1
இன்று உலக புலிகள் காப்பக தினம் ...

உலக புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

100 ஆண்டுகளுக்கு முன்னர் உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு 3200 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 3 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் தற்போது 1,706 புலிகள் உள்ளன. அடுத்ததாக, மலேசியாவில் 500 புலிகள் காணப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது



நிகழ்வுகள் இந்நாளில் 


ருமேனியா - தேசிய கீத நாள்

சர்வதேச புலிகள் காப்பக தினம்

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 


1014 - பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான்.

1030 - டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் சமரில் ஈடுபட்டு இறந்தான்.

1567 - முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1830 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.

1848 - அயர்லாந்தில் "டிப்பெரரி" என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.

1851 - 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1899 - முதலாவது ஹேக் ஒப்பந்தம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் கைச்சாத்திடப்பட்டது.

1900 - இத்தாலியில், முதலாம் உம்பேர்ட்டோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.

1907 - சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.

1921 - ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.

1944 - இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1948 - இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.

1957 - அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

1959 - ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது.

1967 - வியட்நாம் போர்: வடக்கு வியட்நாமியக் கரையில் ஃபொரெஸ்டல்" என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தீப்பிடித்ததில் 134 பேர் கொல்லப்பட்டனர்.

1967 - வெனிசுவேலா நாட்டின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.

1981 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.

1987 - ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சிய பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

1987 - இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

1987 - இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.

1999 - இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

2005 - ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1883 - முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி (இ. 1945)

1904 - ஜே. ஆர். டி. டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1993)

1905 - டாக் ஹமாஷெல்ட், ஐக்கிய நாடுகள் அவையின் 2வது பொதுச் செயலர் (இ. 1961)

இந்நாளில் மறைந்த பிரபலங்கள் 


1913 - டோபியாஸ் மைக்கல் ஆசர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1838)

1974 - கருமுத்து தியாகராஜன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)

1999 - நீலன் திருச்செல்வம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதி

2009 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920

2009 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (பி. 1954)


விவசாய சம்பந்தமான வானொலி, டிவி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்

பொதிகை தொலைக்காட்சி

பொன்விளையும் பூமி – காலை 6.00-6.30 மற்றும் மாலை 6.00-6.30

மக்கள் தொலைக்காட்சி

மலரும் பூமி – காலை 6.00-6.30 மற்றும் மாலை 6.00-6.30

வானொலி நிகழ்ச்சிகள்

சென்னை

720 kHz, 783 kHz, 1017 kHz, 4920 kHz, 7160 kHz, 101.4 MHz, 102.3 MHz

06:35 – 06:45 – பண்ணை அறிவிப்புகள்

06:45 – 07:00 – மண்ணும் மணமும் (கிராமப்புறப் பெண்ககாளுக்னது)

07:25 – 08:00 – வீடும் வயலும்

போன் எண் – 91 44 24985252

திருநெல்வேலி

1197 kHz

6.30-6.45 am – பண்ணை அறிவிப்புகள்

7.25-8.00 pm – உழவர் உலகம்

போன் எண் – 91 462 2560794-6

மதுரை

1269 kHz, 103.3 MHz

6.35-6.45 am ஒரு சொல் கேளீர் இந்த ஊர் செய்தி

7.25-8.00 pm மண்ணும் மணியும்

சனிக்கிழமையன்று : 6.45-7.00 am – பூந்தோட்டம் (கிராமப்புற பெண்களுக்கானது)

திருச்சி

936 kHz, 102.1 MHz

6.30-6.45 am – பண்ணை அறிவிப்புகள்

3.00 pm – வேளாண் அரங்கம்

7.25-8.00 pm – உழவர் உலகம்

விவசாய சம்பந்தமான வானொலி, டிவி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்

கோவை

999 kHz, 103.0 MHz

6.35 am to 6.45 pm – பண்ணை அறிவிப்புகள்

3.00 pm – உழவருக்கு ஒரு சொல்

6.45-7.25 pm – ஊர்புறத்திலே

7.25-8.00 pm – ஏரும் ஊரும்

விரைவில் கிஷன் 24/7 விவசாய தொலைக்காட்சி 

1
கரும் துளைகள் (Black holes) பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்:

இறுதிக் கட்டத்தில் வெண் துளையாக (white holes) வெடிக்குமாம்!

வானியல் விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராகவும் தேடத் தேட ஆச்சரியமூட்டும் தன்மைகளைக் கொண்டிருப்பதுமானவை பிரபஞ்ச வெளியில் அமைந்துள்ள கரும் துளைகள் (Black holes) ஆகும்.

பிரபஞ்சத்தின் சில பகுதிகளில் நம்மால் கணக்கிட முடியாத மிக வலிமையான ஈர்ப்பு விசையுடன் தொழிற்படும் event horizon எனும் நிகழ்வை ஏற்படுத்தும் கரும் துளைகளின் அபார ஈர்ப்பு விசையில் இருந்து மிக நுட்பமான ஒளி கூட தப்ப முடியாது என அறிவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

இப்படிப் பட்ட ஓர் இடத்தில் இருந்து கூட சில சில நுட்பமான கதிர்கள் வெளியாவதாகவும் இக்கதிர்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் குறித்த பகுதி ஒன்றில் கரும் துளைகள் உள்ளனவா அல்லது இல்லையா என எதிர்வு கூற முடியும் என்ற தனது மிகத் தனித்துவமான தத்துவத்தை இந்த நூற்றாண்டில் ஒருவர் கூறியிருந்தார். ஹாவ்கிங்க் கதிர்வீச்சு (Hawking radiation) என்று இவரது பெயரால் அறியப் படும் இக்கதிர்வீச்சுக்களைக் கண்டு பிடித்த அந்த விஞ்ஞானி தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வானியலாளரும் (cosmologists) பௌதிகத் தத்துவவியலாளருமான (theoretical physicst) ஸ்டீபன் ஹாவ்கிங் (Stephen Hawking) ஆவார். இவரது 'The brief hisotry of time' என்ற புத்தகம் உலகில் அதிகளவு விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கரும் துளைகள் தமது இறுதிக் கட்டத்தை அடையும் போது (இறக்கும் போது) என்னவாகும்? இதற்குப் பதிலாக இவற்றின் பாரிய ஈர்ப்பு விசை நேர் எதிராகி தான் அள்ளி விழுங்கிய அனைத்து சடப் பொருட்கள் மற்றும் அலைகளையும் உப்பித் தள்ளி வெடித்துச் சிதறும் என்று கூறும் ஈர்ப்பு ஊக குவாண்டம் கோட்பாட்டு விஞ்ஞானிகள் (speculative quantum theory of gravity scientists) இந்நிகழ்வை ஏற்படுத்தும் துளையை வெண்துளை (white hole) எனப் பெயரிட்டும் உள்ளனர்.

White hole என அறியப் படும் இத்தத்துவத்தின் படி அது முன்பு கரும் துளையாக இருந்த போது தனது ஈர்ப்பால் உள்வாங்கிய அனைத்து திணிவுடைய சடப் பொருட்கள், போட்டோன்கள் (Photon) மற்றும் ஏனைய கூறுகளை ஒரு கட்டத்தில் வெளித் தள்ளும் (expel) என ஊகிக்கப் படுவதால் உண்மையில் கரும் துளைகள் தாம் விழுங்கும் பதார்த்தங்களை முற்றாக அழிக்குமா அல்லது நிலைமாற்றம் செய்யுமா என்பதை முடிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பும் உள்ளது என வானியலாளர்கள் கூறுகின்றனர்.

நவீன வானவியலில் அதி திணிவு கரும் துணிக்கைகள் (super massive black holes) எனக் கருதப் படும் நமது சூரியனை விட மில்லியன் அல்லது பில்லியன் மடங்கு திணிவுடைய பாரிய கரும் துளைகள் ஓவ்வொரு அண்டத்தினதும் (Galaxy) மையத்தில் தொழிற்படுவதாகக் கருதப் படுகின்றன. அப்படியிருந்த போதும் பிரபஞ்சம் தோன்றிய புதிதில் உருவாகிய மிகச் சிறியளவான கரும் துளைகள் மடிந்து எதிர்த்திசையில் தோற்றம் பெற்ற அதிக சக்தியுடைய பின்புலக் கதிர்களையோ அல்லது கதிர் வீச்சையோ வெளித் தள்ளும் வெண் துளைகளை (white holes) இதுவரை மனித இனத்தால் அவதானிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அதி திணிவு கரும் துணிக்கைகள் பற்றியோ அல்லது வெண்துளை (இருப்பின்?) பற்றியோ ஆய்வு செய்வதற்கு நம்மிடம் இப்போது இருப்பதை விட மிக சக்தி வாய்ந்த எக்ஸ் ரே விண் தொலைக் காட்டிகள் நிச்சயம் தேவைப் படுகின்றன என விஞ்ஞானிகள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

1

வேலை தேடும் நண்பர்களுக்கு  பையனுள்ள இணையதளங்கள் !!

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !! வேலை தேடுவதற்கு உதவும் இணைய தளங்களை கொடுத்துள்ளோம் .இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்....

careerbuilder.co.in

clickjobs.com

placementpoint.com

careerpointplacement.com

glassdoor.co.in

findtherightjob.com

employmentguide.com

JOBSTREET.COM

JOBSDB.COM

AE.TIMESJOBS.COM

NAUKRIGULF.COM

NAUKRI.COM

GULFTALENT.COM

BAYAT.COM

MONSTER.COM

VELAI.NET

CAREESMA.COM

SHINE.COM

fresherslive.com

jobsahead.COM

BABAJOBS.COM 

WISDOM.COM 

indeed.co.in

sarkarinaukriblog.com

jobsindubai.com

jobswitch.in

jobs.oneindia.com

freshersworld.com

freejobalert.com

recruitmentnews.in

firstnaukri.com

freshnaukri.com

mysarkarinaukri.com

freshindiajobs.com

freshersopenings.in

freshersrecruitment.in

chennaifreshersjobs.com

அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள::

govtjobs.allindiajobs.in

timesjobs.com

naukri.com

tngovernmentjobs.in

sarkariexam.co.in

www.govtjobs.net.in

indgovtjobs.in

இந்த பதிவை வேலை தேடும் உங்கள்  நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள் ...

ஐரோப்பாவின் உயரமான மலை என்றழைக்கப்படும் இத்தாலியின் எட்னா எரிமலை

ஐரோப்பாவின் உயரமான மலை என்றழைக்கப்படும் இத்தாலியின் எட்னா எரிமலை .

இத்தாலி நாட்டின் சிசிலி தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மலையான எட்னா எரிமலை

ஐரோப்பாவிலேயே மிக தீவிரமாக உறுமிக்கொண்டிருக்கும் இந்த எட்னா எரிமலையின் முகத்துவாரம் ஆப்பிரிக்க புவி ஓடு மற்றும் யுரேசியா புவி ஓட்டிற்கும் இடையில் விலகும் விளிம்பின் மேல் 3350 மீட்டர் உயரத்தில் உள்ளது

ஜூன் 2013 இல் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

4000 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பொங்கிய இந்த எரிமலை


இதுவரை 90 முறை பொங்கியுள்ளது. 1669 ஆம் ஆண்டு பொங்கியதில் 20000 பேர் இறந்தனர்.

எட்னா எரிமலையை ஆராய்வதற்கு இங்கிலாந்திலிருந்து 16 பேர்  2000 ஆம் ஆண்டில் அங்கு சென்றார்கள்.

1992 ஆம் ஆண்டில் வெடித்துச் சிதறிய எட்னா எரிமலை 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் பகல் அன்று வெடித்தது. சிசிலியில் கடானியா வானூர்தி நிலையம் அருகில் இந்த எரிமலை உள்ளது. எனவே எரிமலை வெடித்தபோது வெளியேறிய புகை வானிலும் விமான நிலையத்திலும் பரவியதன் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டது.

எட்னா எரிமலையின் மண் வேளாண்மைக்கு ஏற்றதாக உள்ளது. எனவே மலையின் அடிவாரச் சரிவில் திராட்சைத் தோட்டங்களும் பிற பயிர்களும் வளர்க்கிறார்கள். எட்னா எரிமலையைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் அங்கு செல்கிறார்கள்.

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!! பேப்பர் கப் பற்றி ஒரு எச்சரிக்கை!!!

உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையானஅலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர்.

மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.

அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது. "டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம்.

ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது;அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.


ஜூன் 2000 -ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிற்கு இப்போட்டியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வுரிமைக்காக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ, பிரேசில் ஆகிய மற்ற நாடுகளும் போட்டியிட்டன.

2006 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2006 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் ஜெர்மனியில் ஜூன் 9 முதல் ஜூலை 9 2006 வரை நடைபெற்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 198 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் இத்தாலி பிரான்சினைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.

மேலும்  சில நிகழ்வுகள் இந்நாளில் 


ஆர்ஜென்டீனா - விடுதலை நாள் (1816)

455 - அவிட்டஸ் மேற்கு ரோமப் பேரரசின் மன்னனானான்.

1357 - புனித ரோமப் பேரரசர் நான்காம் சார்ல்ஸ் பிராகா நகரத்தில் சார்லஸ் பாலத்திற்கு அடித்தளம் நாட்டினார்.

1755 - பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் குடியேற்ற துணை இராணுவக் குழு பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1790 - பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற மோதலில் சுவீடனின் கடற்படயினர் ரஷ்யக் கப்பல்களை பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றினர்.

1810 - ஒல்லாந்து நாட்டை நெப்போலியன் தனது பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான்.

1816 - ஆர்ஜென்டீனா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஹட்சன் துறைமுகம் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது.

1868 - அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.

1900 - ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொதுநலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.

1903 - யாழ்ப்பாணத்தில் இந்து வாலிபர் அமைப்பு (YMHA) உருவாக்கப்பட்டது.

1918 - டென்னசியில் நாஷ்வில் என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 101 பேர் கொல்லப்பட்டு 171 பேர் படுகாயமடைந்தனர்.

1943 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தனர்.

1948 - பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.

1982 - ஐக்கிய அமெரிக்க போயிங் விமான லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 146 பேரும் தரையில் இருந்த 8 பேரும் கொல்லப்பட்டனர்.

1991 - 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1995 - யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

1995 - யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2002 - ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.

2006 - சைபீரியாவில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - 2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

2006 - அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.

இந்நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் 


1930 - கே. பாலச்சந்தர், தமிழ் திரைப்பட இயக்குநர்

1956 - டொம் ஹாங்க்ஸ், அமெரிக்க ஹாலிவுட் நடிகர்

இந்நாளில் மறைந்த பிரபலங்கள் 


2009 - சி. ஆர். கண்ணன், தமிழக எழுத்தாளர்

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.