A+ A-

கூகுள் வணிக யுக்தியை , ஃபேஸ்புக் சமூக வலைதளம் போல் மாற்றுகிறது...

கூகுள் நிறுவனம் தனது விளம்பர சேவையில், பயனர்களின் படம் மற்றும் பெயர்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் சமூக வலைதளம் கூகுள் ப்ளஸ். 
இதனை +1 என்று குறிப்பார்கள்...

ஒரு பயனர் இணையதளத்தில் விளம்பரமாக ஒரு பொருள் தோன்றும் போது, அதனை விருப்பமானதாகவோ, பகிர நினைத்தாலோ , +1 பொத்தானை சொடுக்கினால் அது பகிரப்படும்.

அப்படி பகிரும்போது, அந்த பயனரின் பெயர், படம் அந்த பொருளோடு இணைக்கப்பட்டு விடும்.

அந்த குறிப்பிட்ட பொருள், அந்த நபரின் இணைப்பில் உள்ள வேறு நபர்களின் கண்ணில் தென்பட்டால், அப்போது, முதல் நபரின் படம் மற்றும் பெயர் அங்கு தோன்றும்.

இதன் மூலம், 2-வது நபரால் அந்த பொருள் ஈர்க்கப்படும் என்று கூகுள் நம்புகிறது.

இது வணிக யுக்தியாக கருதப்படுகிறது.

இந்த வணிக யுக்தியை கையாளும் விதமாக தனது விதிமுறைகளில், பயனர்களின் தனியுரிமைகளை மாற்றம் செய்து, வரும் நவம்பர் 11-ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.


இது, பயனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், பயனர்களின் தனியுரிமையில் பாதிப்பில்லை என்றும், கூகுள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பயனர் விரும்பினால் மட்டுமே அவரின் தனிப்பட்ட விபரங்கள் பகிரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த வணிக யுக்தியை , ஃபேஸ்புக் சமூக வலைதளம் ஏற்கனவே, பயன்படுத்தி வருகிறது.

நன்றி:புதியதலைமுறை

கூகுள் நிறுவனம் தனது விளம்பர சேவையில், பயனர்களின் படம் மற்றும் பெயர்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் சமூக வலைதளம் கூகுள் ப்ளஸ். இதனை +1 என்று குறிப்பார்கள்...