comedy

MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்...

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது....

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது

காமெடி



பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்... அவரிடம் கேட்டான்…

MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்...

MBA : நீங்க உள்ளே வந்த உடனே ,அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது..

அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்...
MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..!

அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்குதான் தம்பி. நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...!


Pulpit Rock

அந்த இடத்தைப் பார்த்தால் அம்மாடியோவ் என்ன ஒரு ஆழம் என்று ஒருகணம் தலை விறைத்துப் போய் நிற்பீர்கள்.

அந்த இடம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும்.

ஆம், இது தான் உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம். சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் இந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லை.

Pulpit Rock


ஆபத்தை எதிர்நோக்கும் தன்மை உள்ள சுற்றுலாப் பயணிகளே
இந்த ஆபத்தான இடத்தை நோக்கி போகலாம்.

தற்செயலாக கால் இடறி விழுந்தால் 1,982 அடி அதலபாதாளத்தில்
விழ வேண்டும்.

Pulpit Rock


நார்வேயில் அமைந்துள்ள Pulpit Rock என்று அழைக்கப்படும் இந்த பிரதேசம் வருடம்தோறும் ஆயிரக்கணக்கான த்ரில்லான சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்றது.

Pulpit Rock


அபாயகரமான பாறையின் விளிம்பில் இருந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை அங்கு வரும் த்ரில்லான சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள்.
விளிம்பில் தலை வைத்துப் படுத்து எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று உதார் விடுபவர்களும் அங்கு வருகிறார்களாம்…

எங்கே நீங்களும் அந்த காட்சியைப் பார்க்கப் போகின்றீர்களா?
கவனம், தலையைப் பிடித்துக் கொண்டு பாருங்கள்.

அமெரிக்காவுக்கு எப்பவுமே தான் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கு இயற்கையும் கூட விதிவிலக்கு இல்லை.

மிஸோரி மிஸி- ஸிபி

உலகின் மிக நீளமான நதி என்றால் அது எகிப்தில் ஓடும் நைல் நதிதான்.

இதன்நீளம் 4 ஆயிரத்து 160 மைல்கள்.

அமெரிக்காவால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

உலகிலேயே நீளமான நதி தங்கள் நாட்டில் ஓடும் மிஸோரி மிஸி- ஸிபி நதிதான் என்று அடம்பிடித்தது.

இதன் நீளம் 4 ஆயிரத்து 945 மைல்கள் என்று கூறியது.

அதன் கூற்று உண்மையாக இருந்தாலும் புவியியல் வல்லுனர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

நைல் என்பது ஒரே நதி.

ஆனால் அமெரிக்காவில் ஓடும் மிஸோரி, மிஸிஸிபி நதிகள் தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளில் இருந்து தோன்றுபவை.

மிஸோரி நதி 2 ஆயிரத்து 475 மைல் நீளமும், மிஸிஸிபி நதி 2 ஆயிரத்து 470 மைல் நீளமும் கொண்டவையாக இருந்தன.

இதனால் தான் புவியியல் வல்லுனர்கள் இந்தக் கூற்றை ஏற்கவில்லை.


இதேபோல்தான் நயாகரா விஷயத்திலும் நடந்தது.

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் உள்ள ருவைரா நீர்வீழ்ச்சி தான் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி. இங்கு ஒரு வினாடிக்கு 2 ஆயிரத்து 900 காலன் நீர் விழுகிறது.

ஆனால் நயாகராவில் ஒரு விநாடிக்கு ஆயிரத்து 300 காலன் நீர் தான் விழுகிறது.

உயரத்தை கணக்கெடுத்தாலும் நயாகரா கிடையாது.


வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான் மிக அதிக உயரமாக 2 ஆயிரத்து 648 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.


அகலமான நீர்வீழ்ச்சி என்று பார்த்தால் அதுவும் இல்லை.

லாவோஸ் நாட்டில் உள்ள கோனே நீர்வீழ்ச்சி தான் அகலமான நீர் வீழ்ச்சி.

இப்படி உயரத்தில், நீளத்தில், அகலத்தில், கொள்ளளவில் என்று எந்த ஒரு அளவீடிலும் நயாகராவுக்கு முதலிடம் இல்லை தான்.


ஆனாலும் நீர்வீழ்ச்சி என்ற உடன் அனைவரின் மனக் கண்முன் தோன்றி மகிழ்விப்பது நயாகரா நீர்வீழ்ச்சி தான்.

அதிலும் அதன் இருப்பிடத்திலும் அது பிற நீர்வீழ்ச்சிகளை பின்னுக்குத் தள்ளி விடுகிறது.

எப்படியோ இந்த விஷயத்தில் அமெரிக்கா நினைத்தது போல் நயாகரா முதன்மையான நீர்வீழ்ச்சியாகவே இருக்கிறது.

தெனாலிராமன்  புரோகிதர்களுக்கு சூடு போட்ட கதை !!

மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு அவருடைய அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம். அவருடைய அம்மாவுக்கு வயதாகிவிட்டது. படுத்த படுக்கையாக இருந்தார்.

இனிமேல் அவர் பிழைப்பது கஷ்டம் என்பது மன்னருக்குத் தெரிந்துவிட்டது. அவர் தன் அம்மாவிடம் “உங்களுக்கு வாய்க்கு ருசியாக சாப்பிட என்ன வேணும் சொல்லுங்கள். நீங்கள் ஆசைப்படுவதை வாங்கித் தருகிறேன்” என்று கேட்டார்.

அவருடைய அம்மா, “எனக்கு மாம்பழம் சாப்பிடணும் போல இருக்கு” என்றார்.

அது மாம்பழ சீசன் இல்லை. ஆனால் எப்படியாவது மாம்பழம் வாங்கி வந்து தர வேண்டும் என்று மன்னர் விரும்பினார். அம்மாவின் கடைசி ஆசை அல்லவா?

தன்னுடைய வேலையாட்களை அனுப்பினார். “எங்கேயாவது போய் எப்படியாவது மாம்பழத்தை வாங்கி வாருங்கள்” என்று உத்தரவு போட்டார்.

மாம்பழம் வந்தது. ஆனால் அதற்குள் அவர் அம்மா இறந்துவிட்டார்.

ராஜாவுக்கு ஒரே துக்கம். மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற அம்மாவின் கடைசி ஆசையைகூட நிறைவேற்ற முடியவில்லையே என்று வருத்தம். அம்மாவுடைய ஆத்மா சாந்தி அடையாதோ என்று பயந்தார். இதற்கு என்ன செய்யலாம் என்று புரோகிதர்களிடம் கேட்டார்.

புரோகிதர்களுக்குப் பேராசை. “உங்க அம்மா மாம்பழம் சாப்பிடாம இறந்ததால், இதுக்கு பரிகாரம் பண்ணணும்” என்றார்கள்.

என்ன பரிகாரம்?

“தங்கத்தால் ஆன 108 மாம்பழங்களை 108 புரோகிதர்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அம்மாவின் ஆத்மா சாந்தியடையும். இதுதான் பரிகாரம்” என்றார்கள் புரோகிதர்கள்.

ராஜாவும் அவர்கள் சொன்ன மாதிரியே பரிகாரம் செய்து புரோகிதர்களை மகிழ்வித்தார்.

தெனாலிராமன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் புரோகிதர்கள் ராஜாவை ஏமாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.

தெனாலிராமன் அந்தப் புரோகிதர்களிடம் போய், “என் அம்மாவுக்குத் திதி வருது. எனக்கும் பரிகாரம் பண்ணணும். நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க” என்றார்.

புரோகிதர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. நல்ல வருமானம் கிடைக்கும் என்று கிளம்பினார்கள்.

தெனாலிராமன் அவர்களை வரவேற்று உபசரித்தார். பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு புரோகிதராகப் பூஜை அறைக்கு வரச் சொன்னார். அங்கே பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை வைத்திருந்தார். அந்தக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டார்.

புரோகிதர்கள் கதறிக்கொண்டே ராஜாவிடம் போய் புகார் செய்தார்கள். ராஜாவுக்கு ரொம்பக் கோபம். “தெனாலிராமா! ஏன் இப்படி சூடு போட்ட?” என்று கோபத்துடன் கேட்டார்.

தெனாலிராமன் பணிவாக பதில் சொன்னார். “ராஜா! நான் எந்தத் தப்பும் பண்ணல. எங்கம்மா ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருந்தாங்க. சாகிற நேரத்துல அவருக்கு வலிப்பு நோய் வந்துடுச்சி. வைத்தியர்கள் அவருக்கு சூடு போடச் சொன்னாங்க. ஆனா சூடு போடறதுக்கு முன்னாலயே அவர் செத்துபோயிட்டார். எங்கம்மா ஆத்மா சாந்தி அடையணும்னா புரோகிதர்களுக்கு சூடு போடணும்னு பெரியவங்க சொன்னாங்க. அதைத்தான் செஞ்சேன்” என்றார்.

“நீ சொல்வது ரொம்ப முட்டாள்தனமா இருக்கே!” என்றார் ராஜா.

“இதில் என்ன முட்டாள்தனம் இருக்கு? உங்க அம்மா மாம்பழம் சாப்பிடாம செத்துப் போனபோது புரோகிதர்களுக்கு தங்கத்துல மாங்கா செஞ்சு குடுத்தீங்க இல்லயா? அதே மாதிரிதான் இது” என்றார்.

அப்போதுதான் தான் செய்த முட்டாள்தனம் அவருக்குப் புரிந்தது. புரோகிதர்களின் பேராசையும் புரிந்தது. தெனாலிராமன் செய்ததை எண்ணி அவருக்குச் சிரிப்பு வந்தது.

சிரித்துக்கொண்டே தெனாலிராமனைப் பாராட்டினார்.

வாட்ஸப் (whatsapp )முதல் வருடத்திற்கு பிறகு இலவசமாக பயன்படுத்த..

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் இன்று குறுந்தகவலுக்கு பதிலாக வாட்ஸப் தான் பயன்படுத்துகிறார்கள்.

இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை வாட்ஸப் முதல் வருடத்திற்கு மட்டுமே இலவசம் அடுத்த வருடம் முதல் பணம் கட்டியே இவ்வசதியைப் பெற வேண்டும்.

ஆனால் இதனை நீங்கள் பைபாஸ் செய்து இலவசமாக பயன்படுத்த பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தலாம்.

முதல் வழி:

1) வாட்ஸப்பின் லைசென்ஸ் காலம் முடிந்த பிறகு, புதியதாக ஒரு gmail id உருவாக்குங்கள் அதன் வழியாக கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸப்பைத் தரவிறக்குங்கள்.

இப்பொழுது உங்கள் எண்ணைக் கொடுத்து நீங்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.அவ்வளவுதான்.

வாட்ஸப் (whatsapp )முதல் வருடத்திற்கு பிறகு இலவசமாக பயன்படுத்த..

இரண்டாம் வழி:

2) உங்கள் வாட்ஸப்பின் லைசென்ஸ் முடியும் முன்பே, Whatsapp->settings->account->delete my account. என்பதை செலக்ட் செய்யவும் . உங்கள் கணக்கு அழிந்து விடும்.

நீங்கள் மீண்டும் உங்கள் எண்ணைக் கொடுத்து புதிய கணக்கு துவங்கலாம்.

ஆனால் இதனை வாங்கும் கட்டணம் மிகக் குறைவே எனவே வாங்கிவிடுதல் நலம்.



சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்!..

மலேரியா காய்ச்சல் தீர : மிளகு, சீரகம் சேர்த்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டுவரவும்.

டைபாய்டு தீர : புன்னைப்பூவை உலர்த்தி பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை சாப்பிட குணமாகும்.

குளிர் காய்ச்சல் தீர : முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடவும்.

இதயப் படபடப்பு குறைய : மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கவும். (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்).

மாரடைப்பு : தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட விரைவில் குணமாகும்.

தொடர் வயிற்றுப் போக்கு : பப்பாளிப்பழம் சாப்பிட்டால் சரியாகிவிடும்.

நுரையீரல் பலப்பட : தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

திக்குவாய் சரியாக : இலந்தை இலைச் சாறு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல் தீர : அகத்தி கீரையை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ணவேண்டும்.

ஈறு பலமடைய : மாசிக்காயை தூளாக்கி நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளித்தால் பலப்படும்.

இரத்தக்குழாயில் அடைப்பு நீங்க : தினம் ஒரு கப் தயிர் சாப்பிடவேண்டும்.

தேவையற்ற கொழுப்பு குறைய : பூண்டு, வெங்காயம் இவற்றை அடிக்கடி உணவில் அதிகமாக சேர்த்து வரலாம்.

எடை கூடாமல் தடுக்க : தேநீரில் எலுமிச்சம் பழசாறு கலந்து காலையில் குடித்துவர எடை கூடாமல் தடுக்கும்.

உதட்டில் வெடிப்பு : அத்திக்காயை உட்கொண்டால் வெடிப்பு குணமாகும்.

1
chennai central


சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலி 8 பேர் காயம் அடைந்தனர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9வது பிளாட்பார்மில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. காயம் அடைந்தவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை. குண்டு வெடிப்பில் கவுகாத்தி - பெங்களூர் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகள் சேதம் அடைந்தன.

தீவிரவாதிகள் சதியா?

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது.

அறிக்கை அளிக்க உத்தரவு:

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீடு அறிவிப்பு:

குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார். குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறினார்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.