KPCB என்ற இணையதளத்தை நடத்துபவர்களில் ஒருவரும், இணைய வல்லுனருமான “மேரி மீகர்” என்பவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை முழுவதும் இணையத்தைப்பற்றியதும், பயனாளர்களை மதிப்பிடுவதுமாகும். இந்த அறிக்கையின் பெயர் “2012 KPCB இன்டர்நெட் ட்ரெண்ட்ஸ் இயர்-என்ட் அப்டேட்.” 88 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் சில முக்கிய தகவல்கள் இங்கே,

KPCB என்ற இணையதளத்தை நடத்துபவர்களில் ஒருவரும், இணைய வல்லுனருமான “மேரி மீகர்” என்பவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை முழுவதும் இணையத்தைப்பற்றியதும், பயனாளர்களை மதிப்பிடுவதுமாகும். இந்த அறிக்கையின் பெயர் “2012 KPCB இன்டர்நெட் ட்ரெண்ட்ஸ் இயர்-என்ட் அப்டேட்.”
88 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் சில முக்கிய தகவல்கள் இங்கே,

இந்தியாவில் 2008-2012 ஆகிய ஆண்டுகளில்தான் 8.8 கோடி இணையப் பயனாளர்கள் அதிகரித்து, தற்பொழுது இது 13.7 கோடியாக உள்ளது. ஏறக்குறைய இது 26 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் மக்கள் தொகைப்பெருக்க விகிதம் சுமார் 11 மட்டுமே.

சீனாவில் இந்த விகிதம் பல மடங்குகளாக உள்ளது. அங்கு 53.8 கோடி இணையப் பயனாளர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் 240 கோடி இணையப்பயனாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2012ன் கடைசி காலாண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 4.4 கோடி ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் வளர்ச்சி விகிதம் 52 சதவிகிதமாகும். சீனாவில் அதிகபட்சமாக 27 கோடி ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இருப்பதாகவும் அதன் வளர்ச்சி விகொதம் 50 சதவிகிதம் எனவும் இதே அறிக்கை குறிப்பிடுகிறது.

இதைப்போலவே கைப்பேசியில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் விகிதமும் பன்மடங்காயிறுப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

1.மொனாகோ [MONACO]

சராசரி ஆயுள் : 89.68 வருடங்கள்

மெடிட்டரேனியன் கடலோரம் இருப்பதாலும் , அவர்கள் உண்ணும் மெடிட்டரேனியன் கடலோர உணவு வகைகளும் அவர்களது வாழ்க்கை முறைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து , அவர்களது ஆயுளை நீட்டிக்க செய்கிறது

1.மொனாகோ [MONACO]



2.மக்காவு [MACAU]

சராசரி ஆயுள் : 84.43 வருடங்கள்

சூதாட்டத்தையும் , சுற்றுலா பயணிகளையும் நம்பி மட்டுமே இந்த நாடு தன்னுடைய சாம்ராஜ்யத்தை கட்டி கொண்டு உள்ளது. நாட்டின் மொத்த பொருளாதாரம் முழுவதும் இவற்றை நம்பி தான் உள்ளது , கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வருமானம் இவற்றின் மூலமே வருகின்றது

மக்காவு [MACAU]


3.ஜப்பான் [JAPAN]

சராசரி ஆயுள் : 83.61 வருடங்கள்

அரிசி , பசுமையான காய்கறிகள் மற்றும் மீன்கள் தான் ஜப்பானியர்களின் உணவில் பெரும் பங்கு வகிக்கின்றது . கொலை மற்றும் தற்கொலைகளின் விகிதம் இங்கு மிகவும் குறைவு .

ஜப்பான் [JAPAN]


4.சிங்கப்பூர் [SINGAPORE]

சராசரி ஆயுள் : 83.75 வருடங்கள்

சுத்தமான சுற்றுப்புறம் மற்றும் முறையான உணவு பழக்கமும் உள்ளதால் , இவ்வூரின் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர் .

சிங்கப்பூர் [SINGAPORE]


5.சான் மரினோ [SAN MARINO]

சராசரி ஆயுள் : 83.07 வருடங்கள்

இவ்வூர் இட்டாலியன் பெனின்சுலாவில் உள்ளது . உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று . அதிக தொழிலாளர்கள் இல்லாத நாடு என்பதால் , விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் அரிது .

சான் மரினோ [SAN MARINO]


ஒரு கரப்பான் பூச்சி, அதன் தலை இல்லாமல் ஒன்பது நாட்கள் வாழ முடியும்.
  • ஒரு கரப்பான் பூச்சிஅதன் தலை இல்லாமல் ஒன்பது நாட்கள் வாழ முடியும்.
  • நத்தையினால் மூன்று ஆண்டுகள் தூங்க முடியும்.
  • நெருப்புக்கோழியின் கண் அதன் மூளையை விட பெரியது.
  • பட்டாம்பூச்சிகள் தங்களது கால்களை கொண்டுசுவை அறியும். 
  • நீங்கள் ஒரு இருண்ட அறையில் ஒருதங்கமீன்[Gold Fish] வைத்து இருந்தால், அதுஇறுதியில் வெள்ளை நிறமாக  மாறிவிடும். 
  • சராசரியாக, மக்கள் இன்னும்அவர்கள்மரணத்தை  விட சிலந்திகளை கண்டு அஞ்சுகின்றனர்.
  • நட்சத்திர மீனிற்கு  மூளை இல்லை.
  • உடலின் வலிமையான தசை நாக்கு.   


சில பொது அறிவுத் தகவல்கள்
1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொல் 

"TYPEWRITER"


3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!



நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..) 

ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( …நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.)


தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.

இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.


செல்போனில் வரப்போகும் இந்தியத் தொலைக்காட்சி
ஆம்! இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் நிகழ்ச்சிகளை இன்னும் சில தினங்களில் செல்போனில் கூடப் பார்க்கலாமென அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தச் சேவை எதிர்வரும் 2013ஆம் ஆண்டு தொடங்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிரசார் பாரதி நிறுவனத்தின் உறுப்பினர் பிரிகேடியர் வி.ஏ.எம். ஹுசைன் வெளியிட்டுள்ளார். அவர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியின் சாராம்சம் இங்கே தரப்பட்டுள்ளது.

பிரசார் பாரதி என்ற இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் டி.டி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளும் பல நவீன மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு பல புதிய செய்திகளை உடனுக்குடன் நவீன தரத்தில் வெளியிடவிருப்பதாகவும் திரு.வி.ஏ.எம். ஹுசைன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இணையான செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை இனிமேல் தூர்தர்ஷனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அடித்தளமாக யூடியூப் மற்றும் செல்போன்களில் நிகழ்ச்சிகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.”

சில குழுக்களை அமைத்து பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விரைவில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டிலேயே அதிக வருவாய்பெரும் சில வானொலி நிலையங்கள் தமிழகத்தில் தான் உள்ளது. இதை நவீனப்படுத்துவதுடன் டிஜிட்டல் மயமாக்கப்படும். “டிஜிட்டல் ரேடியோ’ ஒலிபரப்புக்காக அதிக திறன் வாய்ந்த டிரான்ஸ்பாண்டர்கள் எனப்படும் நவீன சாதனங்கள் வாங்கப்பட உள்ளன. இதன் மூலம் எஃப்எம் வானொலிகளுக்கு இணையான தரத்தைப் பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளை “ஒளியும் ஒலியும்” செய்தாலே அது மாபெரும் வெற்றியும்பெரும். இதன் மூலம் அதிக வருவாய் மற்றும் பார்வையாளர்கள் கிடைக்கப்படுமென்பதே நமது கருத்து.


கூகுள் தயாரிக்கும் குரோம்புக் என்ற லேப்டாப்பை பள்ளிக் குழந்தைகளுக்காக குறைந்த விலையில் வெளிவிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை சுமார் ரூ.4500 இருக்கலாமெனவும் கூறப்படுகிறது.

இந்த குரோம்புக், அடிப்படையில் குறைந்த அளவிலான சிறப்பம்சம்களை மட்டுமே கொண்டிருக்கும். பள்ளிகளுக்கு மட்டும் குரோம்புக்கள் ரூ.4500க்கு கிடைக்கும். மற்றபடி இதன் சந்தை விலை மாறுபடும்.

படிப்பு சார்ந்த இந்தச் சிறப்பு சலுகை குரோம்புக் சீரிஸ் 5க்கு மட்டும் பொருந்தும். இதற்கான சந்தை விலை சுமார் ரூ.13,500 நிர்ணயிக்கப்பட்டிருக்கலாமென இணைய வல்லுனரொருவர் தெரிவித்துள்ளார். இந்த குரோம்புக்கள் சாம்சங் நிறுவனத்திடமிருந்து வரும் டிசம்பர் 21ஆம் தேதி வாங்கப்படுகிறது.
GOOGLE

MIT விரிவுரையாளர் திரு.நிக்கோலஸ் நெக்ரோபோன்ட் என்பவர். “ஒரு குழந்தைக்கு ஒரு லேப்டாப்” என்ற அறக்கட்டளையை நடத்திவருகிறார். இவருடைய அறக்கட்டளையின் இலட்சியங்களும் சரியாக நிறைவேற்ற முடியவில்லை. அதாவது, ஒரு குழந்தைக்கு ஒரு லேப்டாப் தரமுடியவில்லை என்கிறார் அவர். இவருடைய XO எனப்படும் லேப்டாப்கள் தற்பொழுது விலை ரூ.10,000க்கு விற்கப்படுகின்றன.

இவர் இன்னும் லேப்டாப்களின் விலையைக் குறைக்க பல முயற்ச்சிகளையும், உதவிகளையும் நாடிவருகிறார்.

சாதனங்கள் சார்ந்த வியாபாரச்சந்தையின் முக்கியப் புள்ளிகளான இன்டெல் கார்ப், மைக்ரோசாப்ட் கார்ப், HP மற்றும் டெல் Inc போன்றவையும் தங்கள் சாதங்களின் விலையைக் குறைத்தே விற்பனை செய்யவுள்ளன. உதாரணத்திற்கு நெட்புக்.

எப்படியோ விலைகுறைந்த மற்றும் தரம் நிறைந்த லேப்டாப்கள் மக்களுக்கு கிடைக்கப்பெற்றால் நல்லதே!

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.