவும் இரு மொழி குடும்பங்களில் அடங்கும். ஒன்று ஆரிய மொழி குடும்பம், இதன் ஆதி மொழி சமஸ்கிரதம். மற்றொன்று திராவிட மொழி குடும்பம். இதன் ஆதி மொழி தமிழ்.

      தமிழுக்கும், சமஸ்கிரததிர்க்கும் தனிதனி எழுத்துக்கள் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  "வட்டெலுதுக்கள்" என்ற தமிழ் எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன. இந்த எழுத்துக்கள் வட்ட வடிவத்தில் இருக்கும்.
சமஸ்கிரதம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழில்களில் கூட்டெலுதுக்கள் உண்டு. இவை இரண்டு மூன்று எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கும். ஆனால் தமிழில் கூட்டெலுதுக்கள் கிடையாது. தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன, இந்த எழுத்துக்கள் சொல்லில் எவ்வாறு சேருகின்றன என்பதற்கு, "தொல்காப்பியம்" என்னும் பழம்தமிழ் இலக்கணத்தில் விதிகள் உண்டு.

காகிதம் 


       பழங்கால மக்கள் கருங்கற்கள் மீதும் சுவர்களின் மீதும் எழுத்துக்களை செதுக்கினர். பிறகு பதபடுத்தபட்ட தோலின் மீதும், மரப்பட்டைகளின் மீதும், பானை ஓடுகளின் மீதும், பனை ஓலைகளிலும் எழுதும் வழக்கம் வந்தது. இந்தியாவில் மக்கள் எப்போது எழுத்துக்கள் கட்டரு கொண்டனர் என்று திட்டவட்டமாக கூறமுடியாது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்துசமவெளி மக்கள் களிமண் பலகைகளில் எழுதி வந்தனர். 

    தமிழ் மிக பழமையான மொழிகளில் ஒன்று. அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறந்த இலக்கியங்கள் தோன்றியுள்ளன. எனவே தமிழ் மக்கள் அதற்க்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். பழங்காலத்தில் தமிழ் நூல்கள், பனை ஓலையில் எழுதப்பட்டன. எழுதும் ஓலையை தேர்ந்தெடுத்து, அதை ஒழுங்காக வாரிக் கட்டுவதே ஒரு கலையாக இருந்தது.

மொழிகளின் தோற்றம்

     மன்னர்கள் கட்டிய அணைகள், சுட்ருசுவர்கள் மீதும் செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. அயல் மொழியின் கருத்துக்களும், சொற்களும் தமிழில் கலந்தன. இதனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையில் பல மாறுபாடுகள் ஏற்பட்டன. அச்சு எந்திரங்கள் வந்த பிறகு தமிழ் மொழியின் வடிவங்கள் மாறாமல் இருந்து வருகிறது.

         தமிழ், ஆங்கிலம் உட்பட பெரும்பாலான மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. உருது எழுத்துக்களையும், அரேபிய எழுத்துக்களையும் வலமிருந்து இடமாக எழுதுகிறார்கள். சீனர்கள் மேலிருந்து கீழாக எழுதுகின்றனர்.

சர்வதேச மகளிர் தினம்

அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

பெண்ணின் பெருமையை உணராத நாடு முழுமைபெறாது.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையையும், ஆற்றலையும் மூடி மறைத்தால் அந்த நாடு எத்துறையிலும் வெறியடையாது ...

ஒவ்வொருவருடமும் பனிரண்டாம் வகுப்புத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெண்குழந்தகளே பெறுவதால்தான் அதற்கு மதிப் " பெண்கள் " என்று பெயர் வந்ததோ ?

ஆணுக்குப்பெண் என்றும் அடிமை இல்லை !!!!

அந்த ஆணையே பெற்றுத்தருவது பெண்கள்.

பெண்களிடம் மட்டுமே பொறுமை, நிதானம், அன்பு, அறிவு, ஆற்றல் அதிகம் காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆணிண் வெற்றியிலும் ஒரு பெண் எந்த வகையிலாவது மறைந்திருப்பாள்.

சிவம் இல்லயேல் சக்தி இல்லை !!!! என்றாலும்கூட .....

சக்தி இல்லையேல் சிவம் இல்லை .... என்று சொன்னபிறகே இந்த வாக்கியமும் முழுமை பெறுகின்றது.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் .....

பெண்ணுக்கு தன் உடலில் சரிபாதியை விட்டுக்கொடுத்தவன் ஈசன் என்றாலும்கூட .....

அனைத்து ஆண்களும் பெண்ணுக்கு கட்டுப்பட்டவனென்று சுட்டிக்காட்டியது இந்து மதம் மட்டுமே !!!

மகளிர் தினத்தை போற்றுவோம் .... பெண் கல்வியை சட்டமாக்குவோம் ... அதுமட்டுமல்ல கட்டாயமாக்குவோம் ....

நிகழ்வுகள் இந்நாளில் 


அல்பானியா, ரோமானியா - அன்னையர் நாள்
ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 


1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.

1761 - வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1782 - ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். 
கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.


1817 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.

1906 - பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1911 - அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.

1917 - ரஷ்யாவில் பெப்ரவரிப் புரட்சி (பெப்ரவரி 13 - பழைய நாட்காட்டியில்) ஆரம்பம்.

1921 - ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ மாட்ரிட்டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1924 - யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் கொல்லப்பட்டனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜாவாவில் ஜப்பானியப் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.

1950 - சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.

1957 - எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.

1965 - வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.

இந்நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1879 - ஓஒட்டோ ஹான், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)
1886 - எட்வர்ட் கெண்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)
1908 - பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

இந்நாளில் மறைந்த பிரபலங்கள் 


1922 - சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1854
1923 - ஜொஹானஸ் வான் டர் வால்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1837)
1974 - ஜே. பி. சந்திரபாபு, பாடகர், நடிகர் (பி. 1924)
2004 - அபூ அப்பாஸ், பாலஸ்தீன விடுதலை முன்னணி தாபகர் (பி. 1948)

2
ரூபாய் நோட்டும் நோட்டில் உள்ள இந்திய வரலாறும் ..

அடுத்ததலைமுறைக்கு காண்பிக்க காகிதத்தில் மட்டுமே இருக்கும் இந்திய வரலாறுகள்

ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்த இந்திய வரலாறு இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன.
அதாவது,
ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை5rupee

ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை5rupee

ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).
ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).


ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)
ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)


ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)
ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)


ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)
ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)

ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)
ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)


ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.
ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.


காக்க தவறிவிட்ட இந்திய வரலாறு !!காத்திருக்கிறது அடுத்த தலைமுறைக்கு
இதே காகித நோட்டில்----உண்மைதானே தோழர்களே

பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ள கல்வெட்டை காட்டுகிறார் வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன்.
பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ள கல்வெட்டு

தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும் அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும் மரண தண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பென் னேஸ்வரமடம் கிராமம். இங்குள்ள பென்னேஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது, பிரசித்திபெற்றது. இந்தக் கோயில் கல்வெட்டில் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மற்றும் அதை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் மரண தண்டணை விதிக்கும் வகையில் மன்னன் ஆணையிட்ட கல்வெட்டு உள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழு நிலைகளைக் கொண்ட பெரிய ராஜகோபுரம் இருக்கும் கோயில்பென்னேஸ்வர மடம் கோயிலாகும். இது பிற்காலச் சோழர் காலக் கோயிலாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயி லில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. சோழர்கள், போசாளர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சியில் இக்கோயிலுக்கு பலவிதமான கொடைகள், தானங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தானமாகப் பெறப் பட்ட நிலங்கள், ஊர்கள் மற்றும் பொது சொத்துகளை சிலர் ஏய்த்துஅனுபவித்துள்ளனர். இதனை அறிந்த பேரரசன் வீர ராமநாதன் ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார். அந்த ஆணை தொடர்பான கல்வெட்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போசாள மன்னன் வீர ராமநாதன் கல்வெட்டு

"ஸ்ரீ வீரராமந்நாத தேவரீஸர்க்கு யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார் பெண்ணையாண்டார் மடத்தி லும் பெண்ணை நாயனார் தேவதானமான ஊர்களிலும் ஒரு அதிகாரியாதல் கணக்கர் காரியஞ் செய்வார்களாதல் கூசராதல் ஆரேனுமொருவர் வந்து விட்டது விடாமல் சோறு வேண்டுதல் மற்றேதேனும் நலிவுகள் செய் குதல் செய்தாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலையைஅறுத்துவிடவும் அப்படி செய்திலர் களாதல் தங்கள் தலைகளோடே போமென்னும்படிறெயப்புத்த பண்ணி இதுவே சாதனமாகக் கொண்டு ஆங்கு வந்து நலிந்தவர் களைத் தாங்களே ஆஞ்ஞை பண்ணிக் கொள்ளவும் சீகாரியமாகத்தாங்க . . . த. . . போதும் போன அமுதுபடிக் குடலாக ஸர்வ மானிய மாகக் குடுத்தோம். அனைத் தாயமு விட்டுக்கு . . .கூசர் உள்ளிட் டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம்.

இப்படியாதே இதுக்கு விலங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்" என எழுதப்பட்டுள்ளது.

இதன் விளக்கம், லஞ்சம் வாங்கினால், கொடுத்தால் சிரச்சேதம் செய்ய அதாவது தலையை வெட்டும் படியும் அவ்வாறு நிகழாமல் தடுக்கத் தவறினால் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் தலையை வெட்டும்படியும் ஆணை வெளியிட்டுள்ளார். இக்கல்வெட்டு கோயிலின் தெற்கு சுவர் பகுதியில் இருக்கிறது. இக்கல்வெட்டு கிரந்தம் மற்றும் தமிழில் வடிக்கப்பட்டுள்ளது.

லஞ்சமாக உணவு அல்லது சோறு கேட்டால் கூட குற்றம் என்றும் அரசர் சொல்லியிருக்கிறார். மேற் கண்ட பேரரசர் வீரராமநாதனின் கல்வெட்டைக் கொண்டும், தலைபலிக் கற்களின் சிற்ப அமைப்பைக் கொண்டும் இவ்வாறு தண்டிக்கப் பட்டிருக்கக் கூடும் என்பது தெரிகிறது. இது தமிழக வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.

இந்தக் கல்வெட்டை போசாளப் பேரரசன் வீரராமநாதனின் நாற்பத்தி ஒன்றாவது ஆட்சியாண்டில் இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டிருக் கிறது. கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு கி.பி.1295 என குறிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு, பொதுமக்களின் நலனுக்காக அல்லது அரசனின் நலனுக்காக பக்தியில் கொற்றவை என்னும் காளிக்குப் படையலாகவும் தங்கள் தலையைத் தாங்களே அறுத்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.

இதில் நவகண்டம் என்பது, உடலில் ஒன்பது இடங்களில் வெட்டிக்கடைசியாக தன் தலையை அறுத்துக் கொள்வது. அரிகண்டம் என்பது ஒரே வெட்டில் சிரத்தை அறுத்து சமர்ப்பிப்பது. இது தொடர்பான கல்வெட்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் உள்ளன. அதுவும் போசாளர்களின் தலை நகரான ஹளேகுந்தாணியிலும், பையூர் நிலையுடையான் மதுராந்த கன் வீரநுளம்பன் ஆட்சி செய்த பென்னேஸ்வர மடத்திலும்தான் இருக்கின்றன.

தலைபலிக் கற்களை நவகண்டம் அல்லது அரிகண்டம் என்றுதான்நினைத்திருந்தனர்.

இந்த தலைபலி கற்களையும் கோயில் கல்வெட்டுகளையும் ஆராய்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன், லஞ்சம் வாங்கிய ஒரு அதிகாரியின் உயிர்பலி கல்வெட்டு என்பதை கண்டறிந்துள்ளார்.

நன்றி:தமிழ் ஹிந்து

உழவும் பசுவை ஆங்கிலேயர்கள் ஒழிந்த கதை!

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி,மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.

அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.

அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.

இப்பசுக்களை அழித்துவிட்டால்விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.

நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.
அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன.

அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.

நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.

ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்’ என்றார்.

1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார்.

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.
இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.

நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கானபசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.

இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.

கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.

விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.
இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.

இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.
இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.

அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.

இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

  பசுவதை தடுப்போம்
     தேசம்  காப்போம்

உலகின் வல்லரசாக அமெரிக்கா  இருக்கிறது இதற்கு முன்னால் எந்த நாடு இருந்தது?

உலகின் வல்லரசு நாடாக இந்தியா மாறவேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி பேசுகிறார். அதைக்கேட்கும் எல்லோருக்கும் தேசிய உணர்ச்சி பொங்கத்தானே செய்யும்?

அப்படி உணர்ச்சிபூர்வமாக இருக்கிற ஒருவரிடம் “இப்போது உலகின் வல்லரசாக அமெரிக்கா  இருக்கிறது இதற்கு முன்னால் எந்த நாடு இருந்தது?” என்று கேளுங்களேன்.
“இங்கிலாந்து இருந்ததோ…? ” என்று இழுப்பார்.

 அதுக்கும் முன்னால? என்று கேட்டுப்பாருங்கள்.

மாட்டிக்கொள்வார். இரண்டு, மூன்று நாடுகளின் பெயர்களைச் சொல்லி ஒத்தையா, ரெட்டையா பார்ப்பார்.

இனிமேல் அப்படி குத்துமதிப்பாகப் பேசவேண்டிய அவசியம் இல்லை. அதனை ஆழமானமுறையில் ஆராய்ச்சி செய்துள்ளார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கஸ் மேடிஸன் எனும் பொருளாதார வரலாற்று அறிஞர். (http://www.ggdc.net/maddison/maddison-project/home.htm) அவர் உலகின் பல நாடுகளில் பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றவர். பல நாடுகளின் பண்டையப் பொருளாதார வரலாறுகளை அவர் தொகுத்தார்.

அந்த அனுபவத்தில் “உலகப் பொருளாதாரம் - ஒரு ஆயிரமாண்டு தொலைநோக்கு” “வரலாற்றுரீதியான புள்ளிவிபரங்கள்’ (The World Economy. A Millennial Perspective (Vol. 1). Historical Statistics (Vol. 2) எனும் நூல்களை 2006-ல் எழுதியுள்ளார்.

அவரது ஆய்வின்படி கி.பி. 1 ஆம் ஆண்டில் உலகின் மொத்த வருமானத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் பங்கு 52.9 சதவீதம். கி.பி.1000 ஆம் ஆண்டில் உலகின் வருமானத்தில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம். ஆனால் அது கி.பி.1500 ஆம் ஆண்டில் 24.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதனால் தன்னைவிட அரைச் சதவீதம் கூடுதல் வருமானம் உருவாக்கிய சீனாவிடம் இந்தியா முதலிடத்தை இழந்துள்ளது.

மீட்ட அவுரங்கசீப்

1600களில் மொகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து நாட்டின் மொத்தச் செல்வத்தைவிட இந்தியாவின் ஆண்டு வருமானம் அதிகமாக இருந்துள்ளது. ஆனாலும் இந்த காலகட்டத்தில் சீனாவுக்கு அடுத்த இடத்தில்தான் இந்தியா இருந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ஐரோப்பா இருந்துள்ளது.

கி.பி.1700-ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலம். அவர் தெற்காசியாவின் பெரும்பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தவர். அதனால், அவரது ஆட்சிக்காலத்தில் மீண்டும் இந்தியா உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாறியது. (24.4 சதவீதம்). அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு 1750-ல் சீனா மீண்டும் இந்தியாவை முந்தியது. அடுத்தடுத்த இடங்களில் இந்தியாவும், பிரான்சும் இருந்தன.

இங்கிலாந்தின் எழுச்சி

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி ஏற்பட்டது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதித்துவிட்டது. 1700 களின் கடைசியில் ஏற்பட்ட பஞ்சம் இந்தியாவின் மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தைச் சாகடித்துள்ளது. அடுத்தடுத்து பல பஞ்சங்கள் இந்தியாவைத் தாக்கி மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுள்ளன.

1850களில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த இந்தியாவைத் தள்ளிவிட்டு இங்கிலாந்து ஏறிக்கொண்டது. மூன்றாம் இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது. 1875-ல் அமெரிக்கா இங்கிலாந்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது. இந்தியா நான்காம் இடத்துக்குப் போனது.

அமெரிக்க சகாப்தம்

1900 வரையான காலகட்டத்தில் அமெரிக்கா சீனத்தைத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு முன்னேறியது. சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா என இந்தியா ஐந்தாவது இடத்தில் உட்கார்ந்தது. 1925-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, என வரிசையின் இடையில் பிரான்ஸ் நுழைந்து இந்தியாவை ஆறாவது இடத்துக்கு தள்ளியது. அப்போதுதான் பிறந்த சோவியத்யூனியன் இந்தியாவுக்குப் பின்னால் நின்றது.

25 வருட காலகட்டத்துக்குள் சோவியத்யூனியன், இங்கிலாந்தின் இடத்தைக் கைப்பற்றி 1950-ல் இரண்டா வது இடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா என ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டோம்.

சீன மறுஎழுச்சி

1975-ல் ஜப்பான் இந்த வரிசையின் நடுவில் ஊடுருவி மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது. ஜெர்மனியும் சீனாவும் அதற்குப் பின்னால் நின்றன. ஐ நா சபையின் 2013 தகவல்கள்படி தற்போது சீனா இரண்டாம் இடத்தில் நிற்கிறது. ஜப்பான் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, பிரேசில், இத்தாலி, ரஷ்யாவுக்கு பிறகு 10வது இடத்தில் தற்போது இந்தியா உள்ளது.

இந்தியாவின் பழங்காலப் பொருளாதார வளர்ச்சியில் கி.மு.2800 முதல் 1800 வரையில் சிந்து சமவெளி நாகரிகம் செழித்து ஓங்கியிருந்தது எனக்கூறும் அறிஞர்கள் அங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி நடந்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர். பெரிய அளவுக்கு நகரமயமான நாகரிகமாக அது இருந்ததையும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீளுமா இந்தியா?

மவுரிய பேரரசு,மொகலாய பேரரசுகள் மூலமாக உயர்ந்து ஓங்கி ஆயிரம் காலத்துப்பயிராக இந்தியப் பொருளாதாரம் உலகில் முதல் இடத்தில் நிலைத்து நின்றுள்ளது. இங்கிலாந்து நாட்டுக்கு இந்தியா அடிமையான காலத்துக்குப் பிறகு இந்தியா தடுமாறி, தடம் மாறி, தள்ளாடி வருகிறது. இடையில் அவுரங்கசீப்பால் மீட்கப்பட்ட இந்தியாவின் உலகின் முதல் பொருளாதார வல்லரசு என்ற அந்தஸ்து அதற்குப்பிறகு வந்த எந்த ஆட்சியாளர்களாலும் இன்னமும் சாதிக்கப்படாமல் கிடக்கிறது.

மீண்டும் முதலிடத்தை அடைய, உலகின் மாறிய சூழலுக்கு ஏற்ப தன்னை இந்தியா தகவமைத்துக் கொள்ளவேண்டும். முதல் நடவடிக்கையாக தனது மனித வளத்தை திறன்மிக்கதாக அது மாற்றிக் கொள்ள வேண்டும். இந்திய சமூகம் கல்வியில் சிறந்ததாய் மாறுவதுதான் அதற்கான அடிப்படையானத் தேவை. அந்தக்கல்வியை அடித்தளமாக கொண்டுதான் நாட்டின் வளங்களை விஞ்ஞானரீதியாக பயன்படுத்துகிற திறமைக்கு மக்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள்.

ஆனால் எழுதப்படிக்க தெரியாதவர்கள் உலகிலேயே அதிகம் வாழும் நாடாக இன்னமும் இந்தியா நீடிக்கிறது. உலக வல்லரசாக இந்தியா மீண்டும் எழுவதை அது தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.