A+ A-

தொலைத்தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை குறைகிறது:சேவை முடக்கம், கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால்...

மும்பை:இந்தியாவில், தொலைபேசி, அலைபேசி ஆகியவற்றின் சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, 'ஸ்பெக்ட்ரம்' வழக்கில், பல நிறுவனங்களின் தொலைத்தொடர்பு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. புதிய உரிமத்திற்கான ஏலத் தொகை, மிக அதிகமாக உள்ளதாக கூறி, சில நிறுவனங்கள், ஏலத்தில் பங்கேற்கவில்லை. 




ஒரு சில நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை வர்த்தகத்தை விட்டு வெளியேறி, அதிக லாபமீட்டக் கூடிய துறைகளில் இறங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன.கட்டண உயர்வு:இதனால், சில தொலைத்தொடர்பு வட்டங்களில், குறிப்பிட்ட நிறுவனங்களின் சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இத்தகைய காரணங்களுடன், அலைபேசி கட்டண உயர்வும், தொலைத்தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை குறைய வழி 
வகுத்துள்ளது.

ஒரு பகுதியில், ஒவ்வொரு, 100 பேருக்கும் எத்தனை தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்பதன் அடிப்படையில், தொலைத்தொடர்பு அடர்த்தி அல்லது பயன்பாடு கணக்கிடப்படுகிறது.இந்த வகையில், கடந்த 2012ம் ஆண்டு, ஜூன் மாதம் முதல், நாட்டின் தொலைத்தொடர்பு பயன்பாடு, மாதந்தோறும் குறைந்து வருகிறது.
நடப்பாண்டு, பிப்ரவரி மாத நிலவரப்படி, ஒரு பகுதியில் உள்ள, 100 பேரில், சராசரியாக, 72.9 சதவீதம் பேர் தான் தொலைத்தொடர்பு சேவையை பெற்றுள்ளனர்.

இது, கடந்த 2012ம் ஆண்டு, ஜூன் மாதம், 79.6 சதவீதம் என்ற உச்சபட்ச அளவை எட்டியிருந்தது. அதாவது, 100 பேரில், 79 பேர், தொலைத்தொடர்பு சேவையை பெற்றிருந்தனர்.
அலைபேசி இணைப்புகள் குறைந்து வருவதற்கேற்ப, தொலைத்தொடர்பு பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.சென்ற ஆண்டு, ஜூன் மாத நிலவரப்படி, ஒரு பகுதியில், 100 பேருக்கு, 77 பேர் அலைபேசி இணைப்புகளை பெற்றிருந்தனர். இது, மாதந்தோறும் குறைந்து, டிசம்பரில், 71 ஆக சரிவடைந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 2.6 சதவீதத்தில் இருந்து, 2.5 சதவீதமாக குறைந்து உள்ளது.

லாபம்:இதனிடையே, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், லாபத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில், நீண்ட காலம் செயல்படாமல் உள்ள, 'ப்ரீ பெய்டு' இணைப்புகளை துண்டித்து வருகின்றன.இதனால், இந்நிறுவனங்களின், ஒரு சந்தாதாரர் அடிப்படையிலான சராசரி வருவாய் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு, டிசம்பர் நிலவரப்படி, 'ஜி.எஸ்.எம்' தொழில்நுட்பத்தில், அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின், ஒரு சந்தாதாரர் அடிப்படையிலான சராசரி வருவாய், 98 ரூபாயாக இருந்தது.
ŒராŒரி வருவா#:இதே காலத்தில், சி.டீ.எம்.ஏ., தொழில்நுட்பத்தில், அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின், ஒரு சந்தாதாரர் அடிப்படையிலான சராசரி வருவாய், 80 ரூபாய் என்ற அளவில் காணப்பட்டது.

இந்த வருவாய், கடந்த 2006ம் ஆண்டு, மார்ச் மாதம், முறையே, 366 ரூபாய் மற்றும் 256 ரூபாய் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள், கடந்த நான்கு மாதங்களில், அலைபேசி சேவைக் கட்டணங்களை உயர்த்தி விட்டன.குறைந்த கட்டணங்கள், கூடுதல் சேவைகள் என்ற நிலை மாறி விட்டது. கடந்த 2006ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை சந்தாதாரர்களின் எண்ணிக்கை, ஐந்து மடங்கு அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைத்தொடர்பு சேவைக் கட்டணம் அதிகரித்ததால், ஒரு நபர், அலைபேசியில் சராசரியாக பேசும் நிமிடங்களும் குறைந்து விட்டன. கடந்த 2008ம் ஆண்டு ஜூன் முதல், சென்ற 2012ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலத்தில், ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பத்திலான அலைபேசியில் பேசுவது, சராசரியாக, 505 நிமிடங்களில் இருந்து, 359 நிமிடங்களாக குறைந்து விட்டது.சி.டீ.எம்.ஏ வாயிலான, மாதாந்திர அலைபேசி பயன்பாடு, கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம், 550 நிமிடங்களாக இருந்தது. 

இது, சென்ற 2012ம் ஆண்டு, டிசம்பரில்,230 நிமிடங்களாக குறைந்து விட்டது.ஒருங்கிணைப்பு:ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களில், தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 100க்கு, 61 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.தொலைத்தொடர்பு ஒருங்கிணைப்பு வசதிகள் இல்லாத இடங்களில், தொலைத்தொடர்பு சந்தாதாரர்களை நிறுவனங்கள் சேர்க்க வேண்டும். 
அவ்வாறு செய்தால் மட்டுமே, மக்கள் தொகை அடிப்படையில், தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயரும் என, ஆய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.


நன்றி:தினமலர்

இந்தியாவில், தொலைபேசி, அலைபேசி ஆகியவற்றின் சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, 'ஸ்பெக்ட்ரம்' வழக்கில், பல நிறுவனங்களின் தொலைத்தொடர்பு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. புதிய உரிமத்திற்கான ஏலத் தொகை, மிக அதிகமாக உள்ளதாக கூறி, சில நிறுவனங்கள், ஏலத்தில் பங்கேற்கவில்லை.