A+ A-

விநாயகரின் உருவம் பொறித்த வெளிநாட்டு தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்

விநாயகரின் உருவம் பொறித்த வெளிநாட்டு தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்

இந்து மதம் பெரிதும் பரவியிருக்காத வெளிநாடுகளில் விநாயகரின் உருவம் பொறித்த தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியமான செய்திதான்...

விநாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இருந்துள்ளது. இப்போதும் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இந்துமத கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். நேபாளம், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகள் வெளியிட்ட தபால் தலையில் விநாயகர் உருவம் உள்ளது. இதில் லாவோஸ் என்பது, பர்மா, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடாகும். சில நாடுகளின் ரூபாய் நோட்டுக்களிலும் விநாயகர் இடம்பிடித்துள்ளார்.

விநாயகரின் உருவம் பொறித்த வெளிநாட்டு தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்



இது எப்படி சாத்தியம் என்று வரலாற்றை புரட்டிப்பார்க்கும் போதுதான் நமக்கு நம் தமிழ் மன்னர்களின் வீரவரலாறு தெரிகிறது.அந்த வரலற்ட்ரை பார்த்தபோது ராஜராஜசோழன், ராஜேந்திர சோழ மன்னர்களின் படையெடுப்புகளும், பிற்காலத்தில் வணிகத் தொடர்புகளுமே தெற்காசிய நாடுகளில் இந்து கலாச்சாரம் பரவக் காரணம்”

தாய்லாந்து நாட்டின் 10 பாட் நாணயத்தில் விநாயகர் உருவம் உள்ளது. அதேபோல, இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளிலும் விநாயகர் படம் உள்ளது. சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாகும்.

அங்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். இருப்பினும், அந்நாட்டில் இந்துக்கள் அதிகம் வாழ்கிற பாலி தீவில், செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கருதப்படுகிறார். எனவே, இந்தோனேசிய அரசு விநாயகர் உருவம் பதித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

வாபஸ் பெறப்பட்ட விநாயகர் நோட்டு!

இந்தோனேசியா உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்க்கும் மக்கள் அதிகம் கொண்டநாடு என்பதால், அங்கு விநாயகர் உருவத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பின்னாட்களில் அரசே அவற்றை திரும்பப் பெற்றுவிட்டது. எனவே, விநாயகர் படம் பொறித்த இந்தோனேசிய ரூபாய் நோட்டு அரிய பொக்கிஷமாகி விட்டது.


லாவோஸ் நாட்டில் விநாயகருக்கு மட்டுமின்றி சரஸ்வதி, பிரம்மா, நாககன்னிக்கும் தபால்தலை வெளியிடப் பட்டுள்ளது.

இந்து மதம் பெரிதும் பரவியிருக்காத வெளிநாடுகளில் விநாயகரின் உருவம் பொறித்த தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியமான செய்திதான்... நாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இருந்துள்ளது. இப்போதும் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இந்துமத கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். நேபாளம், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகள் வெளியிட்ட தபால் தலையில் விநாயகர் உருவம் உள்ளது. இதில் லாவோஸ் என்பது, பர்மா, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடாகும். சில நாடுகளின் ரூபாய் நோட்டுக்களிலும் விநாயகர் இடம்பிடித்துள்ளார்.