A+ A-

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை! ரூ100 கோடி அபராதம்

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை! ரூ100 கோடி அபராதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வர், எம்.எல்.ஏ., பதவிகளை இழந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கின்றனர். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கவர்னர் ரோசையா, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்தால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்ய வேண்டும்,
ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு அக்டோபர் 5 வரை தசரா விடுமுறை என்று அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நீதிபதி வீட்டில் அவசர வழக்கு விசாரிக்கும் நடைமுறையில் இல்லை.
தற்போதைய தகவல்படி அக்டோபர் 5&க்கு பிறகு தான் ஜாமீன் மனு விசாரிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் . இந்த வழக்கின் மேல் முறையீட்டை விசாரிக்க கர்நாடகா ஐகோர்ட்டிற்கு அதிகாரம் இல்லை என்பதால், ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டை மற்றுமே அணுக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
கோர்ட் வளாகத்தில் ஜெ., வுக்கு நெஞ்சுவலி
ஆஸ்பத்திரி அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வருகிறது...

2வது முறையாக பறி போன ஜெ.வின் முதல்வர் பதவி- அடுத்த முதல்வர் ஷீலா? ஓ.பி.எஸ்? செந்தில் பாலாஜி?