A+ A-

அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு...!

                                          வாஜ்பாயின் வாழ்க்கை  வரலாறு

அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை  வரலாறு...!

வாஜ்பாய் அவர்கள் இந்திய பிரதமராக 1996 ஆம் ஆண்டு மே 16 முதல் 31ஆம் தேதி வரையும் பின்னர் மறுபடி 1998, மார்ச் 19 முதல் 2004, மே 13ஆம் தேதி வரையும் பதவி வகித்தவர். 1999 அக்டோபரில் நடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப்பிறகு பிரதமராக பதவியேற்றதன் மூலம், ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு பிரதமராக தொடர்ந்து மூன்று மக்களவைகளில் பதவி வகித்த முதல் பிரதமராவார். திருமதி.இந்திரா காந்திக்கு பிறகு தன் தலைமையிலான கட்சியை தேர்தல்களில் வெற்றி பெற வைத்த முதல் பிரதமரும் ஆவார்.
1924, டிசம்பர் 25ஆம் தேதியன்று, ஸ்ரீ கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கும் ஸ்ரீமதி கிருஷ்ண தேவி அம்மையாருக்கும் மகனாக பிறந்த வாஜ்பா் அவர்கள், சுமார் 40 ஆண்டு கால பாராளுமன்ற அனுபவம் உடையவர். 1957 லிருந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், 5வது, 6வது, 7வது, 10வது, 11வது, 12வது மற்றும் 13வது மக்களவைக்கும் 1962 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ல் உ.பியின் லக்னோவிலிருந்து தொடர்ச்சியாக 5 முறை பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தார்.
உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி போன்று 4 வெவ்வேறு மாநிலங்களிலிருந்து, வெவ்வேறு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாராளுமன்றவாதியாகவும் திகழ்கிறார். பிரதமராக அவர் ஆற்றிய சீரிய பணி, பதவியை விட்டுச்சென்று 10 வருடங்கள் ஆனாலும் இன்றளவும் நினவுகூரத்தக்க வகையிலும் போற்றத்தக்க வகையிலும் அடல் பிஹாரி வாஜ்பா் அமைந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், போக்ரான் அணுகுண்டு சோதனையிலும், நுட்பமான, அறிவார்ந்த பொருளாதார கொள்கைகளிலும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் தங்க நாற்கர திட்டங்கள் போன்ற பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அவர் அமைத்த அடித்தளம் நீண்டகால ஸ்திரமான வளர்ச்சிக்கு அடிகோலியது. ஒரு சில பிரதமர்களே சமூகத்தில் தாக்கம் உண்டாக்கும் இத்தகைய திட்டங்களை செய்துள்ளனர்.
குவாலியரிலுள்ள விக்டோரியா கல்லூரியில் (தற்போது லக்ஷ்மிபாய் கல்லூரி) படித்து, கான்பூரில் (உ.பி) டிஏவி கல்லூரியில் முதுகலை (அரசியல் அறிவியல்) 

பட்டம் பெற்ற வாஜ்பாய் அவர்கள் சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்று 1942ல் சிறைக்கு சென்றுள்ளார். 1975-77 க்கு இடையில் எமெர்ஜென்சி காலத்தில் தடுப்புக்காவலில் அவரை வைத்திருந்தனர்.
வாஜ்பாய், இலக்கியம், கலை, அறிவியல் துறைகளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். ராஷ்ட்ர தர்மம் (ஹிந்தி மாதப்பத்திரிக்கை), பஞ்சஜன்ய (ஹிந்தி வார பத்திரிக்கை) மற்றும் தினப்பத்திரிக்கைகளான ஸ்வதேஷ், வீர் அர்ஜூன் போன்ற பத்திரிக்கைகளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். 'மேரி சன்சதிய யாத்ர' (4
தொகுதிகள்), 'மேரி இக்கியவான் கவிதாயென்', 'சங்கல்ப் கால்', 'சக்தி-ஸே-சாந்தி', 'பாராளுமன்றத்தில் நாற்பதாண்டுகள்' (பேச்சுகள் அடங்கிய 3 தொகுதிகள்), '1957-95, மக்களவையில் அடல்ஜி' (பேச்சுக்களின் தொகுப்பு), 'ம்ரித்யு ய ஹத்ய', 'அமர் பலிதன்', 'கைதி கவிராஜ் கி குந்தலியன்' (எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்தபோது எழுதிய கவிதைகளின் தொகுப்பு), இந்திய வெளியுறவுக்கொள்கையின் புதிய பரிணாமங்கள்' (1977-79 காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது பேசிய பேச்சுக்களின் தொகுப்பு), 'ஜன சங்கமும் முஸ்லிம்களும்', 'பாராளுமன்றத்தில் 30 வருடங்கள்' (ஹிந்தி - 1957-1992 பேச்சுகள்- 3 தொகுதிகள்) மற்றும் 'அமர் ஆக் ஹை' (1994 கவிதைத்தொகுப்பு) போன்ற படைப்புக்கள் அவருடையது.
பல்வேறு சமூக கலாச்சார நடவடிக்கைகளிலும் வாஜ்பாயீ பங்குபெற்றுள்ளார். 1961லிருந்து தேசிய ஒருமைப்பாட்டு கௌன்சிலில் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் அவர் பங்கு வகித்தவை:
(i) தலைவர், அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் துணை ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் (1965-70);
(ii) பண்டித் தீன்தயாள் உபாத்யாய ஸ்மரக் சமிதி (1968-84);
(iii) தீன்தயாள் தம், ஃபரா, மதுரா, உ.பி; மற்றும்
(iv) ஜன்மபூமி ஸ்மரக் சமிதி (1969 முதல்).


நிறுவனர் - உறுப்பினர், அப்போதைய ஜனசங்கம் (1951),
தலைவர், பாராளுமன்ற ஜன சங்கக்கட்சி (1955-77),
தலைவர், பாரதிய ஜனசங்கம் (1968-73),
நிறுவனர் - உறுப்பினர், ஜனதா கட்சி (1977-80),
தலைவர், பாஜக (1980-86) மற்றும்
தலைவர், பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சி (1980-84, 1986, 1993-96).
11வது மக்களவையின் காலம் முழுதும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அதற்கும் முன் மொரார்ஜி தேசாயின் அரசில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக, மார்ச் 24, 1977 முதல் ஜூலை 28, 1979 வரை பதவி வகித்தார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலாக மதிக்கப்படும் ராஜதந்திரிகள் வரிசையில் பண்டித ஜவஹர்லால் நேருவிற்குப்பின், வாஜ்பாயீ அவர்கள் உள்ளார், அவர் 1998-99 வரை பிரதமர் பதவியில் இருந்த காலமானது, ' ஒரு வருட வீரத்தின் நம்பிக்கை' என உருவகப்படுத்தப்படுகிறது. அந்த பதவிக்காலத்தில்தான், போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு (மே, 1998), இதில் வெற்றிகண்ட வெகு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்தது. பிப்ரவரி 1999-ல் பாகிஸ்தானுக்கு பஸ் பயணம் மேற்கொண்டதன் மூலம், துணைக்கண்டத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் பிரச்னைகளை தீர்க்கும் முயற்சியில், புதிய சகாப்தம் படைத்ததாக பரவலாக வரவேற்கப்பட்டது. இந்தியாவின் இந்த நேர்மை உலக சமுதாயத்தின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், நட்புறவுக்கு நாம் விடுத்த அறைகூவல், கார்கில் ஊடுருவலில் பொய்த்துப் போனபோது, சூழ்நிலையை விவேகமாக கையாண்டதால், ஊடுருவல்காரர்கள் இந்திய மண்ணிலிருந்து விரட்டப்பட்ட போது வாஜ்பாயீ அவர்கள் வாழ்த்தப்பட்டார்.
வாஜ்பாயீ அவர்களின் 1998-99 பதவிக்காலத்தில், உலக அளவிலான பொருளாதார தேக்கத்திலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் GDP) இந்தியா 5.8% வளர்ச்சி அடைந்தது (இது முந்தைய ஆண்டுக்கும் அதிகம்). மேலும் அக்காலத்தில், அதிகரித்த வேளாண்மை உற்பத்தி மற்றும் அதிகரித்த அந்நிய செலாவணி கையிருப்பு போன்றவை, மக்களின் தேவைக்கேற்ப தொலைநோக்கு பொருளாதாரத்தை அமல்படுத்தியதை தெளிவாக்குகிறது. "நாம் வேகமாக வளர வேண்டும். நமக்கு வேறு வழி இல்லை", என்பதுதான் வாஜ்பாயீ அவர்களின், குறிப்பாக கிராமப்புற ஏழைகளின் பொருளாதார முன்னேற்றம் குறித்த மந்திரச்சொல்லாக இருந்தது. கிராமப்பொருளாதாரத்தை பலப்படுத்துவதிலும், வலுவான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், புதுப்பிக்கப்பட்ட மனிதவள மேம்பாட்டு திட்டங்களிலும், அவருடைய அரசு எடுத்த தைரியமான நடவடிக்கைகள், வலுவான சுய சார்புள்ள தேசத்தை உருவாக்கி, 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவை பொருளாதார சக்தியாக்குவதிலும், அடுத்த ஆயிரமாண்டுகளுக்கான சவால்களை சந்திக்கும் விதமாகவும், அவருடய அரசு, அர்ப்பணிப்புடன் செயல்பட்டது புலனாகிறது. 52வது சுதந்திர தின விழாவில், டெல்லி செங்கோட்டையிலிருந்து பேசும்போது அவர் இப்படி குறிப்பிட்டார்: "இந்தியா குறித்து எனக்கொரு பார்வை இருக்கிறது: பசி, பயமற்ற எழுத்தறிவின்மை இல்லாத இந்தியாதான் தேவை"
பாராளுமன்றத்தின் பல நிலைக்குழுக்களிலும் அவர் பணிய்யற்றியுள்ளார்.
அரசுறுதிக்குழு தலைவராகவும் (1966-67); பொது கணக்கு குழுவின் தலைவராகவும் (1967-70); பொது நோக்கங்கள் குழுவின் உறுப்பினராகவும் (1986); பாராளுமன்றக்குழுவின் உறுப்பினர் மற்றும் ராஜ்ய சபை வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் (1988-90); ராஜ்ய சபை மனுக்கள் குழுவின் தலைவாராகவும் (1990-91); பொது கணக்குக்குழு தலைவராகவும் (1991-93); வெளியுறவுத்துறை நிலைக்குழுவின் தலைவராகவும் (1993-96) பொறுப்பு வகித்துள்ளார்.

பரவலான பயணங்களால் வாஜ்பா் அவர்களுக்கு வெளியுறவுத்துறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மேம்பாடு, மகளிர் மற்றும் சிறார் நலவாழ்வு போன்ற துறைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. வெளிநாட்டுப்பயணங்களும் மேற்கொண்டுள்ளார். அவை-
பாராளுமன்ற நல்லெண்ண குழுத்தலைவராக கிழக்கு ஆப்ரிக்கா, 1965; பாராளுமன்றக்குழு ஆஸ்திரேலியா, 1967; ஐரோப்பிய பாராளுமன்றம், 1983; கனடா, 1987; கனடாவில் நடந்த காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் இந்திய பிரதிநிதி, 1966 மற்றும் 1994; ஜாம்பியா,1980; ஐல் ஆஃப் மான், 1984; பாராளுமன்றங்களுக்கு இடையேயான அமைப்பின் கூட்டத்துக்கு பிரதிநிதியாக, ஜப்பான்,1974; ஸ்ரீலங்கா,1975; சுவிட்ஸர்லேண்ட்,1984; ஐ.நா.போது சபையின் இந்திய பிரதிநிதி, 1988,1990,1991,1992,1993 மற்றும் 1994; மனித உரிமைகள் கமிஷனின் இந்திய பிரதிநிதிகளின் தலைவர், ஜெனீவா,1993.

தேசத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கான அங்கீகாரமாக வாஜ்பா்க்கு பத்மா விபூஷன் பட்டம் 1992ஆம் ஆண்டில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு, கான்பூர் பல்கலை தத்துவயிலாளராக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 1994ஆம் ஆண்டு, சிறந்த பாராளுமன்றவாதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு லோக்மான்ய திலக் புரஷ்கர் விருதும் பாரத் ரத்னா பண்டித் கோவிந்த் வல்லப் பந்த் விருதும் அவருக்கு வழங்கப்பட்டன.

நாவன்மை மிக்க பேச்சாளர். கவிதையின் மேல் அவருக்கிருந்த காதல் புகழ்பெற்றதும் மதிப்பு மிக்கதுமானதாகும். அவர் மிகச்சிறந்த புத்தக விரும்பியும் கூட. அவருக்கு இந்திய இசையும் நடனமும் பிடிக்கும்.

வகித்த பதவிகள்:
1951 - நிறுவனர் - உறுப்பினர், பாரதிய ஜனசங்கம்
1957 - 2வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1957-77 - தலைவர், பாராளுமன்ற ஜன சங்கக்கட்சி
1962 - மாநிலங்களவை உறுப்பினர்
1966-67 - தலைவர், அரசு உறுதிக்குழு
1967 - 2ஆம் முறையாக 4வது மக்களவைக்கு.
1967-70 - தலைவர், பொது கணக்குக்குழு'
1968-73 - தலைவர், பாரதிய ஜனசங்கம்
1971 - 3வது முறையாக 5வது மக்களவைக்கு.
1977 - 4வது முறையாக 6வது மக்களவைக்கு.
1977-79 - மத்திய காபினட் அமைச்சர், வெளியுறவுத்துறை
1977-80 - நிறுவனர் - உறுப்பினர், ஜனதா கட்சி
1980 - 5வது முறையாக 7வது மக்களவைக்கு.
1980-86- தலைவர், பாஜக
1980-84, 1986 and 1993-96 - தலைவர், பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சி
1986 - உறுப்பினர், பொது நோக்கங்கள் குழு
1988-90 - உறுப்பினர், பாராளுமன்றக்குழு மற்றும் உறுப்பினர், ராஜ்ய சபை வணிக ஆலோசனைக்குழு
1990-91- தலைவர், மனுக்கள் குழு
1991- 6வது முறையாக 10வது மக்களவைக்கு.
1991-93 - தலைவர், பொது கணக்குக்குழு'
1993-96 - தலைவர், வெளியுறவுத்துறை நிலைக்குழு, தலைவர், மக்களவை எதிர்க்கட்சி
1996 - 7வது முறையாக 11வது மக்களவைக்கு.
16 May 1996 - 31 May 1996 - இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை மற்றும் பின்வரும் துறைகள் / அமைச்சகங்களின் பொறுப்பையும் நிர்வகித்தார் -
ரசாயனம் மற்றும் உரங்கள், குடிமைப்பொருள்கள் வழங்கல், நுகர்வோர் நலன் மற்றும் பொது வழங்கல், நிலக்கரி, வணிகம், தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனம், உணவு பதப்படுத்தல், மனிதவள மேம்பாடு, தொழிலாளர் நலன், சுரங்கம், மரபுசாரா எரிசக்தி, வேலைவாய்ப்பு, பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் பென்ஷன், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு, திட்டம் மற்றும் அமலாக்கம், மின்சக்தி, ரயில்வே, கிராமப்புறம் மற்றும் வேலைவாய்ப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எக்கு, சாலைப்போக்குவரத்து, ஜவுளி, நீர்வளம், அணுசக்தி, மின்னணு, ஜம்மு காஷ்மீர், கடல்சார் மேம்பாடு, விண்வெளி மற்றும் இன்னபிற வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.
1996-97 - எதிர்க்கட்சித்தலைவர், மக்களவை
1997-98 - தலைவர், வெளியுறவுக்குழு
1998 - 8வது முறையாக 12வது மக்களவைக்கு.
1998-99 - இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.
1999- 9வது முறையாக 13வது மக்களவைக்கு
13 அக்.1999 to 13 மே 2004- இந்திய பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.

924, டிசம்பர் 25ஆம் தேதியன்று, ஸ்ரீ கிருஷ்ண பிஹாரி வாஜ்பாயீ அவர்களுக்கும் ஸ்ரீமதி கிருஷ்ண தேவி அம்மையாருக்கும் மகனாக பிறந்த வாஜ்பாயீ அவர்கள், சுமார் 40 ஆண்டு கால பாராளுமன்ற அனுபவம் உடையவர். 1957 லிருந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், 5வது, 6வது, 7வது, 10வது, 11வது, 12வது மற்றும் 13வது மக்களவைக்கும் 1962 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ல் உ.பியின் லக்னோவிலிருந்து தொடர்ச்சியாக 5 முறை பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தார்.