சென்னை சென்ட்ரலில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி

chennai central


சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலி 8 பேர் காயம் அடைந்தனர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9வது பிளாட்பார்மில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. காயம் அடைந்தவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை. குண்டு வெடிப்பில் கவுகாத்தி - பெங்களூர் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகள் சேதம் அடைந்தன.

தீவிரவாதிகள் சதியா?

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது.

அறிக்கை அளிக்க உத்தரவு:

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீடு அறிவிப்பு:

குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார். குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறினார்.

சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலி 8 பேர் காயம் அடைந்தனர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9வது பிளாட்பார்மில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. காயம் அடைந்தவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை. குண்டு வெடிப்பில் கவுகாத்தி - பெங்களூர் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகள் சேதம் அடைந்தன.