A+ A-

டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்துக்கு ரூ.3000 கோடி நஷ்டம் !!

twitter

அமெரிக்காவை சேர்ந்த இந்த டுவிட்டருக்கு மக்கள் செல்வாக்கு பெருமளவு குறைந்து வருகிறதாம். இது குறித்து அந்நிறுவனத்தின் 2013ம் ஆண்டுக்கான கடைசி காலாண்டு நிதி அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்தை போல, டுவிட்டரின் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன. எனவே, டுவிட்டர் வலைதளத்தை தற்போதைய நிலையை விட இன்னும் மேம்படுத்தினால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து மீள முடியும் என வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் ஆதரவு குறைவதால், டுவிட்டர் வலைதளத்துக்கு சுமார் ரூ.3,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் ரூ.500 கோடியாக இருந்த நஷ்டம், ஓராண்டு காலத்துக்கு ரூ.4100 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாட்டை ஆராயும் போரஸ்டர் நிறுவனத்தின் வல்லுநர் எலியாட் கூறுகையில், ‘டுவிட்டரில் அதிகநேரம் நீடிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், டுவிட்டரின் வர்த்தகம் நஷ்டத்தில் போகிறது. மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை டுவிட் செய்வதன் மூலம்தான் அந்நிறுவனத்துக்கு வருமானமே கிடைக்கிறது. ஆனால், டுவிட்டரை பார்வையிடுபவர்கள் ஒரு சில நிமிடங்களில் வெளியேறுவதால், விளம்பர நிறுவனங்கள் டுவிட்டரை ஒதுக்குகின்றன. 

மேலும், டுவிட்டர் பதிவுகளால் பல விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுகிறது. ஒருவர் தனது சர்ச்சையான பதிவு காரணமாக சமூகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார். இதனால் மற்றவர்கள் டுவிட்டரில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கிறார்கள். இதுவும் டுவிட்டரின் நஷ்டத்துக்கு ஒரு காரணம்’ என கூறியுள்ளார்.

மக்கள் ஆதரவு குறைவதால், டுவிட்டர் வலைதளத்துக்கு சுமார் ரூ.3,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் ரூ.500 கோடியாக இருந்த நஷ்டம், ஓராண்டு காலத்துக்கு ரூ.4100 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.