A+ A-

ஸ்மார்ட் போன்களில் இரகசியத்தை பாதுகாக்க முடியாதாம்

ஐஸ் கிரீம் சண்ட்விச் எனப்படும் "ஆண்ட்ராய்டு" ஆப்பரேடிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போனை நன்கு உறைய வைத்தால் அதில் பதிவு செய்துள்ள தகவல்களை மிக எளிதாக எடுக்க முடியும் என ஜெர்மன் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.இன்றைய மாடர்ன் வாழ்கையில் மொபைல் போன்கள் இல்லாத நபர்களே இல்லை என கூறலாம். ஒரு கம்ப்யூட்டரில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் கை அடக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போன்களில் செய்ய முடியும். எனவே பெரும்பாலான மக்கள் தங்கள் வங்கி பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய வேலைகளை இந்த ஸ்மார்ட் போன்கள் மூலமே செய்கின்றனர். 

மேலும் போன்களில் வங்கி தகவல்கள், புகை படங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை பதிந்து வைக்கின்றனர். இந்த தகவல்கள் பாஸ்வோர்ட் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தாலும் அவற்றை மிக எளிதாக எடுக்க முடியும் என என ஜெர்மன் நாட்டை சேர்ந்த "பாதுகாப்பு" குறிந்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஐஸ் கிரீம் சண்ட்விச் "ஆண்ட்ராய்டு" ஸ்மார்ட் போன்கள் பாஸ்வோர்ட் தகவல்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில தான் பதிவு செய்து வைக்கின்றன.

ஸ்மார்ட் போன்களை உறைய வைத்த அதன் பாட்டரியை பலமுறை போட்டு போட்டு எடுத்தவுடன் அந்த ஸ்மார்ட் போனின் இயல்பு நிலை மாறி தன் கட்டுப்பாட்டை இழக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள சிப்புகள் அதிகம் குளிர் ஊட்டும் போது அதன் செயல் வேகம் மிகவும் வெகுவாக குறைகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதற்காகவே உள்ள பிரத்தயேக ஹேக்கிங் சாப்ட்வேர் மூலம் அந்த போனில் பதிந்து வைக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை எடுத்து காண்பித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்காக சாம்சுங் காலக்ஸ்சி நெக்ஸ்சஸ் என்ற ஸ்மார்ட் போன் பயன் படுத்தப்பட்டாலும், இதே முறையில் எந்த நிறுவனத்தின் போனில் இருந்தும் தகவல்களை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் வரும் காலத்தில் ஸ்மார்ட் போன்களில் தகவல்கள் பதிவு செய்யும் முறையை மாற்றி அமைக்க உதவும் என தெரிவித்துள்ளனர்.