A+ A-

அமெரிக்காவின் என்எஸ்ஏ அமைப்பு கூகுள், யாஹூ மின்னஞ்சல்களை திருடியது அம்பலமாகியுள்ளது..

google,yahoo mail hacked
google
கூகுள், யாஹூ ஆகியவற்றின் தகவல் மையங்களில் இருந்து அமெரிக்காவின் என்எஸ்ஏ அமைப்பு மின்னஞ்சல்களை திருடியது அம்பலமாகியுள்ளது. எட்வர்ட் ஸ்னோடென் அளித்த ஆவணங்களில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் இது குறித்து கூகுள் நிறுவனம் கடும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது. இது குறித்து தங்கள் நிறுவனத்திற்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ள கூகுள் நிறுவனம், தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனங்களின் தகவல் சேமிக்கப்படும் இடங்களை நேரடியாக அணுகாமல், கண்ணாடி இழை கேபிள்கள் வழியாக தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது இடைமறித்து மின்னஞ்சல்கள் திருடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்கு வெளியே இத்தகவல் திருட்டு நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் பிரிட்டனின் உளவு அமைப்பான ஜி சி ஹெச் க்யூ (GCHQ) வுக்கும் பங்கு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நன்றி:புதிய தலைமுறை

இந்த விவகாரத்தில் பிரிட்டனின் உளவு கூகுள் நிறுவனம் கடும் அதிர்ச்சி...கூகுள், யாஹூ ஆகியவற்றின் மின்னஞ்சல்களை திருட்டு ..பிரிட்டனின் உளவு அமைப்பான ஜி சி ஹெச் க்யூ (GCHQ) வுக்கும் பங்கு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.