A+ A-

தினம் ஒரு தகவளில் இன்றைய தகவல் உங்களுக்க ...தினம் ஒரு தகவல் உங்களுக்க ...

• அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் செட்னா.

• வுட் செரல் என்பது இரண்டு வகையான பூ பூக்கும் செடி.

• திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து 'ஒள'.

• ஹைகூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை.

• உலகில் அதிக ஆண்டு வாழும் மனிதர்கள் ஜப்பானியர்கள்.
• மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.

• சீன நகரங்களில் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் அந்த வீட்டின் தலைவர் பெயர், மனைவி, மக்கள், பணியாளர், ஆடு, மாடு, நாய், குதிரை இவற்றின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முறையினால் நகரின் மக்கள் தொகை, கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசு அலுவலர்கள் எளிதில் கணக்கிடுகின்றனர்.

• ஹாக்கி என்ற சொல் ஹெகோ என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து பிறந்தது. ஹாக்கி விளையாட்டு கி.பி.514இல் தொடங்கப்பட்டது. ஹாக்கி மட்டை இடையர் கைக்கோலைப் பார்த்து உருவாக்கப்பட்டது. ஹாக்கி மைதானம் செவ்வக வடிவமாக இருக்க வேண்டும். அணிக்கு 11 பேர் விளையாடுவார்கள். 1860ம் ஆண்டில் லண்டனில் ஹாக்கி விளையாட்டு விதிகள் உருவாக்கப்பட்டன.

• ஒரு பூவுக்கு மேல் தாங்க வலிமையில்லாததால் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து அடுத்த பூவுக்கு இடமளிக்கும் தாவரம் நீலக்கண் புல்.

• வண்ணத் திரைப்படங்களுக்கு 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர் சூட்டுவதுண்டு. அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா? 1883ம் ஆண்டில் முதன் முதலாக வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர் கண்டுபிடித்தார். அதன் காரணமாக அவருடைய பெயரை வண்ண பிலிம்களுக்கு சூட்டலாயினர்.

• காக்காய் வலிப்பு நோய் வந்தவர்களை பார்த்திருப்பீர்கள். காக்கைக்கும் வலிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லை! கால், கை வலிப்பு என்பதுதான் காக்காய் வலிப்பு என பேச்சுவழக்கில் மருவியது.

• யானையின் காது முறம் போல இருக்கும் என்று கூறுவார்கள். யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.

• தலாடம் என்றால் என்ன தெரியுமா? ராமன் இலங்கைக்குச் சென்றபோது அணை கட்டினானே அப்போது எந்த சிறுபிராணி உதவியது? அணில் தானே! அணிலுக்கு இன்னொரு பெயர்தான் 'தலாடம்'.

• ஆறுகள், ஏரிகள், குளங்களில் பயணம் செய்ய உதவும் சிறுபடகுக்கு 'நடைச்சலங்கு' என்று பெயர்.

• கன்னியாகுமாரி முதல் மகாராஷ்டிரா வரை விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி பாயும் நதிகளின் எண்ணிக்கை 36. இதில் கேரளாவில் மட்டும் 19 நதிகள் பாய்கின்றன. இந்த 19 நதிகளில் பாயும் தண்ணீரில் 85% அரபிக் கடலில் போய் சேர்கிறது.

• சவுதி அரேபியாவிலுள்ள கிங் காலித் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தான் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். 236 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது இது.

• பாரீஸ் நகரில் நாய்களுக்கான பொது கழிப்பறை வசதி இருந்தது.

• பைபிள் 349 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

• காகிதத்திலிருந்தே காகிதம் தயாரிப்பதுதான் காகிதம் தயாரிப்பதற்கான மிக எளிய வழியாகும். மூன்று கோடி டன் காகிதக் கூழ் உற்பத்தி செய்ய இரண்டரை கோடி டன் கழிவுக் காகிதம் சேர்க்கப்படுகிறது. எழுதிய காகிதங்களை வீணாக்காமல் ஏழு முறை புதிய காகிதம் தயாரிக்க மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

• பெட்ரோலில் கலக்கும் ஒருவகை ஈயம் 1921ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் எளிதாக இயங்கின. ஆனால், ஈயம் கலந்த பெட்ரோல் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று கருதி அது தவிர்க்கப்பட்டது.

• 1925ம் ஆண்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன.

• நாணயத்தில் தனது உருவத்தை பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்.

• தவளைகள் பெரும்பாலும் குளம், குட்டைகளில் தான் அதிகம் வசிக்கின்றன. கடல்களில் இவை வசிப்பதில்லை.

• பெரும்பாலும் சிறு விலங்குகளின் இதயத் துடிப்பு அதிகமாகவும், பெரியனவற்றின் துடிப்பு குறைவாகவும் இருக்கிறது. சிறு விலங்குகளின் உடலிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதால் அதை ஈடு செய்கின்ற வகையில் இதயத்துடிப்பும் அதிகரிக்கின்றது.

• பாலூட்டிகளான திமிங்கலங்கள் காற்றை சுவாசிக்க நீர்மட்டத்திற்கு வந்தாக வேண்டும். அவ்வாறு வரும் போது இரண்டே செக்கண்டுகளில் 530 காலன் வரை காற்றை அவை இழுத்துக் கொள்கின்றன.

• தவளை இனத்தை சேர்ந்த தேரைகள் பார்க்க அருவெறுப்பாக தோற்றமளித்தாலும் பூச்சிகளை அழிப்பதில் அவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. மூன்று மாத காலத்தில் ஒரு தேரை 10000க்கும் மேற்பட்ட பூச்சிகளை உணவாகக் கொள்கிறது.

• அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் செட்னா. • வுட் செரல் என்பது இரண்டு வகையான பூ பூக்கும் செடி. • திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து 'ஒள'. • ஹைகூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை. • உலகில் அதிக ஆண்டு வாழும் மனிதர்கள் ஜப்பானியர்கள். • மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை. • சீன நகரங்களில் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் அந்த வீட்டின் தலைவர் பெயர், மனைவி, மக்கள், பணியாளர், ஆடு, மாடு, நாய், குதிரை இவற்றின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முறையினால் நகரின் மக்கள் தொகை, கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசு அலுவலர்கள் எளிதில் கணக்கிடுகின்றனர்.