தினம் ஒரு தகவல் உங்களுக்க ...

• அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் செட்னா.

• வுட் செரல் என்பது இரண்டு வகையான பூ பூக்கும் செடி.

• திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து 'ஒள'.

• ஹைகூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை.

• உலகில் அதிக ஆண்டு வாழும் மனிதர்கள் ஜப்பானியர்கள்.
• மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.

• சீன நகரங்களில் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் அந்த வீட்டின் தலைவர் பெயர், மனைவி, மக்கள், பணியாளர், ஆடு, மாடு, நாய், குதிரை இவற்றின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முறையினால் நகரின் மக்கள் தொகை, கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசு அலுவலர்கள் எளிதில் கணக்கிடுகின்றனர்.

• ஹாக்கி என்ற சொல் ஹெகோ என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து பிறந்தது. ஹாக்கி விளையாட்டு கி.பி.514இல் தொடங்கப்பட்டது. ஹாக்கி மட்டை இடையர் கைக்கோலைப் பார்த்து உருவாக்கப்பட்டது. ஹாக்கி மைதானம் செவ்வக வடிவமாக இருக்க வேண்டும். அணிக்கு 11 பேர் விளையாடுவார்கள். 1860ம் ஆண்டில் லண்டனில் ஹாக்கி விளையாட்டு விதிகள் உருவாக்கப்பட்டன.

• ஒரு பூவுக்கு மேல் தாங்க வலிமையில்லாததால் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து அடுத்த பூவுக்கு இடமளிக்கும் தாவரம் நீலக்கண் புல்.

• வண்ணத் திரைப்படங்களுக்கு 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர் சூட்டுவதுண்டு. அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா? 1883ம் ஆண்டில் முதன் முதலாக வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர் கண்டுபிடித்தார். அதன் காரணமாக அவருடைய பெயரை வண்ண பிலிம்களுக்கு சூட்டலாயினர்.

• காக்காய் வலிப்பு நோய் வந்தவர்களை பார்த்திருப்பீர்கள். காக்கைக்கும் வலிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லை! கால், கை வலிப்பு என்பதுதான் காக்காய் வலிப்பு என பேச்சுவழக்கில் மருவியது.

• யானையின் காது முறம் போல இருக்கும் என்று கூறுவார்கள். யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.

• தலாடம் என்றால் என்ன தெரியுமா? ராமன் இலங்கைக்குச் சென்றபோது அணை கட்டினானே அப்போது எந்த சிறுபிராணி உதவியது? அணில் தானே! அணிலுக்கு இன்னொரு பெயர்தான் 'தலாடம்'.

• ஆறுகள், ஏரிகள், குளங்களில் பயணம் செய்ய உதவும் சிறுபடகுக்கு 'நடைச்சலங்கு' என்று பெயர்.

• கன்னியாகுமாரி முதல் மகாராஷ்டிரா வரை விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி பாயும் நதிகளின் எண்ணிக்கை 36. இதில் கேரளாவில் மட்டும் 19 நதிகள் பாய்கின்றன. இந்த 19 நதிகளில் பாயும் தண்ணீரில் 85% அரபிக் கடலில் போய் சேர்கிறது.

• சவுதி அரேபியாவிலுள்ள கிங் காலித் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தான் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். 236 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது இது.

• பாரீஸ் நகரில் நாய்களுக்கான பொது கழிப்பறை வசதி இருந்தது.

• பைபிள் 349 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

• காகிதத்திலிருந்தே காகிதம் தயாரிப்பதுதான் காகிதம் தயாரிப்பதற்கான மிக எளிய வழியாகும். மூன்று கோடி டன் காகிதக் கூழ் உற்பத்தி செய்ய இரண்டரை கோடி டன் கழிவுக் காகிதம் சேர்க்கப்படுகிறது. எழுதிய காகிதங்களை வீணாக்காமல் ஏழு முறை புதிய காகிதம் தயாரிக்க மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

• பெட்ரோலில் கலக்கும் ஒருவகை ஈயம் 1921ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் எளிதாக இயங்கின. ஆனால், ஈயம் கலந்த பெட்ரோல் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று கருதி அது தவிர்க்கப்பட்டது.

• 1925ம் ஆண்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன.

• நாணயத்தில் தனது உருவத்தை பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்.

• தவளைகள் பெரும்பாலும் குளம், குட்டைகளில் தான் அதிகம் வசிக்கின்றன. கடல்களில் இவை வசிப்பதில்லை.

• பெரும்பாலும் சிறு விலங்குகளின் இதயத் துடிப்பு அதிகமாகவும், பெரியனவற்றின் துடிப்பு குறைவாகவும் இருக்கிறது. சிறு விலங்குகளின் உடலிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதால் அதை ஈடு செய்கின்ற வகையில் இதயத்துடிப்பும் அதிகரிக்கின்றது.

• பாலூட்டிகளான திமிங்கலங்கள் காற்றை சுவாசிக்க நீர்மட்டத்திற்கு வந்தாக வேண்டும். அவ்வாறு வரும் போது இரண்டே செக்கண்டுகளில் 530 காலன் வரை காற்றை அவை இழுத்துக் கொள்கின்றன.

• தவளை இனத்தை சேர்ந்த தேரைகள் பார்க்க அருவெறுப்பாக தோற்றமளித்தாலும் பூச்சிகளை அழிப்பதில் அவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. மூன்று மாத காலத்தில் ஒரு தேரை 10000க்கும் மேற்பட்ட பூச்சிகளை உணவாகக் கொள்கிறது.



சாப்ட்வேர்(software) இல்லாமலேயே போல்டர்களை  மறைக்க இலகுவாக வழி ...

hidden folder beforeafter hidden folder
எந்த ஒரு சாப்ட்வேர்(software) இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள்(secret folders) அடங்கிய போல்டர்களை மறைக்க சுலபமான வழியை நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்.


இனி நீங்கள் எந்த ஒரு மென்பொருள்(software) துணையுமின்றி உங்களுடைய ரகசிய கோப்புகள் அடங்கிய போல்டர்களை மறைக்கலாம்.

இதோ அதற்கான சுலப வழி ஒன்றை சொல்லப்போகிறேன்.

முதல் வழி: Start==>RUN==>cmd


அதாவது start button அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும்.. தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள்.

Command Prompt விண்டோ ஓப்பன் ஆகும்.. அதில்  D: என தட்டச்சிடுங்கள்.  மறைக்க வேண்டிய போல்டர் உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும். E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு என்டர் பட்டன் தட்டுங்கள். இப்போது


D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல் 

attrib +h +s foldername

அதாவது இப்படி இருக்க வேண்டும்  

D:/>attrib +h +s foldername
(இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் போல்டரின் பெயரைக் கொடுக்கவும். உதாரணத்திற்கு போல்டரின் பெயர்  songs என இருந்தால் songs என டைப் செய்யுங்கள்.)

இவ்வாறு இருக்க வேண்டும்.

D:/>attrib +h +s songs இவ்வாறு உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் போல்டர் காணாமல் போய் இருக்கும்.



 தெளிவாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.

hidden folder command prompt image
மீண்டும் பெற விரும்பினால் முன்னது போலவே செய்து + குறிக்கு பதில் - குறி இட்டால் போதும். 

அதாவது இப்படத்தில் உள்ளவாறு, 

D:/>attrib -h -s songs என்பதை டைப் செய்து என்டர் தட்டினால் மறைந்திருந்த போல்டர் உடனே கண்ணுக்குத் தெரியும்.


சாப்ட்வேர்(software) இல்லாமலேயே போல்டர்களை  மறைக்க இலகுவாக வழி ...

தெளிவாகப் பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.
முக்கிய குறிப்பு: இதில் முக்கியமாக நாம் நினைவில் நிறுத்த வேண்டியது.. எந்த போல்டரை மறைக்கிறோமோ அந்த போல்டர் உள்ள டிரைவின் பெயர் மற்றும் போல்டரின் பெயர்ஆகியவற்றை நிச்சயமாக நாம் நினைவில் நிறுத்தியிருக்க வேண்டும்
.


சமீபத்தில் நிறைய சமூக வலைத்தளங்களின் ரகசிய குறியீடுகள் (பாஸ்வேர்டுகள்) களவாடப்பட்டதன் தகவல்களை கேட்டிருப்போம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 சமீபத்தில் நிறைய சமூக வலைத்தளங்களின் ரகசிய குறியீடுகள் (பாஸ்வேர்டுகள்) களவாடப்பட்டதன் தகவல்களை கேட்டிருப்போம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அது மட்டும் அல்லாமல் இதில் நிறைய தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் இந்த சமூக வலைத்தளங்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாப்பான முறையில் வைத்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்கு சிறந்த மற்றும் எளிதான சில வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
  • முதலில் தேர்வு செய்யும் பாஸ்வேர்டு, எளிதாக அனைவராலும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். இது முதல் வழி என்று கூறலாம். இப்படி யாராலும் அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிட முடியாத பாஸ்வேர்டை தேர்வு செய்வது ஃபேஸ்புக் வலைத்தளத்திற்கு மட்டும் அல்லாமல், பாஸ்வேர்டு வைத்து திறக்கும் வழி கொண்ட எல்லா வலைத்தளத்திற்கும் பொருந்தும்.
  • பிறகு நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதற்காக எல்லாரையும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக தேர்வு செய்து கொள்வதை தவிர்த்து கொள்ளவது நல்லது.
  • அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றி கொள்வது நல்லது. அப்படி மாற்றம் பாஸ்வேர்டு ஞாபகத்தில் இருக்கும் வகையில் தேர்வு செய்ய வேண்டும்.
  • பிரவுசிங் மூலம் லாகின் செய்யும் போது ரிமெம்பர் மீ போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்தாது இருப்பதும் சிறந்தது. இதெல்லாம் சின்ன யோசனைகள் தான். ஆனாலும் சில பேர் மறந்து ரிமெம்பர் மீ என்ற ஆப்ஷனை பயன்படுத்துவதை பார்க்கலாம்.
  • நம்பகத்தன்மை இல்லாத எந்த ஒரு லிக்ங்கையும், இமெயிலையும் திறந்து பார்ப்பது சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கும். இதனால் ஃப்ரீ டவுன்லோடு, பரிசு என்று குறிப்பிட்டால் உடனை அதை டவுன்லோட் செய்ய முயற்சிப்பதையும், திறக்க முற்படுவதையும் தவிர்ப்பது நல்லது.
இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டவைகள் எளிய வழிமுறைகள் தான். இந்த குட்டி டிப்ஸ்கள்பாஸ்வேர்டு ஹோக்கர்களிடமிருந்து, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை காப்பாற்ற உதவும்.



Android Mobile பாதுகாப்பானதா?


 ஆன்ட்ராய்ட் பற்றிய சிறு அறிமுகத்தை ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? என்ற பதிவில் பார்த்தோம். ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பல்வேறு பிரமிக்கும் வசதிகள் இருந்தாலும் அதிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை பற்றி இங்கு பார்ப்போம்.


Background Applications:


நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களை விட்டு வெளியேறினாலும் அவற்றில் சில பின்புலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இது Background Applications ஆகும். இதனால் உங்கள் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும். மேலும் உங்கள் மொபைலில் கட்டண இணைய வசதி இருந்தால் இந்த அப்ளிகேசன்கள் இணையத்தை தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் பணமும் தீர்ந்துவிடும்.

பின்புல அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?


Android Mobile பாதுகாப்பானதா?


ஆன்ட்ராய்ட் மொபைலில் Settings => Applications => Running Services என்ற பகுதிக்கு சென்றால் பின்புலத்தில் செயல்படும் அனைத்து அப்ளிகேசன்களின் பட்டியலை காட்டும். அதில் தேவையில்லாத அப்ளிகேசன்களை க்ளிக் செய்து,Stop என்பதை க்ளிக் செய்யவும். 



இயங்குதளம் தொடர்பான சில அப்ளிகேசன்களும் இருக்கும். அதனை நீக்கிவிட வேண்டாம்.


பின்புல அப்ளிகேசன்கள்களை செயல்படாமல் வைப்பது எப்படி?


Android Mobile பாதுகாப்பானதா?


ஆன்ட்ராய்ட் மொபைலில் Settings => Accounts & Sync என்ற பகுதிக்கு சென்றுBackground data traffic என்ற இடத்தில் டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள். இதனால் எந்த அப்ளிகேசனும் பின்புலத்தில் செயல்படாது. ஆனால் நீங்கள் உலவியில் இணையத்தை பயன்படுத்தலாம்.



Google Play (முன்பு Android Market) போன்ற சிலவற்றை பயன்படுத்த இந்த தேர்வினை டிக் செய்திருக்க வேண்டும்.



மொபைல்  இணைய இணைப்பை நிறுத்தி வைக்க:


Android Mobile பாதுகாப்பானதா?

மொபைல் இணைய இணைப்பை பயன்படுத்தாமல் Wi-fi மூலம் மட்டும் இணையத்தை பயன்படுத்துமாறு வைக்கலாம். 

Settings => Wireless & Networks => Mobile Networks என்ற பகுதிக்கு சென்றுData enabled என்பதில் டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள்
.

2
கணினி முன்பு அதிக நேரம் இருப்பவரா? இதோ சில டிப்ஸ்!

இன்று எந்த வேலையாக இருப்பினும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் கணினியின் பயன்பாடுகள் அதிகம் கொண்டவர்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

கம்ப்யூட்டர் முன்பு அதிகம் வேலை செய்பவர்கள், உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதற்கான சில டிப்ஸ்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கம்ப்யூட்டர் திரையில் வெளிச்சத்தினை பார்ப்பதால், கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது.

இதனால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒய்வு கொடுப்பது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது.
இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஒய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.

தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொருமுறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது.

கணினியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. இதனால் முதுகுத்தண்டு நேராகா இருக்கும். இது போல் செய்வதால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம்.

பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்தது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.

டைப் செய்யும் போது முழங்கைகள், இடையின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு சிறப்பாக சப்போர்ட் கொடுக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடியும். அதோடு தோள்பட்டை வலியினையும் எளிதாக குறைக்க முடியும்.

கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தினை குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம். இங்கே கூறப்பட்டுள்ளதெல்லாம் சின்ன சின்ன வழிகள் தான். இருப்பினும் இதை பின்பற்றுவதால் உடலை நல்லமுறையில் பாதுகாக்க முடியும்.

ஜிமெயிலில் தமிழ்மொழியில் டைப் செய்ய எளிய வழி!

தகவல்களை அனுப்ப நிறைய வசதிகள் வந்தாலும், வேலை நிமித்தமாக இ-மெயில் அனுப்பும் வழக்கம் இன்னும் மாறவில்லை. ஜிமெயிலில் தமிழில் டைப் செய்யவும் வசதிகள் உள்ளது. இதன் வழி முறையையும் கொஞ்சம் பார்க்கலாம்.

ஜிமெயிலில் தமிழ்மொழியில் டைப் செய்ய எளிய வழி!


ஜிமெயில் பக்கத்தில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு செட்டிங்ஸ் பக்கம் திறக்கப்படும். இதில் எனேபில்டு ட்ரேன்ஸ்லிட்டிரேஷன் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனை செலக்ட் செய்து வைக்க வேண்டும்.
அதன் பிறகு கீழே மொழிகளுக்கு தனியாக ஒரு பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பாக்ஸில் தமிழ் மொழியை செலக்ட் செய்து வைத்துவிட வேண்டும். பின்னர் ஸ்குரோல் செய்து கீழே பார்த்தால் சேவ் சேன்ஜஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்ய வேண்டும்.
அவ்வளவு தான் இனி மீண்டும் ஜமெயிலில், மெயில் டைப் செய்யும் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதில் டைப் செய்ய தொடங்கினால் தமிழில் எழுத்துக்கள் அச்சிடப்படுவதை காணலாம். ஜமெயிலில் டைப் செய்ய, இது மிக எளிய வசதியாக இருக்கும்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.