மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!
                                                  

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.        உடைந்தால் என்ன? வேறு வாங்கிவிட்டால் போச்சு.

4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால் என்ன? அடுத்த பஸ் இருக்கு, இல்லையா?

5.        பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

6.     சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.      அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான்.அதையெல்லாம்
கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பொழுதுதான் உனக்கு நிம்மதி.

8.        இதெல்லாம் சிறிய விஷயம். இற்காகவா கவலைப்படுகிறது...

9.        கஷ்டம் தான் … ஆனால் முடியும்.

10.      நஷ்டம் தான் … ஆனால் மீண்டு வந்துவிடலாம்.

11.      இதில் விட்டால் மற்றொன்றில் எடுத்துவிட மாட்டேனா?

12.      விழுந்தால் என்ன? எழுந்திருக்க மாட்டேனா?

13.      விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

14.      உட்கார்ந்து கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப்  பார்.

15.      இவன் இல்லை என்றால் வேறு ஒருவன் இல்லையா?

16.      இந்த வழி இல்லை என்றால் வேற வழி இல்லியா?

17.      இப்பவும் முடியவில்லையா? சரி. மீண்டும் ஒரு முயற்ச்சி...

18.      இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசித்தால் வழி தெரியுமே.

19.      முடியுமா என்று நினைக்காதே.
முடியணும் என்று நினை.

20.      கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.

21.      அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

22.      விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதற்க்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.      திரும்பத் திரும்ப அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

24.      சும்மா யோசித்துக்கொண்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டென்று
வேலையை ஆரம்பி.

25.      ஆஹா, இவனும் அயோக்கியன் தானா?
சரி, சரி. இனிமேல் எல்லோரிடமும்  நான்கு மடங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்.

26.      உலகத்தில் யார் அடிபடாதவன்? யார் ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.      ஊரில் ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.      கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.      எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.      அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி
இல்லையா?

31.      அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே
போதும்.

32.      நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்தைக் கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,

    *வீழ்வது கேவலமல்ல*, *வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்*....

முயற்சியுடன் எழுந்திடுங்கள்!  உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள்.


*ஒரு குட்டி கதை* 

.winner, cup, prize, achievement, hand, success, businessman, business, competition, win, golden, rise, accounting, gesture, illustration, finger
அடர்ந்த காடு ஒன்று இருந்தது
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.

நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது . இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.

மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார் .
" இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி .

இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான். இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் . தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள் .

அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.

மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் . பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும்.

அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும் . இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும் , மீன்களும் போதுமானதாக இருக்கும். ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.

நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.

அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான் ,
" தலைவா , எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.

தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது . இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .

இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது. ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு. இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.

கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.
அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான்.

" உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.

" உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே . நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.

" கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே " என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அவன் சொன்னான் ,

" தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல . இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.

தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
" நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன் . நீயோ உன் அறிவாலும் , உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய் . *_நாட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார்._*

*கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள்.

அது பொருளாக இருந்தாலும்,வாழ்க்கையானாலும்,நேரமானாலும்.*.

         கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…!


அனைவரின் மனதிலும்...

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝🏻😄

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝🏻😄

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐

 சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🏻🌷

 அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰

என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐

இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰
கவலைப்படவில்லை.

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍🏻

எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,

மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰

அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.

‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🏻🤔🌷

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.

எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,

அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐

ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝🏻

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🏻🌷

இதை நினைக்கிறபோது,

நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏🏻😄👍🏻🙏🏻

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌🏻👍🏻நம்முடைய வாழ்க்கையின் தரத்தையும்
, மதிப்பையும் 🤔👌🏻🌷
உயர்த்துகிற அம்சங்கள்.

 தமிழா்கள் அனைவரும்  தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..!


1.தமிழ் வருடங்கள்(60)

2.அயணங்கள்(2)

3.ருதுக்கள்(6)

4.மாதங்கள்(12)

5.பக்ஷங்கள்(2)

6.திதிகள்(15)

7.வாஸரங்கள்(நாள்)(7)

8.நட்சத்திரங்கள்(27)

9.கிரகங்கள்(9)

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)

11.நவரத்தினங்கள்(9)

12.பூதங்கள்(5)

13.மஹா பதகங்கள்(5)

14.பேறுகள்(16)

15.புராணங்கள்(18)

16.இதிகாசங்கள்(3).

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

"தமிழ் வருடங்கள்"

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.

"அயணங்கள்"

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

"ருதுக்கள்"

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)

2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)

3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)

4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)

5.ஹேமந்தருது
(மார்கழி,தை)

6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

"மாதங்கள்"

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).

"பக்ஷங்கள்"

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.

"திதிக்கள்"

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி
 13.திரையோதசி 
14.சதுர்த்தசி
 15பெளர்ணமி(அ)அமாவாசை.

"வாஸரங்கள்"

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

"நட்சத்திரங்கள்"

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.

1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.

"கிரகங்கள்"

கிரகங்கள் ஒன்பது ஆகும்.

1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)

"இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்"

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு

"நவரத்தினங்கள்"

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

"பூதங்கள்"

பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
 நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

"மஹா பாதகங்கள்"

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.

"பெறுகள்"

பெறுகள் பதினாறு வகைப்படும்

1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.

"புராணங்கள்"

புராணங்கள் பதினெட்டு வகைப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 
3.பிரம்மவைவர்த்த புராணம்
 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 
16.மார்க்கண்டேய புராணம் 
17.பிரம்மாண்ட புராணம் 
18.பவிஷ்ய புராணம்.

"இதிகாசங்கள்"

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.

1.சிவரகசியம்
2.இராமாயணம் 
3.மஹாபாரதம்.

                                 வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய விஷயங்கள்


ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.

அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.

“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார்.

மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.

“இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றாள்.

கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

“இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டாள் மனைவி.

கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.

பையை மேலும் குலுக்கினார்.

கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.

“இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?
என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.

“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.

வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்.

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.

ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.

நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்...

நல்லதையே செய்வோம்... நல்லோராய் வாழ்வோம்...!!!

   புங்க மரம்


புங்கமரத்தை பார்த்தீங்கன்னா உடனே அதுக்கு கீழே போய் நில்லுங்க!
சொரியாசிஸ்சை குணப்படுத்தும் புங்க மரம்
சுத்தமான காற்றை கொடுக்க கூடியதும், தோல்நோய்களை
குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மூட்டு வலியை போக்கவல்லதும், உடலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய கூடியதும், பசியின்மை, ஈரல் நோய்களை போக்கும் தன்மை கொண்டதுமான புங்க மரத்தின் பயன்கள் பற்றி தெரியுமா. வீட்டின் முன்பு இருக்கக் கூடியது புங்க மரம். இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது.
நல்ல சுத்தமான காற்றை கொடுக்கவல்லது. வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது. புங்க விதைகளை பயன்படுத்தி மூட்டு வலி, தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை பொடித்து வைத்துக்கொள்ளவும். அரை ஸ்பூன் புங்க விதை பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இதை வடிகட்டி குடிக்கத்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. புங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்க கூடியது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. இதன் விதைகள் எண்ணெய் நிறைந்ததாக இருக்கிறது. இது ஆஸ்துமா, நெஞ்சக கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்க காய் சேர்த்து பயன்படுத்தலாம். புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சொரியாசிஸ்சுக்கான மருந்து தயாரிக்கலாம்.
புங்க எண்ணெய், பரங்கி பட்டை சூரணம் ஆகியவற்றை தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை பூசினால் சொரியாசிஸ் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். புங்கங் எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.புங்க இலையை பயன்படுத்தி உடல், தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க இலையை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டிய பின், துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவவும்.
தலையில் பொடுகினால் அரிப்பு இருந்தால் இதை தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும். புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது. அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது. புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும். ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது.
புங்க எண்ணெய்யை பயன்படுத்தி மூட்டு வலி, கால் வலி, கீல்வாதத்துக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதை மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் வலி சரியாகும். புங்க எண்ணெய், வாத நீரால் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும். மூட்டு வலிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சக சளி, இருமல் குறைகிறது.

தமிழ்க் கடவுள் முருகன்  சிறப்புகள்..!


ஓதிமலைமுருகன்.
சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது  ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது  .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து  முகங்களும்  , எட்டு  கரங்களும்  கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800  செங்குத்தான படிகளை  கொண்டது, மலையேற  சற்று சிரமமாகத்தான் இருக்கும்..  கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.

  🌼 புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..

🌼சுவாமிமலையில்  சிவனுக்கு பிரணவத்தின்  பொருளை  உணர்த்திய   முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை  உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.

🌼பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர்  ஒதிமலையில் முதலில்  முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில்  பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது .
ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை   செய்யப்பட்டதாகவும்  சொல்லப்படுகிறது ...

*போகர் தவம் செய்த பூதிக்காடு:*

🌼இம்மலையின் உச்சியில்  ஈசான திக்கிலிருந்து  பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு  பகுதி மட்டும் வெண்மை  நிறத்தில் காணப்படும்.. இது  பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர்  முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.
இங்கு மண்ணே  விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும்  "விபூதிக்காடு  - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று  அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில்  அமைத்து அதில் கல்பீடம்  வைக்கப்பட்டு உள்ளது ..

🍁இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து   உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர்.  இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.

🍁 பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட   மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது  .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்
சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே  அழைக்கப்
படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..

*ஓதிமலை குறித்த புராணச் செய்தி :*

🍁படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல்  நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே  படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

🍁 படைக்கும்  கடவுளான  பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து  உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”
எனப்பட்டது.

🍁முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய
ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.

 *ஓதி மலை அமைவிடம் :*

      சத்தியமங்கலத்தில் இருந்து  புளியம்பட்டி வரவேண்டும்.
புளியம்பட்டி-ல இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டி-ல இருந்து ஒதிமலை போக பஸ் வசதி  குறைவு..

🔴1. ஈரோட்டிலிருந்து - ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும் ..

🔴2. கோவையிலிருந்து -கோவை >  அன்னூர் > ஒதிமலை வரவேண்டும் .

🔴3.  மதுரையில் இருந்து மதுரை  -  பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி  > புளியம்பட்டி > ஓதி மலை வரவேண்டும்..

ஒருமுறை  சென்றுவாருங்கள் சித்தர்களின் அருளும் , முருகபெருமானின் பரிபூரண  கடாட்சியமும் ,அருமையான  அனுபவங்களையும்  பெறுவீர்கள் ..

*முருகபெருமான் அருள்புரியும்  திருத்தலங்கள் :*

1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன்  --  அவினாசி அருகில் உள்ள திருமுருகன்பூண்டியிலும்,

2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன்  --  பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,

3. நான்கு முகம் எட்டு கரங்களுடன்   திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்

4. மூன்று முகம் ஆறு கரங்களுடன்  --  கோபி, காசிபாளையம் குமரன்கரட்டிலும்,

5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன்  --  சென்னிமலையிலும்,

6. ஒரு முகம்  தண்டாபுதபாணியாக  --  பழனியிலும், மற்றும் அனேக
இடங்களில்  முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.

          1. ஆறுமுகம் கொண்ட கோலம் -திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக்  கொண்ட தலம் எனக் கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்திதோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

 2. ஐந்து முகம்கொண்ட திருக்கோலம் -போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்.

3. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான்-  திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும்
பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப்
பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக்
கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர்
நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

  4.  மூன்று முகத்திருக்கோலம் -  மூன்று முகமுருகனாக ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800 ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால் முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த  முகமாக நின்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில்முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன் சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.

   5..இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில்
செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே
இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும்அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகலகிரக பீடைகளும் உடனே விலகும்.

6.ஒரு முகங்கொண்ட முருகன் பழனி முதலான அனேக இடங்களில் தரிசிக்கலாம் .

          ,திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கோவை.கு.கருப்பசாமி.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
      அடியாா்கள் கூட்டம் பெருகுக!
ஆசை தீர கொடுப்பாா்-------
------ அலங்கல் விடைமேல் வருவாா்.
அருளாளா !! அண்டசராசரனே !!!
          திருச்சிற்றம்பலம்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.